"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, March 29, 2020

ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

அனைவரும் 21 நாள் தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.  புற உலக தொடர்புகளை அதிக அளவில் குறைத்து அக உலக தொடர்பில் அனைவரும் இணைந்து வருகின்றோம். புறத்தில் உள்ளது தானே அகத்திலும் உள்ளது. அண்டத்தில் உள்ளது தானே இந்தப் பிண்டத்தில் உள்ளது. இதனை நாம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து வருகின்றோம்.

என்னதான் நாம் அக வாழ்வில் அடியெடுத்து வைத்தாலும் இத்தனை ஆண்டுகளாக புற வாழ்வில் இருந்து விட்டு நம்மால் தொடர இயலாது. தற்போது நிலவி வரும் இந்த அசாதாரண நிலை நீங்கி, மக்கள் இயல்பு நிலை திரும்பிட நமக்கு தெரிந்த குருநாதர்களிடம் விண்ணப்பம் வைத்தோம். அனைவரும் நமக்கு சொல்லிய செய்தி கூட்டு வழிபாடு ஒன்றே.

அதுவும் இந்த கூட்டு வழிபாட்டை தினமும் காலை அல்லது மாலை 6 மணி என எடுத்துக் கொண்டு நித்தமும் தீபமேற்றி செய்து வர வேண்டும். தீப வழிபாடு நாம் செய்யும் போது பஞ்சபூத வழிபாட்டையும் நாம் சேர்த்தே செய்கின்றோம். சற்று விளக்கமாக தீப வழிபாடு பற்றி இனி பேசுவோம்.

நாம் தினசரி தீப வழிபாட்டை மேற்கொள்ளும் போது, நமக்கு தீபங்கள் தினமும் பேசத் தொடங்கும்.இது தான் அருட்பெருஞ்சோதி நிலை. இந்த அருட்பெருஞ்சோதி நம்மை தனிப்பெருங்கருணை என்ற நிலையைக் காட்டி, நம்மை அது நோக்கி  பயணிக்க செய்யும்.


இருளைப் பழிப்பதை விட, ஒரு விளக்கை ஏற்றுவது நலம் என்பதை அறிந்தவர்கள் நம் முன்னோர்கள். அதனால் தான் நம் வாழ்வில், ஒளி தரும் விளக்குக்கு தனி இடமுண்டு. குத்து விளக்கு ஏற்றாமல், நல்ல காரியங்கள் நம்மில் நடப்பதில்லை. தீப ஒளித் திருநாளுக்குப் பின், தீபத்தைக் கொண்டு மாதமாக வரும் கார்த்திகை, ஒளியின் காலம்.வாழ்வின் இருளை விளக்கி ஒளிரச் செய்வதனால் என்னவோ, இதற்கு விளக்கு எனும் பெயர் வந்ததாக கூறப்படுவதுண்டு. இருளை விலக்கி, ஒளியை விளக்குவது தான் விளக்கு.


இருளைப் பழிப்பதை விட, ஒரு விளக்கை ஏற்றுவது நலம் என்பதை அறிந்தவர்கள் நம் முன்னோர்கள். அதனால் தான் நம் வாழ்வில், ஒளி தரும் விளக்குக்கு தனி இடமுண்டு. குத்து விளக்கு ஏற்றாமல், நல்ல காரியங்கள் நம்மில் நடப்பதில்லை. தீப ஒளித் திருநாளுக்குப் பின், தீபத்தைக் கொண்டு மாதமாக வரும் கார்த்திகை, ஒளியின் காலம்.வாழ்வின் இருளை விளக்கி ஒளிரச் செய்வதனால் என்னவோ, இதற்கு விளக்கு எனும் பெயர் வந்ததாக கூறப்படுவதுண்டு. இருளை விலக்கி, ஒளியை விளக்குவது தான் விளக்கு.





பொதுவாகவே தீப வழிபாடு என்பது மிக மிக உயர்ந்த வழிபாடு ஆகும். விளக்கேற்றி வழிபாடு செய்தால்

நினைத்த காரியம் நடக்கும்
குடும்ப ஒற்றுமை ஓங்கும்
புத்திரதோஷம் நீங்கும்
சகல நன்மைகளும்,ஐஸ்வர்யமும் பெருகும்.

அதே போல், விளக்கேற்றும் திசை, எண்ணையின் பலன்கள் என்று பல செய்திகள் உண்டு, சாதாரண தீபம் தானே என்று எண்ணாதீர்கள். தீபங்கள் ஏற்றும் போது, அந்த இடத்தில உள்ள இருள் நீங்கி, ஒளி பரவுகின்றது. அதே போல் தீபம் ஏற்ற ஏற்ற நம் அக இருள் நீங்கி , அக ஒளி பெருகும். நம்மைப் பொறுத்த வரையில் முதலில் அகத்தியர் ஆயில்ய வழிபாட்டில் அபிஷேகத்தில் மட்டும் கவனம் செலுத்தினோம். பின்னர் குருவின் வழிகாட்டல் படி, தற்போது ஆயில்ய பூசை ஆரம்பிக்கும் முன்னர், அஷ்ட திக்கு விளக்குகள் ஏற்றி தான் வழிபாட்டை ஆரம்பிக்கின்றோம்.மேலும் தீப வழிபாடு என்பது "பஞ்ச பூத" வழிபாட்டின் தத்துவமாகும். தீப வழிபாட்டில் நாம் நமக்காக வேண்டுவதை விட, மற்றவர்களுக்காக வேண்டுவது சால சிறந்தது. அதுவும் மோட்ச தீப வழிபாடு இன்னும் பிரசித்தம் பெற்றது.

தீபமேற்றிய உடன் நமக்கு என்ன தோன்றுகின்றது. மகிழ்ச்சி தானே..
தீபமேற்றுவதன் தாத்பரியமே நாம் மகிழ்வோடு வாழ்தல் என்பதற்காகத் தான். தீபமேற்றியவுடன் அந்த இடத்தில் உள்ள இருள் விலகி, ஒளி பெறுகின்றது. இது புறத்தில் நடைபெறும் நிகழ்வு. நீங்கள் இது போன்று தீபமேற்றி பிரார்த்தனை செய்ய செய்ய, அந்த புற நிகழ்வு, உங்கள் அகத்தில் நிகழ்வும். மாசற்ற ஜோதி மனதில் ஒளிர்ந்து, மலர்ந்த மலரை நாம் நம்முள் உணரலாம். நாம் ஒவ்வொருவரும் எத்துணையோ விதமான துன்பங்களை அனுபவித்து வருகின்றோம். சொல்லொணா துயரில் இருப்பவர்கள் தினமும் அகல் விளக்கில் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி சிறிய அளவில் பிரார்த்தனை செய்து வாருங்கள். சுமார் மூன்று மாதங்களுக்கு உள்ளாக நீங்கள் மாற்றம் பெறுவது உறுதி.

இந்த உலகம் எதனால் இயங்குகின்றது? சூரியனால் தான். சூரியன் இல்லையென்றால் நம் கதி அதோகதி தான். ஆதியில் நம் வழிபாடாக இருந்ததும் சூரிய வழிபாடு தான். ஞாயிற்றுக் கிழமை வாரத்தின் முதல் நாள், சூரியனை வழிபட்டு நம் நாட்களை தொடங்க வேண்டிய நாள். ஆனால் மாறாக அன்று தான் நாம் கேளிக்கை, கூத்து என்று திண்டாடி வருகின்றோம். ஆதி வழிபாட்டை மறந்து விட்டோம். தற்போது ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினமாக நம் கையில் சீரழிந்து வருகின்றது. இதற்கு மாற்றாக நாம் என்ன செய்ய முடியும்? ஞாயிற்றுக் கிழமை அன்றாவது விடியல் கண்டு சூரியன் தரிசனம் பெறுங்கள், சூரியக் குளியல் போடுங்கள். சரி வாருங்கள்..விளக்கின் மூலம்  விளக்கம் பெறுவோம்.




விளக்கு என்றால் என்ன? தெளிவு பெறு ..தெளிவு எப்போது பெற முடியும்? அகமோ, புறமோ இருள் அகற்றினால் தெளிவு பெறலாம். விளக்கு இருள் அகற்றும் வேலையைத் தான் செய்கின்றது. ஆரம்ப காலத்தில் களிமண்ணால் விளக்குகள் பயன்பாட்டில் இருந்தது.இன்று பல உலோகங்களில் பல விதங்களில் , வடிவங்களில் கிடைக்கின்றது. கோயிலில் விளக்கேற்ற செல்லும் போது கண்டிப்பாக களிமண்ணால் செய்யப்பட்ட விளக்குகளை பயன்படுத்துங்கள். பொதுவாக திருவிளக்கின் தத்துவத்தின்படி,

நெய் - நாதம் என்ற ஒலி தத்துவம்
திரி - பிந்து என்ற ஒளி தத்துவம்
சுடர்  -திருமகள்
பிழம்பு - கலைமகள்
தீ- சக்தி

என ஐந்து இறைமகாசக்திகள் உள்ளடங்கி உள்ளது. அகல் விளக்கேற்றி வழிபடுவது பஞ்ச பூத வழிபாடாகும். நாம் மோட்ச தீபத்தில் களிமண்ணால் ஆன பெரிய அகல் விளக்கில்  விளக்கேற்றி வழிபாடு செய்கின்றோம். பஞ்ச பூத வழிபாடும், முன்னோர்களின் வழிபாடும் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கிடைப்பதைப் போன்றதாகி விடும். அதே போல் விளக்கேற்ற உகந்த நேரம் நாம் ஏற்கனவே சொல்லியது போன்று பிரம்ம முஹூர்த்தம் என சொல்லப்படும் அதிகாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை தான். அதற்குப் பின்னரும் விளக்கேற்றலாம். தவறில்லை. பலன்கள் சற்று குறைவாக இருக்கும். அவ்வளவே. பயன்படுத்தப்படும் உலோக விளக்குகளுக்கென தனித்தனி பலன்கள் உண்டு.

வெண்கல விளக்கு - பட்சி தோஷங்கள் நீக்கும்
பித்தளை விளக்கு - சண்டை சச்சரவு நீங்கும்
செப்பு விளக்கு - அமைதி தரும்
வெள்ளி விளக்கு - பூரணத்துவம் தரும்
தங்க விளக்கு - ஆயுள் விருத்தி
நவரத்தின ஆபரண விளக்கு - நவரத்தின தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

உலோக விளக்குகளுக்கு என்று சளைக்காது இருப்பது மண் அகல் விளக்குகள். வலம்புரி சங்கு விளக்கு, பச்சை மண் அகல் விளக்கு, சுட்ட அகல் விளக்கு, பனம்பழ குறுக்கு வெட்டு அகல்விளக்கு, விசிறித்தட்டு அகல் விளக்கு, பாதாளக்குழி அகல்,தூங்கா(தூண்ட) விளக்கு, பலரூப அகல் விளக்கு என பலவகையான அகல் விளக்குகள் உண்டு. இதே போல் விளக்கேற்றும் எண்ணெயிலும் பல செய்திகள் உண்டு.

சரி..இனி அனுதினமும் நாம் செய்ய வேண்டிய வழிபாடு சார்ந்த செய்திகளை தருகின்றோம்.

வெட்ட வெளி தீபம் ஏற்றுவோம்

கோவில்கள் அனைத்தும் அடியார்கள் நுழைய வாய்ப்பில்லாத இந்த சூழ்நிலையில் , சித்தரடியார்கள் அவரவர் தத்தம் இல்லங்களில் இருந்து கொண்டே வெட்ட வெளியில் (வாசலிலோ அல்லது மொட்டை மாடியிலோ)  தீபம் ஏற்றி இப்போது உள்ள அசாதாரமான சூழ்நிலை மாற வேண்டும் என்று அவரவர் குருமார்களை துதிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .

வெட்ட வெளி தீபத்தின் மகத்துவத்தை முற்றிலும் உணர்ந்தவர்கள் சித்தர் பெருமக்களே !!!அதன் மகத்துவத்தை அவர்கள் அடியார்களான நாமும் உணர வேண்டி இது வெளிப்படுத்தப் படுகிறது.


அன்னை மஹா மாரி வழிபாடு 

சித்த புருஷர்களோடு தொடர்பு கொண்டவரும், திருக்கழுக் குன்றத்தில் சித்தர்கள் கிரிவலத்தை நிகழ்த்தியரும் ஆன ஐயா அவர்கள் அகத்தியப் பெருமான் கருணையினால் அகத்திய கருணை நாடி வழிபற்றி கொரானா வைரஸ் கட்டுப்படுத்தும் எளிய பூசையை அகண்ட பாரதம் முழுவதும் செய்ய சொல்லி இருக்கிறார்கள்.

வைரஸ் நோயை கட்டுப்படுத்தி அழிக்கும் தன்மை வாய்ந்த அன்னை மஹா மாரியை வருகின்ற அட்டமி தினத்தில் (31-03- 2020) இருந்து 9 நாட்கள் தொடர்ந்து அவர் அவர்கள் வீட்டில் சிறிய சொம்பில் மஞ்சள் நீர் வைத்து வேப்பிலை வைத்து புதிய விளக்கில் நல்லெண்ணை தீபம் ஏற்றி காலையும் (8.00 முதல் 9.00) மாலையும் (6.00 - 7.00)

ஓம் அகத்யாய நம: (108 முறை)
ஓம் ஹ்ரீம் மம் மஹாமாரியே நம: (108 முறை)

எனும் மஹா மந்திரங்களை 108 தடவை பாராயணம் செய்து வர கூறி இருக்கிறார்கள்.

9 நாட்கள்  அனுதினமும் இருவேளை பிராத்தனை செய்வோம். மிக சரியாக 9 நாட்களுக்குப் பிறகு தேசம் அமைதி பெறும், மக்கள் நோயில் இருந்து மீளுவார்கள்

இந்த தேசத்தில் நோய் பரவுதலை  அகத்தியரும், மஹா மாரியுமே அழித்து மக்களை காப்பார்கள் என்பது உறுதி.

இது சித்தர்கள் பூமி என்பதால் பாரத தேசம் முழுவதும் 8 கோடி மக்கள் இதை பாராயணம் செய்ய அனைவரும் ஒருமித்து மந்திர ஜெபம் செய்வோம் 
இந்த தேசத்தை ஸ்ரீ மஹாமாரியும் பெரும் தெய்வங்களும் காக்கும் என்பதை நிருபிக்க அனைவரும் ஒன்றினைவோம் 

நோயற்று வாழட்டும் உலகம் 
அகஸ்திய ஸ்ரீ அன்புச் செழியன்
திருக்கழுக்குன்றம்

இந்த நேரத்தில் மனம் தளராது தினமும் கூட்டுப்பிரார்த்தனை செய்யுங்கள்.




ஓம் குருவே சரணம்

 கலியுகத்தில் உள்ள அனைத்து கிராம தேவதைகளின் ஒட்டுமொத்த சக்தி ஸ்ரீ ஆயுர்தேவி அம்பாளிடம் குடி கொண்டுள்ளது.

 ஆகவே ஸ்ரீ ஆயுர்தேவியை  பிரதமை திதி உத்திரட்டாதி நட்சத்திரம் கூடிய இந்த தருணத்தில் பூஜிப்பது மிகவும் சிறந்தது ஆகும்

 ஸ்ரீ ஆயுர்தேவி படத்தை வைத்து விளக்கு ஏற்றி முடிந்தால் பசு நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுக 

ஸ்ரீ ஆயுர் தேவி காயத்ரீ

 ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே பராசக்தியை ச தீமஹி தன்னோ ஆயுர்தேவி ப்ரசோதயாத்.

 வெளியில் இருப்பவர்கள் இவ்வாறு செய்ய இயலாதவர்கள் மனதிற்குள் இந்த காயத்ரீ மந்திரத்தை குறைந்தது 1008 முறையாவது இன்றைக்கு சொல்ல மன பீதி அடங்கும்.  சௌபாக்கிய சாந்த சக்தி பரவெளியில் பரவும்.

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை

 ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை 

ஓம் ஸ்ரீ குருவே சரணம் 

சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சுவாமிகள் அருளிய ஸ்ரீ ஆயுர்தேவி நாமாவளிகள் 

ஓம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வர்யை நமஹ

ஓம் ஸ்ரீ அன்ன வாஹின்யை நமஹ

ஓம் ஸ்ரீ அத்புத சாரித்ராயை நமஹ

ஓம் ஸ்ரீ ஆதி தேவ்யை நமஹ

ஓம் ஸ்ரீ ஆதி பராசக்த்யை நமஹ 

ஓம் ஸ்ரீ ஈஸ்வர்யை நமஹ

ஓம் ஸ்ரீ ஏகாந்த பூஜிதாயை நமஹ 

ஓம் ஸ்ரீ ஓம்கார ருபிண்யை நமஹ 

ஓம் ஸ்ரீ காலபைரவ்யை நமஹ

ஓம் ஸ்ரீ கிருதயுக சித்சக்த்யை நமஹ 

ஓம் ஸ்ரீ சக்ரவாஸின்யை நமஹ

ஓம் ஸ்ரீ சித்புருஷ தத்வாயை நமஹ 

ஓம் ஸ்ரீ சிவசக்தி ஐக்ய ஸ்வரூபிண்யை நமஹ 

ஓம் ஸ்ரீ லலிதா பரமேஸ்வர்யை நமஹ 

ஓம் ஸ்ரீ திரிமூர்த்தி ஸ்வரூபிண்யை நமஹ 

ஓம் ஸ்ரீ நவகர ரூபிண்யை நமஹ 

ஓம் ஸ்ரீ நவமுத்ரா ஸமாராத்யாயை நமஹ 

ஓம் ஸ்ரீ பத்மஸனஸ்தாயை நமஹ

ஓம் ஸ்ரீ யோகாம்பிகாயை நமஹ 

ஓம் ஸ்ரீ துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி நிஷேவிதாயை நமஹ 

ஓம் ஸ்ரீ விஷ்ணு ரூபிண்யை நமஹ 

ஓம் ஸ்ரீ வேத, மந்த்ர, யந்த்ர சக்த்யை நமஹ

ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், ஐம், சுபாயை நமஹ 

ஓம் ஸ்ரீ சிவ குடும்பின்யை நமஹ

ஓம் ஸ்ரீ அருணாசல மேருஸ்தாயை நமஹ 

ஓம் ஸ்ரீ கரபீட வரப்பிரசாதின்யை நமஹ 

ஓம் ஸ்ரீ ஆயுர்தேவ்யை நமஹ

 நவகரத்தவளாய் நன்மைகள் பல நல்கும் ஸ்ரீ ஆயுர்தேவியை அற்புதமான நாமாவளிகளால் மஞ்சள் நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்திட சர்வமங்கள சௌபாக்கியங்களும் கிட்டும்.

 நன்றி : ஸ்ரீ ஆயுர் தேவி மகிமை புத்தகம்


நாம் நம் குழு அன்பர்களுடன் தினமும் காலை மற்றும் மாலை 6 மணிக்கு கூட்டுப்பிரார்த்தனை செய்து வருகின்றோம்.நாம் அனைவரும் அவரவர் இல்லத்திலிருந்தே இந்த உலகமே இன்னல்களிலிருந்து மீண்டு வர ஒன்று சேர்ந்து பிரார்த்தனை செய்வோம்

பிரார்த்தனை / தவ நேரம்: தினமும் காலை / மாலை 6 மணி முதல் 6:30 மணி வரை 

அவரவர் குலத்தெய்வம், மற்றும் இஷ்ட தெய்வம், ரிஶி, இஷ்ட குருமார்களை நினைத்து வேண்டுங்கள்

முதலில் குரு வணக்கம் - 5 நிமிடம் 

உங்களுக்கு தெரிந்த மந்திரங்களை முதலில் உச்சாடனம் செய்யவும். காயத்ரி மந்திரம், மகா மிருந்த்யுஞ்ச மந்திரம், இஷ்ட தெய்வம் மந்திரம்,கோளறு பதிகம், திருநீலகண்ட பதிகம் போன்றவை   - 15 முதல் 20  நிமிடம் 

உலக மக்கள் அனைவரும் முழுமையான ஆரோக்கியத்துடன் நலமாக சுகமாக நல்வாழ்வு வாழ வேண்டி பிரார்த்தனை செய்கிறேன்

தினசரி குழுப்பிரார்த்தனை

  •  உடலுக்கு நன்றி, நான் கேட்காமல் எனக்கு இலவசமாக ப்ரபஞ்ச சக்தி கொடுத்ததனால்
  •  உடல் உள்ளுறுப்புகளுக்கு நன்றி, என் கட்டளையிலாமல் சிறப்பாக செயல்படுவதால்
  •  உடலில் சுரக்கும் அமிலம், ஹார்மோன் மற்றும் என்சைம்களுக்கு நன்றி. உடலை சிறப்பாக தன் செயலை செய்ய உதவுவதால்
  •  செரிமான மண்டலத்திற்கு நன்றி. உண்பதை சக்தியாக மாற்றுவதால்
  •  உடலே சிறந்த மருத்துவன் என்பதால் உடலின் வார்த்தைகளை கூர்ந்து கவனிக்க முடிவதற்கு நன்றி.
  •  கர்ப்பிணி தாய்மார்களுக்கு  கிடைத்த அழகிய குழந்தைப்பேறுகளுக்கு  நன்றி
  •  குழந்தைகளின்  பூரண ஆரோக்யத்திற்கு நன்றி
  •  பணம்  கிடைக்க உதவிய ப்ரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி
  •  எல்லோர் மனதிலும் வளரும் அமைதிக்கும், மலரும் மகிழ்ச்சிக்கும் நன்றி ப்ரபஞ்சமே
  •  குடும்ப உறவுகளிடம் நிதானமாக பேச அனுமதி கொடுத்த பிரபஞ்சமே நன்றி
  •  நல்லதே நடந்ததிற்கு நன்றி
  •  நல்லதே நடந்துகொண்டிருப்பதற்கு நன்றி
  •  நல்லதே நடக்கப்போவதிற்கு நன்றி
  •  நற்பவி நன்றி (9 முறை)

தினமும் பிராத்தனையில் ஈடுபட்டு வரவும். அடுத்து சில குறிப்புகளை இங்கே பகிர விரும்புகின்றோம்.

1.கூட்டம் சேர கூடாது.

2.தனிமை வேண்டும், தன் குடும்பம் தனிமை.

3.தும்மல் , இருமல் கூடாது. இருமல் வந்தால் கை குட்டை பயன்படுத்தவும்.

5.கூட்டத்தில் AC யில் இருக்கக்கூடாது.

6.சளி பிடிக்காமல் பார்த்து கொள்ளவும். ஏதேனும் நம் பாரம்பரிய மருத்துவம் மேற்கொள்ளவும்.

7.சூப் வகைகள் சாப்பிடலாம்.

8.உப்பு தண்ணீர் கொப்பளிப்பு  தினமும் 2 தடவை பண்ணவும்.

9.குளிக்கும் போது மஞ்சள் தூள் , லெமன் , வேப்பிலை போட்டு குளிக்கலாம் (சூடு தண்ணீர் ).

10.டீ  வைக்கும் போது  அதில் இஞ்சி, நிலவேம்பு தூள், சீரகம் , சோம்பு , மல்லித்தூள் போட்டு black டீ குடிக்கவும்.

11.கை கழுவுதல் நல்லது.

12.வீட்டிற்கு வந்தவுடன் குளிக்கவும் .

13.வீட்டில் சாம்பிராணி   போடவும்.

14.வீட்டு வாசலில் சாணம் போட்டு மெழுகவும்.

15.மிளகு ரசம் வைத்து சாப்பிடுங்க....

16.சூடுதண்ணீர் குடிக்கவும்.

17.முடிந்த மட்டும் அசைவம் தவிர்ப்பது நலம்.

18. உடல் நோய் எதிர்ப்பு ஆற்றல் பெருக்கும் வழிமுறைகளை மட்டும் இந்நேரத்தில் கடைபிடியுங்கள்.

மேலும் ஒரு கவச முறை:-

நல்லெண்ணை, வேப்பெண்ணை கலந்து இரு அகல் விளக்கு ஏற்றி, காலை, மாலை இருவேளை அல்லது மாலையேனும், சிறிது உப்பை தூவி, அதன்மேல் அகல்விளக்கை வீட்டின் வாசல் படிக்கு பக்கத்தில் வைத்து அகத்தியரை, இறைவனை தியானித்து அனைத்து உயிர்களையும் காப்பாற்ற வேண்டி வழிபடுக. தினமும் வீட்டில் காலை, மாலை இரு நேரமும், சாம்பிராணி புகை போட்டு, சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

ஜோதி ஜோதி ஜோதி சுயஞ்
ஜோதி ஜோதி ஜோதி பரஞ்
ஜோதி ஜோதி ஜோதி யருட்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்.

வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி
மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி
ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி
ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி.

ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே


வாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே. 


அகத்தியர் அடியவர்கள் அனைவரும் மேற்சொன்ன வழிகளை கடைப்பிடித்து, ஆரோக்கியத்தை அடைந்து, கிருமி பாதிப்பிலிருந்து, தப்பித்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.மேற்கூறிய செய்திகள் அனைத்தும் நாம் பின்பற்றி வருபவை ஆகும். இன்னும் நிறைய செய்திகள் இனிவரும் பதிவுகளில் பேசுவோம்.அனைவரும் நலமோடு வாழ எம் குருநாதர்களிடம் விண்ணப்பம் வைக்கின்றோம். மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத ஸ்ரீ அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


மீள்பதிவாக:-

கொடுத்துப் பார் - தேனி ராம்ஜி பொதுநல அறக்கட்டளையில் சில மணித் துளிகள் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_27.html

தேனி - ராம்ஜி பொதுநல அறக்கட்டளையில் சில மணித் துளிகள் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_40.html

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா...- 7 ஆம் ஆண்டு வழிபாடு - https://tut-temples.blogspot.com/2020/03/7.html

இருமுடி இறைவா சரணம் சரணம் (ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா) - 7 ஆம் ஆண்டு இருமுடி கட்டும் வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/12/7.html

ஓம் சுவாமியே ......சரணம் ஐயப்பா - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_17.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (1) - https://tut-temples.blogspot.com/2020/03/1.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_11.html

No comments:

Post a Comment