"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, September 26, 2024

பச்சை கற்பூரம் மூலம் பெருமாள் எதிரில் நின்று நீங்கள் வேண்டியதை கேட்டுப்பெறும் சித்த ரகசியங்கள்

                                                                   இறைவா..அனைத்தும் நீயே..

சர்வம் சிவார்ப்பணம்...

குருவருளால்  புரட்டாசி மாதத்தில் வழிநடத்தப்பட்டு வருகின்றோம் . குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து இன்றைய பதிவில் புரட்டாசி சிறப்பு  மாத பதிவாக சித்தன் அருள் - 1066,1210,1231,1638  - அன்புடன் அகத்தியர் வாக்கில் பச்சை கற்பூரம் பற்றி உரைத்த வாக்கினை  காண உள்ளோம். இம்மாதம் நாம் மேற்கொள்ள வேண்டிய வழிபாடு பற்றி இதற்கு முன்னர் பதிவு செய்திருந்தோம். புரட்டாசி மாதம் முழுதும் பெருமாள் வழிபாடு மேற்கொள்ள நம் குருநாதர் கூறி இருந்தார்கள். எனவே இந்த மாதம் முழுதும் பெருமாள் வழிபாட்டு மேற்கொள்வோம். இதன் பொருட்டும் இம்மாதம் முழுதும் பெருமாளை பற்றி சிந்திக்கும் வண்ணம் நம் தளத்தில் பதிவுகள் பகிர குருவருள் நம்மை வழிநடத்திட வேண்டி பணிவோமாக! 













பச்சை கற்பூரம் மூலம் பெருமாள் எதிரில் நின்று நீங்கள்  வேண்டியதை கேட்டுப்பெறும்   சித்த  ரகசியங்கள்

1. 6/11/2022 அன்று கார்கோடகநல்லூர் பச்சைவண்ண பெருமாள் அபிஷேக பூஜை குறித்து குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு. வாக்குரைத்த ஸ்தலம்: திருமலை திருப்பதி. 

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!!

என்னுடைய ஆசிகள் நலமாக  நலமாக!! இன்னும் ஏராளம் பின் எதை எதை எப்பொழுது செய்ய வேண்டும் என்று எதிர் நோக்குகின்றேனோ... அப்பொழுதெல்லாம் யான் நிச்சயம் பல வழிகளிலும் கூட என் பக்தர்களை அழைத்து எங்கெங்கு செல்ல வேண்டும் என்பதை உணர்ந்து நிச்சயம் அங்கெல்லாம் பின் பன் மடங்கு நல்விதமாகவே உயர்வுகள் கொடுப்பேன்!

என்னுடைய பக்தர்களுக்கும் ஆசிர்வாதங்கள் தருகின்றேன்!!!!

ஆனாலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?! என்பதையெல்லாம் முன்(முன்னதாகவே) யான் சொல்லிவிட்டேன்.  அவை போலவே நடந்து விட்டால் நிச்சயம் பின் ஒரு குறையும் வராது.

ஆனாலும் ஒன்றை சொல்கின்றேன். பின் பெருமானுக்கு உகந்ததாக பச்சை கற்பூரம். சரியாகவே இதை தன் உள்ளங்கையில் வைத்துக் கொண்டு பின் பெருமாளிடத்தில் கேட்டாலே, நிச்சயம் உயர்வுகள் உறுதியாக செயல்படும்.

அதனால் பின் உயர்வான பச்சை கற்பூரத்தையும்,  நல்விதமாக சிறிதளவு கிராம்பையும்,  துளசியையும் உள்ளங்கையில் வைத்து பின் நல்விதமாக பெருமாளை வேண்டி கொண்டு அதாவது பெருமாள் எதிரில் நிற்க வேண்டும்.

உள்ளங்கையில் அதனை பின் வேண்டிக் கொண்டு நல்விதமாகவே பெருமானே பெருமானே என்று 

(பெருமாள் / பெருமான் பொருள் ஒன்று என்பதை உணர்க) 

கொடு கொடு  எதையென்று அறிந்து அறிந்து  சரியாகவே பின் இவைதன் பின் பெருமானே!! பெருமானே!! என்றிருந்தால் அவன் நிச்சயம் நம்மிடத்தில் வருவான்.

ஏனென்றால் அவந்தனுக்கு பச்சை கற்பூரம் என்பது உயர்வானது.  ( பெருமாள் எதிரில் ) அப்பொழுது நிதானித்து  சிறிதளவு பின் வாயில் இட்டு மென்று தின்று வந்தாலே அவன் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைத்துவிடும். இது எல்லோருக்கும் சமமானது. 

இதனால்தான் இங்கும் (கார்கோடகநல்லூர் ) ,  அங்கே பெருமான் இருப்பான் அதாவது திருமலையில். பச்சைக் கற்பூரத்தை உள்ளங்கையில் வைத்து  அவனிடத்தில் அதாவது 50 அடி தூரத்தில் கூட நின்றாலும் பெருமான் ஆசீர்வாதங்கள் பரிபூரணம். ( திருமலை திருப்பதியில் பெருமாள் தரிசனம் செய்யும் பொழுது).  ஆனாலும்  இப்பொழுதெல்லாம்  விட்டுவிடுவதில்லை. இதை பெரியோர்கள் நன்கு அறிந்திருந்தனர். சொல்லிவிட்டேன்!!!

இதனால் நிச்சயம் காவேரி தன்னில் நீராடும்(துலா ஸ்நானம்) பொழுதும் இன்னும் சொல்கின்றேன். சிறிதளவு  நல்விதமாகவே  பச்சை கற்பூரத்தையும் இட்டு இட்டு நல்விதமாகவே நீராடி வந்தாலே நிச்சயம் வெற்றிகள் உண்டு.

ஆனாலும் ஒன்றை மட்டும் சொல்கின்றேன் ""பச்சை கற்பூரம் !!! தூய பச்சை கற்பூரம்!!! நிச்சயம் பெருமானுக்கு பிடித்ததாகும்!!! அதை எங்கு உள்ளதோ அங்கு நிச்சயம் பின் அதிக அளவு நல் சக்திகள் ஈர்க்கும் என்பேன்.

அதனால் என்னுடைய பக்தர்கள் ஒவ்வொருவரும் நிச்சயம் எப்பொழுதும் கூட நிச்சயமாய் அவ் பச்சை கற்பூரத்தை எப்பொழுதும் தன்னிடத்தில் வைத்துக் கொண்டாலே போதுமானது.

2. சித்தன் அருள் - 1066  - மௌனகுரு ரெட்டி ஜீவசமாதி வாக்கு!

அப்பனே இவை என்றும் கற்பூரத்தை ஏற்றுகிறார்களே இதனைப் பற்றியும் ஒரு உரிமை சொல்கின்றேன்.

அப்பனே பச்சை கற்பூரத்தை மாதம் ஒருமுறை எவன் உண்ணுகிறானா அவனிடம் இறைவன் நின்று பேசுவான்.

3. சித்தன் அருள் - 1638 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு!

நேர்மறையான எண்ணங்கள் தெய்வ சக்திகள் சுபிட்சம் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?  

குருநாதர்:- இன்னும் கூட சொல்லப்போனால் அப்பனே ஒரு கண்ணாடி குவளையில் நீரை நிரப்பி எலுமிச்சை இட்டு பச்சை கற்பூரம் அதனுடன்  உப்பும் இட்டு வைத்து வாருங்கள். இதை செய்து கொண்டே வாருங்கள் உங்களுக்கே புரியும்.

குருவே இப்படி வீட்டிலும் செய்யலாமா?

குருநாதர்:- அப்பனே பின் செய் என்று சொல்லிவிட்டால் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம் அப்பனே!!!  அப்பனே இதை தொடர்ந்து செய் உந்தனுக்கே புரியும் அப்பனே!!!

(ஒரு கண்ணாடி பாத்திரத்தில் சுத்தமான நீர் நிரப்பி அதில் பச்சை கற்பூரம் உப்பு கலந்து ஒரு எலுமிச்சம் பழத்தை அதில் மிதக்க வைத்து விட வேண்டும் இதை தம் தன் அலுவலகத்தில் மேஜையில் வீட்டு வரவேற்பு அறையில் பூஜை அறையில் வைத்து விட்டால் எதிர்மறை சக்திகள் எதுவும் தாக்காது நேர்மறை தெய்வ சக்திகள் அதிகரிக்கும்)

4. சித்தன் அருள் - 1231 - பச்சை கற்பூரம்!

வணக்கம் அகத்திய மாமுனிவர் அடியவர்களே.

பச்சைக் கற்பூரம் பற்றிய பதிவுகளும் வணிக சந்தையில் கிடைப்பவை மற்றும் நடந்தவை அனைத்தும் நீங்கள் அறிந்ததே. பச்சைக் கற்பூரம் பற்றிய சந்தேகமும் கருத்து வேறுபாடுகளும் இருந்தன. இவற்றிற்கெல்லாம் ஒரே தீர்வு நம் குருநாதரிடம் வாக்கு கேட்பதுதான் என்று தீர்மானித்து வாக்கு கேட்ட பொழுது!!!!

அப்பனே மகாராஷ்டிராவில் ஒரு முதியவன் இருக்கின்றான் அவனிடம் உண்மையான பச்சை கற்பூரம் இருக்கின்றது அவனை நீங்களே தேடிச் செல்லுங்கள் அப்பொழுதுதான் அருமை தெரியும் என்று கூறியிருந்தார். அந்த முதியவரை பற்றிய தகவல் அறிந்துகொள்ள "சித்தன் அருள் - 1231 - பச்சை கற்பூரம்!" என்ற பதிவை படிக்கவும்.

ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

சர்வம் சிவார்ப்பணம்!!!!!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

மீண்டும் புரட்டாசி - முக்கிய வாக்கு சுருக்கம். அனைவருக்கும் பகிருங்கள் - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_23.html

புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் தரிசன ரகசியம். அவசியம் பயன்படுத்திக்கொள்க!- https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_20.html

 சித்தன் அருள் - 1676 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1676_19.html

 சித்தன் அருள் - 1676 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1676.html

சித்தன் அருள் - 1675 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1675.html

 புரட்டாசி , ஐப்பசி , கார்த்திகை மாதம் - அகத்திய மாமுனிவர் அடியவர்கள் செய்யவேண்டிய வழிபாடுகள்! - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_14.html

சித்தன் அருள் 1663 -அன்புடன் நந்தியெம்பெருமான் முருகப்பெருமானை அழைத்த வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/09/1663.html

ஆவணி மாதம் பேசுகின்றேன் - அகத்தியர் உத்தரவு - விநாயகர் அகவல் பாராயணம் - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_17.html

 பழநிப் பதிவாழ் பாலகுமாரா!...கந்தர் அநுபூதி (பாடல் 1 - 5)  - https://tut-temples.blogspot.com/2024/08/1-5.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_28.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! - மாதம்பே முருகன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_22.html

 குருநாதர் வாக்கு! - பிரம்ம முகூர்த்த ரகசியம் & எப்படி அகத்திய மாமுனிவரை வழிபட்டால் அனைத்தும் நடக்கும்? - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_7.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு!- கருட பஞ்சமி நாக பஞ்சமி - 09.08.2024 - https://tut-temples.blogspot.com/2024/08/09082024.html


விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_17.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! - கந்தர் அநுபூதி - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_15.html

 முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html

 கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html

 TUT குழு - கந்த சஷ்டி வழிபாடு அழைப்பிதழ் - 13.11.2023 முதல் 19.11.2023 வரை - https://tut-temples.blogspot.com/2023/11/tut-13112023-19112023.html

 நினைவூட்டலாக! - குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_25.html

 குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_24.html

கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயம் - ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆடித்திருவிழா - 28.07.2024 - https://tut-temples.blogspot.com/2024/07/28072024.html

ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருகட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 10.பிற ஜீவராசிகளும் பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும். - https://tut-temples.blogspot.com/2024/08/10.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 9. பிறருக்காக உழைக்க வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/08/9.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/8.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 7.தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/7.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 6.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் - https://tut-temples.blogspot.com/2024/06/6.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/5.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 4. உயிர்ப் பலியும் இடமாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/4.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/3.html

 கோவையில் அகத்தியர் உத்தரவு! - 2. அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/2.html

கோவையில் அகத்தியர் உத்தரவு! - 1. தர்மம் செய்வேன் - https://tut-temples.blogspot.com/2024/05/1.html

 அன்புடன் அகத்தியர் - கோவையில் அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post_4.html

No comments:

Post a Comment