அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
நம் தள வாசகர்களுக்கும், நம் சேவைகளில் பங்கு கொண்டு உறுதுணையாய் இருக்கின்ற அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நம் தளத்திற்கும், விநாயகருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஏனென்றால் இன்று வரை கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் அருளாலும், முருகப் பெருமான் ஆசியாலும் நம் தளத்தின் சேவைகள் தொடர்ந்து வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் மோட்ச தீப வழிபாடு, உழவாரப் பணி தவிர ஏனைய சேவைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
நம் தேடல் உள்ள தேனீக்களாய் - TUT குழு ஆரம்பித்த புதிதில் முதன் முதலாக விநாயகர் சதுர்த்தி வழிபாடு கொண்டாடிய விதம் இன்னும் நம் நெஞ்சில் இனிப்பாக இருக்கின்றது.
மூத்தோனை வணங்குகின்றோம். தற்போது நாம் சந்தித்து வரும் பல பிரச்சினைகளில் இருந்து நாம் விடுபட மூத்தோனை வணங்குவோம். கிரக ரீதியாகவும் பார்க்கும் போது ராகு,கேது கோள்களின் ஆதிக்கத்தினால் தான் வைரஸ் காய்யச்சல் பரவி வருகின்றது என்றும் சொல்கின்றார்கள். விநாயகர் கேதுவின் அம்சம் ஆவார்.நம் குருநாதர் அகத்திய பெருமானும் கேதுவும் அம்சம் ஆவார். எனவே குருவாகவும், திருவுமாகவும் இந்த ஆலயத்தில் ஸ்ரீ அகத்தியர் தரிசனமும், ஸ்ரீ விநாயகர் தரிசனமும் ஒருங்கே இங்கே பெற முடிகின்றது.
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
என்று பாடி ஸ்ரீ விநாயகர் பாதம் பற்றுவோம். போற்றுவோம்.
நம் உடலிலுள்ள நரம்பு மண்டலங்கள் அனைத்தும் சேருமிடம் காது மடல்கள்.
தோப்புக்கரணம் செய்யும் போது காது மடல்களை இழுப்பதால் அனைத்து நரம்புகளும் தூண்டப்படுகின்றன.
தினமும் 3 நிமிடம் தோப்புக்கரணம் உடலை வலுவாக்கும். தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும்.
தோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை வைத்திருந்தார்கள்.
உண்மையில் அது ஒரு நல்ல உடற்பயிற்சி. தோப்புக்கரணம் போடும்போது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம். காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன.
காது மடல்களைப் பிடித்துத் தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கிறது. உடல் இயக்கம் சீர்படுகிறது.
தோப்புக்கரணம் போட விரும்பும் ஒருவர், ஆரம்பத்தில் அவருடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை விரித்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும்.
பின்னர் பயிற்சியானவுடன் கால்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும். வலது கைவிரல்களால் இடது காது மடல்களையும், இடது கை விரல்களால் வலது காது மடல்களையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழ வேண்டும். உட்காரும்போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.
எழும்போது மூச்சை வெளிவிட வேண்டும்.
இவ்வாறு மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவதால், நமது தண்டுவடத்தில் – மூலாதாரத்தில் - சக்தி உருவாகும். உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள சோலியஸ் எனும் தசைக்கு வேலை கொடுக்கிறோம். உடல் முழுக்க இரத்த ஓட்டத்தை சீராக்கும் இதயத்தின் தசைகளைப் போலவே இயங்கக் கூடியது, இந்த சோலியஸ் தசை. இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும். மூன்று நிமிடங்கள் தோப்புக்கரணத்தைத் தொடர்ந்து செய்தால் வேறு எந்த உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் இந்த மூன்று நிமிடங்களே பலரால் ஆரம்பத்தில்
செய்ய முடியாது என்பதே உண்மை.
திருச்சிற்றம்பலம்
அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
No comments:
Post a Comment