"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, September 1, 2023

விதியை வெல்வது எப்படி?

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவில் விதியை வெல்வது எப்படி? என்ற நூலைப் பற்றியும், அதனையொட்டி சில சிந்தனைகளையும் காண இருக்கின்றோம். பொதுவாகவே விதி என்று நாம் அனைத்திற்கும் கூறி வருகின்றோம். விதிக்கப்பட்டது தான் விதி என்று கூறலாமா? விதிக்கப்பட்டது அதாவது நமக்கு இது தான் ..இப்படித் தான். இது தான் நம் தலை எழுத்து என்று கூறி நொந்து வருகின்றோம் அல்லவா? இதனை விதி என்று கூறலாமா? சரி..இது ஒருபுறமிருக்க..விதியை எப்படி வெல்வது மதியைக்கொண்டு தான் அல்லவா?  விதியை மதியால் வெல்லலாம் என்று பெரியோர்கள் சொல்ல கேட்டிருக்கின்றோம் அன்றோ? அப்படியாயின் மதி என்றால் அறிவு தான்..அறிவைக் கொண்டு விதியை வெல்லலாம் அல்லவா? இங்கே அறிவு என்பது என்ன? நூல் அறிவா? மெய் அறிவான இறை அறிவா?  என்றெல்லாம் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. இவற்றை பற்றி காணும் முன்பாக நம் குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் விதி பற்றி அருளிய உபதேசங்களை முதலில் படித்து தெளிவோம்.



 அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு

விதியே தவறு செய்யக் கூறினாலும் அல்லது செய்யத் தூண்டினாலும் தன் மனதை கட்டுப்படுத்தி, போராடி, தவறு செய்யாமல், பாவத்தை சேர்க்காமல் வாழப் பழக வேண்டும். விதி நல்லவற்றை செய்ய வாய்ப்பைக் காட்டும்பொழுது தாராளமாக அந்த வழியில் நடக்கலாம். ஆனல் நல்லவையல்ல என்று விதி தூண்டும்பொழுது, நல்ல ஆத்மாக்களுக்கு, ஓரளவு நன்மைகளை எண்ணக்கூடிய ஆத்மாக்களுக்கு, இறைவன் மனசாட்சி மூலமாக "வேண்டாம், இந்த வழி செல்லாதே, இதை செய்யாதே" என்று எச்சரிக்கை கொடுத்துக் கொண்டேயிருப்பான். அந்த மனசான்றை மதித்து நடந்தால், அந்த தவறிலிருந்து, அந்த பாவத்திலிருந்து ஒருவன் தப்பிக்கலாம். ஆனால் பலகீனமான மனம் கொண்டவனால் அப்படி தப்பிக்க இயலாது. அதனால்தான் நாங்கள் என்ன கூறுகிறோம் என்றால், ”தொடர்ந்து தர்மம் செய், பிரார்த்தனை செய், ஸ்தல யாத்திரை செய், ஸ்தல யாத்திரை செய், புண்ணிய நதியில் நீராடு" என்கிறோம். பலகீனமான மனம் கொண்ட மனிதனை விதி இன்னமும் அவன் செய்த பாவங்களுக்கு ஏற்ப மேலும் பாவத்தை சேர்க்க வைத்து தாங்கொண்ணா நரகத்தில் தள்ளிவிடும் என்பதால்தான் ஸ்தல யாத்திரையும், பிரார்த்தனையும், தர்மமும், சத்தியமும் தொடர்ந்து செய்ய, செய்ய, செய்ய. அவன் விதி மெல்ல, மெல்ல மாறி அவனை மென்மேலும் அற வழியில் திசை திருப்பும். அதற்குதான் நாங்கள் ஆலய தரிசனம், கூட்டுப் பிரார்த்தனை, தனி மனித பிரார்த்தனை, தர்மகாரியங்கள் செய்ய அருளாணை இட்டுக்கொண்டே இருக்கிறோம். இவற்றை தன்முனைப்பு இல்லாமல் செய்வதால், எந்தவிதமான பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்வதால் ஒருவனின் மனம் திடம் பெறுகிறது. ஒருவனின் மனம் வைராக்யம் பெறுகிறது. ஒருவனின் மனம் பரம்பொருள் மீது ஐக்கியமாகிறது. ஒருவனின் மனம் வைரம் போல் உறுதியாகிறது. இதனால், எந்தவிதமான எதிர்ப்புகளையும், எந்தவிதமான வாழ்க்கை சூழலையும் தடுமாற்றமில்லாமல் வாழ்வதற்குண்டான ஒரு திறனை மனிதன் பெறுகிறான். எனவேதான் பிரார்த்தனையும், பிரார்த்தனையோடு கூடிய நல்லவிதமான அறச்செயலும் ஒரு மனிதனுக்கு தேவை என்பதை எப்பொழுதுமே வலியுறுத்தி வருகிறோம்.





 மனிதனின் எதிர்கால வாழ்வினை அறிய, அருள் வாக்கோ, ஜோதிடமோ பார்ப்பதில் தவறில்லை. ஆயினும், மனிதர்களின் முன் ஜென்ம பாவத்தின் அடிப்படையில் அமைவதுதான், அவன் வாழ்வு. எம்மை நாடுவதாலோ, எமது வகை அறிவதாலோ மட்டும் உடன் உயர்ந்த பலன் கிட்டிவிடாது. விதி, முதலில் அதன் வேலையை செய்துகொண்டே இருக்கும். அதன் போக்கிலே சென்றுதான் திசை திருப்பவேண்டும். விதி எப்படி நிர்ணயிக்கப் படுகிறது? ஒவ்வொரு ஆத்மாவும், ஒவ்வொரு பிறவியிலும் செய்த பாவ, புண்ணிய அளவை வைத்து, நடப்பு பிறவியிலே அதற்கு ஏற்றவாறு தாய், தந்தை உறவினர், நட்பு, பணி, கல்வி, ஆரோக்கியம் போன்றவை முன்னரே தீர்மானிக்கப்படுகிறது. அதில், விரும்பக்கூடியதை, மனிதன், ஏதும் சொல்லாமல் ஏற்றுக் கொள்கிறான். விரும்பக் கூடாததை மட்டும் மாற்றினால் நன்மை என்று எண்ணுகிறான். அது தவறில்லை. என்றாலும் விதி அதற்கு அனுமதி தராது. ஆத்மார்த்தமான பிரார்த்தனைகள், தர்மங்கள் செய்துதான் பிரச்சினைகளில் இருந்து மெல்ல, மெல்ல வெளியே வர வேண்டும். ஒருவனுக்கு நடக்கும் நிகழ்வு, வேறொரு மனிதனுக்கு நடக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. ஏனென்றால், ஒவ்வொரு மனிதனின் கர்மா, பாவங்கள், தனித்தனியான அளவீடுகளை கொண்டதாக இருக்கிறது. எம்மை நாடுவதும், வாக்கை அறிவதும், அறிந்த பிறகு ஆதி பிழறாமல் செய்தும், எவ்வித மாற்றமும் இல்லை என்று வருந்துகின்ற மனிதர்கள் பலருண்டு. அங்கும் விதி கடுமையாக உள்ளதை, புரிந்து கொள்ளவேண்டும். மனச்சோர்வு கொள்ளாமல், மீண்டும், மீண்டும் இறைவனிடம் பிரார்த்தனையை வைத்துக் கொண்டே இருக்கவேண்டும். துன்பமே இல்லாத வாழ்க்கை என்று ஒன்றுமே கிடையாது. எப்படி இன்பம் ஒரு மாயையோ, துன்பமும் ஒரு மாயைதான். ஆக, இவ்விரண்டையும் தாங்கக்கூடிய மனோ பக்குவத்தை ஒரு மனிதன் வளர்த்துக் கொள்ளவேண்டும். அதற்குத்தான், "ஞானநிலை" என்று பெயர். அந்த ஞானத்தைத்தான் ஒவ்வொரு மனிதனும் அடையவேண்டும் என்று யாங்கள் எதிர் பார்க்கிறோம்.

அனைவரும் குருநாதர் அருளிய வாக்கினை உள்வாங்கி இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். குருநாதர் இங்கே நம்மை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறுவது மனதை செம்மைப்படுத்துவது தான். மனதை செம்மைப்படுத்தி விட்டால் நாம் விதி பற்றி கலங்க தேவை இல்லை. அனைத்தும் இறையருளால் சிறப்பாக நடைபெற்று வருகின்றது என்று கொள்வோம். இந்த மனநிலையை கொண்டு வர பல வழிகளில் நாம் ஸ்தல யாத்திரை,பிரார்த்தனை, வழிபாடு, தான தர்மம் என சென்று கொண்டு இருக்கின்றோம். இவை அனைத்தும் இறை நோக்கி நம்மை நகர்த்துபவை ஆகும். இது தான் மதி ஆகும். எனவே விதியை இறையுணர்வாகிய மதியைக் கொண்டு வெல்லலாம். அதிலும் குறிப்பாக தினசரி பிரார்த்தனை செய்வதன் மூலம் வெல்லலாம். தினசரி பிரார்த்தனையில் அருளாளர்கள் வழங்கிய ஞான நூற்களை ஓதி, ஓதி வருவதன் மூலம் விதியை வெல்லலாம். 

திருமுறைகள் என்றால் ஒன்று, இரண்டு இருக்கும் என்று எண்ண வேண்டாம். மொத்தம் பன்னிரு திருமுறைகள் உண்டு. கலியுகத்தில் நமக்கு ஊழ்வினையால் ஏற்படும் துன்பங்களுக்கும், வாழ்வில் நாம் சந்திக்கும் அனைத்து துன்பங்களுக்கும், பிறவி என்னும் மிகப்பெரிய பிணிக்கும், மருந்தாக அமைந்து நம்மைக் காத்து அருள்வது பன்னிரு திருமுறைகள் எனப்படும் சிவ ஆகமங்களாகும். மிகவும் பெருமைமிக்கது, அளப்பரியது, ஆற்றல்மிக்கது. வேத ஆகமங்கள் மற்றும் சைவ சித்தாந்தத்தின் பிழிந்த சாறாக, நமக்கு இன்பம் தரும் நமது தமிழ் மொழியில், அருளாளர்கள் வழியாக இறைவனால் நமக்கு அருளப்பட்டது, பன்னிரு திருமுறை என்னும் தமிழ் வேதம். நம்முடைய துன்பங்கள் அனைத்திற்க்கும் மூல காரணமாக விளங்குவது நம் அறியாமை. அந்த அறியாமையிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்கு திருமுறை வாக்குகள் பெரிதும் உதவுகின்றன. வினை வயப்பட்டுத் துன்புறும் நாம் திருந்தி உய்யும் பொருட்டு, இறைவன் அருளாளர்களை இப்பூமிக்கு அனுப்பி அவர்கள் வாயிலாக நமக்கு இந்த திருமுறைகளை அருளிச் செய்துள்ளான். திருமுறைகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மிகுந்த மந்திர ஆற்றல் உடையவை. திருமுறைகளை நாம் பாராயணம் செய்து ஓதுவித்தால், அதில் உள்ள மந்திர ஆற்றல், நம் உயிரில் கலந்து நமது அறியாமையைப் போக்கும். யாராலும் மாற்றியமைக்க முடியாத நம் விதியை, இறைவனின் கருணையினால் மட்டுமே மாற்றியமைக்க முடியும். விதியை மதியால் வெல்வது என்பது திருமுறைகளை ஓதுவித்து, இறைவன் அருள்பெற்று, நம் விதியை மாற்றுவதேயாகும்.



பன்னிரு திருமுறைகளால் நம் ஆன்மீக பூமியில் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் சில:
  • பாண்டிய மன்னன் வெப்பு நோய் தீர்ந்து, கூன் நிமிர்ந்தது. 
  • வேதங்களால் பூட்டப்பட்ட திருக்கதவு திறந்து, பின் தாளிட்டது. 
  • பாலை நிலம் நெய்தல் ஆனது. 
  • தேவார ஏடுகள் தீயில் கருகாமல் பச்சையாக இருந்தது, 
  • வைகை ஆற்று வெள்ளத்தில் எதிரே நீந்தியது. 
  • ஆண் பனை பெண் பனையாயிற்று. 
  • எலும்பு பெண்ணாகியது. 
  • விடத்தினால் இறந்த செட்டி உயிர் பெற்றார். 
  • ஆற்றில் போட்டது குளத்தில் கிடைத்தது. 
  • சுண்ணாம்பு காளவாயில் 7 நாட்கள் உயிரோடு இருந்தது. 
  • மதயானையை வணங்கச் செய்தது. கல்லில் கட்டி கடலில் வீசியவர் தெப்பமாக மிதந்து கரை சேர்ந்தது. 
  • நரி குதிரையாகியது. 
  • முதலை விழுங்கிய பிள்ளை 3 ஆண்டுகள் கழித்து மீண்டது. 
  • பிறவி ஊமை பேசியது. 
  • சிவபெருமானே தம் கைப்பட எழுதியது நூலானது. 


இன்னும் பல எண்ணற்ற அற்புதங்களை செய்துள்ளது பன்னிரு திருமுறை. திருமுறையே சைவநெறிக் கருவூலம், செந்தமிழ் வேதம்.இதனை தான் திருவாவடுதுறை ஆதினம் வெளியீடான விதியை வெல்வது எப்படி என்ற நூல் கூறுகின்றது.


இந்நூலில் எடுத்தாளப்படும் பதிகங்களைப் பற்றி;

ஒவ்வொருவருடைய யாதகத்திலும் பன்னிரண்டு கட்டங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கட்டமும் நமது வாழ்வில் நாம் அனுபவிக்க இருக்கும் பல்வேறு துன்பங்களை குறிக்கும்.இதனைப் பாவம் [BHAVAM] என்று சோதிட நூலார் கூறுவர். ஜாதகத்தில் 'ல' என்று போடப்பட்டிருக்கும் கட்டம் முதல் பாவம் ஆகும்.அதிலிருநது இரண்டு, மூன்று, பன்னிரண்டு பாவங்கள் வரை உள்ளன.

இவற்றுள் ஒவ்வொரு பாவத்திற்கும் இன்னின்ன பலன்கள் என்று உள்ளன. அந்தப் பலன்களை சோதிட சாத்திரப் பலன்களின் அடிப்படையில் கருததில் கொண்டு, இந்நூலில் பதிகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.என்னென்ன குறைபாடுகள் நமக்கு உள்ளனவோ, அவற்றை அந்தந்தப் பதிகங்களின், தலைப்பில் விளக்கமாகக் கூறியிருக்கிறேன்.அவரவர்க்கு தேவையான பதிகங்களை தொடந்து தொய்வின்றி விடாமல், நாள் தவறாமல் தொடர்ந் து செய்து வந்தால் அந்த துன்பம் நிச்சயம் நீங்கும்.பல்வேறு துன்பங்களை உடையவர்கள், அந்தந்தத் துன்பங்களைப் போக்குவதற்கென தொகுக்கப்பட்டுள்ள பதிகங்களை படனம் செய்து வர வேண்டும்.

உறுதியான நம்பிக்கையோடு படனம் செய்து வாருங்கள், நிச்சயம் பயன் பெறுவீர்கள். இவை அனுபவ வாயிலாக கிடைக்கப்பெற்ற உண்மைகள்.

முதல் பாவம்

1. ஆயுள் முழுவதும் எந்தவிதக் குறையும் இன்றி வாழ்வதற்க்கு ஓதவேண்டிய பதிகம்.. பஞ்சாக்கரத் திருப்பதிகம் - துஞ்சலும்


 இரண்டாம் பாவம்

2. பொருளாதார நிலை சீர் பெருவதற்க்கும் , வறுமை நீங்குவதற்கும் ஓதவேண்டிய பதிகம்.- இடரினும் தளரினும்


3. உணவும் , உடையும் குறைவின்றிக் கிடைப்பதற்க்கு ஓதவேண்டிய பதிகம் - தம்மையே புகழ்ந்து


4. கண்களில் உள்ள கோளாறு நீங்குவதற்கும், பார்வை இழந்த கண்களில் ஒளியைப் பெறுவதற்கும் ஓதவேண்டிய இரு பதிகங்கள்.

 இடக்கண்ணில் இடர் நீங்குவதற்கு - ஆலம் தான்


5. வலக்கண் கோளாறு நீங்குவதற்கு - மீளா அடிமை

6. சொல் சோர்வு நீங்குவதற்கும், திக்குவாய் மாறிச் சீர் பெறுவதற்கும் , சிறந்த பேச்சாளர் ஆவதற்க்கும் ஓதவேண்டிய பதிகம்.- பூசுவதும் வெண்ணீறு.

7. குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் தீர்வதற்கும் , குடும்பத்தில் உள்ளவர் அமைதியுடனும் வாழ்வதற்கும் ஓதவேண்டிய பதிகம்.- மண்ணில் நல்ல

8. கல்வியில் திறம்பெற்று உயர்வதற்கு ஓத வேண்டிய பதிகம்.- சுற்றமொடு பற்று அவை

மூன்றாம் பாவம்

9. எடுத்த காரியம் யாவினும் வெற்றி பெறுவதற்கும், விஷ சுரம் , விஷக்கடி முதலியன நீங்குதட்கும், தொண்டையில் உள்ள கோளாறுகள் அனைத்தும் நீங்கி குரல் வளம் பெறுவதற்கும் , செய்வினை , பில்லி , சூனியம் என்பவற்றால் பாதிக்காமல் இருக்கும் பொருட்டும் , துணிவுடன் செயலாற்றுவதட்கும், இளைய சகோதரன் நலம் பெறுவதற்கும் ஓதவேண்டிய பதிகம் - அவ்வினைக்கு இவ்வினை

நான்காம் பாவம்

10. தாயாரின் உடல் நிலை சீர்பெறுவதற்கும் , பிரசவம் சுகமாக அமைவதற்கும் , உறவினர், நண்பர்களின் தொடர்பு நன்கு அமையப் பெறுவதற்கும் ,வீடு , மனை முதலியன செம்மையுறக் கட்டி முடிப்பதற்கும் ஓதவேண்டிய பதிகம் . - நன்று உடையானைத்

ஐந்தாம் பாவம்

11. மக்கட் செல்வம் வாய்க்கப் பெறுவதற்கும் ,பட்டிமன்றம் , கருத்தரங்கம் ,முதலியவற்றில் வாதத்திறமை பெறுவதற்கும் ,எழுத்தாற்றல் பெறுவதற்கும் ,தத்துவஞானத் தெளிவைப் பெறுவதற்கும் ஓதவேண்டிய பதிகம் - கண் காட்டும்

ஆறாம் பாவம்

12. வெப்பம் மிகுதியால் ஏற்படும் சுரநோய் ,பித்தசுரம் முதலிய நோய்கள் நீங்குவதட்கு ஓதவேண்டிய பதிகம் - மந்திரம் ஆவது நீறு;

13. பகைவர்களால் ஏற்படும் தொல்லைகளைப் போக்குதட்கும் , சிறை வாசத்தை த் தடுப்பதற்கும் ,சிறையிலிருந்து விரைவில் விடுபடுவதற்கும் ஓதவேண்டிய பதிகம். - செய்யனே , திரு ஆலவாய்

14. கடன் தொல்லைகள் நீங்கி, மன நிம்மதியுடன் வாழ்வதற்கும், பிறரிடமிருந்து கடன் பெறாமலே போதிய பொருளாதாரத்துடன் வாழ்வதற்கும் ஓதவேண்டிய பதிகம். - வேத வேள்வியை

15. இரத்த அழுத்த நோய்(blood pressure) , நீரிழிவு நோய் ,முதலிய நோய்கள் நீங்குதட்கும், மூர்ச்சை நோயிலிருந்து எழுவதற்கும் ஓதவேண்டிய பதிகம். இக்காலத்தில் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி மீள இயலாமல் இருப்பவர்களை மீட்பதற்கும் இந்த பதிகத்தை ஓதிப்பயன் பெற்றுள்ளனர். - துணிவளர் திங்கள்

16. தீராத வயிற்று வலி நீங்குவதட்கும், குடல் தொடர்பான அனைத்துத் தொல்லைகளைப் போக்குவதற்கும் ஓதவேண்டிய பதிகம். மஞ்சள் காமாலை நோயை போக்குவதற்கும் இந்த பதிகத்தினை படனம் செய்யவும். - கூற்று ஆயினவாறு

17. எலும்பு முறிவு குணம் அடைவதற்கும் , இளம்பிள்ளை வாதம் , பக்க வாதம் , போன்ற நோய்கள் தீர்வதற்கு ஓதவேண்டிய பதிகம் - விங்குவிளை கழனிமிகு

ஏழாம் பாவம்

18. சர்ப்ப தோஷத்தால் திருமணம் தள்ளிப்போவதைத் தவிர்ப்பதற்கு ஓதவேண்டிய பதிகம்.- சடையாய் எனுமால்


19. தடைப்படும் திருமணம் சடுதியில் கூடி வருவதற்கு ஓதவேண்டிய பதிகம்.- நீறுவரி ஆடுஅரவொடு ஆமை


20. தாம்பத்திய உறவு முழு நிறைவுடன் நடைபெறுவதற்கும், தம்பதிகளுக்குள்ளே உள்ள பிணக்குத் தீர்ந்து ஒற்றுமையாக வாழ்வதற்கும் ஓதவேண்டிய பதிகம்- அயில் ஆரும் அம்பு


எட்டாம் பாவம்

21. சகல கிரக பீடைகள் நீங்குவதற்கும் ,நவக்கிரக தோஷங்கள் நீங்குவதட்கு சாந்தியகவும், ஆயுள் பலம் பெருகுவதற்கும் ஓதவேண்டிய பதிகம். - கோளறு பதிகம் - வேயுறு தோளி பங்கன்


22. அட்டமத்துச் சனி (எட்டாமிடத்துச் சனி ) , ஏழரைச் சனி, கண்டச் சனி ( நாலாம் இடத்துச் சனி) யினால் வாழ்க்கையில் எதிர்பாராத இடர்பாடுகள் ஏற்படாமலிருக்கும் பொருட்டு ஓதவேண்டிய பதிகம் - திருநள்ளாற்று பதிகம் ( திருநள்ளாறு கோவில்), சம்பந்தர் மதுரையில் சமணருடன் அனல்வாதம் செய்யும்போது நெருப்பில் இட்ட பதிகம் இதுவே; நெருப்பில் எரியாமல் இருந்ததால் பச்சைப் பதிகம் எனவும் அழைப்பர்..- போகம் ஆர்த்த பூண்முலையாள்.


23. எந்தக் காரியத்தில் ஈடு பட்டாலும் ஏதாவது ஒரு தடை வருவதைத் தடுப்பதற்கும், வீண் பழி , அவமானங்களில் இருந்து விடுபடுவதற்கு ஓதவேண்டிய பதிகம் - மறை உடையாய் , தோல் உடையாய்


24. இழந்த பொருளை மீட்டுப் பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம் - பொன்செய்த மேனியினீர்

ஒன்பதாம் பாவம்

25. தந்தையின் உடல்நலம் , மனநலம் சீர்பெறுவதற்கும் , தனக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் நழுவாமல் இருப்பதற்கும், புண்ணிய பயன்களை பெறுவதற்க்கும், திருஞானசம்பந்தர் சீர்காழி மீது பாடிய 70 பதிகங்களின் ஒருமித்த பலனைப் பெறுவதற்கும் ஓதவேண்டிய பதிகம் - திரு எழு கூற்றிருக்கை - ஓர்உரு ஆயினை ; மான் ஆங்காரத்து.


பத்தாம் பாவம்

26. வேலை இல்லாத தொல்லை நீந்குவதட்கும், பாராட்டுக்குரிய செயல்களைப் புரிந்து புகழைப் பெறுவதற்கும், தெய்வ வழிபாடு , புண்ணியச் செயல் முதலியவற்றில் ஈடுபாடு கூடுவதற்கும் ஓதவேண்டிய பதிகம் - வாழ்க அந்தணர், வானவர் ஆனினம்;


27. தொழில் நிரந்தரம் பெற - மட்டுஇட்ட புன்னைஅம்

பதினோராம் பாவம்

28. செய்யும் தொழிலில் இலாபம் பெருகுவதற்கும் , மூத்த சகோதரர்கள் வளமுடன் வாழ்வதற்கும், எவ்வளவு கடினமான வாழ்க்கை இருந்தாலும் அதில் வெற்றி பெறுவதற்கும் ஓதவேண்டிய பதிகம் - வாசி தீரவே , காசு நல்குவீர் ;


பன்னிரெண்டாம் பாவம்

29. நாள்தோறும் உணவும் உறக்கமும் சீராகப் பெறுவதற்கும், வீண் செலவுகள் ஏற்படாமல் இருப்பதற்கும், மறுபிறப்பைத் தவிர்ப்பதற்கும், இறை வழிபாட்டில் மிகுதியாக ஆர்வம் பெருகுவதற்கும் ஓதவேண்டிய பதிகம். - நமச்சிவாயப் பதிகம் - காதலாகிக் கசிந்து .


பொதுப் பதிகம் ( சகலரும் ஓதவேண்டியது; )

30. சர்வ ஐஸ்வரியங்களும் பெற்று வாழ்ந்து ஈற்றில் சிவலோகத்தில் சிவபதமடைவதற்கு தவறாது சகலரும் நாள்தோறும் ஓதவேண்டிய திருப்பதிகம் - சிவபுராணம் - நமச்சிவாய வாழ்க ( சிவபெருமானே கைப்பட எழுதியது)


திருச்சிற்றம்பலம்

அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-


 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஏழாம் நாள் 7 - https://tut-temples.blogspot.com/2022/02/7-7.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஆறாம் நாள் 6 - https://tut-temples.blogspot.com/2022/02/7-6.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஐந்தாம் நாள் 5 - https://tut-temples.blogspot.com/2022/02/7-5.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - நான்காம் நாள் 4 - https://tut-temples.blogspot.com/2022/02/7-4.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - மூன்றாம் நாள் 3 - https://tut-temples.blogspot.com/2022/02/7-3.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - இரண்டாம் நாள் 2 - https://tut-temples.blogspot.com/2022/02/7-2.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1 - https://tut-temples.blogspot.com/2020/03/7-1.html

பிரார்த்தனை எனும் மகா சக்தி!  - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_17.html

இறைப்பணியாக குருவருளால் நீர் மோர் சேவை! - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_9.html

சத்தியத்தைப் பேசு, தர்மத்தை கடைப்பிடி! - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post.html

மயிலேறி விளையாடு குகனே...புல் வயல்நீடு மலைமேவு குமரேசனே... - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_29.html

 பசித்தோர் முகம் பார்; பரம்பொருள் அருள் கிட்டும்  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_27.html

 கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகஸ்தியர் - ஆனி ஆயில்யம் வழிபாடு - 22.06.2023  -  https://tut-temples.blogspot.com/2023/06/22062023.html

 அருள்மிகு ஸ்ரீ சற்குரு சுவாமிகள் - 113 ஆம் ஆண்டு குருபூஜை விழா (19.06.2023 முதல் 21.06.2023 வரை) - https://tut-temples.blogspot.com/2023/06/113-19062023-21062023.html

 திருமூலர் அருளிய திருமந்திரம் 3000 முற்றோதல் (ஞான வேள்வி) - 18.06.2023  - https://tut-temples.blogspot.com/2023/06/3000-18062023.html

 அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_16.html

 ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_14.html

 தேடிக் கண்டுகொண்டேன் - திருஅங்கமாலை  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_13.html

 ஒருவன் என்னும் ஒருவன் காண்க - வான் கலந்த மாணிக்கவாசகர் மலரடி போற்றிகள்!  - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post_11.html

நேர்மறை விமர்சனத்தோடு வாழ்வோம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_29.html

கண்களுக்கு விருந்தாக! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_39.html

ஓடுவது முள் அல்ல...நம் வாழ்க்கை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_8.html

தினசரிப் பிரார்த்தனை - எண்ணிய முடிதல் வேண்டும்.  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_75.html

அன்னதானப் பெருஞானம் அத்தனையும் தந்திடுமே என்றுரைத்த ஏகாந்த என்றுமொளிர் குருஜோதி! - https://tut-temples.blogspot.com/2023/06/blog-post.html

திருவாசகத் தேன் பருகலாம் வாரீர்  - https://tut-temples.blogspot.com/2022/01/blog-post_10.html

வேண்டத் தக்க தறிவோய்நீ - https://tut-temples.blogspot.com/2021/07/blog-post_13.html

இன்றைய ஆனி மாத மக நட்சத்திரம் - மாணிக்கவாசகர் குரு பூசை பகிர்வு - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_25.html

கற்போம். கடைப்பிடிப்போம்.. காப்போம்... - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_26.html

வான் கலந்த மாணிக்க வாசக! - மாணிக்கவாசகர் குரு பூசை - 06/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/06072019.html

 TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

 எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சிந்தனைக்கு சில - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_8.html

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_4.html

No comments:

Post a Comment