"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, September 8, 2023

தினம் ஒரு முருகன் ஆலயம் - 6 - விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

முருகன் அருள் முன்னிற்க, தினம் ஒரு முருகன் ஆலயம் தொடர்பதிவில் தினம் ஒரு முருகன் ஆலய தரிசனம் கண்டு, திருப்புகழ் படித்து வருகின்றோம். தற்போது வரை 4 திருப்புகழ் திருக்கோயில்  தரிசனம் கண்டு வந்துள்ளோம்.

 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்  

2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் - 3 திருப்புகழ் 

3 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் - 4 திருப்புகழ் 

4. திருப்புகழ் தலம் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் - 1 திருப்புகழ்

5. சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில் 

இதற்கு முந்தைய பதிவில் சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில் தரிசனம் பெற்று மகிழ்ந்தோம். இன்று குருவருளால் மீண்டும் முருகப் பெருமான் தரிசனம் பெற உள்ளோம்.




பாவங்களை போக்கும் விழுப்புரம் மாவட்டம் மேல்ஒலக்கூர் பசுமலை  சுப்பிரமணிய சுவாமி கோவில் 

அருள்மிகு பசுமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

மேல்ஒலக்கூர்-604203 

செஞ்சி தாலுகா

விழுப்புரம் மாவட்டம் 

இருப்பிடம்: செஞ்சி 18 கிமீ, விழுப்புரம் 50 கிமீ, திண்டிவனம் 33 கிமீ

அலைப்பேசி எண்: 9962344722, 9003114240


மூலவர்: சுப்பிரமணிய சுவாமி 

தேவியர்: வள்ளி, தெய்வானை

பாடியவர்கள்: அருணகிரிநாதர், நங்கை நல்லூர் பொங்கி மடாலயம் சாதுராம் சுவாமிகள் 


தல மகிமை: 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுர் தாலுகா மேல்ஒலக்கூரிலிருந்து ஒரு கிமீ தொலைவில் பசுமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. முருகப்பெருமான் குடிகொண்டுள்ள மலைக்கோவில்களில் சிறப்பு வாய்ந்த ஒன்றாகத் திகழ்கின்றது பசுமலை வள்ளி தெய்வானை சமேத  சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில். இக்கோவில் மலையடிவாரத்தில் 25 அடி உயர சக்திவேல் இருப்பது கோவிலின் தனிச்சிறப்பு. ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் திருப்புகழ் திருப்படி விழா இத்தலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து ஊர்களிலிருந்தும் அடியார் குழுவினர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். ஒரு பசுவிற்குள் அனைத்த தெய்வங்களும் அடக்கம். அதுபோல இங்கு பசுமலையை வலம் வந்தால் அனைத்துத் தெய்வங்களின் அருளும் கிட்டும் என்பது நிச்சயம்.

பசுமலை என்ற பெயருக்கு ஏற்றாற் போல் அடர்ந்த மூலிகைத் தன்மை வாய்ந்த தாவரங்களுடன், இம்மலை  பசுமையுடன் காணப்படுகிறது.. இம்மலையைச் சுற்றி நான்கு புறமும் சுமார் 50 கி.மீ. சுற்றளவுக்குள் தீவனூர், சிங்கவரம், மேல் மலையனூர், மயிலம், தென்னாங்கூர், திருவண்ணாமலை போன்ற முக்கிய திருத்தலங்கள் அமைந்துள்ளன என்பது கூடுதல் சிறப்பு.

பல அருளாளர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து முருகப்பெருமானை போற்றி பாடியுள்ளனர். பசுமலையைப் பற்றி அருணகிரிநாத சுவாமிகள் அருளிய திருப்புகழ் ஒன்று மலைமேல் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் பசுமலையை 'கோகிரி’ என்ற பெயரில் குறிப்பிட்டுள்ளதைக் காணலாம், நங்கை நல்லூர் பொங்கி மடாலயம் தவத்திரு சாதுராம் சுவாமிகள் இத்தல முருகனைக் குறித்து பலப் பாடல்கள் புனைந்துள்ளார். திருக்கோவிலூர் சத்குரு ஞானானந்த கிரி சுவாமிகள், யோகி சூரத்குமார் முதலான அருளாளர்கள் பசுமலை முருகனை தரிசித்துள்ளார்கள். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் 61 ஆண்டுகளுக்கு முன் இங்கு விஜயம் செய்து திருப்புகழ் திருப்படி விழாவை துவக்கி வைத்துள்ளார்.

பங்குனி உத்திரத்தில் 10 நாள் பிரம்மோற்சவமும், நேர்த்திருவிழாவும் நடைபெறுகிறது. பிரதி மாதம் பௌர்ணமியில் கிரிவலமும், அன்னதானமும் நடைபெறுகிறது. கிரி வலப்பாதையின் தென்புறத்தில் அமைந்துள்ள தேவேந்திரன் சந்நிதியில் சிறப்பு வழிபாடுகளை நடைப்பெறும். பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற வேண்டி, கிரிவலம் வருதலையும், மலைமேல் துவஜஸ்தம்பம் அருகில் வேல் நட்டு வழிபாடு செய்தலையும் மேற்கொண்டு வருகிறார்கள். இங்கு தேவியர்களுடன் கல்யாண முருகனாக அருளுவதால், திருமண வரம் வேண்டி பக்தர்கள் வருகிறார்கள். பிணிகள் நீக்கும் பரமனாகவும் இத்தல முருகப்பெருமான் விளங்குகிறார். 

மூலஸ்தானத்தில் வள்ளி தெய்வானை சமேத கல்யாண முருகனாக காட்சியளிப்பதால், கந்த சஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் கிடையாது. விழா நாள்களில் தினசரி ஹோமம், வேதபாராயணம், அர்ச்சனை, உற்சவ மூர்த்தி உட்பிரகார வலம், திருக்கல்யாணம் போன்ற வைபவங்கள் சிறப்பாக நடைபெறும்.

தலவரலாறு:

பசு உருவில் தேவர்கள் வழிபட்ட மலை என்பதால் பசுமலை என்று பெயர் வந்ததாக கூறுகின்றனர். பரம்பரை தர்மகர்த்தா சோமயாஜலு குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் சுமார் 500 ஆண்டுகள் பழமையான இத்திருக்கோயிலின் கும்பாபிஷேகம் பக்தர்களின் பங்களிப்புடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

தல அமைப்பு:

திருக்கோவில் மலையடிவாரத்தில் 25 அடி உயர பிரமாண்டமான சக்திவேல் 2017-ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மிகவும் சக்தி மிகுந்த இந்த வேலை வணங்கி பக்தர்கள் கோவிலுக்கு செல்கின்றனர். அடுத்து இரட்டை விநாயகர் சந்நிதியும், நவக்கிரக சந்நிதியும், அருகில் உள்ளன. இரு விநாயகர்கள் ஒரே சந்நிதியில் ஒருவருக்குப் பின் ஒருவர் நேர்க்கோட்டில் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. நவக்கிரக சந்நிதியினுள் தோஷ நிவர்த்திக்காக நாகர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. சுமார் 120 படிகளைக் கடந்தால் ஆஞ்சநேயர் சந்நிதியும், இதன் அருகில் ஸ்ரீலஸ்ரீ நாராயணாநந்த சுவாமிகள் (சடைசாமியார்) மற்றும் ஸ்ரீலஸ்ரீ லலிதானந்த ஸத்குரு சுவாமிகள் போன்ற மகான்கள் தங்கி தியானம் செய்த குகை உள்ளது. மலையடிவாரத்திலிருந்து 420 படிகள் ஏறினால் கோவிலை அடையலாம்.

 திருக்கோவிலினுள் நுழைந்தவுடன் உள்ள கொடிமரத்தை அடுத்து விநாயகப் பெருமான் வீற்றிருந்து அருள்கின்றார். அடுத்து தனிச் சந்நிதியில் ஆவுடையின் மேல் சிவசொரூபமாக அருள்பாலிக்கும் பாலதண்டபாணி ஆவுடையார் மீது எழுந்தருளியிருக்கும் அபூர்வ காட்சியை தரிசிக்கலாம். சந்நிதியின் மேற்கூரை கூம்பு வடிவில் அமைந்திருப்பதும், சந்நிதிக்கு வெளியே மேலிருந்து கீழாக தொங்கிக் கொண்டிருக்கும் ஒட்டி வளர்ந்து இரட்டை திருவோடும் பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

அர்த்த மண்டப முகப்பில் கஜலட்சுமி அருள்கின்றார். சுவாமி சந்நிதிக்கு முன் மண்டபத்தில் ஒரு பாம்பைத் தன் மூக்கினால் தூக்கிக்கொண்டும் மற்றொரு பாம்பை தன் காலில் மிதித்துகொண்டும் ஒரு அழகான மயில் சிலை உள்ளது.   

திருக்கோவில் மூலஸ்தானத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி பொலிவுடன் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிகின்றார். ஆற்றல்மிக்கவரான இவரை வழிபட்டு, கோயிலுக்கு எதிரேயுள்ள வெப்பால மரத்தில் தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்து கொண்டால் மகப்பேறு விரைவில் கிட்டுகிறது. மேலும் திருமணத்தடை நீங்கவும், நோய் நொடிகள் விலகி ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படவும் அருள்கின்றார். கோவிலுக்குப் பின்புறம் சுனை ஒன்று உள்ளது. விசேஷ தினங்களில் அங்கிருந்து எடுக்கப்படும் நீரே அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.

 திருவிழா

வைகாசி விசாகம், கந்தசஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திர பிரம்மோற்சவம், ஆடிக்கிருத்திகை, ஆவணி கிருத்திகையில் திருப்புகழ் திருப்படி விழா மற்றும் அருணகிரிநாதர் விழா, மாத கிருத்திகை, பவுர்ணமி

பிரார்த்தனை:

திருமணம் வேண்டி, குழந்தைப்பேறு வேண்டி, பாவங்களை போக்கிட, பிணிகள் தீர,

 நேர்த்திக்கடன்:

கிரிவலம், பால்குடம், முடிக்காணிக்கை, காது குத்துதல், அபிஷேகம், அலங்காரம், சிறப்புப் பூஜைகள், அன்னதானம்

திறக்கும் நேரம்:

காலை 7-9 வரை மட்டுமே (விசேஷ நாட்கள் காலை 7 முதல் மாலை 5 வரை)



படம் 1 - அதிர்ஷ்டங்களை அள்ளி அருளும் மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமி



படம் 2 - தேவர்கள் வணங்கும் அருணகிரி நாதர் திருப்புகழ் பாடிய தலம் மேல்ஒலக்கூர் பசுமலை  சுப்பிரமணிய சுவாமி கோவில்


மேல்ஒலக்கூர் பசுமலை சுப்பிரமணிய சுவாமியை மனமார வேண்டிக்கொண்டால், அதிர்ஷ்டங்களை அள்ளி வழங்கிடுவார்!                                                                              
                                                                                                     

வேலும் மயிலும் துணை!

திருச்சிற்றம்பலம்!

அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.                                                                                                                                      

மீள்பதிவாக:-

தினம் ஒரு முருகன் ஆலயம் - 5 - சென்னை கொசப்பேட்டை கந்தசுவாமி கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/5.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 4 - திருப்புகழ் தலம் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/4.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 3 - திருப்புகழ் தலம் திருவள்ளூர் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/09/3.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 2 - திருப்புகழ் தலம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அவிநாசியப்பர் கோவில் - https://tut-temples.blogspot.com/2023/08/2.html

 தினம் ஒரு முருகன் ஆலயம் - 1 - திருப்புகழ் தலம் சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் சுப்பிரமணிய சுவாமி  - https://tut-temples.blogspot.com/2023/08/1.html

விதியை வெல்வது எப்படி? - https://tut-temples.blogspot.com/2023/09/blog-post.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஏழாம் நாள் 7 - https://tut-temples.blogspot.com/2022/02/7-7.html

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஆறாம் நாள் 6 - https://tut-temples.blogspot.com/2022/02/7-6.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - ஐந்தாம் நாள் 5 - https://tut-temples.blogspot.com/2022/02/7-5.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - நான்காம் நாள் 4 - https://tut-temples.blogspot.com/2022/02/7-4.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - மூன்றாம் நாள் 3 - https://tut-temples.blogspot.com/2022/02/7-3.html

 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - இரண்டாம் நாள் 2 - https://tut-temples.blogspot.com/2022/02/7-2.html

No comments:

Post a Comment