அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவே சரணம். குருவின் தாள் என்றும் பணிகின்றோம். அகத்தியம் என்பது
பெருங்கடல். அதில் நாம் தினமும் சிறிது நீர்துளிகளை மட்டும் பருகி
வருகின்றோம். அகத்தியர் வழிபாட்டில் வந்த பிறகு, நாம் தூசி கிராமத்தில்
உள்ள நம் குருநாதர் பற்றி அறிந்தோம்.நேரில் நம்மை எப்போது அழைப்பாரோ என்று
வழி மேல் விழி வைத்து காத்துக்கொண்டிருந்த போது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நேரில் தரிசனம் பெற்று வந்தோம்.
மதியின்றி மடமையாய் கிடந்தேன்
விதியென்று விட்டுவிடாமல் என்னையும்
ஏற்று பாலகனாய் பாவித்து
பரம்பொருளை காட்டினாய் என் குருவே
அகத்தியனே கைம்மாறு என் செய்வேன்
ஏற்பாய் என் சரணங்களை!
என்று அழுது , தொழுது இன்றைய பதிவிற்குள் செல்வோம். நம் வலைத்தளத்தில் வழக்கமான சிறப்பு வழிபாடு பதிவுகள் என்று சில வழிபாடுகள் இருக்கும்.அதில் தூசி கிராமத்தில் நம் குருநாதர் அகத்திய பெருமானின் வழிபாடுகள் தனிச்சிறப்பு பெற்று இருக்கும். இதில் தெய்வீக விவாஹ விழா மற்றும் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி அழைப்பிதழ் பகிர்ந்து வருகின்றோம். இன்றைய நாளில் தூசி கிராமத்தில் அகத்திய முனிவ தம்பதிக்கு 10 ஆம் ஆண்டு தெய்வீக விவாஹ விழா காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. வழக்கம் போல் அன்பர்கள் கலந்து கொண்டு இறையருள் பெறும்படி வேண்டி பணிகின்றோம்.
ஸ்ரீ
அகத்தியர் ஸ்ரீ உலோபமுத்ரா தேவியருக்கு, முக்தி தரும் நகர் ஏழினுள்
முக்கிய நகராம் நகரேஷ { காஞ்சி என்று மகாகவி காளிதாசரால் புகழப் பெற்றதும்,
சப்த ரிஷிகள் வழிபட்டதும், ஷண்மதத்தில் (ஆறு மதம்) நான்கு மதங்கள்
சங்கமிப்பதும் சைவம் - பஞ்சப பூதத் தலங்களுள் ப்ருதி (மண்) ஸ்தலம்,
சமயக்குரவர்களால் (நால்வர்) பதிகம் பெற்ற தலமும், சாக்தம் - 108 சக்தி
பீடங்களில் நாபிஸ்தானமாக விளங்குவதும், வைணவம் - 108 திவ்ய தேசத்தில்
பதினைந்து திவ்ய தேசங்களைக் கொண்டதும், கௌமாரம் - கச்சியப்ப சிவாச்சாரியார்
அருளிய கந்தபுராணம் அரங்கேறியதும், ஸ்ரீ அகத்தியருக்கு பங்குனி உத்திர
நன்னாளில் சிவபெருமான் பார்வதி தேவியர் தமது திருமண கோலத்தில் காட்சி
அளித்ததுமாகிய இத்தகைய காஞ்சிபுரத்தில் உள்ள பாலாற்றங்கரைக்கு அருகில்
திருவண்ணாமலை மாவட்டம் தூசி கிராமத்தில் வேண்டியவர்க்கு வேண்டியவற்றை
அருளும் அபிராமி உடனுறை அபிமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் தமிழகத்தில் சில
பகுதிகளில் மட்டுமே உள்ள ஸ்ரீ அகத்தியர் - ஸ்ரீ உலோபமுத்ரா தேவி ஆலயம்
பழமையை பறைசாற்றும் வகையில, தொன்மைவாய்ந்த கட்டிட கலையில் முற்றிலும்
கருங்கற்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எட்டு திசைகளை குறிக்கும் வகையில்
எட்டு யானைகள், இந்த ஆலயத்தை தாங்கி நிற்பது போல் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
ரிஷிகள், ஞானிகள், யோகிகள் ஆற்றங்கரையோரம் வாசம் புரிவதை கருத்தில் கொண்டு
(காஞ்சி ஸ்ரீ மகாபெரியவாள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகள் மணிமண்டபம்
அருகில்) அமைந்து உள்ளது.
ஸ்ரீ அகத்திய மாமுனிவர் திரிசடையுடன் அமர்ந்த கோலத்தில் வலது கையில் சின்
முத்திரை, ஜபமாலையுடனும், இடது கையில் கமண்டலத்துடனும் காட்சி அளிக்கிறார்.
ஸ்ரீ உலோபமுத்ரா தேவி அமிர்தகலசம் தாங்கி பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில்
காட்சி அளிக்கிறார்.எம் ஐயன் அகத்தியப்பெருமான் எனையாளும் ஈசனே . அகத்தின்
ஈசன் அகத்தீசன் எனவும் கொள்ளலாம்.
இவ்வுலகம்
உய்யும் பொருட்டு எம் ஐயன் ஆற்றி வரும் பணி அளப்பரியது.நாடி
வருபவர்களுக்கு அறம்,பொருள், இன்பம் அளித்து வீடுபேறும் அளித்திட பல
ஊர்களில் கோயில் கொண்டுள்ளார்.அவ்வகையில்
காஞ்சிபுரம் அருகில் தூசி எனும் ஊரில் அபிராமி சமேத அபிமூர்த்தீஸ்வரர்
ஆலயத்தில் தம் இல்லாள் லோபமுத்ரா தேவியுடன் வீற்றிருந்து அருள்கிறார்.நன்மக்கள் ஒன்று கூடி "அகத்தியர் குழுமம் "ஆகி பல திருப்பணிகள் செய்து வருகிறார்கள்.
அவற்றில் ஒன்று "அகத்தீஸ்வரர் திருக்கல்யாணம்".
சித்தர்களுக்கெல்லாம் தலையாய சித்தர் மகான் ஸ்ரீஅகத்தியப்பெருமான் லோபமுத்ரா தேவி திருக்கல்யாண வைபவத்தை காண கண் கோடி வேண்டும்.
சிவபெருமான், முருகப்பெருமான், ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் அனைவரும் பார்த்திருப்போம். ஐயன் அகத்தியப் பெருமான் திருக்கல்யாணம் ஐயன் வீற்றிருக்கும் தலங்களில் ஒரு சில தலங்களில் மட்டுமே வெகு விமரிசையாக நடைபெறும்.
ஸ்ரீ அகத்திய மாமுனிவர் திரிசடையுடன் அமர்ந்த கோலத்தில் வலது கையில் சின்
முத்திரை, ஜபமாலையுடனும், இடது கையில் கமண்டலத்துடனும் காட்சி அளிக்கிறார்.
ஸ்ரீ உலோபமுத்ரா தேவி அமிர்தகலசம் தாங்கி பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில்
காட்சி அளிக்கிறார்.
எம் ஐயன் அகத்தியப்பெருமான் எனையாளும் ஈசனே . அகத்தின் ஈசன் அகத்தீசன் எனவும் கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு இணைத்துள்ள அழைப்பிதழை பார்க்கவும்.
நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவானை
நீங்காதார் குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர் என்று யுகயுகத்தும் தோன்றும்
அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!
இன்று காலை 10 மணி அளவில் நடைபெறும் தெய்வீக விவாஹ விழாவிலும், இரவு நடைபெற உள்ள சுவாமி வீதி உலாவிலும் வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு குருவருளும், திருவருளும் பெறும்படி வேண்டிப் பணிகின்றோம்.
அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 02.01.2021 - https://tut-temples.blogspot.com/2020/12/02012021.html
No comments:
Post a Comment