"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, July 11, 2022

அகரம் ஸ்ரீ உலோபமுத்ரா உடனுறை ஞான அகஸ்தீஷ்வர மூர்த்தி திருக்கோயில் - மஹா கும்பாபிஷேகம் - 11,12,13.07.2022

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

சற்று நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று உங்களை சந்திக்கின்றோம். தங்களை இங்கே சந்திப்பதில் இடைவெளி ஏற்பட்டிருக்கலாம். ஆனால் உங்களின்  அன்பினால் குருவருளால் வழக்கம் போல் நமது சேவைகளில் எந்த தொய்வும் ஏற்படவில்லை. வழக்கமான ஒவ்வொரு மாத சேவைகளோடு ஏப்ரல், மே மாதமாதலால் கல்வி உதவியும் இம்மாதத்தில் சேர்த்து குருவருளால் செய்ய பணிக்கப்பட்டோம். வைகாசி விசாக சேவையொட்டி அன்னசேவை, வருகின்ற புதன் கிழமை குரு பூர்ணிமா அன்று அன்னசேவை, ஆலய வழிபாடு என நம் தள சேவைகள் தொடர்ந்து வருகின்றது. 

குருவருளால் நம் தேடல் உள்ள தேனீக்கள் குழுவில்  தானம்,தர்மம் போன்ற அறப்பணிகள் நாள் தோறும் அன்பர்களின் பொருளுதவி,அருளுதவியால் செய்து வருகின்றது. தவத்தை தினமும் தோறும் கூட்டுப்பிரார்த்தனையில் தொட்டு வருகின்றோம். இம்மாத அறப்பணிகளை தங்கள் பார்வைக்கு இங்கே சமர்ப்பிக்கின்றோம்.

1. தஞ்சாவூர் சித்தர் அருட்குடில் 

2. திருஅண்ணாமலை அன்னதானம் 

3. எத்திராஜ் சுவாமிகள் முதியோர் இல்ல அன்னசேவை 

4. தர்ம சிறகுகள் குழு சிறு காணிக்கை 

5. குன்றத்தூர் கோயில் - மாத காணிக்கை 

6. எண்ணெய் - 1 டின் உபயம் 

7. வாரந்தோறும் வியாழக்கிழமை சிறப்பு அன்னசேவை 

8. திருச்செந்தூர் முருகப் பெருமான் ஆயில்யம் சந்தனக்காப்பு 

9. கலிக்கம்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் மலர் சேவை 

10. ஸ்ரீ சிவகுரு மடம் சிறு காணிக்கை 

இவை மட்டுமின்றி அவ்வபோது நமக்கு கிடைக்கும் செய்திக்கேற்ப கல்வி உதவி, திருமண உதவி போன்றவை குருவருளால் செய்து வருகின்றோம்.

இன்றைய பதிவில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள ஸ்ரீ சிவகாமி அம்மன் உடனுறை மானகௌசிகேசர் ஆலய கும்பாபிஷேகம் அழைப்பிதழ், இதனையொட்டி குருநாதர் அருளிய வாக்கினையும் காண உள்ளோம்.








27/5/2022 அன்று  குருநாதர் அகத்தியர் உரைத்த ஆலய பொதுவாக்கு.

வாக்குரைத்த ஸ்தலம் :

ஸ்ரீ சிவகாமி அம்மன் உடனுறை மானகௌசிகேசர் ஆலயம், அகரம். ஆலங்குளம். தென்காசி  மாவட்டம். 









ஆதிமூலனை மனதில் தொழுது செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே.... வரும் காலங்களில் நிச்சயமாய் அப்பனே மாற்றங்கள் உண்டு ஆனால் எதை என்று கூற அறியாத அளவிற்கும் கூட அப்பனே அழிவுகள்.... நிச்சயம் இதை யான் சொல்லிக் கொண்டே வருகின்றேன் ஆனாலும் அப்பனே இவைதன் உணர உணர இதுவும் மனிதனிடத்திலே இருக்கின்றது என்பேன்.

ஏனென்றால் அப்பனே அழிவிற்கு காரணமானவன் மனிதனே !!!என்பேன்.

இதனால் அப்பனே எதை? எதை ?மனிதன் அழித்துக் கொள்கின்றானோ எதை என்று கூட தெரியாமல் அப்பனே இதனால் மனிதனின் தன்மைகள் மாறினால் நிச்சயம் ஈசனும் மாறிக் கொண்டே இருப்பான் சொல்லிவிட்டேன். 

அதனால்தான் அப்பனே சில சில உலகங்கள் எதை என்று பற்று கொள்கின்றது  எதை பற்றுக் கொள்ளாததைக்கூட இவ்வுலகத்தில் நிகழ்ந்து கொண்டுதான் வந்து கொண்டிருக்கின்றது.

இதனால் அப்பனே புத்தியுள்ள மனிதன் எவை என்று கூறுக ஒரு சமயத்தில் புத்தி இல்லாதவனாகவே செயல்படுகின்றான். இவ்வாறு இவ்வாறு செயல்பட்டால் இறைவன் வந்து எதை என்று கூற.....

ஆனாலும் அப்பனே யாங்கள் பார்த்திட்டோம்... அப்பனே யாங்கள் எதை என்று கூற... பல திருத்தலங்களையும் உருவாக்கினோம்... ஆனாலும் அப்பனே எதை என்று தெரியாமலேயே மனிதன் அழித்துவிட்டான்.

ஏனென்றால் அப்பனே மனிதனின் அப்பனே பின் தன்மைகள் மாறி.... புகழ் வேண்டும்!!! செல்வங்கள் வேண்டும்!!! நம்தனை மதிக்க வேண்டும் என்று எண்ணி எதை என்று கூற இறைவன் அனைத்தும் கொடுத்து விடுவானா??? என்று எண்ணி பல திருத்தலங்களை அடியோடு........

ஆனாலும் ஆனாலும் மனிதர்களை எதை என்று கூற ஆனாலும் மனிதர்களை ஏற்படுத்தினோம்.... ஆனாலும் இவ்வாறு செய் !!அவ்வாறு செய்!!! என்றெல்லாம்.

ஆனால் மனிதனோ தன் நிலைமையை பார்த்து பின் எதை என்று கூற திருத்தலத்தை வடிவமைக்காமலே சென்று பின் பாதாளத்தில் விழுந்து கர்மத்தை அனுபவித்து மீண்டும் மீண்டும் பிறவிகள் ஏற்படுத்திக் கொண்டு வருகின்றான்.

இதனால் எதையென்று  கூற ஆனால் இதனால்தான் பலம்மிகுந்த திருத்தலங்கள் இன்னும் ஏராளம் இருக்கின்றது இவ்வுலகத்தில் அப்பனே. அதை மீட்டெடுத்தாலே போதுமானது..அதன். திறமைகள் அதிகம் என்பேன் அப்பனே.

ஆனாலும் இதை என்று கூற மனிதனுக்கு தெரியாமல் புதிய புதிய உற்பத்தி(புதிய கோயில்கள்)  ஆனாலும் அவற்றின் மூலம் என்ன தான் நடக்கின்றது என்பதை கூட தெரியாமல் போயிற்று மனிதனுக்கு..

ஆனாலும் அப்பனே சிறப்புமிக்க தலங்கள் இன்னும் எதை என்று கூற ஞானிகள் ரிஷிகள் இவை அறிந்து அறிந்து தேவர்கள் அறிந்து இவற்றையும் அறிந்து அறிந்து திருத்தலங்களை அமைத்தார்கள்.

அமைத்தார்கள். இங்கு அமைத்தால் இப்படி இருக்கலாம் என்று கூட....

ஆனாலும் இதை மனிதன் தற்சமயத்தில் அப்பனே எதையென்று ஆனாலும் நினைக்கக்முடியாத அளவிற்கும் கூட வரும் காலங்களில் கஷ்டங்கள் தான் நிகழப் போகின்றது சொல்லிவிட்டேன்.

அதனால்தான் அப்பனே யாங்களே வந்து சிலசில திருத்தலங்களை இனிமேலும் வந்து அப்பனே எடுத்து... இதன் மூலம் செய்ய வேண்டுமோ அப்பனே அவையெல்லாம் நிச்சயம் யாங்களே செய்வோம்.... யாங்களே ஏற்படுத்திக் கொள்வோம்.

இதனால்தான் அப்பனே ஈசனும்... எதை என்று கூற மனிதனின் செய்கைகளை பார்த்தால் நிச்சயம் புத்தியில்லாத மனிதன் தரம் கெட்ட மனிதன் பின் அழிவான் என்பதை கூட பின் ஈசனே உரைத்துக் கொண்டுதான் இருக்கின்றான்.... 

இதையென்று கூற அழகாக படைத்திட்ட யான் எதை என்று ஆனாலும் இவற்றின் மூலம் அறிவது மனிதனின் பின் வழிகளில் பல தவறான நடத்தையில் தான் செல்வான் போட்டி பொறாமைகள் இவந்தனை அழித்துவிடும் என்பேன் இதனால்... உண்மையான பக்தனை நிச்சயம் இறைவன் காப்பான் என்பேன்.

இதனால் பக்திகள் செலுத்தினாலே போதுமானது... இறைவனே அனைத்தும் வந்து செல்வான் இக்கலியுகத்தில்... இறைவனையே காணலாம் என்பேன். அப்படிப்பட்ட இக்கலியுகத்தில் எதனை என்றும் கூற கஷ்டங்கள் எதற்கு?? வருகின்றது என்பதை கூட..... யாராவது உணர்ந்து விட்டீர்களா???? என்றால் நிச்சயம் இல்லை என்பேன்.

ஏனென்றால் தான் செய்த.....எதை என்று கூற குற்றங்கள்!!! ஒவ்வொரு மனிதனும் குற்றங்களை செய்துவிட்டு இறைவனை நாடுகின்றான்... இதுதான் உண்மை.

அவ்வாறு நாடும் பொழுது எவ்வாறு? இறைவன் நிச்சயம் எதை? என்று பின் தரித்திர மனிதா எதையென்று  கூட..... எப்படி?? செய்வான்?? இறைவன்!!

இதனால் இறைவனும் அமைதியாகத்தான் இருப்பான் அதனால் நீயும் எதை எதை என்று கேட்பதற்கு சமமாக.....

ஏன்? அப்பனே எதையன்றி கூற கூறும்பொழுது அப்பனே ஒன்றுமில்லை அப்பனே.

இறைவனிடத்தில் எந்த தகுதியோடு நீ கேட்கின்றாய்???
என்று சொல்!!!!!...

சொல்லுங்கள்!!!!! எதையன்றி கூற அதனால் தகுதிகள் படைத்திட வேண்டும் !!!

பல புண்ணிய காரியங்கள் செய்திடல் வேண்டும்!!!

தன்னைப்போலவே மற்றவரையும் எண்ண வேண்டும்!!!

பல மற்ற ஜீவராசிகளையும் எண்ண வேண்டும்!!

அவன்தான் மனிதன்!!!!

எதை என்று கூற அவன் அவந்தனுக்குத் தான் அனைத்தும் நடக்கும்!!! அனைத்தும் நிறைவேறும்!!!

அதைவிட்டுவிட்டு எதை என்று கூற.... நினைக்காமல் இறைவனிடத்தில் சென்றாலும் இறைவன் ஒன்றும் செய்யப்போவதில்லை!!!  இதனை பலவாக்குகளிலும் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம்.

மனிதர்களுக்கு.... ஏனென்றால் மனிதனின் பாதை தவறான பாதையில் இக்கலியுகத்தில் சென்று கொண்டிருக்கும்.

அதனால் முதலில் மனிதனை நல் முறையாக மனிதன் ஆக்குவோம். ஆனால் மனிதன் மனிதனாகவே வாழ வாழ வாழ இன்னும் எதை என்று ஆனாலும் உண்டு திறன்கள்.

ஆனாலும் இக்கலியுகத்தில் இன்னும் மாற்றங்கள் ஏற்பட ஆனாலும் எங்களையும் நம்பி உண்மையான பக்தர்களை எல்லாம் கெடுத்துக் கெடுத்துக் கொண்டே இருக்கின்றனர் அதனால்... அவர்களையாவது மீட்டெடுத்து நல் முறையாகவே அவர்களுக்காகவாவது எதை என்று கூற அதனால் நல் முறையாகவே யாங்கள் செய்வோம் அவர்களை உயர்த்திட ...

இன்னும் பல மாற்றங்கள் உண்டு என்பேன்... உலகம் எப்படி?? உருண்டோடுகின்றது.... உலகத்தை காக்க இறைவன் ஆனாலும் இறைவன் காத்து காத்து பல பல வழிகளிலும் மனிதனை அப்படிச் செல்!!! இப்படிச் செல்!! என்றெல்லாம் சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றான்.

ஆனாலும் மனிதனோ!!! யான்... எதை என்று எதை எப்பொழுது செய்ய வேண்டும் என்பதை கூட தெரியாமல் அப்பனே எதை என்று கூறும் அப்பனே பொய்கள் நிறைந்த வாழ்க்கையப்பா மனிதனுக்கு!!!

அப்பனே இப் பொய்யான உலகத்திலே ஆனால் உண்மை உலகம் இதற்கும் சம்பந்தம் உள்ளதா?? என்பதை தெரிவித்துக்கொள்கின்ற முறையான வகுத்தல்களை கூட அப்பனே வகுத்துக் கொள்ளுங்கள்.

அதனால் அப்பனே என்னுடைய வாக்குகள்... எதை என்று கூற அப்பனே இன்னும் பல தலைமுறைக்கும் எதையென்று கூற எடுத்துச்செல்லும்.... அப்பனே மனிதர்கள் திருந்துவார்கள் அப்பனே என்பதைக்கூட... அப்பனே.

ஆனாலும் ஈசனும் சரியாக சொல்லிவிட்டான் மனிதன் நிச்சயம் திருந்தவே மாட்டான் எதையென்று கூற அதனால் யான் அழிவுகள் தான் ஏற்படுத்துவேன் என்றுகூட!!....

ஆனாலும் யாங்களெல்லாம் பொறுத்திரு!! பொறுத்திரு!! ஈசனே!!!! என்று கூட அவனுக்கு....எதையென்று கூற ஊட்டி!!! ஊட்டி!!! ஞானப் பாலை ஊட்டி ஊட்டி பின் பொறுமை காத்து இருக்க வேண்டும் என்பதை கூட அவன் கோபத்தை யாங்கள் தணித்துக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே!!! 

இதனால் அப்பனே நன்மையானதை செய்யுங்கள்.... அப்பனே நல்லோர்களுக்கு எதை என்று...எவையென்று கூற தர்மத்தைக் கடைப் பிடியுங்கள் அப்பனே!!!

தர்மத்தை கடைபிடித்தால் நிச்சயம் மோட்ச கதியை அடைவீர்கள்!! ஏனென்றால் அப்பனே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் கலியுகத்தில் வந்துகொண்டே இருக்கும் என்பதை கூட யான் சொல்லிக்கொண்டே தான் வந்து கொண்டிருக்கின்றேன்.

அப்பனே பல சித்தர்களும் இவ் ரசியத்தை சொல்லிக்கொண்டே தான் வந்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!! ஆனாலும் அதை உணராமல் அப்பனே தான் எதை என்று கூற செல்வங்கள் வர வேண்டும் தன் பிள்ளைகள் வாழ வேண்டும் அப்பனே இவற்றிற்குத் தான் முதல் மரியாதையா!???? அப்பனே இறைவனுக்கு இல்லையா?? அப்பனே!!!

இறைவனுக்கு முதல் மரியாதை!!!! கொடுங்கள் அப்பனே ஆனால் எவ்வாறு கொடுப்பது என்பதைக்கூட தெரியவில்லை அப்பனே எதை என்று கூற..

அதனால் கொடுத்திடு...எதையென்று கூற  அப்பனே எவற்றின் மூலம் கஷ்டங்கள் வருகின்றது என்பதை கூட சிந்தித்துக் கொள்ளுங்கள் அப்பனே.

ஆனால் இறைவன் மூலம் அப்பனே யாருக்கும் கஷ்டங்கள் வருவதே இல்லை...... என்பதைக்கூட நல் விதமாகவே தெரிவிப்பேன்!!!!

ஆனாலும் அப்பனே இக்கலியுகத்தில் விதியின் பாதையையும் யாங்கள் மாற்றுவோம் நிச்சயம்.. எங்களை நம்பி வந்து விட்டால்.....

எதையெதை என்று கூறும் உண்மைகளையும் பல ரகசியங்களையும் சொல்லிவிடுவேன் அப்பனே ஆனாலும் அப்பனே பாண்டிய மன்னன்

(நெடுஞ்செழியன்) எதற்கெடுத்தாலும்  எதைஎன்று கூற அப்பனே ஆனாலும் அவந்தன் ஈசன் மீது... பல பக்திகள் கொண்டவன்.... அப்பனே ஈசனே கதி என்று இருந்தவன்..... ஆனாலும் அவந்தனுக்கு ஒரு சோதனை வந்தது!!! பல இன்னல்களும் வந்தது!!

ஆனாலும் இதையறிந்து ஆனாலும் பக்தியை யான் செலுத்துகின்றேனே!!! பக்தியை செலுத்த செலுத்த இவ்வாறு கஷ்டங்கள் வந்துகொண்டே இருக்கின்றதே என்று எண்ணி.... ஆனாலும் மயங்கினான் எதை என்று கூற மனதும் திகைத்து மனம் வருத்தப்பட்டான்!!

ஈசனை இவ்வாறு எவ்வாறு பல திருத்தலங்களை உருவாக்கியும் இவ்வாறு மனது எதை என்று ஆனாலும் மனம் கலங்கி இருக்கின்ற பொழுது.....

ஆனாலும் ஈசனே எதையன்றி கூற ஒரு மனித ரூபத்தில் வந்தான்!!!!

மனித ரூபத்தில் வந்து ஆனாலும் இவந்தனை எதை என்று விளக்கத்திற்கு அவ் மன்னனை பின் காண முடியவில்லை.... சில பல மனிதர்கள் தடுத்துவிட்டனர்.

ஆனாலும் ஈசன் நினைத்தால் அவர்களை அடியோடு அழித்துவிட்டு இருப்பான்!! ஆனாலும் இதையன்றி கூற நிச்சயமாய் மனிதன் மூலமே பார்க்க வேண்டும் என்று கூட ஆனாலும் யாரும் இவந்தனுக்கு இதையன்றி கூற ஈசனுக்கு வழி விடவில்லை அவந்தனை பார்க்க....

ஆனாலும் ஈசன் இவ்வாறு நினைத்தான்!!! சரி இங்கேயே உறங்குவோம்!!

என்றுகூட பல நாட்கள் பின் திண்ணையிலே உறங்கிக் கொண்டிருந்தான்.

அவன் உறங்கும் பொழுது பல பாடல்களை பாடிட்டு பாடிட்டு!! பாடிட்டு !! வந்தான்.

ஆனால் இதை மன்னன் காதில் இட்டனர்!! சில மனிதர்கள்!!

யாரோ ஒருவர் இங்கே அமர்ந்து பல நாட்களாக தங்கி பல பாடல்களை பாடிட்டு ஆனால் அர்த்தங்கள் கேட்டால் அப்பப்பா!!!!!!!!!!!!!!!!!!

அதை உணரத்தான் யாருக்கு ??தகுதி!!!!!! என்றுகூற.... 

அதனால்  வரச்சொல்!!!! என்று கூற ஆனாலும் அவ் மனிதனை வரச்சொல்!! வரச்சொல் !!என்று  உத்தரவிட்டான் பாண்டியன்.

ஆனாலும் வந்தான் அதுதான் எதற்கு காரணம் என்றுகூட  ஈசன் என்பதை ஆனாலும் அவ் பக்தியை செலுத்திய பாண்டிய மன்னனுக்கே வந்திருப்பது
ஈசன் தான் என்று தெரியாமல் போய்விட்டது.

ஆனால் எதையென்று சபைகள் கூடியது!!! கூடிட்ட பிறகு மன்னனும் கேட்டான்!!!

யாரப்பா?? நீ!!??? 

எதையென்று கூற இங்கிருக்கும் பின் திண்ணையில் கூட எதை என்று தெரியாமலேயே பல பாடல்களை நீ பாடியுள்ளாய். 

ஆனாலும் பல பல உயர் மனிதர்கள் எதை என்று கூற உயர் பெரியோர்கள் ஆனாலும் அவர்களும் கேட்டறிந்தனர் ஆனால் உன் பாடல்களிலோ பல ரகசியங்கள் உள்ளது பல ரகசியங்கள் தெரிந்து தெரிந்து தெரிந்து தெளிவு பெற்றதாக கூறுகின்றனர்!!

நீ யாரப்பா??? 

என்று கூட ஆனாலும் ஈசனோ பின் தலைகுனிந்தான்!!!
எதையென்று கூற எப்படி சொல்வது என்று கூட!..

ஆனாலும் ஈசன் நினைத்திருந்தால் அங்கே ஆட்டத்தை ஆரம்பித்திருக்கலாம்.... ஆனாலும் பின்  எதனை உணர்ந்து மெய்சிலிர்த்து... நானும் ஒரு சாதாரண மனிதனே!!! என்று கூறிவிட்டான்.

ஆனாலும் இதையன்றி கூற திரும்பவும் பாண்டிய மன்னன் கேட்டான்!!!

நீ சாதாரண மனிதனா!???

அப்படியென்றால் உன் தாய் தந்தையர் எங்கு இருக்கின்றார் என்று கேட்க

இல்லை!! என் தாய் தந்தையார் பின் எதை என்று கூற ஆனாலும் இங்கு இல்லை ஆனாலும் திரும்பவும் பாண்டிய மன்னன் கேட்டான். எதை எவற்றிலிருந்து.... 

உன் சொந்த பந்தங்கள் யாரென்று கூட...!!!

ஆனாலும் சொந்த பந்தங்கள் யாரும் இல்லை எதற்கு என்று கூட பின் ஆனாலும் இதில் ஒரு புலவன் எதையென்று கூற

இவந்தனை இப்படியே வைத்து விட்டால்... எதை என்று உணராமலே இவன் பாடி பெரும் புகழ் அடைந்து விடுவான் என்று கூட திருடன் பட்டம் சூட்டினான். பின் ஈசனுக்கே!!!! 

ஆனால் ஈசன் தான் என்று யாரும் உணரவில்லை!!!! எதை என்று கூட ஆனாலும்... அவற்றின் மூலம் வருவது என்னவென்றால் கூட ஆனாலும் பொய்யான பரப்புகளை பரப்பி எதை என்று கூற இவன் திருடன் தான் எந்தனுக்கு நன்றாக தெரியும் பலவழிகளிலும் திருடி திருடி ஒரு திண்ணையில் ஒளித்து வைத்திருக்கின்றான் என்று கூட மறைமுகமாகவே புலவன்...

ஆனாலும் எதை ஆனாலும் அதனுள்ளே புலவன் எதனை என்று தெரிவிக்க பின் ஓர் இலையை எடுத்து இதனை இவந்தனிடம் கொடுத்துவிடு......இவந்தன் எங்கெல்லாம் செல்கின்றானோ.... இவந்தனுக்கு அங்கெல்லாம்... பரதேசி போல செல்லட்டும் ஆனால் பல வேலைகளையும் பல வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டும் இவன் திருடன் என்று கூட....

ஆனாலும் இலையை கொடுத்துவிட்டு ஆனாலும் ஈசனோ!!!  எதையென்று கூற ஆனாலும் திரிந்தான்!! திரிந்தான்!! ஆனாலும் இங்கே பல வேலைகளையும் செய்தான் ஈசன்.

இது யாருக்காவது தெரியுமா?? என்றால் நிச்சயம் தெரியாது என்பேன்.

இதனால் அப்புலவன் ஈசனை திருடன்....ஈசனிடமே எதையென்று ஆனாலும் ஈசனிடம் பெற்று பெற்று வாழ்ந்தமைக்கு காரணமா என்று கூட...

ஆனாலும் ஒன்றைச் சொல்கிறேன்..... ஈசன் அப்பொழுதும் வேலை செய்தான் வீடு வீடாக சென்று!!!

ஆனாலும் எவை என்று கூற எதனால்  என்று தெரியுமா?? ஆனாலும் அனைவரும் பக்தர்கள் எதை என்று கூற.....

பக்தர்களே உயர்ந்த வழிகள் உயர்ந்த பக்திகளை குறிப்பிட்டுள்ளனர்...

ஈசனையும் பார்வதியையும்  எதையென்று கூற நினைத்து நினைத்து உருகி நின்றனர் இதனால்.... தன் பக்தர்களுக்காக வேலை செய்தவன்...ஈசனே!!!! 

இப்படிப்பட்ட கருணை உள்ளவன்.

ஆனால் இப்பொழுது என்ன!! செய்ய மாட்டானா?? என்ன???!!   

ஆனாலும் கோபம் கொண்டானே!!! எதற்காக???
என்றால்.... மனிதன் பொய்யான பக்தியைக் காண்பித்து காண்பித்து எதை எதை என்று தெரியாமலேயே உணர்ந்து கொண்டிருக்கின்றான் இவ்வுலகத்தில்...

இதுதானா??  பக்தி?? என்பதைப்போல்....

அதனால் உண்மையான பக்தியை காட்டினால் நிச்சயம் இறைவன் தன் முன்னே தோன்றுவான்.

ஆனாலும் இதையன்றி கூற அப்படியும் செய்து செய்து நல் பெயரை பெற்றான் திருடன் எதையென்று...

ஆனாலும் புலவனோ!!! மனம் கலங்கினான். இப்படிப்பட்ட நல் வேலைகளைச் செய்கின்றான் பல மனிதர்களும் எதை என்று கூற ஈசனை எதையன்றி நல் வேலைகளும் செய்தான் அனைத்தும் செய்கின்றான் இவந்தன் நல்லவன் என்று... திருட முடியாது என்று கூட உத்தரவு இட்டார்கள்...

மீண்டும் சபைகள் கூடியது!! 

எதையென்று கூற இவ் நல்லோனுக்காக போராடினார்கள் பல மனிதர்கள்.... ஆனால் அவ் நல்லவன் யார் என்று உணர்ந்து இருப்பீர்கள் நீங்கள்!!!! ஈசனே!!!

இதை எவ்வாறு தெரிவது என்பதால் அப்பனே.... நீங்கள் நல்லவராக இருந்தால் நிச்சயம் பல மனிதர்கள் உன்னை சூழ்ந்து கொள்வார்கள்.
இதுதான் உண்மை அப்பனே!!! 

அதனால்  ஈசனுக்காக தன் பக்தர்கள் வந்து போராடினார்கள்!!!

புலவன் எதை என்று கூற புலவனுக்கும் தெரிந்தது காதில் எதை என்று. 

ஆனாலும் இதையென்று மனம் வருந்தினான்!!!

இவ்வாறு நல்லவனை இவ்வாறு செய்தோமே...என்று... 

ஆனாலும் புலவன் மீது கோபப்படவில்லை ஈசன்.

ஆனாலும் இதையன்றி  கூற மீண்டும் பாண்டிய மன்னன் கேட்டறிந்தான்..

யாரப்பா நீ??!!! 

உந்தனை அனைவரும் புகழ்கின்றார்களே!!!

எதை? எப்படி!? நீ யார்??? சொந்த பந்தங்கள் என்று கூட....

ஆனாலும் ஈசன் ஒரு வார்த்தையில் சொல்லி விட்டான்!!!

என்னுடைய சொந்த பந்தங்கள் அனைவரும் எனக்காக வந்து உரையாடுகின்றார்களே!!! 

இவர்கள் தான் என்னுடைய சொந்த பந்தங்கள்!!! என்று கூட... 

ஆனாலும் எப்படி?? எதை என்று கூற திரும்பவும் பாண்டிய மன்னனுக்கு கோபம் உண்டாயிற்று!!!!

முதலில் யான் கேட்டபோது யாரும் சொந்தபந்தங்கள் இல்லை என்று சொன்னாய் !!!

ஆனால் இப்பொழுது அனைவரையும் சொந்தங்கள் என்று எதை என்று பின் ஏமாற்றி விட்டாயா என்று கூட.....

ஈசனக்கு பின் வந்தது கோபம்!!!

எதையென்று கூற அதனால் கண்கள் சிவந்தது!!! 

இருப்பினும் பின் கோபத்தை கட்டுக்குள் அடக்கினான்...

எதையென்று திரும்பவும் பாண்டிய மன்னன் ஆனால் பாண்டிய மன்னனோ பல பல பக்திகளை உடையவன் ஈசன் மீதே!!!! ஆனாலும் எதை என்று ஆனாலும் உன்னை விட்டு விடுகின்றேன் இவ்வுலகத்தில் இல்லாத ஒரு பாடலை பாடு என்று ஈசனுக்கு கட்டளையிட்டான்!!!

அது போல பாடினான்!!! பாடினான் ஈசன்!!!

எதையென்று உணராத அளவிற்கு உணர்வுகள் உண்டா??!!!

உண்டா இல்லை என்றேல் இவ்வுலமில்லை!! 
இல்லாதோருக்குண்டா!! 
உண்டென்பதைக்கூட மறந்து விட்டார்கள்!!
பொய்யானதை பின் பற்றி பொய்யான வழிகளிலே
சம்பாதித்து சம்பை எதை அழியாத உணர்வா??
உணர்வில்லாமல் மனிதனா??
உணர்ந்து விட்டானா?? மனிதன்
உணர்ந்ததை எதைச் செய்து விட்டான் மனிதன்
மனிதனா?? பரம்பரையே வந்தது வீணா??வீணிலிருந்து வந்தது

எதையடா 
எதையென்று கேட்க 
இதனையும் மறுத்து விட்டதா?? 
மறுத்துவிட்டதைப்போல் 
எது வந்தது?? எதை தேடிக்
கொண்டிருக்கின்றாய்?? 
தேடாததையும் தேடிக் கொண்டிருக்கின்றாய். 
உள்ளத்தில் உணர்ந்தது உள்ளத்திலே வைத்தாயா?? 
இல்லை வெளியில் வைத்தாயா?? 
வெளியில் உள்ளதை எதை உணர்ந்தாய்.. உணராதவர்களுக்கு எதுவுமேயில்லை.. 
சட்டென்று போய்விட்டாய் 
பின்பு எடுத்துவிட்டாய் 
எடுத்துவிட்டாய் 
பின்பும் பின்பும் 
எடுத்து விட்டு 
உணர்ந்து உணர்ந்து 
வந்து வந்து நலன்கள் 
தந்தாயா?? இல்லை இல்லையென்பதற்கிணங்க.... இல்லையா இல்லை உண்மையா இல்லை
இதனையுமறிந்து பொய்யான உடம்பை
பெற்று பொய்யான பகுதிகளே பாதி இதனையுமுணர்ந்து எவ்வாறு உணராமலே
சென்று கொண்டிருக்கின்றாயே மனிதா!!...... 

என்று கூற.... 

பார்த்தான்.... எவை எதையென்று உணர்ந்த பின் பாண்டிய மன்னன்.

இவ்வளவு ரகசியங்கள் !!!

ஆனால் நீ சாதாரண ஆள் இல்லை!!!

பின் உந்தனுக்கு யார்?? கற்றுக் கொடுத்தார்கள் என்று கூற....

ஆனாலும் இதையன்றி கூற பாண்டிய மன்னனே தலை குனிந்தான்.

நிச்சயம் இவந்தன் இறைவன் பக்தனாகதான்  இருக்க வேண்டும்.. என்று கூட...

அதனால் ஆனாலும் எதை என்று கூற சிறிது நேரத்திலேயே மறைந்து போய் விட்டான்.... ஆனாலும் தேடினார்கள் கிடைக்கவில்லை.

ஆனாலும் இதையன்றி கூற

பல நாட்கள்  எதைன்று கூற பாண்டிய மன்னனுக்கு பின் ஔஷதங்கள் (மருந்துகள்) பல எதையென்று கூற உடம்பும் ஒத்துப்போகவில்லை ஆனாலும் வருத்தம்...

ஆனாலும் வருத்தம் இவ்வளவு பெரிய மாமனிதனை எதை என்று கூற நம்பாமல் நாம்  எதை என்று கூற ஒரு புலவன் சொன்னதைக் கேட்டு நிலைகுலைந்து தவறாக அனுப்பிவிட்டோமா என்று எண்ணி எண்ணி வருந்தினான்.

எதையென்று ஆனால் அவ் மனிதனை கண்டுபிடிக்க வேண்டும் என்று எண்ணினான் அதனால் பல தவங்கள் இயற்றினான் இதனை என்று கூற ஆனாலும் யானும்(அகத்தியர்) பாண்டிய மன்னனுக்கு உதவிட்டேன் .... ஆனால் வந்தது யார் என்று எந்தனுக்கு தெரியும் நன்றாகவே... உணர்ந்து பார்த்து பார்த்து பார்த்து எதையன்றி கூற கடைசியில் பார்த்தால் பாண்டிய மன்னனும் என்னிடத்திலே வந்தான்!!

இவ்வாறு ஒரு உயர்ந்த மனிதனை யான் எதை என்று கூற... எவற்றின் மூலம் உணராமலே உணர்த்தி பொய் சொல்லி அவந்தனை எங்கோ விரட்டி விட்டேனே!!!!! அகத்தியப்பா!!!!!......

எதையென்று கூற பின் மனம் வருந்தினான்.... எதையென்று கூற ஆனாலும் யான் சொன்னேன் இல்லையப்பா 
நிச்சயம் இருக்கின்றான்!!!! 
ஆனாலும் எதை என்று எவற்றின் என்றுகூட நீ நிச்சயம் ஈசனை நோக்கி தவத்தை மேற்க்கொள்!!!  
நிச்சயம் அவ் மனிதனே அழைத்துச் செல்வான் என்று கூட.....

இதனால் ஈசனை நினைத்து நினைத்து உருகி உருகி எதை என்று கூற தவங்கள் இயற்றினான்... தவங்கள் இயற்றி இயற்றி எதையென்று ஆனாலும்... ஈசன் வரவேயில்லை!!! 

இதையறிந்து மீண்டும் என்னிடத்திலே பாண்டிய மன்னன் அகத்தியா!!! அகத்தியா!!!! அப்பனே!!! இதை என்று கூற கூற மீண்டும் வந்தான்...

இப்படி நீ தவம் இயற்ற சொன்னாயே!!!! எந்தனுக்கு ஒன்றுமே நடக்கவில்லையே!!!....எதையென்று கூற ஆனாலும் வயதாகிக் கொண்டே போகின்றதே!!! 
எப்படி யான் காண்பது?? என்று கூட

திரும்பவும் நீ தவங்கள் செய்ய வேண்டும்... தவங்கள் செய்தால் நிச்சயம் பேரருள் கிடைக்கும் என்பதை கூட...

அதனால் தவங்கள் செய்தான்!! செய்தான்!!

அதனால் ஓர் சிறுவன் வந்தான்!! அச்சிறுவன் எதையன்றி கூற அச்சிறுவனும் ஈசனே!!!! மறைமுகமாக வந்தான். 

ஆனாலும் எதையன்றி ஆனாலும் மன்னனே!! என்று கூற....
திடீரென்று கண்ணைத் திறந்தான் பாண்டிய மன்னன்.

ஆனாலும் இதனை உணர்ந்து சிறுவனே நீ யாரப்பா??? என்று கேட்க

இதனையும் உணரவில்லையா இன்னும் கூட!!! 
இன்னும்கூட உணரவில்லையா??? என்றிணங்க மன்னனே...சற்று இன்னும் ஆழ்ந்த தியானத்தில் இரு என்று கேட்க....

ஆனாலும் ஆழ்ந்த தியானத்திற்கு சென்றான் பாண்டிய மன்னன்.

இருப்பினும் தவற்றை உணர்ந்து யாரையும் புண்படுத்த கூடாது யார் மனதையும் புண்படுத்தக் கூடாது எதையும் செய்யக்கூடாது என்று கூட பின் ஆனாலும் தெரியவில்லை கடைசியில் எதை என்று கூற சிறுவனை எதை கட்டித் தழுவிக் கொண்டான்.

ஆனாலும் பாசத்தின் மீது பின் ஈசனுக்கு கண்ணீர் வடிந்தது!!!! பின் இவ்வளவு பாசமா என்று.....

ஆனாலும் இவற்றிலிருந்தெல்லாம் உணர்ந்து கொள்ள வேண்டும் நீங்கள்!!!

ஆனாலும் இவையென்று என்னிடம் வருவாயா என்ற கேள்விக்கு இதையென்று கூற ஆனாலும் அச்சிறுவன் என்னிடம் வா!!! யான் அழைத்து செல்கின்றேன் என்றுகூட சில கிலோமீட்டர் தூரத்தில் எதை என்று கூற நடைபாதையில்.... கையைப் பிடித்து இழுத்து வந்தான்..

ஆனாலும் இவற்றின் அறியாது பின்பு நடந்தே வந்தான் பாண்டிய மன்னனும்.அச்சிறுவனை.

ஆனாலும் எவை எதையென்று கூற அயராது வந்த பாண்டிய மன்னனுக்கு கால்களும் எதை என்று பின் கைகளும் ஓய்ந்தது!!!!

எதை ஆனாலும் இதையன்றி கூற சிறிது நேரம் உட்கார்ந்தான்!!!

திடீரென்று பார்த்தால் பின் ஈசன் எவை எதையென்று  கூற அச்சிறுவனும் மாயமாகி விட்டான்....

ஆனால் ஒரு குரல் கேட்டது!!!!!

பாண்டிய மன்னனே!!!!!

வந்தது யானே!!!!! 

சிறுவன் ரூபத்திலும் ஆனாலும் சாதாரண மனிதனாக வந்ததும் யானே!!! என்று கூற....

ஆனாலும் வந்தது எங்கு சொன்னது என்று தெரியுமா????

இத்திருத்தலத்திலே!!!!! 

இங்கேதான் கூறிவிட்டேன் இப்பொழுது!!!!

ஆனாலும் இவற்றை அறிந்த பாண்டிய மன்னன் இதை எவற்றை என்று கூட
ஆனால் அழுதான் அழுது புலம்பினான்..... இறைவனை பின் தன்னிடமே இருப்பதை உணராமல் எங்கெங்கோ சென்றடைந்து எதைஎதையோ பின்பற்றி கூட....

அதனால் இவற்றிலிருந்தும் இவ்வாலயத்தை இதையென்று கூற பல மக்களுக்கு தெரிவித்து நல் விதமாகவே இதனை பயன்படுத்தி எதையன்றி கூற.....

ஆனாலும் மீண்டும் ஒரு சப்தம் கேட்டது!!!  

மன்னா!!!!!

எதையன்றி கூற நீ மக்களுக்கு நன்மை செய்ய நினைக்கின்றாயா!!!! அதனால் யான் இங்கேயே இருக்கின்றேன்.... எந்தனுக்கு எதையன்றி கூற இங்கே பல பல உருவங்களை எப்படி என்பதை கூட உன் கனவிலே செப்புகின்றேன் அதனை இங்கே தலம் அமைத்தால் நீ எண்ணிய எண்ணங்கள்!!!! உன் மக்களும் நலமடைவார்கள் வெற்றி பெறுவார்கள் பல நோய்களும் பின் நிச்சயம் ஒழிந்துவிடும்.... எதையென்று கூற... 

இதனால் பலபல எதை என்று கூறும் அளவிற்கும் கூட கலியுகத்தில் பல பெண்கள்  எதையென்று கூற தவறான வழியிலே செல்வார்கள்!!! அவர்களெல்லாம் இங்கே வந்து நலம் பெறுவார்கள்!!!

இன்னும் பல பல வழிகளில் உண்மைகள் புரியும்!!!
பல நோய்நொடிகள் இல்லாமல்  எதையென்று கூற நேர்மையாகவே வாழ்வார்கள் என்பதைக்கூட திண்ணமாக சப்தம் கேட்டது!!!!!

அதனால்  எதையென்று கூற உணராமலே எவை என்று கூட... ஆனாலும் ஓடோடி எதனை என்று என்னிடத்தில் வந்தான் பாண்டிய மன்னன்....

ஆனாலும் பாண்டியன் எதை என்று கூற அகத்திய முனிவரே!!!!  எதையென்று எவற்றையென்று கூற உணராமலே... எதையென்று கூற ஈசனை விட்டு விட்டேனே.... இப்பொழுது என்ன செய்ய வேண்டும் !!??என்று கூட...

பின் எதையன்றி கூற நீதான் எந்தனுக்கு வழிகள் காட்ட வேண்டும் என்றுகூட என்னிடத்தில் வந்துவிட்டான்!!!

ஆனாலும் பொறு மகனே எந்தனுக்கு எதை என்று கூற அனைத்தையும் யான் சொல்லித் தருகின்றேன்!!!
அவ்வாறே தலத்தை அமை!! என்று கூற ஆனாலும் எவையன்றி கூற 

அகத்திய முனிவரே... நீங்கள் ஓரிடத்தில் இருக்கமாட்டீரே!!! அங்கங்கே சென்று விடுவீரே!!!! யான் என்ன செய்வது என்று கூட!!!!

ஆனாலும் இல்லை!! இல்லை !!! யான் இங்கே தங்கி இருக்கின்றேன் அதனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக செய்கின்றேன் நீயே எங்கே தங்கி  எதையென்று கூற என்று கூட யான் தான்... இத்திருத்தலத்தை அமைக்க உதவிட்டேன்!!!!

அதனால் இவையென்று கூற சரியாக கட்டி முடித்தது...எதையன்றி கூற பல மனிதர்களும் நல் முறையாகவே நல் முறையாக வந்து வழிபட்டு பல இன்னல்களையும் தீர்த்துக் கொண்டனர்.

இதனால் பேரும் சீரும் சிறப்பும் மிகுந்தது இத்திருத்தலம்.

இதனால் பல வழிகளிலும் வந்தார்கள் ஆனாலும்  எதையென்று கூற... பாண்டிய மன்னன் ஒரு யோசனை இட்டான்...

ஆனாலும் அகத்தியன் பல பல வழிகளிலும் பல உலகத்தை சுற்றி வந்து விடுவானே!!! இதனால் இங்கே நிறுத்த வேண்டும் என்று எண்ணி...

அகத்திய முனிவரே இதையன்றி கூற.... இவ்வளவு தலத்தை அமைத்தாயே!!! நீ எங்கும் போகக்கூடாது இங்கே தான் இருக்க வேண்டும் என்று கூட...

எதையன்றி கூற என் கால்களைப் பிடித்துக் கொண்டான்!! ஆனாலும் இவற்றின் என்று கூற சரி என்று கூட யான் அப்படியே நின்று விட்டேன்!!!

ஆனாலும் எதை என்று கூற என் உடம்பை எதை என்று கூற பின் வந்துவிட்டேன் ஆனாலும் என் உயிர் எதை என்றுகூட இங்கேயே நின்று விட்டது.... அதற்கும் வடிவம் கொடுத்து எதையென்று கூற சரி..... இவற்றின் வடிவில் இருந்து வந்தவையா... இல்லை... எதையென்றும் நிர்ணயிப்பது போலே..

.சரி பாண்டிய மன்னனே யான் இங்கேயே இருக்கிறேன்...எதையன்றி கூற என்று நிற்கும் அளவிற்கு கூட பாண்டிய மன்னனும் எதை என்று கூற அகத்திய முனிவரே நீ... இங்கே தான் இருக்க வேண்டும் என்று எண்ணி...

ஆனாலும் யானும் எதை என்று கூற இவ்வளவு பற்று கொண்டுள்ளானே!! மன்னன் என்று கூட இங்கேயே தங்கிவிட்டேன் பல நாட்கள்...

ஆனாலும் இப்பொழுது கூட இவையெல்லாம் எதை என்று கூற எந்தனுக்கு பல வழிகளிலும் கற்றுக் கொடுத்து தான் வந்து கொண்டிருக்கின்றது யானும் இங்கேதான் இருப்பேன்.... வருவேன் எதை என்று கூற பல மக்களையும் காப்பாற்ற....

இன்னும் பல சிறப்பான உரைகளை கூறுகின்றேன் பல வழிகளிலும் பல திருத்தலங்களும் அழிந்து கொண்டே செல்கின்றது... அதனையும் யான் நிச்சயம் எவை என்று கூற யாங்களே(சித்தர்கள்) வந்து நிச்சயம்.... 

அதைவிட !!!ஏன் ஈசனே!!!!! வந்து அமைத்து விடுவான்.
இதுதான் உண்மை!!! சொல்லி விட்டேன்.

நல் விதமாக ஆசிகள்!!! ஆசிகள்!!! அதி விரைவிலே இத்திருத்தலத்தை யாங்களே  நல் விதமாக ஏற்று நடத்துவோம்!!! நடத்துவோம்!!! 
நல் விதமாகவே!!!!

ஓய்வதில்லை!!!!!!!! திருத்தலங்கள் வந்து பெருகும் என்பேன்!!!!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள்

ஸ்ரீ மானகௌசிகேசர் சிவகாமி அம்மன் ஆலயம். 
அகரம். சிவகாமிபுரம் 
ஆலங்குளம் தாலுகா. 
தென்காசி மாவட்டம் 

தொடர்புக்கு

திரு.மாடசாமி 8754247900
திரு.சுந்தர் சிவம் 9150187876
திரு.செல்வம் 9789733554
ஊர் பொதுமக்கள் 
அகரம் சிவகாமிபுரம் 
ஆலங்குளம் தாலுகா 
தென்காசி மாவட்டம்.







இந்த ஆலய திருப்பணிக்கு பொருளுதவி,அருளுதவி செய்த அனைத்து அடியார்களின் பாதம் பணிந்து இங்கே நன்றி கூறி மகிழ்கின்றோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

பழைய பாபநாசம்(கல்யாண தீர்த்தம்) - அருள்மிகு லோபாமுத்ரா அகஸ்தியர் பிரதிஷ்டை & மஹா கும்பாபிஷேக விழா - 23.06.2022 - https://tut-temples.blogspot.com/2022/06/23062022.html

அருள்மிகு ஸ்ரீ சௌந்தர்யநாயகி உடனுறை நந்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் - 06.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/06/blog-post_9.html

கல்யாண தீர்த்தம் அகத்தியர் தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_7.html

 ஸ்ரீ கல்யாண தீர்த்தம் - மாதாந்திர பௌர்ணமி பூசை - 38 ஆவது ஆண்டு விழா அழைப்பிதழ்  - https://tut-temples.blogspot.com/2019/09/38.html


அம்மம்மா வெகுதெளிவு அவர்வாக்குத்தான் - புரட்டாசி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 12.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/12102020.html

எமையே ஆள்கின்ற அகத்தீசனே போற்றி! - ஆவணி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 15.09.2020 - https://tut-temples.blogspot.com/2020/09/15092020.html

 ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 18.08.2020 - https://tut-temples.blogspot.com/2020/08/18082020.html

அகத்தீசனே சரண் சரணம் - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆடி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_21.html

ஓம் அகத்தீஸ்வராய நமஹ - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆனி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_24.html

அகத்தியரை அருட் குருவை அகத்துள் வைப்போம் - கூடுவாஞ்சேரி அகத்தியர் வைகாசி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_26.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு  - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html


 அருள்மிகு உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் ஆலய குடமுழுக்கு அழைப்பிதழ் - 14.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/01/14022022.html

 ஸ்ரீசத்ருசம்ஹார வேலாயுதசுவாமி ஆலய கலசவிழா - 07.04.2021 - https://tut-temples.blogspot.com/2021/03/07042021.html

 அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_11.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 34 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/08/34.html

No comments:

Post a Comment