"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, March 31, 2020

நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன?

அடியார் பெருமக்களே...

அனைவருக்கும் வணக்கம். 

பொதுவாக நாம் பார்க்கும் போது, இன்று கர்மா என்ற சொல் மிக சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருந்து வருகின்றது. நம்மில் அன்றாடம் உறவாடும் நபர்களிடம் இது பற்றி பேசினால், கர்மாவா? என்று கேலி பேசுவது உண்டு. தலைவலியும் திருகு வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும். அது போல் தான் இந்த கர்மா. கர்மா என்ற ஒன்று உண்டு என்றால் எப்படி நாம் அதிலிருந்து எப்படி வெளிவருவது..என்பது போன்றெல்லாம் நாம் சிந்திப்பதுண்டு. பொதுவாக கர்மா என்பது வினை..நாம் செய்யும் செயல். அவ்வளவே..

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விளைவு உண்டு. அது நல் விளைவாக இருந்தால் நம் கர்மா நல்ல கர்மா என்றும் தீய செயலாயின் தீய கர்மா என்றும் பொருள் கொள்ளலாம். அடுத்தவன் எக்கேடு கேட்டால் நமக்கென்ன என்று நினைப்பது கூட தீய கர்மா என்றே கொள்ளப்படும். நாம் சேமித்து வைத்திருந்த காட்சிப்படங்களை பார்த்துக் கொண்டிருந்த போது, சட்டென்று நம் கண்ணில் நல்வினையாற்ற 19 வழிகள்  என்ற தொகுப்பு கிடைத்தது. அதனை அப்படியே இங்கே பகிர்கின்றோம். இதில் ஏதேனும் ஒரு கருத்தையாவது கைக்கொள்ள ஆசைப்படுங்கள். ஆசையே நம்மை நல்வினையாற்ற வைக்கும்.பதிவின் இறுதியில் மீள்பதிவாக கொடுத்துள்ளோம். அதில் உள்ள 19 வழிகளில் இன்றைய பதிவில் வாழ்க்கையென்பது என்ன? என்று சிந்திப்போம்.


 சரி. பதிவின் உள் செல்வோமா?



வாழ்தல்  என்றால் என்ன ? கொடுப்பது தான் வாழ்க்கை. ஆனால் நாம் தினமும் பெறுவதற்கு தானே துடியாய்த் துடித்துக் கொண்டு இருக்கின்றோம். கொடுத்துப் பார். வாழ்வியல் புரியும் .கொடுக்க வேண்டும் என்ற உடன் பொருளாதார ரீதியில் நம்மிடம் ஒன்றும் இல்லையே என்று நினைக்க வேண்டாம். உங்கள் எண்ணத்தால் கூட கொடுக்கலாம். ஆம். இந்த உலகில் உள்ள அனைவரும் நலமாக வாழ வேண்டி பிரார்த்தனை செய்வதும் கொடுப்பது தான். ஆம். நாம் தற்போது சந்தித்து வரும் இந்த சூழலில் பிரார்த்தனை மூலம் கொடுப்பதும் சிறப்பானது ஆகும்.

நீங்கள் இது போல் பிரார்த்தனை மூலம் கொடுக்க, கொடுக்க, இந்த பிரபஞ்சம் நாம் கொடுக்கும் பிரார்த்தனையை பெற்றுக் கொள்ளும். பெறுவது என்று ஒன்று நிகழ்ந்தால் மீண்டும் கொடுக்க நேரிடும். எனவே பிரபஞ்சம் நமக்கு நாம் பிரார்த்தனை செய்தததை கொடுக்கும். பெறுவதும் கொடுப்பதும் தான் வாழ்வின் இயல்பு ஆகும்.

பெற்று பெற்று நாம் அனுபவித்த இன்பம் பல முறை கிடைத்திருக்கின்றது. ஒவ்வொரு நாளும் நாம் அவரிடமிருந்து தானே பெற்றுக் கொண்டு வருகின்றோம்.இதுவே நமக்கு இன்பம் தான். ஆனால் எப்போதாவது கொடுத்து இருக்கின்றீர்களா ?கொடுத்துப் பாருங்கள் பேரின்பம் நமக்குக் கிடைக்கும். 

இன்னும் ஆழமாக நாம் சிந்தித்தால் இந்த வாழ்க்கை அவனருளால் கிடைத்த ஒன்று. வேண்டிப் பெற்ற ஒன்று என்று நாம் கூற முடியாது. அப்படி இருந்தால் நாம் இங்கு தான் , இவர்களுக்குத் தான் பிறக்க வேண்டும் என்று அல்லவா கூற முடியும். ஆனால் அப்படி அல்லவே. யார் எங்கே எப்படி என்று அந்த இறை தானே தீர்மானித்து நமக்கு பிறப்பை வழங்கி உள்ளது. இந்த பிறப்பில் நாம் தினமும் பெற்றுக் கொண்டே தான் வாழ்ந்து வருகின்றோம். அனைத்தும் நம் கட்டுப்பாட்டில் இயங்குவதாக எண்ணுகின்றோம். ஆனால் அனைத்தும் அவனருளால் தான் நடந்து வருகின்றது.நாம் நினைக்கும் வேலைகளை நம்மால் செய்ய முடிகின்றது. நம் கட்டுப்பாடின்றி மனம், மூச்சு என இயங்குவது பற்றி என்றாவது நாம் சிந்தித்து உள்ளோமா? என்று நாம் கொடுக்க வேண்டும் என்று விரும்புகின்றோமோ அன்று தான் நாம் இது போன்ற சிலவற்றை நாம் சிந்திக்க முடியும். தினமும் நாம் தெரு நாய் போல் அல்லவா வாழ்ந்து வருகின்றோம். தெரு நாய் போன்றே வாழ்வை கடத்தி விடுவது வாழ்நாள் முழுதும் பெறுவது போன்றது தான்.

கொடுப்பதை பற்றி சிந்தியுங்கள். தெரு நாய் வாழ்விலிருந்து வீட்டு நாய் போல அல்லது காவல்கார நாய் போல ஜம்மென்று வாழலாம். நாயை இங்கு உதாரணமாக சொல்வதற்கு மன்னிக்கவும்.சொல்லும் செய்திகள் உங்கள் மனதை தொட வேண்டும் என்றே இந்த அடி நாயேன் உதாரணமாக கூறுகின்றோம்.


கொடுப்பதின் சிறப்பு புரிகின்றது. பெறுவதில் என்ன சிறப்பு இருந்து விடப் போகின்றது? இதனை நாம் சென்னை மயிலை அறுபத்து மூவர் விழாவில் கண்கூடாக காணலாம். பெறுவதற்கு யாரேனும் இருந்தால் தானே கொடுக்க முடியும். பெறுபவர்கள் இங்கே சும்மா பெறுவதில்லை. அறுபத்து மூவர் ஆசியோடு இங்கே பெறுகின்றார்கள். நம் உயிர் வளர்க்க உதவும் உடம்பினை வளர்க்க அன்றொரு நாள் பெறுவதும் சிறப்பே. பெறுபவர்கள் வாயார வாழ்த்துவார்கள். இல்லையேல் மனதின் அடி நாதத்தில் இருந்தேனும் வாழ்த்து கிடைக்கும். உதாரணத்திற்கு  நாம் இந்த ஆண்டு கலந்து கொண்ட விழாவில் ஜீஸ், ஐஸ் கிரீம், தேநீர் அனைத்தும் பெற்றோம். நம் உள்ளம் இப்போது நினைத்தாலும் வாழ்த்துகின்றது. இதுவே பெறுவதில் உள்ள சிறப்பு.

சிலர் மறுபடியும் மறுபடியும் வந்து பெற்றுக் கொண்டிருப்பதைக் கண்டோம். தவறொன்றும் இல்லையே. பெறுவதற்கான விழாவில் எத்தனை முறை வேண்டுமானாலும் பெறலாம். எத்துணை முறை வேண்டுமானாலும் கொடுக்கலாம். 

கொடுக்க பழகிக் கொள்ளுங்கள். அப்போது தான் இந்த பிரபஞ்சமும் உங்களுக்கு நீங்கள் விரும்பியதை கொடுக்கும்.

பொருளால் கொடுக்க முடிந்தவர்கள் உணவை தானமாக கொடுங்கள். இல்லையேல் உங்களால் முடிந்த அளவில் யாரெனெ தெரியாத அன்பர்க்கு ஒரு வாய் நீர் அருந்த நீர் வாங்கிக் கொடுக்கலாம்.இதற்கென்றே வீட்டில் ஒரு புட்டியில் நீர் சேமித்து வைத்து உங்கள் பயணத்தில் கொடுக்கலாம். வீட்டில் பெண்டிர் தினம் சமையலின் போது ஒரு கைப்பிடி அரிசி அனுதினமும்  எடுத்து வைத்து குறிப்பிட்ட கால இடைவெளியில் அருகில் உள்ள முதியோர் இல்லம், ஆசிரமங்களுக்கு சென்று கொடுக்கலாம்.

இவை ஏதும் செய்ய முடியவில்லையா? வருத்தம் வேண்டாம். தினமும் காலை மாலையில் இந்த உலகில் உள்ள அனைவரும் நன்றாக வாழ வேண்டி பிரார்த்தனை செய்து "வாழ்க வளமுடன்" என்று வாழ்த்தலாம். பந்தை எறியுங்கள். ஒரு நாள் மீண்டும் அந்த பந்து எதிர் வினை பெற்று நம்மிடம் வந்து சேரும். 

பாரதியார் கூறியபடி,

நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர் 
     நிதி குறைந்தவர் காசுகள் தாரீர் 
அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர்
  ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர் 
மதுரத்தேமொழி மாந்தர்க ளெல்லாம் 
   வாணி பூசைக்கு உரியன பேசீர்! 
எதுவும் நல்கி இங்கு எவ்வகையானும் 
   இப்பெருந்தொழில் நாட்டுவம் வாரீர்" 











மேலே நீங்கள் காண்பது 2020 ம் ஆண்டில் முதல் நாளில் செங்கல்பட்டு அரசு மருத்துமனையில் சுமார் 20 அன்பர்களுக்கு மதிய உணவு வழங்கிய தருணங்கள்.






இவை கூடுவாஞ்சேரியில் உள்ள அன்பர்களுக்கு வழங்கப்பட்டது 





தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலில் வழங்கிய தருணம்.







































இவை அனைத்தும் நந்தீஸ்வரர் கோயிலின் முன்னே உள்ள அன்பர்களுக்கு உணவு கொடுத்த போது 





சென்ற மாதம்  வாலாஜாபாத்திலும், இளையனார் வேலூர் கோயில் முன்பும் ஷஷ்டி அன்னதானம் வழங்கிய போது 

இவை மட்டுமின்றி , ஒவ்வொரு  தமிழ் மாத அமாவாசை வழிபாட்டில் சுமார் 100 அன்பர்களுக்கு நம் தளம் சார்பில் உணவு வழங்கி வருகின்றோம் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன அன்பர்களே. அன்னதானம் செய்து உங்களால் முடிந்த தொண்டில் இணையுங்கள்.வாடிய பயிரை கண்ட போதெல்லாம் நாமும் வாட வேண்டும் என்ற மனநிலை வருவது தான் மனிதனின் இயல்பு. அன்னதானம் செய்து மனிதனாக முயற்சிப்போம்.


பதிவின் நிறைவாக யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின்

மீள்பதிவாக:-


 நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html

இன்றைய சஷ்டியில் ஷண்முகனை அழைப்போம் - காலன் அணுகாமல் வேலன் அணுகும் திருப்புகழ் மந்திரம் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_30.html


ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_29.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html


No comments:

Post a Comment