இறைவா..அனைத்தும் நீயே..
சர்வம் சிவார்ப்பணம்...
அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
முருகன் என்றால் தமிழ். தமிழ் என்றால் முருகன் என்று கூறும் அளவிற்கு நம் கந்தக் கடவுளிற்கு எத்தனை,எத்தனை பாடல்கள் என்றே தோன்றுகின்றது. ஒவ்வொரு முருக அருளாளர் பாடியுள்ள பாடல்களை நாம் படிக்கும் போது எத்தனை கோடி இன்பம் வைத்தாய் முருகா! என்று மனதுள் தோன்றுகின்றது. அருணகிரிநாதரின் திருப்புகழ், பாம்பன் சுவாமிகள் அருளிய பாடல்கள் என்று தான் நமக்கு தோன்றுகின்றது. ஆனால் சற்று ஆராய்ந்தால் இந்த பட்டியல் நீளும்.
நக்கீரர், முருகம்மையார் , கச்சியப்ப சிவாச்சாரியார் , அருணகிரிநாதர், குமரகுருபரர், பகழிக்கூத்தர், கச்சியப்ப முனிவர், திருப்போரூர் சிதம்பர சுவாமிகள், சிற்றம்பல நாடிகள், கந்தசஷ்டிக் கவசம் பாலதேவராய சுவாமிகள் , வடலூர் இராமலிங்க சுவாமிகள்,மாம்பழக் கவிராயர்,வண்ணச்சரம் தண்டபாணி சுவாமிகள், பாம்பன் சுவாமிகள்,வள்ளிமலை சுவாமிகள்,திருமுருக கிருபானந்த வாரியார் என சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் அருளிய நூற்களை எல்லாம் படிக்க இப்பிறவி போதுமா? என்று தெரியவில்லை. இதில் அருணகிரிநாதரின் மொழியில் திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி படித்து வருகின்றோம்.
கந்தர் அனுபூதி ஒரு மந்திர நூலாகும். நமது மனதை திறப்படுத்தும் நூல் ஆகும். முருகப் பெருமான் அருள அருணகிரிநாதர் கிளி ரூபம் கொண்டு பாடிய நூலாகும். இந்த நூலைப் பற்றி தாயுவான சுவாமிகள் கூறியுள்ள செய்தியாக,
கந்தர் அநுபூதி பெற்று கந்தர் அநுபூதி சொன்ன
எந்தை அருள் நாடி இருக்கும் நாள் எந்நாளோ?
- தாயுமானவர்
அனைவரும் கந்தர் அநுபூதி படிக்கும் பொருட்டு, ஒரே தொகுப்பாக தருகின்றோம். நம் சொந்தக்கடவுளாம் கந்தக் கடவுளின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். கந்தர் அநுபூதி பாடல் கீழே இணைத்துள்ளோம்.
முருகா! எந்தனுக்கு ஏதும் தெரியாது. மனிதனாகப் பிறந்து விட்டோம். அனைத்தும் நீயே! அனைத்தும் நீயே செய்து தா! அனைத்தும் நீயே செய்து கொண்டிருக்கிறாய். இன்னும் செய்து தா!
என்று வேண்டி பணிந்து கந்தர் அநுபூதி படிப்போம்.
வேலும் மயிலும் துணை!
திருச்சிற்றம்பலம்
அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
No comments:
Post a Comment