"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, March 18, 2021

ஸ்ரீசத்ருசம்ஹார வேலாயுதசுவாமி ஆலய கலசவிழா - 07.04.2021

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவில் ஸ்ரீசத்ருசம்ஹார வேலாயுதசுவாமி ஆலய கலசவிழா அழைப்பிதழ் காண இருக்கின்றோம். பதிவின் உள்ளே செல்லும் முன்னர் அனைவரும் இந்த செய்தியை நன்கு உள்வாங்கிக் கொள்ள வேண்டுகின்றோம். ஆதி காலம் முதல் கோவில் என்றால் சிவாலயம் மட்டுமே குறிக்கப்படும். பராகிரம பாண்டியன் என்ற மாமன்னன் சொன்னது:பழுதுபட்ட புராதன சிவாலயங்களை புதுப்பிக்கும் பணியில் எப்படி ஒருவர் ஈடுபட்டாலும், அவர்களது திருவடிகளை இப்போதே வீழ்ந்து வணங்குகின்றேன் என்று

"ஆராரயினும் இந்த தென்காசி மேவு பொன்னாலயத்து
வாராததோர்  குற்றம் வந்தால் அப்போது அங்கு வந்ததனை
நேராகவே ஒழித்துப் புறப்பார்களை நீதியுடன்
பாரார் ஆரியப் பணிந்தேன் பிரகிரம பாண்டியனே"


சிவாலய பணிகளில் ஈடுபட்டால் நம தீவினைகள் முற்றிலுமாய் நீங்கப்பெறும்
கூடவே நல்வினைகள் சேரும் ஆலயத் திருப்பணிகளில் ஈடுபடல், உடலுழைப்பு  தரல், இடம் அல்லது மனை தரல்,குளம் தூர்வாரல்,கல்,மண் அளித்தல் ஆகிய எல்லாம் மிகமிக சிவபுண்ணிய செயல்களாம்.

நம்பழம் பாடல் பகரும் இப்படி:

"புல்லினால் கோடியாண்டு,புதுமண்ணால் பத்துகோடி
செல்லுமா ஞாலந்தன்னில்  செங்கல்லால் நூறு கோடி 
அல்லியங்கோதைமின்னே ஆலயம்  மடங்கள் தம்மை 
கல்லினால் புதுக்கினோர்கள் கயிலை விட்டு அகலாரன்றே" 

"சிவன் கோவிலுக்கு ஒரு செங்கல் வழங்குதல், அந்த செங்கல் எத்தனை நாட்கள் கோவிலில் இருக்குமோ அத்தனை நாட்கள் நீங்கள் கைலாயத்திலோ அல்லது வைகுண்டத்திலோ வாசம் செய்யும் புண்ணியம்"!

-காஞ்சி மஹா பெரியவர்

 எந்த ஒரு ஜோதிடரிடமோ அல்லது மகானிடமோ சென்ற உடனேயே அதிசய மாற்றங்கள் நிகழ வேண்டும் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். தடுமாற்றமே தன்னிலை மறந்து முன்னிலை வகிக்கும்.அவரவர் கர்மவினை நன்றாக இருந்தால் ஒழிய அதிசயம் நடப்பது அபூர்வம்.

அது போல் தான் ஸ்ரீசத்ருசம்ஹார வேலாயுதசுவாமி ஆலய கலசவிழா நடைபெற உள்ளது. முதலில் கலசவிழா அழைப்பிதழை இங்கே பகிர உள்ளோம்.





ஓம் ஸ்ரீசத்ருசம்ஹார வேலாயுதசுவாமி மற்றும் ஓம் ஸ்ரீசத்ருசம்ஹார வேலாயுதசுவாமி பீடம் உருவான விதம் பற்றி ஆலய நிர்வாகி சடாட்சர அடிகளாரின் உரைக்கும் பதிவு :


சுமார் 20 ஆண்டுகளாக பழனிக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்த வேளை, பல முருகப்பெருமான் ஆலயங்களுக்கு யாத்திரை சென்று முருகனை வழிபாடு செய்து கொண்டிருந்த காலம். ஜீவநாடி பற்றி அறிந்து முதன்முதலில் ஜீவநாடி பார்த்து, ஜீவநாடியில் உரைத்ததுபோல் பல கோவில் தரிசனங்களும், சித்தர் ஜீவசமாதி பீடங்கள் தரிசனமும், பிறகு குருவின் மந்திர ஜெபமும் பெற்று வழிபாடு செய்து வந்த வேளையில் சுமார் 4 வருடங்களுக்கு முன்னர் ஜீவநாடியில் ஸ்ரீமுருகப்பெருமான் கருணையினால் வேல் வழிபாட்டிற்கான உத்தரவு கிடைக்கப் பெற்று, பாரம்பரியமாக தெய்வ வடிவங்கள் செய்பவர்களை தேடி கும்பகோணம் சென்று ஐம்பொன் வேல் வடித்து அதனை முறையாக பூஜித்து வந்தோம்.

பின்னர் ஒவ்வொரு முறையும் ஸ்ரீநந்தீஸ்வரர் ஜீவநாடியில் உரைத்த முறையில், ஸ்ரீமுருகன் குடிகொண்டு அருள்பாலிக்கும் பல்வேறு ஆலயங்களுக்கு சென்று அந்தந்த ஆலயங்களில் வேல் வழிபாடு அபிஷேக ஆராதனையுடன் நடத்தி அங்கு மூலவரின் அருகில் திருமுருக வேலை வைத்து பிரார்த்தித்து வந்தோம்.

இவ்வேளையில் ஸ்ரீநந்தியம்பெருமான் ஜீவநாடியில்,  திருச்செந்தூர் செந்திலாண்டவருக்கும் இவ்வேலுக்கும் தொடர்பு உள்ளதால், திருச்செந்தூருக்கு வேல் வழிபாட்டுடன் பாதயாத்திரையாக சென்று வர உத்தரவு வந்தது. பின்னர் சேலம் சித்தர் கோயிலில் இருந்து திருச்செந்தூருக்கு 13 நாட்கள் பாதயாத்திரையாக சென்று, அங்கு 14 ஆம் நாள் தங்கி 15 ஆம் நாள் எதிர்பாராமல் ஏற்பட்ட உள்ளம் நெகிழ்ந்த நிகழ்வு ஸ்ரீமுருகனை தரிசிக்க உள்ளே செல்லும்போது, அங்கிருந்து அர்ச்சகரை கேட்க, உள்ளே கருவறையில் வைத்து வேல்பூஜை செய்து தர வேண்டினோம். அவர் மறுத்துவிட்டார்.

இவ்வேளையில் கருவறையில் இருந்து வந்த அர்ச்சகர் வேலை வாங்கி மூலவரிடம் வைத்து பன்னீர், பால் அபிஷேகம் செய்து எம்பெருமான் திருமேனி மலர்களை மாலையாக அணிவித்து, தீப தூப ஆராதனை எம்பெருமானுக்கு பூஜை ஆகும்போது செய்து கொடுத்தார்.

பின்னர் மீண்டும் ஸ்ரீநந்தியம்பெருமான் ஜீவநாடியில் திருச்செந்தூர் முருகனுக்கும் இந்த வேலாயுதசுவாமிக்கும் உள்ள தொடர்பை நீங்களே உணர்ந்து கண்டு குளிர்ந்தீர்கள் அல்லவா? என்று உரைத்தார்.

எம்பெருமான் ஸ்ரீமுருகப்பெருமான் ஜீவநாடியில் எழுந்தருளி குருநாதர் சித்தகுருஜி திருவாய் மலர்ந்து இந்த வேலாயுதசுவாமிக்கு "ஓம் ஸ்ரீசத்ருசம்ஹார வேலாயுதசுவாமி" என நாமம் சத்குரு சுவாமி ஸ்ரீலஸ்ரீ தவபாலேஸ்வரர்  கருணையினால்  உரைக்கப்பட்டது. பின்னர் முருகப்பெருமானின் உத்தரவின் பேரில் 21 முருகனடியார்கள் வீட்டில் ஸ்ரீசத்ருசம்ஹார வேலாயுதசுவாமி அபிஷேகம் ஆராதனை, கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், வேல் மாறல், சண்முக கவசம் பாராயணம் செய்து சடாட்சர மந்திரம் ஜெபம் செய்து வர, அடியார்களின் வீட்டில் குறைகள் நீங்கபெறும் என்று ஸ்ரீமுருகனின் உத்தரவு கிடைக்கப் பெற்றது.

உத்தரவு பெற்று 21 அடியார்கள் இல்லத்தில் ஸ்ரீசத்ருசம்ஹார வேலாயுத சுவாமிக்கு ஜீவநாடியில் உரைத்தவாறு பூஜைகள் நடைபெற்றது. மறுமுறை ஜீவநாடியில் ஸ்ரீமுருகனின் அறுபடை வீடு தரிசனம் ஓம் ஸ்ரீசத்ருசம்ஹார வேலாயுதசுவாமியுடன் செல்ல வேண்டும் என்றும், பல அற்புதங்கள் நிகழும் என்றும் உரைக்கப்பட்டது.

அவ்வாறு செல்லும்போது அறுபடை வீடுகளிலும் பல அற்புத நிகழ்வுகள் ஏற்பட்டது. அதில் மிக முக்கியமானது அறுபடை வீடுகளிலும் மூலவர் அருகில் ஓம் ஸ்ரீசத்ருசம்ஹார வேலாயுதசுவாமி அமர்ந்து பூஜை ஏற்றார்.

ஒருமுறை ஸ்ரீநந்தியம் பெருமான் ஜீவ நாடியில் சித்தகுருஜி அவர்கள்  "திருவண்ணாமலை செல்லுங்கள் அற்புதம் நிகழும்" என்று  உரைத்தார். அதன்படி திருவண்ணாமலை தரிசனம் செய்துவிட்டு கிரிவலப்பாதையில் மலைவலம் வந்து கொண்டிருந்தோம். நிருதி லிங்கம் அருகில் வரும்போது,  முருகனருளால்,  கிடைத்தற்கரிய பெரும் வாய்ப்பாக, சுவாமி அண்ணாமலையாரின் ஸ்வரூபமான, சத்குரு சுவாமி ஸ்ரீலஸ்ரீ  தவபாலேஸ்வரரை  நேரில் தரிசிக்கும் பெரும் பாக்கியம் கிட்டியது. 'கண்டேன் அவர் திருப்பாதம்' என்னும்படி அவரிடத்தில் சரணாகதி அடைந்தோம்.

மீண்டும் ஜீவநாடியில் சித்தகுருஜி அவர்கள் உரைத்தவாறு மேலும் பல ஸ்ரீமுருகப்பெருமானின் ஆலய தரிசனமும், சித்தர்களின் ஜீவசமாதி பீடத்தில் தங்கி ஓம் ஸ்ரீசத்ருசம்ஹார வேலாயுதசுவாமிக்கு பூஜையும் சடாட்சர மந்திர ஜெபமும் பல நாட்கள் செய்து வந்தோம்.

பின்னர் ஜீவநாடியில் ஓம் ஸ்ரீசத்ருசம்ஹார வேலாயுதசுவாமிக்கு ஆலயம் எழுப்பு என்று உத்தரவு வந்தது. ஆகையால் ஆலயம் பல அடியார்களின் உதவியால் வேலை தொடங்கியது. இந்நிலையில் மூலஸ்தானம் அமைக்கப்பெற்று, கோவிலைச் சுற்றி மேற்கூரை அமைக்கப்பெற்று முழுவதும் வேலை முடியாமல் இருந்த வேளையில், ஸ்ரீநந்தீஸ்வரர் ஜீவநாடியில் உரைத்தவாறு, குருநாதர் சித்தகுருஜி அவர்கள்

"சடாட்சர அடிகளார்"

என்னும் தீட்சா நாமத்தை உரைத்து ஆசி செய்தார். 

ஜீவநாடியில் ஓம் ஸ்ரீசத்ருசம்ஹார வேலாயுதசுவாமியினை மூலஸ்தானத்தில் எழுந்தருளச் செய்து, 9 நாட்கள் கருவறையில் அமர்ந்து, இரவு பகல் முழுவதும், தவமும் சடாட்சர மந்திர ஜபமும், ஓம் ஸ்ரீசத்ருசம்ஹார வேலாயுதசுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை மற்றும் 10 ஆம் நாள் முடிவில் தவம் பூர்த்தி செய்ய உத்தரவு மற்றும் அன்னதானம் ஸ்ரீமுருகப்பெருமானால் கிடைக்கப்பெற்று உத்தரவின்படி செய்து முடித்தோம்.

அவ்வாறு தவம் இயற்றிய வேளையில் கருவறையின் அருகில், சுவாமி சத்குரு ஸ்ரீலஸ்ரீ தவபாலேஸ்வரர் திருப்பாத தரிசனத்தை நேரில் தரிசிக்கும் பெறும் பாக்கியம் பெற்றேன்.

10 ஆம் நாள் ஸ்ரீமுருகப்பெருமான் கருணையினால் இயல்பாகவே அருள்வாக்கு உரைக்கும் பாக்கியம் பெற்றேன்(சடாட்சர அடிகளார்). அடியார்களுக்கு அவர்களின் குறைகளை தீர்க்க அருள்வாக்கு உரைக்கப்பட்டது.

ஓம் ஸ்ரீசத்ருசம்ஹார வேலாயுதசுவாமி ஆலயத்திருப்பணி கலசவிழா  முழுவதும் முடிக்க பொருளுதவி  தேவை உள்ளபடியால் குருவருளும், திருவருளும் துணை கொண்டு ஆன்மீக அன்பர்களை வேண்டி நிற்கின்றோம்!

இப்பேருதவியை புரிந்து ஆலய கும்பாபிஷேகத்திற்கு உதவிடுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்!

நமது ஓம் ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதசாமி பீடத்தின் முழுமுதற்கடவுளான ஸ்ரீஞானவிநாயகர்!


உற்சவரான ஸ்ரீசத்ருசம்ஹார வேலாயுதசுவாமி (வேல் வழிபாடு)!



அடுத்து சடாட்சர பீடம் தங்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.


சேலம் அருகில் முருங்கப்பட்டி வினாதிகாடு கிராமத்தில் அமையவுள்ள ஸ்ரீசத்ருசம்ஹார வேலாயுதசுவாமி ஆலய மூலவர் தரிசனம் பெற உள்ளோம்.

மூலவர் திருநாமம் :
ஓம் ஸ்ரீஞான சடாட்சர பாலஸ்கந்தர்



நம் ஸ்ரீசத்ருசம்ஹார வேலாயுதசுவாமி ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்படக்கூடிய சிலைகள் வடிக்கப்பட்டு அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகில், திருமுருகன்பூண்டி எனும் இடத்தில் அனைத்து சிலைகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

நிகழும் மாசி மாதம் வருகிற 04/03/2021 வியாழக்கிழமை அன்று, சிலைகள் செய்து வைக்கப்பட்டுள்ள திருமுருகன்பூண்டி  எனும் ஊரில் இருந்து, நம் ஸ்ரீசத்ருசம்ஹார வேலாயுதசுவாமி ஆலயத்திற்கு சிலைகள் கொண்டு  வரப்பட்டது.

நம் ஸ்ரீசத்ருசம்ஹார வேலாயுதசுவாமி ஆலயத்திற்கு காெண்டு வரக்கூடிய சிலைகள் :

1. முழுமுதற்கடவுளான ஓம் ஸ்ரீஞான விநாயகர்.

2. மூலவரான ஓம் ஸ்ரீஞான சடாட்சர பாலஸ்கந்தர்.

3. சிவபெருமானின் அம்சமான சுவாமி ஸ்ரீதவபாலேஸ்வரர்.

4. ஆதார பீடத்துடன் கூடிய சடாட்சர ஓங்கார பீடம்.

5. மயில் வாகனம் மற்றும் மூஷிக வாகனம்.

6. காேமுகம் (தீர்த்தக்கல்).

7. பரிவார தெய்வங்களான ராகு, கேது.










ஆலய கலசவிழாவிற்கு இன்னும் 18 நாட்களே உள்ளன.அனைவரும் கலசவிழாவில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். மேலும் கலசவிழாவிற்கு தங்களால் இயன்ற பொருளுதவி செய்யுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

Name : D. Raja

Bank : HDFC Bank

A/C No : 50100006155759

IFSC Code : HDFC0001874

Branch : Elampillai, Salem

Google Pay : +919047551529

ஆலய நிர்வாகி சடாச்சர அடிகளார் தொடர்புக்கு :

 +919047551529 (Whats app)

ஓம் ஸ்ரீசத்ருசம்ஹார வேலாயுதசுவாமியே சரணம்!

திருச்சிற்றம்பலம்!

மீண்டும் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 34 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ்  - https://tut-temples.blogspot.com/2020/08/34.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 41 - ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடி சரணம்!  - https://tut-temples.blogspot.com/2020/12/41.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 40 - குருவே சரணம்... திருவே சரணம்.... - https://tut-temples.blogspot.com/2020/11/40.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 39 - https://tut-temples.blogspot.com/2020/09/39.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 38 - மூன்றாம் நாள் அர்த்தஜாம பூசை - அனைவரின் தரிசனம்!  - https://tut-temples.blogspot.com/2020/09/38.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 37 - இரண்டாம் நாள் சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை ! - https://tut-temples.blogspot.com/2020/09/37.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 36 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! (3) - https://tut-temples.blogspot.com/2020/09/36-3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 35 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/35.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 34 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/08/34.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 33 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/33.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 32 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/08/32.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 31 - குருவே சரணம்...திருவே சரணம் ... - https://tut-temples.blogspot.com/2020/07/31.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 30 - ஜீவநாடி இறைவனுக்குச் சமம் - https://tut-temples.blogspot.com/2020/06/30.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 29 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2020/05/29.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - திருவோணம் நட்சத்திரம்!  - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_12.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 28 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/04/28.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 27 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/27.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 26 - அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்...- https://tut-temples.blogspot.com/2020/03/26.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 25 - அந்தநாள் >> இந்த வருடம் - [2020-21] - https://tut-temples.blogspot.com/2020/03/25-2020-21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 24 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/24.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23-08032020.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html








No comments:

Post a Comment