"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, March 26, 2020

சிவாயம் அஞ்செழுத்துளே தெளிந்து கொள்ளும் உண்மையே

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நாம் அனைவரும் இக்கட்டான சூழலில் இருக்கின்றோம் என்று தெரிகின்றது. அனைவரும் நலமாக இருக்க இறையிடம் பிரார்த்தனை செய்கின்றோம். அரசின் ஆணைக்கு நாம் கட்டுப்பட வேண்டியது அவசியம். கர்ம பூமியில் கால தேவனின் கணக்கு ஆரம்பித்து விட்டது. ஆனால் நாம் பூரண சரணாகதி அடைய வேண்டும். இந்த நேரத்தில் நாம் இறை நம்பிக்கையை விடாது இருக்க வேண்டும். ஏற்கனவே நாம் பல முறை சொல்லி இருக்கின்றோம். இது புண்ணிய பூமி என்று. இந்த நேரத்தில் ஏகப்பட்ட மருத்துவ குறிப்புக்கள் வருகின்றது. இவை அனைத்தும் பயன்படுத்தப் பட்ட மருத்துவ குறிப்புகளா என்று தெரியவில்லை. இந்த நேரத்தில் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றோம். இது ஒரு புறமிருக்க, இந்த கோயில் குருக்கள் பேசுகின்றார் என்று பல ஒலி செய்திகளும் வருகின்றது. இந்த செய்திகளை அனைத்தும் நம்புபடியாக இல்லை. எனவே தான் நாம் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். தவறான செய்திகளை பகிராது இருத்தல் நமக்கு நலம் தரும்.  அடுத்து நாம் இறையிடம் சரணாகதி அடைய வேண்டும். இந்த நேரத்தில் மனம் தளராது தினமும் கூட்டுப்பிரார்த்தனை செய்யுங்கள்.




ஓம் குருவே சரணம்

 கலியுகத்தில் உள்ள அனைத்து கிராம தேவதைகளின் ஒட்டுமொத்த சக்தி ஸ்ரீ ஆயுர்தேவி அம்பாளிடம் குடி கொண்டுள்ளது.

 ஆகவே ஸ்ரீ ஆயுர்தேவியை  பிரதமை திதி உத்திரட்டாதி நட்சத்திரம் கூடிய இந்த தருணத்தில் பூஜிப்பது மிகவும் சிறந்தது ஆகும்

 ஸ்ரீ ஆயுர்தேவி படத்தை வைத்து விளக்கு ஏற்றி முடிந்தால் பசு நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுக 

ஸ்ரீ ஆயுர் தேவி காயத்ரீ

 ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே பராசக்தியை ச தீமஹி தன்னோ ஆயுர்தேவி ப்ரசோதயாத்.

 வெளியில் இருப்பவர்கள் இவ்வாறு செய்ய இயலாதவர்கள் மனதிற்குள் இந்த காயத்ரீ மந்திரத்தை குறைந்தது 1008 முறையாவது இன்றைக்கு சொல்ல மன பீதி அடங்கும்.  சௌபாக்கிய சாந்த சக்தி பரவெளியில் பரவும்.

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை

 ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை 

ஓம் ஸ்ரீ குருவே சரணம் 

சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சுவாமிகள் அருளிய ஸ்ரீ ஆயுர்தேவி நாமாவளிகள் 

ஓம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வர்யை நமஹ

ஓம் ஸ்ரீ அன்ன வாஹின்யை நமஹ

ஓம் ஸ்ரீ அத்புத சாரித்ராயை நமஹ

ஓம் ஸ்ரீ ஆதி தேவ்யை நமஹ

ஓம் ஸ்ரீ ஆதி பராசக்த்யை நமஹ 

ஓம் ஸ்ரீ ஈஸ்வர்யை நமஹ

ஓம் ஸ்ரீ ஏகாந்த பூஜிதாயை நமஹ 

ஓம் ஸ்ரீ ஓம்கார ருபிண்யை நமஹ 

ஓம் ஸ்ரீ காலபைரவ்யை நமஹ

ஓம் ஸ்ரீ கிருதயுக சித்சக்த்யை நமஹ 

ஓம் ஸ்ரீ சக்ரவாஸின்யை நமஹ

ஓம் ஸ்ரீ சித்புருஷ தத்வாயை நமஹ 

ஓம் ஸ்ரீ சிவசக்தி ஐக்ய ஸ்வரூபிண்யை நமஹ 

ஓம் ஸ்ரீ லலிதா பரமேஸ்வர்யை நமஹ 

ஓம் ஸ்ரீ திரிமூர்த்தி ஸ்வரூபிண்யை நமஹ 

ஓம் ஸ்ரீ நவகர ரூபிண்யை நமஹ 

ஓம் ஸ்ரீ நவமுத்ரா ஸமாராத்யாயை நமஹ 

ஓம் ஸ்ரீ பத்மஸனஸ்தாயை நமஹ

ஓம் ஸ்ரீ யோகாம்பிகாயை நமஹ 

ஓம் ஸ்ரீ துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி நிஷேவிதாயை நமஹ 

ஓம் ஸ்ரீ விஷ்ணு ரூபிண்யை நமஹ 

ஓம் ஸ்ரீ வேத, மந்த்ர, யந்த்ர சக்த்யை நமஹ

ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், ஐம், சுபாயை நமஹ 

ஓம் ஸ்ரீ சிவ குடும்பின்யை நமஹ

ஓம் ஸ்ரீ அருணாசல மேருஸ்தாயை நமஹ 

ஓம் ஸ்ரீ கரபீட வரப்பிரசாதின்யை நமஹ 

ஓம் ஸ்ரீ ஆயுர்தேவ்யை நமஹ

 நவகரத்தவளாய் நன்மைகள் பல நல்கும் ஸ்ரீ ஆயுர்தேவியை அற்புதமான நாமாவளிகளால் மஞ்சள் நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்திட சர்வமங்கள சௌபாக்கியங்களும் கிட்டும்.

 நன்றி : ஸ்ரீ ஆயுர் தேவி மகிமை புத்தகம்


நாம் நம் குழு அன்பர்களுடன் தினமும் காலை மற்றும் மாலை 6 மணிக்கு கூட்டுப்பிரார்த்தனை செய்து வருகின்றோம்.நாம் அனைவரும் அவரவர் இல்லத்திலிருந்தே இந்த உலகமே இன்னல்களிலிருந்து மீண்டு வர ஒன்று சேர்ந்து பிரார்த்தனை செய்வோம்

பிரார்த்தனை / தவ நேரம்: தினமும் காலை / மாலை 6 மணி முதல் 6:30 மணி வரை 

அவரவர் குலத்தெய்வம், மற்றும் இஷ்ட தெய்வம், ரிஶி, இஷ்ட குருமார்களை நினைத்து வேண்டுங்கள்

முதலில் குரு வணக்கம் - 5 நிமிடம் 

உங்களுக்கு தெரிந்த மந்திரங்களை முதலில் உச்சாடனம் செய்யவும். காயத்ரி மந்திரம், மகா மிருந்த்யுஞ்ச மந்திரம், இஷ்ட தெய்வம் மந்திரம்,கோளறு பதிகம், திருநீலகண்ட பதிகம் போன்றவை   - 15 முதல் 20  நிமிடம் 

உலக மக்கள் அனைவரும் முழுமையான ஆரோக்கியத்துடன் நலமாக சுகமாக நல்வாழ்வு வாழ வேண்டி பிரார்த்தனை செய்கிறேன்

தினசரி குழுப்பிரார்த்தனை

  •  உடலுக்கு நன்றி, நான் கேட்காமல் எனக்கு இலவசமாக ப்ரபஞ்ச சக்தி கொடுத்ததனால்
  •  உடல் உள்ளுறுப்புகளுக்கு நன்றி, என் கட்டளையிலாமல் சிறப்பாக செயல்படுவதால்
  •  உடலில் சுரக்கும் அமிலம், ஹார்மோன் மற்றும் என்சைம்களுக்கு நன்றி. உடலை சிறப்பாக தன் செயலை செய்ய உதவுவதால்
  •  செரிமான மண்டலத்திற்கு நன்றி. உண்பதை சக்தியாக மாற்றுவதால்
  •  உடலே சிறந்த மருத்துவன் என்பதால் உடலின் வார்த்தைகளை கூர்ந்து கவனிக்க முடிவதற்கு நன்றி.
  •  கர்ப்பிணி தாய்மார்களுக்கு  கிடைத்த அழகிய குழந்தைப்பேறுகளுக்கு  நன்றி
  •  குழந்தைகளின்  பூரண ஆரோக்யத்திற்கு நன்றி
  •  பணம்  கிடைக்க உதவிய ப்ரபஞ்சப் பேராற்றலுக்கு நன்றி
  •  எல்லோர் மனதிலும் வளரும் அமைதிக்கும், மலரும் மகிழ்ச்சிக்கும் நன்றி ப்ரபஞ்சமே
  •  குடும்ப உறவுகளிடம் நிதானமாக பேச அனுமதி கொடுத்த பிரபஞ்சமே நன்றி
  •  நல்லதே நடந்ததிற்கு நன்றி
  •  நல்லதே நடந்துகொண்டிருப்பதற்கு நன்றி
  •  நல்லதே நடக்கப்போவதிற்கு நன்றி
  •  நற்பவி நன்றி (9 முறை)

தினமும் பிராத்தனையில் ஈடுபட்டு வரவும். அடுத்து சில குறிப்புகளை இங்கே பகிர விரும்புகின்றோம்.

1.கூட்டம் சேர கூடாது.

2.தனிமை வேண்டும், தன் குடும்பம் தனிமை.

3.தும்மல் , இருமல் கூடாது. இருமல் வந்தால் கை குட்டை பயன்படுத்தவும்.

5.கூட்டத்தில் AC யில் இருக்கக்கூடாது.

6.சளி பிடிக்காமல் பார்த்து கொள்ளவும். ஏதேனும் நம் பாரம்பரிய மருத்துவம் மேற்கொள்ளவும்.

7.சூப் வகைகள் சாப்பிடலாம்.

8.உப்பு தண்ணீர் கொப்பளிப்பு  தினமும் 2 தடவை பண்ணவும்.

9.குளிக்கும் போது மஞ்சள் தூள் , லெமன் , வேப்பிலை போட்டு குளிக்கலாம் (சூடு தண்ணீர் ).

10.டீ  வைக்கும் போது  அதில் இஞ்சி, நிலவேம்பு தூள், சீரகம் , சோம்பு , மல்லித்தூள் போட்டு black டீ குடிக்கவும்.

11.கை கழுவுதல் நல்லது.

12.வீட்டிற்கு வந்தவுடன் குளிக்கவும் .

13.வீட்டில் சாம்பிராணி   போடவும்.

14.வீட்டு வாசலில் சாணம் போட்டு மெழுகவும்.

15.மிளகு ரசம் வைத்து சாப்பிடுங்க....

16.சூடுதண்ணீர் குடிக்கவும்.

17.முடிந்த மட்டும் அசைவம் தவிர்ப்பது நலம்.

18. உடல் நோய் எதிர்ப்பு ஆற்றல் பெருக்கும் வழிமுறைகளை மட்டும் இந்நேரத்தில் கடைபிடியுங்கள்.

மேற்கூறிய செய்திகள் அனைத்தும் நாம் பின்பற்றி வருபவை ஆகும். இன்னும் நிறைய செய்திகள் இனிவரும் பதிவுகளில் பேசுவோம்.அனைவரும் நலமோடு வாழ எம் குருநாதர்களிடம் விண்ணப்பம் வைக்கின்றோம். மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (1) - https://tut-temples.blogspot.com/2020/03/1.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_11.html

No comments:

Post a Comment