"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, March 21, 2020

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 26 - அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் நாம் நெக்குருகி போகின்றோம். ஆப்பூர் பெருமாள் கோயில் சென்று உழவாரப் பணி செய்ய அருள் கிடைத்ததை பார்த்தோம். ஒரு அண்மைக்கால அற்புதக் கோயில் பற்றி ஜீவ நாடி அற்புதங்கள் பகுதியில் பார்த்தோம். நம் குருநாதர் அகத்தியரின் அருளாசியினால் லிகித ஜெபம் பற்றி  கண்டோம். இது ஒரு துளி மட்டுமே. 

காரைக்குடி அகத்தியர் திருமகன் ஐயா அவர்களின் சந்திப்பு, மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் சந்திப்பும் நமக்கு ஜீவ நாடி அற்புதங்களே. மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் தொண்டிற்கு நாம் தலை வணங்குகின்றோம். மதுரை இறையருள் மன்றத்தின் சேவையும் பாராட்டுக்குரியது. சில பதிவுகளுக்கு முன்னர்  பதிவில் ஜீவ நாடி என்றால் என்ன என்று பார்த்தோம். அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி கேட்டு பதிவு சமர்பித்தோம். மேலும் இரு அன்பர்களின் ஜீவ நாடி அற்புதங்களைப் பார்த்தோம். சில பதிவுகளுக்கு முன்னர்  மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழை பகிர்ந்தோம்.

ஜீவ நாடி அற்புதங்கள் ஏராளம் என்றே நாம் சொல்ல விரும்புகின்றோம். குருவடியைப் பின்பற்றி நடந்தால் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் குருநாதரின் அன்பால் தான் நடக்கின்றது என்பது தெள்ளத் தெளிவாக புரியும்.இதற்கு முந்தைய பதிவில் மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா பற்றிய ஜீவ நாடி அற்புதம் கண்டோம். ஏற்கனவே சொன்னது போல் ஜீவ நாடி அற்புதங்கள் ஏராளம். இதற்கு முந்தைய பதிவில் அந்த நாள் இந்த வருடம் என்றொரு தொகுப்பை தந்தோம். இன்றைய பதிவிலும் ஜீவ நாடி அற்புதம் பற்றி தொடர இருக்கின்றோம்.பதிவின் தலைப்பைப் பார்த்தாலே சிலருக்கு நாம் யாரைப் பற்றி இங்கே பேச உள்ளோம் என்பது புரியும். வாருங்கள் தொடர்வோம்.

நாம் இந்த ஆன்மிக பாதையில் அடியெடுத்து வைத்து பல தேடல்களில் இருந்தோம். அப்போது பிரமிடு விளக்கு மற்றும் ஸ்வஸ்திக் சக்கரம் பற்றி சென்னையில் சில இடங்களில் பார்த்தோம். அப்போது அதில் தொடர்புக்கு என்று காரைக்குடி அகத்தியர் திருமகன் என்று கண்டோம். காலப்போக்கில் இந்த செய்தி பற்றி மறந்து விட்டோம். பின்னர் ஜீவ நாடி பற்றிய செய்திகள் கண்டு , ஈரோடு அந்தியூர் முருக நாடி வழிகாட்டலில் நாம் தற்போது வரை தொடர்ந்து வருகின்றோம். அப்போது மதுரை இறையருள் மன்றம் திரு.பரமசிவன் ஐயாவின் ஆசி கிடைத்தது.அவரின் மூலம் மீண்டும் காரைக்குடி அகத்தியர் திருமகன் ஐயா பற்றி பேசினோம்.இம்முறை ஐயாவிடம் பேசுவோம் என்று நினைத்து அகத்தியர் திருமகன் ஐயா அவர்களை அலைபேசியில் அழைத்தோம். எதிர்புறத்தில் நமக்கு கிடைத்த ஆசி 

அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்... 

என்று கிடைத்தது. அட..இது நமக்கு மேலும் பல செய்திகளை உணர்த்துவதை கண்டோம். அந்த உரையாடலில் சக்தி கள தீபம் வேண்டும் ஐயா என்றோம். நேரில் வந்து பெற்று செல்லுங்கள் என்று அன்பு கட்டளையிட்டார். அதற்கடுத்து பல முறை ஐயாவிடம் பேசி உள்ளோம். பேசும் பொழுது எல்லாம் அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்... என்று ஆசி வாக்கை கேட்டு கேட்டு மெய் மறந்தோம். பல முறை அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்... ஆசி வாக்கை கேட்பதற்காகவே ஐயாவை அலைபேசியில் அழைப்பதுண்டு.

மேலும் தொடர்வதற்கு முன்பாக இந்த பதிவை நாம் பலமுறை அளிக்க முற்பட்டோம். ஆனால் குருவருள் நம்மை தற்போது இக்கட்டான சூழலில் இப்பதிவை அளிக்க கூறுகின்றது.ஆம். அகத்தியர் திருமகன் ஐயா அவர்கள் தம் பூத உடலை 18.03.2020 அன்று அதிகாலை 1 மணி அளவில் விட்டு நம்மை கண்கலங்க வைத்துவிட்டார்.  உடனே நமக்கு அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்... என்ற வாழ்த்தை  இனி எங்கே கேட்போம் என்றே தோன்றியது.நாமும் காரைக்குடி சென்று ஐயாவின் சமாதி நிகழ்வில் கலந்து கொண்டு வந்தோம்.ஏன்?எதற்கு? என்று பல கேள்விகள் நம்முள் எழுந்தாலும் நடப்பவை நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ள வேண்டும் அன்றோ! 

மிகுந்த அன்போடு நமக்கு பல வழிகளில் உதவியும் அறிவுரையும் கூறி நம்மை மட்டுமின்றி உலக சேமத்திற்காகவும் பணியாற்றி அகத்திய மைந்தன் இழப்பு, நமக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.இறை நிழலில் நம்மை ஆசிர்வதிக்க சென்றுவிட்டார்.அய்யா உயர்ந்த எண்ண அலைகள் உடையவர்.அன்புக்கு அடையாளம்.அவரின் பிரிவு துயரத்தை அளிக்கிறது.அரிது அவரைப் போன்றோரைக்காண்பது.பல கோயில்களில் சக்தி கள தீபம் ஏற்றிய புண்ணிய பலம் அகத்திய திருமகன் ஐயாவையே சாரும்.



தள்ளாத வயதில்,தளராத மனதுடன்,தீப தொண்டாற்றி,ஓய்வின்றி  உழைத்தவரே..
நீர் ஏற்றிய தீபங்கள்,மேலுலகில் வழிகாட்டும்..இவ்வுலகில் உமது புகழைப் பறைசாற்றும்..
இறைமடியில் அமைதியாக ஓய்வு கொள்ளுங்கள்..ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

சுயநலம் இல்லாத மகான்.மனம் சஞ்சலத்தில் குழம்பு போதெல்லாம் தெளிவுபடுத்தியவர்...

அவரின் அகஸ்தியர் ஆசி வாழ்க வளமுடன் என்ற குரலை கேட்கும்போது முழுமையாக பிரச்சினைகள் நம்மைவிட்டு நீங்கியது போன்ற மனநிறைவு வரும்... இனி அய்யாவின் குரலை கேட்க முடியாது என்று எண்ணும்போது மனம் பதைக்கின்றது.



















அகத்தியர் திருமகன் ஐயா அவர்களின் தரிசனம் மேலே நீங்கள் பெற்று இருப்பீர்கள் என்று நாம் விரும்புகின்றோம். மற்ற பதிவு போல் உடனே உடனே கீழே வந்து படிக்க வேண்டாம்.ஒவ்வொரு அருள்காட்சியை நன்கு உற்று நோக்கி, ஐயாவின் அருளாசி பெற்றுக் கொள்ளுங்கள்.

அகத்தியர் அதிர்ஸ்ட தீபக் குழு என பெயர் வைத்தது முருகப் பெருமான்.ஜீவ நாடியில் முருகக்கடவுள் உரைத்து அதன் அடிப்படையில் அய்யா அவர்கள் விளக்குகள் செய்து தீபமேற்றினார்கள் என்பது பெரும்பாலோர் அறிந்ததே! முதன்முதலாக இந்திரன் தீபமேற்றி வழிபட்டார். இடையில் நின்று விட்டது.இப்போது நீங்கள் ஆரம்பித்தது மிக்க மகிழ்ச்சி என முருகக்கடவுள் கூறினார்.யார் யாரெல்லாம் இக்குழுவில் இணைகிறார்களோ! அவர்கள் கோரிக்கை அனைத்தையும் நிறைவேறும் என்றும் கூறியிருக்கிறார். ஆகவே இந்த சக்திகள தீப வழிபாடு தொடர வேண்டும் என்பதே நமது விருப்பமாக இருக்க வேண்டும். இறைவனிடமும் அதனை அனைவரும் வேண்டுவோம்.

உலக நலம்தான் தனது நலமாக கருதி உலக நன்மைக்காக கடந்த ஓராண்டாக ஶ்ரீமுருக பெருமானின் உத்தரவின்படி சுதர்ஷன தீப வழிபாட்டை மதுரை திருமோகூர் சுதர்ஷன பெருமாள் சன்னதி,ஆறுபடை முருகன் திருக்கோவில் என தீபம் ஏற்றி உலக நலனுக்காக தீபம் ஏற்றி தானம் தருமங்கள் செய்தவர்.தொடர்ந்து தனது வீட்டில் 18 வாரங்கள் சுதர்ஷன தீப ஏற்றி பிறகு நிறைவாக மதுரை மாயாண்டி சித்தர் கோவிலில் தனது பூஜை நிறைவு செய்து முருக பெருமானின் திருவருள் கட்டளையை ஶ்ரீஞானஸ்கந்தர் நாடியில் சொன்னது போல் நிறைவு செய்து ஶ்ரீஅகத்தியர் பெருமான் மற்றும் முருகபெருமானின் திருவருளில் கலந்து விட்டார்கள்.அவர்களின் சேவைக்கு ஈடுஇணை ஏதும் இல்லை.

அய்யா அவர்கள் கடந்த பிறவியில் பிருங்கி முனிவராக இருந்தார்கள். அனுமத்தாசன்,  தஞ்சை கணேசன் அய்யா நாடியில் அகத்தியரும்,அந்தியூரில் முருக பெருமானும் பிருங்கி முனிவர் என உரைத்தார்கள்.

ஜீவ நாடி உரைத்தபடி செய்த தீப விழாவில் பைரவர் காட்சி, ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் அகத்தியர் திருமகன் அவர்களுக்கு அட்ட வீரட்டான தலங்களில் 2108 சக்தி கல தீபங்கள், வேல் தீபம், சிவலிங்க தீபம் ஆகியவற்றை ஒவ்வொரு பெளர்ணமியிலும் ஏற்றுமாறு வந்தது. அந்த அடிப்படையில் திருக்கண்டியூரில் சென்ற பௌளர்ணமியில் தீப வழிபாடு செய்யபட்டது. இந்த ஆடி மாத பௌர்ணமியில் திருக்கோவிலூரில் தீப வழிபாடு செய்யப்பட்டது. வழிபாடு துவக்கம் முதல் முடிவு வரை பைரவரின் வாகனமாகிய நாய் ஒன்று வந்து படுத்திருந்தது அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. அதன் படங்களில் சில மேலே பதிவு செய்துள்ளோம்.

அகத்தியர் வடிவில் காட்சி தரும் மலை


ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் அவர்கள் ஞானஸ்கந்தர் ஜீவ நாடியை வாசிக்கும் போது அகத்தியர் வாக்கு வந்தது அதைக் கேட்டுக்கொண்டிருந்த அகத்தியர் திருமகன் எனும் ஆன்மீகப் பெரியவரிடம் இந்த ஞானஸ்கந்தாஸ்ரமத்தின் பின்புறம் உள்ள மலையை உற்றுப் பார் உனக்கு ஒரு காட்சி தருவேன் என அகத்தியர் உரைத்தார். அவரும் நீண்ட நேரம் உற்ரு உற்ருப் பார்த்தும் எந்த வித காட்சியும் கிட்டாமல் வழ்க்கம்போல் அகத்தியர் ஐயா ஏமாற்றிவிட்டார் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். இதை அருகில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்த மதுரை இறையருள் மன்றம் பரம் சிவம் அவர்கள் இந்த மலையை தனது அலை பேசியில் புகைப்படம் எடுத்து தனது வீட்டில் அந்த படத்தையே அகத்தியரை தியானித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். உடனே அந்த மலையே அகத்தியர் வடிவில் இருப்பதை உணர்ந்து மெய் சிலிர்த்து ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் அவர்களிடமும் அகத்தியர் திருமகன் எனும் ஆன்மீகப் பெரியவரிடம் இதைத் தெரிவித்து மகிழ்ந்தார். சித்தர்கள் வாக்கு என்றுமே பொய்த்ததில்லை என்றும் நாம் புரிந்து கொள்வதில்தான் பிழை இருக்கின்றது என்றும் பின்பு ஒருமுறை அந்த அகத்தியரே ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் உரைத்தார். நமது வாசகர்களுக்காக அந்த மலை வடிவில் உள்ள அகத்தியர் படத்தை இங்கு வெளியிடுகின்றோம்.

 நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் (10.12.2015)வியாழக்கிழமை இரவு அமாவாஸை பூஜை ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களால் அபிடேகம், அலங்காரம், பேரொளி வழிபாடு, அன்னம் பாலிப்பு ஆகியன சிறப்பாக நடத்தப்பட்டது. சுமார் 500 பகதர்கள் கலந்து கொண்டு அருள் பெற்றனர். பூஜையின் சிறப்பாக மதுரை இறையருள் மன்றம் திருவாளர் பரமசிவம், கார்த்திகேயன் உட்பட பல அன்பர்களும், அம்பாள் உபாசகர் ஆதவன் அவர்களும், அகத்தியர் திரு மகன் எனும் ஆன்மீகப் பெரியவரும் வேல் வடிவில் செய்யப்பட்ட விளக்கில் 108 தீபங்கள் ஏற்றியும், பைரவ்ர் தீபம், கும்ப தீபம் என வகை வகையான தீபங்களை ஏற்றி ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்கள் முன்னிலையில் கூட்டு வழிபாடு நடத்தினர். இந்த வேல் தீபம் செய்யும் முறைகளை நமது ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களால் ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் உரைக்கப்பட்டதாகும். அதே போல் இந்த தீபங்களை மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் உட்பட பல்வேறு சிவாலயங்களில் ஏற்றி வழிபட்டு இறையருள் மன்றம் திருவாளர் பரமசிவம் அவர்களால் நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்திற்காக ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. பூஜையின் முடிவில் ஜீவ நாடியில் இந்த வேல் தீப பூஜைக்கு அகத்தியரே எழுந்தருளி ஆசி கொடுத்ததாகவும், இன்னும் பல்வேறு சித்தர்கள் சூட்சுமமாக வந்ததாகவும் வாக்கு வந்தது. அதன் படங்களை வாசகர்களுக்காக இங்கு வெளியிடுகின்றோம்.






இரு தினங்களுக்கு முன் முருகரிடம் நம் அய்யா பற்றி வாக்கு கேட்கப்பட்டது.

அவரது ஆன்மா சாந்தி அடைந்து விட்டது.பிருங்கி முனிவராக எம்முடன் (முருகருடன்) இருக்கிறார்.சித்தர்கள் குழாமில் தற்காலம் இருக்கிறார். என கூறினார்கள்.

இந்த சக்திகள தீப வழிபாடு தொடர வேண்டும் என்பதே நமது விருப்பமாக இருக்க வேண்டும். இறைவனிடமும் அதனை அனைவரும் வேண்டுவோம்.

இந்தப்பதிவில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் சாதாரணமானது என்று நினைக்க வேண்டாம். முருகப்பெருமான் வாக்கை கொடுத்துள்ளோம்.அகத்தியர் திருமகன் ஐயாவுடனான சந்திப்பு பற்றி இனிவரும் பதிவுகளில் காண்போம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 25 - அந்தநாள் >> இந்த வருடம் - [2020-21] - https://tut-temples.blogspot.com/2020/03/25-2020-21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 24 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/24.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23-08032020.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

No comments:

Post a Comment