இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவருளால் புரட்டாசி மாதத்தில் வழிநடத்தப்பட்டு வருகின்றோம் . குருவின் அருளாலே குருவின் தாள் பணிந்து இன்றைய பதிவில் புரட்டாசி மாத சிறப்பு பதிவாக சித்தன் அருள் - 1648 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! வாக்கினை காண உள்ளோம். இம்மாதம் நாம் மேற்கொள்ள வேண்டிய வழிபாடு பற்றி இதற்கு முன்னர் பதிவு செய்திருந்தோம். புரட்டாசி மாதம் முழுதும் பெருமாள் வழிபாடு மேற்கொள்ள நம் குருநாதர் கூறி இருந்தார்கள். எனவே இந்த மாதம் முழுதும் பெருமாள் வழிபாட்டு மேற்கொள்வோம். இதன் பொருட்டும் இம்மாதம் முழுதும் பெருமாளை பற்றி சிந்திக்கும் வண்ணம் நம் தளத்தில் பதிவுகள் பகிர குருவருள் நம்மை வழிநடத்திட வேண்டி பணிவோமாக!
21/3/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம்: திருமலை திருப்பதி.
ஆதி ஈசனின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன். அகத்தியன்!!!!!!
அப்பனே சோதனைகள் கூட நிச்சயம் கடந்து போகும் அப்பா!!!!!
அப்பனே அருள்கள் எம்முடைய அருள்கள் பலமாக!!!!!
ஆனாலும்
அப்பனே பின் மத்தியில் தான் அப்பனே எதை என்றும் அறிந்தும் கூட அறியாமல்
மனிதன் வாழும் பொழுது அப்பனே பல பல கஷ்டங்களுக்கு இன்னல்களுக்கு எதை
என்றும் புரியாமல் கூட அப்பனே வாழ்ந்து வந்தாலே அப்பனே இன்னும் அப்பனே
அதாவது அப்பனே இவ் பூலோகம் அப்பனே அறிந்தும் கூட அப்பனே தாழ்வு நிலையில்
அப்பனே செல்லும்.
அப்பனே தாழ்வு
நிலைகள் என்றால் அப்பனே மனிதன் எவ்வாறெல்லாம் தாழ்வு நிலைக்கு தாழ்வான
எண்ணங்களுடன் செல்கின்றானோ அதேபோலத்தான் இப் புவி தன்னில் கூட அப்பனே...
நிச்சயம் தாழ்வான எண்ணங்களே அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட
இதனால் அப்பனே அறிந்தும் கூட அப்பனே அதாவது சிறிய விளையாட்டிற்காகவே அப்பனே யாங்கள் படைப்பின் ரகசியத்தை!!!......
இதனால்
அறிந்தும் கூட அதாவது யாங்களே படைத்து வைத்தோம் இது நிச்சயம் பின் இக்கலி
யுகத்தில் தொடங்கும் பொழுதே அறிந்தும் கூட. மனிதன் எப்படி தான் ???
செயல்படுகின்றான் என்று!!!
அறிந்தும் உண்மை
நிலையைக் கூட இதனால் அங்கே அறிந்தும் கூட அதாவது பின் தர்மம் ஏந்தும் பின்
அதாவது ஒரு பெண் அப் பெண்ணிடத்தில் நிச்சயம் அக்குழந்தை அறிந்தும் பின்
அதாவது பின் பழனி தன்னிலே
பழனி தன்னிலே தர்மம்
ஏந்தி அங்கேயே சித்தர்கள் கட்டளைப்படி நிச்சயமாய் ஒரு குழந்தை.... குழந்தை
அறிந்தும் கூட ஆனாலும் இதற்கு தகுந்தார் போலே குழந்தை பிறந்தவுடன் பின் அவ்
பெண் மரணம் ஏற்பட வேண்டும் என்பதை கூட விதியாக இருந்ததால் பின் இதுவே
சாலச் சிறந்தது என்று எண்ணி அறிந்தும் நிச்சயமாய் உண்மைதனை எடுத்துரைத்து
பின் அறிந்தும் கூட பிறப்பு பின் அறிந்தும் கூட குழந்தை பின்பு இறப்பு....
ஆனாலும் இதனைக் கூட யாரும் கண்டு கொள்ள இயலவில்லை!!
இதனால் யானே வந்து அப் பெண்ணை சரி முறையாக என்னிடத்திற்கு அழைத்து அனைத்தும் அறிந்தும் கூட அதாவது ஆன்மாவை கூட
இதனால்
நன்குணர்ந்து பின் அறிந்தும் கூட இப்படிப்பட்டவர்களுக்கு கூட யாங்கள்
நிச்சயம் அறிந்தும் கூட சாந்தியை ஏற்படுத்தி நிச்சயம் அதாவது
தீயோர்களுக்கும் இயலாதவர்களுக்கும் உதவிகள் செய்து கொண்டே தான்
இருக்கின்றோம்
ஆனாலும் அதை ஏன்
மனிதர்கள் இங்கெல்லாம் பின் அதாவது பொய்யானவை எல்லாம் பொய்யானவற்றையெல்லாம்
கற்பித்து கற்பித்து மனிதனை மனதினை மாற்றி நிச்சயம் இறைவன் இல்லை என்று
நான் கடைசியில் சொல்லப் போகின்றார்கள்.... இது உண்மை...
ஆனாலும் யாங்கள் விடப்போவதில்லை நிச்சயம்.
அறிந்தும்
கூட இதனால் அறிந்தும் அறிந்தும் இதனால் அதாவது அறிந்தும் கூட ஆனாலும்
அறிந்தும் இவைதன் அக்குழந்தை பிறக்க அத்தாய் அறிந்தும் கூட இவை என்றும்
புரிய புரிய பின் மாய்ந்து!!!!...
ஆனாலும்
உண்மைதனை முருகன் அப்படியே... யானும் அக்குழந்தையை தூக்குவதற்கு முன்பே
ஆனால் முருகன் பின் பலத்த அங்கிருந்தே மனதில் இருந்தே!!!!!
அகத்தியனே சற்று பொறும்!!!
அறிந்தும்
உண்மைதனை நிச்சயம் அக்குழந்தையை நிச்சயம் நீ தூக்காதே அதாவது என்
பக்தர்கள் இங்கு வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள் அல்லவா!!!!
நிச்சயம் அறிந்தும் கூட அவர்கள் எவ்வாறு செய்கின்றார்கள்??? என்று பார்ப்போம் என்றெல்லாம்!!!!
இதனால் அறிந்தும் உண்மைதனை நிச்சயம் பின் ஏன் எதற்கு என்று தெரியாமல் அனைவரும்!!!
அக்குழந்தை அழுது கொண்டே!!!
ஆனாலும் ஒருவர் கூட அப்பனே அக்குழந்தையை கண்டு கொள்ளவில்லை அப்பா!!!!
அப்பனே எங்கப்பா??????? மனசாட்சி சென்றுவிட்டது???????
ஆனால் இப்படித்தான் மனிதர்கள் பூலோகத்தில் அப்பனே இருப்பார்களப்பா!!!!!
பக்தன் என்பான் அப்பனே!!!
ஆனால் மனசாட்சி இல்லாமல் பேசுவானப்பா!!!
அப்பனே
எப்படி ஏது எதை என்று ஆராய்ந்து பேச வேண்டும் என்றெல்லாம் அப்பனே பின்
மறைமுகமாகவே அப்பனே அறிந்தும் கூட பேச தெரியாதப்பா!!!! பேசத் தெரியாமல்
அப்பனே ஆனாலும் அனைத்தும் அப்பனே குடும்ப வாழ்க்கையிலும் வீண்!!!
அப்பனே இவ்வாறு இருப்பவர்கள் தான் பின் கலியுகத்தில் அப்பனே அதாவது இறைவன் பக்தர்கள் என்று வருவார்களப்பா பல கோடி!!!
அவர்களை எல்லாம் யாங்கள் திருடர்கள் என்று தான் சொல்வோம் அப்பனே. அறிந்தும்
அதாவது அப்பனே பல தீய பழக்கங்களுக்கு அடிமையாகி அப்பனே திருமணம் செய்து
அனைத்தையும் கூட வெறுத்திட்டு அப்பனே அன்னை தந்தையரை கூட மதிக்காமல் அப்பனே
பக்திக்குள் வந்து அப்பனே என்னென்னவோ செய்து கொண்டிருப்பான் அப்பனே
அவை
மட்டும் இல்லாமல் பிறரை ஏமாற்றி காசுகளை பறித்து அப்பனே அதை செய்கின்றேன்.
இதை செய்கின்றேன். என்றெல்லாம் சொல்லி அப்பனே பெண்களை மயக்கி இன்னும்
இன்னும் அப்பனே எதையெதையோ செய்வானப்பா இக்கலியுகத்தில்...இவைதன் நிச்சயம்
நடக்கும் அப்பா
அப்பனே அதனால்
தான் அப்பனே நல்லோர்கள் வாழ வேண்டும் என்பதற்காகவே அப்பனே யாங்கள்
சித்தர்கள் வந்து வந்து வாக்குகள் எடுத்துரைத்து எடுத்துரைத்து அப்பனே பின்
மாறினால் வாழட்டும் அப்பனே இல்லை என்றால் சரியான பாடங்கள் கற்பித்து
அப்பனே கீழ் இழுத்து அப்பனே அவந்தன் எதை என்று அறிய அறிய மீண்டும் இறை
நோக்கத்தை அதாவது திருத்தலத்திற்கே அனுப்புவோம் அப்பனே!!!
எப்பொழுது
எல்லாம் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றது அப்பனே.... பல கஷ்டங்கள்
பல இன்னல்கள் அப்பனே மனிதனுக்கு வந்து கொண்டே இருக்கின்றது அப்பனே இதனால்
திருத்தலங்கள் முன்னே சொல்லியவாறே அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே
இதற்கெல்லாம்
அப்பனே ஆனாலும் உண்மைதனை எடுத்துரைக்க அப்பனே ஆனாலும் தீயவர்கள் அப்பனே அன
தீய பக்தர்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே பைத்தியக்காரர்கள் என்று கூட
அப்பனே... பின் அறிந்தும் அறிந்தும் கூட
ஆனாலும்
அப்பனே உண்மையான ஞானி அப்பனே பின் அறிந்தும் கூட அமைதி பொறுப்பான் என்பேன்
அப்பனே எதையும் பேச மாட்டான் அப்பனே எவை என்று அறிய அறிய
""""அனைத்தும் இறைவன் செயலே !!!!
இறைவன் அதாவது தான் தன் செய்த கர்மங்களுக்கு ஏற்பவே இறைவன் நிச்சயம் தண்டனைகள் கொடுப்பான் என்றெல்லாம் அப்பனே இதுதான் ஞானமப்பா!!!
ஆனாலும் கலியுகத்தில் ஞானம் தோன்றாதப்பா!!!
பொய்யானவையே அப்பனே அதை இதை என்றெல்லாம் அப்பனே யான் பெரியவன் இவை என்று அறிய அறிய இவை தான் நடந்து கொண்டிருக்கும் என்பேன் அப்பனே
ஆனாலும் யாங்கள் விடப்போவதில்லை என்பேன் அப்பனே
சித்தர்கள்
யார் என்று தெரிவதில்லை அப்பனே மனிதனுக்கு!!!! நிச்சயம் அப்பனே
தெரிந்துவிட்டால் அவை எவை என்று அறிய அறிய அப்பனே எங்களைப் போன்று அமைதியாக
தான் இருப்பான் என்பேன் அப்பனே அறிந்தும் கூட
அதனால் தெரியாதனால் தான் அப்பனே கஷ்டங்கள் யாங்களே கஷ்டங்களை ஏற்படுத்தி கொண்டே தான் இருக்கின்றோம் அப்பனே
ஏனென்றால்
அப்பனே தீயவன் எதை என்று அறிய அறிய சில நல்லோர்களையும் கூட அப்பனே மனதை
பக்குவப்படுத்தி ஏமாற்றி அறிந்தும் கூட அதாவது மயக்கி அப்பனே தீய வழியில்
பின் நாடி செல்ல அப்பனே அறிந்தும் கூட
இதனால்தான் அப்பனே ஆனாலும் இப்படித்தான் இருக்கின்றார்கள் பக்தர்கள் இப்பொழுதும் கூட அப்பனே மனசாட்சி இல்லாமல் அப்பனே!!!
ஆனால்
இறைவன் கொடுப்பான் என்று ஆனால் அப்பனே நீங்கள் புண்ணியங்கள் செய்யாமல்
அப்பனே இறைவனும் கொடுக்க எவை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே மனம் எங்கே
அப்பா போய்விட்டது???? அப்பனே கலியுகத்தில்!!! இவ் மனங்கள் பொறுத்து!!!
ஆனாலும் அப்பனே சரி என்று யான் ஆனாலும் முருகா இக்குழந்தையை இப்படியேவா??.........
குழந்தையும் அழுது கொண்டிருக்கின்றது வெயிலும் வந்துவிட்டது யான் எடுத்துக் கொண்டு வருகின்றேன் உன்னிடத்தில் என்று!!!
இதனால்
அப்பனே பின் அறிந்தும் கூட அப்படியே தூக்கினேன் அப்பனே அக்குழந்தையை...
ஆனாலும் அனைவருமே என்னைக் கூட பைத்தியக்காரன் என்றார்கள் அப்பனே!!!!
அறிந்தும் கூட
அதாவது அறிந்தும்
எவை என்று அறிய அறிய அதாவது என்னுடைய பக்தர்கள் கூட இவன் என்ன???
பைத்தியமா???? அறிந்தும் கூட!!!! யாருமே அக்குழந்தையை
எடுக்கவில்லையே???!!!.... இவந்தனுக்கு ஏன்....?? என்றெல்லாம் அப்பனே
இதனால் இப்படிதானப்பா பக்தர்கள் அப்பனே!!!
யான் வந்தாலும் அப்பனே யான் கண்ணுக்கு தெரிய போவதில்லை.... ஏன் எதற்கு என்றால் அப்பனே மனதில் அழுக்குகளப்பா!!! அழுக்குகள்!!!
இவ்வாறு அழுக்குகள் இருந்தால் அப்பனே எப்படியப்பா???? அறிந்தும்!! அறிந்தும்!!! யான் தெரிவேன் ???அப்பனே !!!
இதனால்
அப்பனே பின் அதாவது பின் என்னை அகத்தியன் அகத்தியன் அப்பா அப்பா
என்றெல்லாம் அழைப்பவர்களும் கூட என்னை பார்த்து இவன் பைத்தியக்காரன்
பைத்தியக்காரனே என்றெல்லாம் அப்பனே...
இதுதான் அப்பா கலியுகத்தில் நடக்கும் என்பேன் அப்பனே...
யானும் உண்மையாக வந்துவிட்டால் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட யாருமே அப்பனே ஏனென்றால் மாயை அறிந்தும் கூட
அதனால்தான் அப்பனே நல் உள்ளங்கள் அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய அப்பனே உண்மையாக இருங்கள் என்றெல்லாம் அப்பனே
இவ்வாறு இருந்தாலே நல்முறையாகவே நல் மனதாகவே இருந்தாலே அப்பனே யான் கண்ணுக்கு தெரிவேனப்பா வரும் காலங்களில் அப்பனே
அண்ணாமலையிலேயே தான் சுற்றித் திரிகின்றேன் அப்பனே
நிச்சயம் அப்பனே ஒவ்வொருவருக்கும் தரிசனம் உண்டு அப்பனே
அவ் தரிசனம் கண்டாலே ஆனாலும் நல் மனங்களை யான் பார்ப்பேன் அப்பனே.. யானே பேசுவேன் அப்பனே...
இது நிச்சயமப்பா!!! இது நடக்குமப்பா!!!!
அப்பனே
அறிந்தும் கூட ஆனாலும் அப்பனே அறிந்தும் அறிந்தும் இது என் பக்தர்களுக்கு
தெரிவிப்பேன் அப்பனே எப்பொழுது எதை என்றும் அறிய அறிய
ஆனாலும் அப்பனே நல் மனது தான் அன்பு தான் பெரியதப்பா!!!!
அப்பனே
தாய் தந்தையர் அன்பு காட்டாமல் தன் பிள்ளைகள் மீது அன்பு காட்டாமல்
அப்படியே தன் மனைவியின் மீது அன்பு காட்டாமல் அப்பனே இறைவன் மீது அன்பு
காட்டுகின்றானே??????!!!!!
இது நியாயமே இல்லை என்பேன் அப்பனே!!!!!
பின்
அனைவரிடத்திலும் அன்பு காட்டி பின் பல உயிரினங்களிடத்தும் அன்பு காட்டி
அப்பனே நிச்சயம் இறைவனிடத்தில் காட்டினால் அப்பனே இறைவன் சரியான பாதையில்
அழைத்துச் சென்று அப்பனே அனைத்தும் கொடுப்பான் என்பேன் அப்பனே
அப்பனே உங்களுக்கு ஏன் எதையும் கொடுக்காமல் இறைவன் எதை என்று அறிய அறிய அமைதியாக இருக்கின்றான் அப்பனே
அத்தகுதியை நீங்கள் பெற்றிருக்கவில்லை அப்பனே அதனால் தான் அப்பனே கொடுக்கவில்லை என்பேன். அப்பனே
கொடுத்திட்டாலும் அப்பனே அதை தவறாகவே அப்பனே அறிந்தும் அறிந்தும்!!!!.........
இதனால் அப்பிள்ளையைப் பற்றி எடுத்துரைக்கின்றேன் இப்பொழுது!!!
அப்பனே
நன்றாகவே அறிந்தும் தன் உண்மைதனை கூட அக்குழந்தை அறிந்தும் அறிந்தும்
இதனால் யானே பழனிதனக்கு அழைத்துச் சென்று பின் முருகன் அறிந்தும் அறிந்தும்
கூட
முருகன் மாறுவேடம் எடுத்து வந்து நிச்சயம் என் பக்கத்தில் அமர்ந்தான்... அறிந்தும் அறிந்தும்...
அகத்திய முனிவரே அறிந்தும் கூட பல இன்னல்கள் பட்டு அதாவது எப்படி எப்படியோ இவ்வுலகத்தை காக்க வந்தாய்....
ஆனால் உன்னையே பைத்தியக்காரன் என்று சொல்லிவிட்டார்களே....!!!!!
நிச்சயம் அறிந்தும் கூட இதுதான் கலியுகம்!!! நிச்சயம் அறிந்தும் கூட இதனால் நாம் இருவருமே இங்கு இருக்கின்றோம்!!!
பார்ப்போம்!!!!!!
பக்தர்கள் வந்து கொண்டே இருக்கின்றார்கள்!!!
ஒருவருக்காவது அதாவது யாம் அறிந்தும் கூட அதாவது இவ் பிள்ளைக்காகவாவது அறிந்தும் கூட பின் ஏதாவது தெரிகின்றதா என்று!!!
இதனால் யாங்கள் அதாவது யானும் அக்குழந்தையும் முருகனும் அங்கே இருந்தோம் அறிந்தும் அறிந்தும்
இதனால்
பக்தர்கள் அங்கும் இங்கும் வருவார்கள் போவார்கள் வருவார்கள் போவார்கள்
அப்பனே அறிந்தும் கூட.... யாரும் கண்டு கொள்ளவில்லை!!! அறிந்தும் கூட
அக்குழந்தை அழுகின்றது ஆனாலும்..... ஒருவன் ஓடோடி வந்தானப்பா!!!
அறிந்தும்
அறிந்தும் கூட... ஆனாலும் என்ன வேண்டும்?? என்ன வேண்டும்?? என்று... பின்
அவந்தனே சொன்னானப்பா அறிந்தும் கூட... இக்குழந்தைக்கு பின் அறிந்தும்
அதாவது பின் பாலை கூட எதை என்று அறிய அறிய பின் இங்கே இல்லையே யான் ஓடோடி
கீழே சென்று அறிந்தும் கூட பின் வந்து இக்குழந்தைக்கு கொடுக்கின்றேன் என்று
ஓடோடி சென்றான் அப்பனே!!!
எடுத்துச் சென்று இந்தா குழந்தைக்கு ஊட்டுங்கள் என்று
அப்பனே இதுதான் பக்தி அப்பனே
அவந்தன் இப்பொழுது இருக்கின்றான் அப்பா இக்கலியுகத்திலே இப்பொழுதே பிறந்து இருக்கின்றானப்பா
பெரும் பதவியில் வகிக்கின்றானப்பா!!!
இன்னும் அப்பனே முருகனின் பக்தனாகவே வலம் வந்து கொண்டிருக்கிறானப்பா!!!!
என்னுடைய பக்தனாகவும் யாருக்கும் தெரியாமல் வலம் வந்து கொண்டிருக்கிறான்ப்பா!!!
இன்னும் ஏற்றங்களை யாங்கள் கொடுப்போம் அப்பனே!!! இதுதான் அப்பனே பின் மனசாட்சி என்கின்றார்களே மனசாட்சி!!!!!
அதாவது மனம் வேண்டும் அப்பனே!!!!!
அதற்குள் சாட்சிகள் வேண்டும் அப்பனே!!!
அப்பனே
எதை என்றும் அறிய அறிய ஐயோ என்று பின் பக்குவங்கள் வர வேண்டும் என்பேன்
அப்பனே...இவ் பக்குவங்கள் வராமல் அப்பனே நிச்சயமாய் அறிந்தும் கூட கலியுகம்
அப்பனே எதனை நோக்கி செல்கின்றது??? அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட
இன்னல்கள் அப்பனே இக்கட்டான சூழ்நிலைகள் வருமப்பா!!!
நிச்சயம் அப்பொழுது அகத்தியனே!! முருகா!! ஈசா!!! என்று சொன்னாலும் முடியாதுப்பா !! முடியாது!!!!!
அப்பனே
இதனால் அப்பனே அக்குழந்தையும் சரி என்று அப்பனே...அவன் சென்று விட்டான்
அப்பனே இப்பொழுதும் கூட அறிந்தும் அறிந்தும் கூட பழனிதன்னிற்கு வந்து
கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே இன்னும் அப்பனே பேரோடும் புகழோடும்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே
எவரும் அவந்தனை ஒன்றும் அசைக்க முடியவில்லையப்பா!!!!!
அப்பனே இதுதான் அப்பனே புண்ணியம்!!!
அதுபோல் நிச்சயம் நீங்கள் புண்ணியம் செய்தாலே அப்பனே நிச்சயம் இப்ப பிறப்பிலே பின் எவரும் அசைக்க முடியாதப்பா சொல்லிவிட்டேன் அப்பனே
இன்னும்
அவன் மீது அப்பனே பல பல வழிகளிலும் கூட அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட
எவை என்றும் புரியாமல் கூட அப்பனே நிச்சயம் போட்டி பொறாமைகள் கூட
ஆனாலும் அவன் செய்த புண்ணியம் அப்பனே!!!!
ஒன்றே தான் செய்தான் அப்பனே..... அது இன்று வரை காத்துக் கொண்டிருக்கின்றது அப்பனே
இதனால் தான் அப்பனே நீங்கள் செய்த புண்ணியம் அப்பனே எப்பிறப்பு எடுத்தாலும் வந்து கொண்டே இருக்கும் அப்பனே
அதேபோலத்தான் பாவங்கள் கூட!!! எப் பிறப்பு எடுத்தாலும் வந்து கொண்டே இருக்கும் என்பேன்!!!
ஆனாலும் அப்பனே அதாவது முருகனும் சொன்னான் அப்பனே
மாமுனிவரே பார்த்தோம் சந்தோஷம்!!!!
இவன் கூட இப்படியா என்று!!!
மீண்டும் உட்காருவோம் பின் என்னதான் நடக்கிறது யார் என்ன செய்கின்றார்கள் என்று பார்ப்போம் என்று
அப்பனே ஆனால் யாரும் எதையும் செய்யவில்லையப்பா
அப்பனே அறிந்தும் அறிந்தும் சென்றார்கள் (தரிசனத்திற்காக) அனைவரும் முருகா !! முருகா!! என்று!!!
நகைத்தான் !!! முருகன்!!!!!
அகத்தியனே பார்த்தாயா!!! அறிந்தும் கூட!!
யான்
இங்கே இருக்கின்றேன் அங்கு. முருகா முருகா என்று சொல்லிக்கொண்டு
இருக்கின்றார்களே!!!! இது வேடம்தானப்பா (போலியான பக்தி
நாடகம்)என்றெல்லாம்!!!!!
இதனால்தான்
அப்பனே கலியுகத்தில் அறிந்தும் அறிந்தும் கூட ஓரிடத்தில் முருகன்
அமர்ந்திருப்பான் அப்பனே அறிந்தும் கூட அவையெல்லாம் நிச்சயம் அப்பனே என்
பக்தர்களுக்கு சொல்லி மீண்டும் அவர்களை உயர்த்துவேன்!!!
அப்பனே அறிந்தும் கூட உயர்ந்த இடத்தில் அமர வைப்பேன் இன்னும் சொல்கின்றேன் அப்பனே
அதாவது அறிந்தும் அறிந்தும் கூட அரசு பதவிகளில் கூட யானே அமர வைப்பேன் அப்பனே
ஒருவன் போதுமப்பா அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட!!!!
கோடான கோடி திருடர்கள் அப்பா ஆனாலும் கோடான கோடி திருடர்களில் ஒருவன் நல்லவனாக இருந்தாலே போதுமானதப்பா எங்களுக்கு!!!!!
அக் கோடான கோடியிலே பின் ஒருவனை வைத்து யாங்கள் அழித்து விடுவோமப்பா அறிந்தும் அறிந்தும் கூட
இதைத்தான்
ஆனாலும் யாங்களும் அதாவது மனிதன் கேட்கலாம் அப்பனே பின் உங்களால் அழிக்க
முடியாதா என்று அப்பனே !!!! அழித்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!!
நல்லவனாக வேண்டும் அல்லவா மனிதன்!!!!
எதை என்று
அறிய அறிய அப்பனே அறிந்தும் எதை என்று புரியாத அளவிற்கு கூட கேள்விகள்
கேட்பான் அப்பனே புத்திகள் இல்லை அப்பனே எதை என்று அறிய அறிய புத்திகளை
வைத்துக்கொண்டு அப்பனே செயல்படாத வரை அவை இவை என்றெல்லாம் அப்பனே பொய் கூறி
அப்பனே இன்னும் இன்னும் அப்பனே அதாவது வேதனைகளையும் சோதனைகளையும் வைத்துக்
கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!!
ஆனாலும்
அக்குழந்தை பின் அறிந்தும் கூட எதை என்று புரிய புரிய அப்பனே சரியாகவே
சிறிது அப்பனே பெரியவனாகி இன்னும் இன்னும் அறிந்தும் அறிந்தும் அதனால்
அப்பனே அறிந்தும் இவைதன் உணர உணர அப்பனே பெரியவனாகி நல்விதமாக
அக்குழந்தையும் கூட அப்பனே பின் ஓடி விளையாடி அதாவது திரு ஆவினன்குடி
இன்னும் அறிந்து கூட கீழேயும் மேலேயும்
(பழனி மலையில் இருந்து கீழே திரு ஆவினன்குடி. பின் பழனி மலைக்கு மேலே சென்று சென்று முருகன் தரிசனம்)
அப்பனே முருகனை!!!...... எதை என்று அறிய அறிய
ஆனாலும் முருகன் அறிந்தும் கூட இவந்தனுக்கு பெரிய பதவிகள் கொடுக்க வேண்டும் என்றெல்லாம்!!
இதனால் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட இதனால் பின் முதியவன் வேடம் அணிந்து முருகன் வந்து பின் குழந்தாய்!!!!
அறிந்தும் கூட உந்தனுக்கும் கடமைகள் இருக்க!!!! நீ இறை பக்தியை பரப்பு!!!! என்றெல்லாம்!!!
ஆனால் நீங்கள் யார்?? என்று பின் அக்குழந்தை கேட்க!!!!!
அதாவது
பின் அறிந்தும் கூட எவை என்று கூட 15 (அக் குழந்தையின் 15 ஆவது வயதில்)
வயதிலே நிச்சயம் பின் தரிசனத்தை காட்டினான் முருகனப்பா !!! முருகன்!!!!!
உன்னை வளர்த்தினேனே என்று!!!!
அக்குழந்தையும்
பின் கெட்டியாக பிடித்து கொண்டு நிச்சயம் இப்பிறவியில் பார்த்தேன்
அறிந்தும் கூட!!! தாய் தந்தையரை பார்க்க வில்லை!!! உங்களையே பார்த்து
விட்டேன் அறிந்தும் கூட!!!
அதனால் நீங்கள் சொன்ன உங்கள் சேவையை தொடர்வேன் என்று நல்விதமாக அப்பனே பின் சேவையை தொடங்கினான் செந்தூரிலிருந்து அப்பனே!!!
(திருச்செந்தூரிலிருந்து)
சேவையை
தொடங்கி வந்தான் அப்பா... அறிந்தும் கூட இப்படி இருங்கள் நல்லோர்களாக
வாழுங்கள் இன்னும் மாற்றங்கள் ஏற்படும்!!! புண்ணியங்கள் செய்யுங்கள்
என்றெல்லாம் சொல்லியவனுக்கு !!!.......... அப்பனே அடிதானப்பா கிடைத்தது
அப்பனே பைத்தியக்காரன் என்றும் இன்னும் அப்பனே எதை என்று அறிய அறிய சில
இழிவான செயல்கள் தான் காத்துக் கொண்டிருந்தது அப்பனே!!!
பின் அவந்தனும் வேதனையுற்றான் அப்பனே!!!! இப்படியுமா என்று!!!!
பின் அய்யய்யோ!!!! முருகா!!! இன்று ஓடி வந்தான் மீண்டும் பழனிதனுக்கு!!!!
முருகா!!! போதும்!!!!
அறிந்தும்!!!
எங்கிருக்கின்றாய்?? நீ!!! உண்மையான பக்தியை பரப்புவதற்கு நிச்சயம்
இவ்வுலகத்தில் என்னால் முடியவில்லை. நிச்சயம் என்னை துரத்துகின்றார்கள்
அறிந்தும் கூட பின் அடிக்கின்றார்கள் கல்லையும் எறகின்றார்கள் நிச்சயம்
அறிந்தும் கூட
உண்மைதனை உரைத்தால் நீ யார்??? என்றெல்லாம் கேட்கின்றார்கள்!!!
ஐயோ !!!! முருகா!!! என்னை அழைத்துக் கொள் என்று!!!
நிச்சயம் முருகன் மீண்டும் வந்தான்!!!!
பின் அப்பா!!!!!!!
அறிந்தும் கூட நிச்சயம் மீண்டும் சேவை செய் நான் உன்னிடத்தில் இருக்கின்றேன் என்று அழகாகவே !!!!!
அப்பா!!!!! முருகா மனிதன் திருந்திய பாடு இல்லை பின்.... இவையும் கூட பின் வருடங்கள் ஆகிவிட்டது..... அறிந்தும் கூட
இனிமேலும் ஒருவரை கூட என்னால் திருத்த முடியவில்லை இக்கலி யுகத்தில் கூட
அதனால்
என்னையே பைத்தியக்காரன் என்றும் இன்னும் பின் அதாவது தீய தீய
வார்த்தைகளில் கூட பின் காறியும் துப்பியும் கூட என்னை துப்பி
விட்டார்கள்!!!
வேண்டாம் முருகா நிச்சயம் உன் அருகிலேயே இருக்கின்றேன் உன் காலடியிலேயே இருக்கின்றேன் என்று!!!
ஆனாலும் இல்லை!!! இல்லை மகனே அறிந்தும் கூட நிச்சயம் செல்!!! பார்ப்போம்!!!! நீதான் வெற்றி பெறுவாய் என்று!!!!முருகனும்!!!
அப்பப்பா!!!!!
வேண்டாமப்பா!!! அறிந்தும் கூட போதும் எனக்கு அறிந்தது கூட பின் எதையுமே
அனுபவிக்கவில்லை ஆனாலும் மனிதன் மனசாட்சி இல்லாமல் முருகா யானும்
பார்த்தேன் முருகா உன்னையே வணங்குகின்றான் ஆனாலும் அறிந்தும் கூட யான்
முருகன் பக்தன் என்றால் நம்பவில்லையே???
அறிந்தும் கூட பொய் என்றான் அறிந்தும் உண்மைதனை கூட!!!!
இதனால் செல்!!! பார்ப்போம் என்று!!! முருகனும்!!!
மீண்டும்
அப்பனே அறிந்தும் எவை என்றும் புரியாமலும் கூட அப்பனே அறிந்தும் அறிந்தும்
கூட உண்மைதனை எடுத்துரைத்து எடுத்துரைத்து எதை என்றும் புரியாமல் அப்பனே
உண்மைதனை எதை என்றும் உணர்ந்தும் உணர்ந்தும் கூட அப்பனே இன்றளவும் கூட
மீண்டும் அவந்தனை எதை என்று அறிய அறிய பின் மீண்டும் பரப்பினான்
செய்திகளை!!!!
ஆனாலும் யாரும் நம்பவில்லை அறிந்தும் அறிந்தும் கூட காறியும் துப்பினார்கள்!!!!
இதனால் செந்தூரிலே அறிந்தும் உண்மைகளை எடுத்துரைக்கும் பொழுது அவனை கட்டி வைத்து எதை என்று அறிய அறிய!!!
நீ
அதாவது அனாதை யாரும் இல்லாதவன் உன்னை விட்டு விட்டால் பின் அனைத்தும்
அதாவது பொய்யான பக்தர்கள் எல்லாம் அழிந்து விடுவார்கள்.... உண்மையை நீ
ஏற்படுத்தி விடுவாய் அதனால் உன்னை இங்கேயே கொல்கின்றோம் என்று !!
இன்னொரு
பக்தன் இவனை கொல்லக்கூடாது அதாவது அறிந்தும் அறிந்தும் கூட சிறிய ஊசி
என்கின்றார்களே அதனை நிச்சயம் அறிந்தும் கூட ஊசியால் குத்துங்கள் கண்களை
என்று கூட
குத்தினார்கள்!!!!! அப்பப்பா!!! உண்மை பக்தனை கலியுகத்தில் எப்படி இருக்கின்றது என்று பார்த்தீர்களா????அப்பனே இப்படித்தான் அப்பனே
ஆனாலும் அவன் விடவில்லை முருகா!! முருகா !! நீதானே அனுப்பினாய் வா!! வா!! என்று!!
ஆனால் முருகனும் அமைதி காத்தான்!!! எதை என்று அறிய அறிய!!!
ஆனால்
அங்கிருந்த பக்தர்களும் முருகனா?!?!?! பின் எங்களுக்கே பின்
காண்பிக்கவில்லை தரிசனம்!!! யாங்கள் பல பூஜைகள் செய்கின்றோம் அதிகாலையில்
எழுகின்றோம் முருகா முருகா என்று பல அன்னதானங்கள் படைக்கின்றோம்... என்று
அப்பனே
எவை என்று அறிய அறிய அப்பனே பார்த்தீர்களா எவை என்று அறிய அறிய
இவையெல்லாம் செய்துவிட்டு மனசாட்சி இல்லை என்றால் அப்பனே அனைத்தும்
வீணப்பா!!! வீண்!!!
ஆனாலும் அறிந்தும் கூட முருகா முருகா என்று பின் கத்தினான் கதறினான் அப்பனே.... யாரும் வழிவிடவில்லை அப்பா எதை என்று கூறிய புரிய
இதனால் அப்படி பின் கண்களில் எதை என்று அறிய அறிய அப்படியே கொன்று விட்டார்கள் அப்பா அறிந்தும் கூட உண்மைதனை உண்மையான பக்தனை
இயலாமல்
எதை என்று அறிய அறிய ஆனாலும் அப்பனே இப்பொழுது கூட அவந்தன் பிறக்க அவன்
பெரிய பின் அரசு சார்ந்த இடத்தில் இருக்கின்றானப்பா!!!!
இப்பொழுது கூட அவன் நிச்சயம் வெற்றி பெறுவதும் உண்டு என்பேன் அப்பனே
எதை என்று இதில் வெற்றி பெறுவது என்பதை எல்லாம் யான் சொல்வதற்கில்லை என்பேன் அப்பனே அறிந்தும் கூட அப்பனே
ஆனாலும் இதை என்று புரிய புரிய அவனை ஒன்றும் அசைக்க முடியாதப்பா!!!
அப்பா பார்த்தீர்களா அப்பா, அப்பனே புண்ணியம் எங்கு சென்று இருக்கின்றது அப்பனே
பாவத்தை
பற்றியும் சொல்கின்றேன் அப்பனே கலியுகத்தில்.... எவன் என்னென்ன பாவங்கள்
செய்தான் இப்பொழுது எங்கெங்கெல்லாம் இருக்கின்றான் என்றெல்லாம் அப்பனே
ஆனால்
அவையெல்லாம் செய்தால் அப்பனே கீழ்த்தரமாக அப்பனே பாவம் செய்தவர்கள்
எல்லாம் என்னிடத்தில் ஓடோடி வந்து அப்பனே பின் திருத்தலமும் அமைத்து
வழிபட்டு கொண்டு தான் இருக்கின்றார்கள் அப்பனே
அப்பனே
இதனால் தான் அப்பனே ஏனப்பா எதை என்று அறிய அறிய உயர்ந்த பதவியில் வகித்து
அப்பனே பல மனிதர்களுக்கு சேவை செய்ய வேண்டும் அப்பனே இதுதான் அப்பனே
எங்களுடைய கட்டாயம்!!!
பின் அறிந்தும் கூட ஆனால்
பக்தன் பக்தன் என்று சொல்கின்றான் அப்பனே ஒரு பக்தனை கூட உயர்த்தலாம் என்று
நினைத்தால் அப்பனே யாருமே இல்லையப்பா
அப்பனே
அனைத்தையும் கெடுத்து விடுவான் அப்பனே அதனால்தான் அப்பனே எவை என்று அறிய
அறிய உயர் பதவியில் உள்ளோர்கள் எல்லாம் அப்பனே பக்தனை தட்டி கீழே
அமுக்குகின்றான் அப்பனே!!!!
உண்மையாக அப்பனே இருந்தால் நீங்கள் நிச்சயம் யானே அழைத்துச் செல்வேன் அப்பனே உயர் பதவியில் அமர வைப்பேன் அப்பனே
நிச்சயம் உன்னுடைய ராஜ்யத்தை அமைத்து வைப்பேன் அப்பனே
ஆனாலும் அப்பனே இதுதானப்பா உண்மை அப்பனே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட
இதனால் அப்பனே இப்பிறவியிலும் அவந்தனுக்கு நிச்சயம் முருகனே அருகில் இருந்து காத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே
எவை என்று அறிய அறிய அப்பனே இப்பிறவியிலும் முருகனும் கூட அப்பனே அவந்தனுக்கு காட்சியளித்து விட்டான் அப்பனே....
என்ன செய்ய முடியும் அப்பனே!!!
போட்டி பொறாமைகள் இவை என்று இருந்தாலும் அவனை என்ன செய்துவிட முடியும்?? அப்பனே!!
அவன் செய்தது புண்ணியங்களப்பா புண்ணியங்கள்!!!
அப்பனே
நல்முறையாகவே முதலில் அப்பனே அதாவது எதை என்று அறிய அறிய அனைத்து
உயிர்களிடத்தும் அன்பாக இருங்கள் அப்பனே போதுமானது அப்பனே எவை என்றும்
புரிந்தும் புரிந்தும் கூட
நிச்சயம் அப்பனே எண்ணற்ற கோடிகள் எதை என்று அறிய அறிய பிறவிகள் பிறந்தாலும் இவ் ஆன்மா அப்பனே உண்மையாகவே இருக்கட்டும் என்பேன் அப்பனே
நிச்சயம் அதற்காகத்தான் சித்தர்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம் அப்பனே
நிச்சயம் நல் உலகத்தை மாற்றுவோம் அப்பனே எதை என்று புரிய புரிய
நிச்சயம்
மாற்ற வைக்கத்தான் போகின்றோம் அப்பனே நீங்கள் திருந்தாவிடிலும் அப்பனே
அடித்து நொறுக்கி அப்பனே திருத்தி அப்பனே பன்மடங்கு அப்பனே நல்லோர்களுக்கு
உதவிகள் புரிய யாங்கள் தயாராக இருக்கின்றோம் அப்பனே
நலன்கள் ஆசிகளப்பா!!! ஆசிகள்!!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சர்வம் சிவார்ப்பணம்!!!!!
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
பச்சை கற்பூரம் மூலம் பெருமாள் எதிரில் நின்று நீங்கள் வேண்டியதை கேட்டுப்பெறும் சித்த ரகசியங்கள் - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_26.html
மீண்டும் புரட்டாசி - முக்கிய வாக்கு சுருக்கம். அனைவருக்கும் பகிருங்கள் - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_23.html
புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் தரிசன ரகசியம். அவசியம் பயன்படுத்திக்கொள்க!- https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_20.html
சித்தன் அருள் - 1676 - அன்புடன் அகத்திய மாமுனிவர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1676_19.html
சித்தன் அருள் - 1676 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1676.html
சித்தன் அருள் - 1675 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி! - https://tut-temples.blogspot.com/2024/09/1675.html
புரட்டாசி , ஐப்பசி , கார்த்திகை மாதம் - அகத்திய மாமுனிவர் அடியவர்கள் செய்யவேண்டிய வழிபாடுகள்! - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_14.html
சித்தன் அருள் 1663 -அன்புடன் நந்தியெம்பெருமான் முருகப்பெருமானை அழைத்த வாக்கு! - https://tut-temples.blogspot.com/2024/09/1663.html
ஆவணி மாதம் பேசுகின்றேன் - அகத்தியர் உத்தரவு - விநாயகர் அகவல் பாராயணம் - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_17.html
பழநிப் பதிவாழ் பாலகுமாரா!...கந்தர் அநுபூதி (பாடல் 1 - 5) - https://tut-temples.blogspot.com/2024/08/1-5.html
முருகா.! முருகா..!! முருகா...!!! மாதம்பே முருகா...!!!! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_28.html
முருகா.! முருகா..!! முருகா...!!! - மாதம்பே முருகன் கோயில்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_22.html
குருநாதர் வாக்கு! - பிரம்ம முகூர்த்த ரகசியம் & எப்படி அகத்திய மாமுனிவரை வழிபட்டால் அனைத்தும் நடக்கும்? - https://tut-temples.blogspot.com/2024/09/blog-post_7.html
அகத்தியப் பெருமானின் உத்தரவு!- கருட பஞ்சமி நாக பஞ்சமி - 09.08.2024 - https://tut-temples.blogspot.com/2024/08/09082024.html
விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்! - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post_17.html
முருகா.! முருகா..!! முருகா...!!! - கந்தர் அநுபூதி - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_15.html
முருகா.! முருகா..!! முருகா...!!! கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2024/08/blog-post_11.html
கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி பாடுவோம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_15.html
TUT குழு - கந்த சஷ்டி வழிபாடு அழைப்பிதழ் - 13.11.2023 முதல் 19.11.2023 வரை - https://tut-temples.blogspot.com/2023/11/tut-13112023-19112023.html
நினைவூட்டலாக! - குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_25.html
குருநாதர் அகத்தியப்பெருமான் உத்தரவு! - ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாடு - https://tut-temples.blogspot.com/2024/07/blog-post_24.html
கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயம் - ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆடித்திருவிழா - 28.07.2024 - https://tut-temples.blogspot.com/2024/07/28072024.html
ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருகட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 10.பிற ஜீவராசிகளும் பின் நன்றாக இருக்க வேண்டும் என்று அதிகாலையில்அனைவரும் நினைக்க வேண்டும். - https://tut-temples.blogspot.com/2024/08/10.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 9. பிறருக்காக உழைக்க வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/08/9.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 8. பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/8.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 7.தான் மட்டும் வாழ வேண்டும் என்று எண்ணாமல் பிறரும் கூட வாழவேண்டும்! - https://tut-temples.blogspot.com/2024/07/7.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 6.பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் நிச்சயமாய் அதை யான் தடுப்பேன் - https://tut-temples.blogspot.com/2024/06/6.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 5. பிற உயிர்களையும் கொல்ல மாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/5.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 4. உயிர்ப் பலியும் இடமாட்டேன் - https://tut-temples.blogspot.com/2024/05/4.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 3. போட்டி, பொறாமைகள் நீக்குவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/3.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 2. அனைவரிடத்திலும் அன்பாகப் பழகுவேன் - https://tut-temples.blogspot.com/2024/05/2.html
கோவையில் அகத்தியர் உத்தரவு! - 1. தர்மம் செய்வேன் - https://tut-temples.blogspot.com/2024/05/1.html
அன்புடன் அகத்தியர் - கோவையில் அகத்தியர் உத்தரவு! - https://tut-temples.blogspot.com/2024/05/blog-post_4.html
No comments:
Post a Comment