"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, August 24, 2020

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 32 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் நாம் நெக்குருகி போகின்றோம். ஆப்பூர் பெருமாள் கோயில் சென்று உழவாரப் பணி, ஒரு அண்மைக்கால அற்புதக் கோயில் பற்றி ஜீவ நாடி அற்புதங்கள், காரைக்குடிதெய்வத்திரு அகத்தியர் திருமகன் ஐயா அவர்களின் சந்திப்பு, மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் சந்திப்பு என சொல்லிக்கொண்டே போகலாம். .

மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் தொண்டிற்கு நாம் தலை வணங்குகின்றோம். மதுரை இறையருள் மன்றத்தின் சேவையும் பாராட்டுக்குரியது. மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் அனுபவ பதிவை அப்படியே தருகின்றோம்.

அய்யா வணக்கம்.குருபிரான்ஶ்ரீஅகத்திய பெருமானுக்கும்.குருவின் ஆசியினை சுவடி மூலம் வெளிபடுத்தும் பாக்கியம் பெற்ற கணேசன் அய்யாவிற்க்கும் அநேக கோடி நமஸ்காரங்கள்..அடியவன் பரமசிவன்,மதுரை. 

சுமார்12 ஆண்டுகள் முன் உங்கள் அறிமுகம் கிடைத்தது.இது குருவின் ஆசி.அன்று ஓலையில் குருபிரானிடம் வாழ்வியல் பிரச்சணை குறித்து வாக்கு கேட்கும் பொழுது மிக நல்ல முறையில் குடும்பத்தினர் அணைவரையும் தனிதனியாக சொல்லி ஆசி செய்தார்கள்  (அதில் ஓரு Highlight என்னவென்றால் நாளை  உன் குழந்தைகளுக்கு திருமணமாகி அவர்களுக்கு குழந்தை பிறக்கும் அல்லவா அவர்களுக்கு என் ஆசி என்றென்றும் உண்டப்பா என்பது) 

அதிலிருந்து தொடந்து குருவின் திருவடிகளை இறுக பற்றிக்கொண்டேன் .அடிக்கடி குடில் வரும் பொழுது அங்கு நடக்கும் சேவைகளை பார்த்து மெதுவாக நாங்கள் சிறு குழுவாக இணைந்து அன்னசேவை மற்றும்  சிறுஅளவில் மருத்துவம் கல்விசேவை என தொடர்தோம் அச்சமயம் சேவைக்கு ஆசி கூறும் பொழுது ததீசியகம் போன்று சித்தர்குடில் போன்று இன்னவனின் அந்த இறையருள் மன்றமும் சமுதாய சேவையில் சிறப்புறும் என ஆசி வழங்கினார்கள் அது போன்று இதுகாலம் வரை சிறப்பான முறையில் தொண்டு தொடர்கிறது.அந்த கால நேரத்தில் பொருளாதாரத்தில் மிக பின்னடைவு ஏற்பட்டது. அச்சமயம் குருபிரானிடம் ஆசி கேட்கும்பொழுது உன் ஜாதகத்தில் தொழில் தோஷம் உள்ளது. எனவேதான் உன்னை சேவை மார்கத்தில் இறைவனருளை கொண்டு திசை திருப்பினோம் இல்லையென்றால் இன்னமின்னும் நீ ஒரு மனச்சோர்வை சந்தித்து இருப்பாய் என"குறிப்பிட்டார்கள்.

 பின் எனது குடும்பம் கூட்டு குடும்பம் இதில் இளைய அண்ணனின் மனைவியார் உடல் நலம் பாதிக்கபட்டார்கள் .குருபிரானும் தொடந்து சில மூலிகை வைத்தியங்களை குறிப்பிட்டு மருந்து சாப்பிட சொன்னார்கள் பின் பிரச்சணை பெரிதாகி மருத்துவமணையில் பல்வேறு மருந்துவங்கள் பார்த்து பல பல லட்சங்கள் செலவாகியது .ஆனால் பலன் இல்லை அண்ணியார் இறைவனடி சென்றுவிட்டார்கள் இதன் மூலம் சற்று தொழில் தொய்வு கடன் பிரச்சணை என கூடியது அச்சமயம் குடிலுக்கு எனது அண்ணாவின் மகளை அழைத்துவந்து ஆசி கேட்டோம் குருவின் ஆசியோடு சாந்தியோடு கூடிய மணவாழ்க்கை அமையும் என கூறி ஆசி வழங்கினார்கள்  சில வழிபாடுகளை சொன்னார்கள் அதன்படி அண்ணாவின் மகளுக்கு சில மாதங்களில் நல்ல மணமகன் கிடைத்து திருமணம் ஆனது இதனால் மேலும் கடன் கூடியது.பின் தந்தை வழியில் குடியிருந்த வீட்டை விற்று பெரும்பகுதி கடன் தீர்வானது ஆனால் முழுமையாக தீரவில்லை.தற்பொழுது சுமார் 10 ஆண்டுக்கு மேலாக சேவைகள் சிறப்பாக நடைபெறுகிறது.சேவைக்கு பொருளாதார சிக்கல் வரும் பொழுது குருபிரான் முன் எனது வேண்டுக்கோள் வைக்கபடும் அன்றோ மறுநாளோ தக்க நபர்களை குருபிரான் அனுப்பி பொருளாதாரத்தை சரிசெய்துவிடுவார்.சேவைக்கு மிக நல்ல முறையில் உதவும் என் குரு நாதர் என்தேவை என்று"வரும் பொழுது கையை இறுக்கிவிடுவார் ஆனால் என் முயற்சியால் எனது தேவையை நிறைவு செய்ய முடியவில்லை"ஆனால் குருவின் பலமான கைபிடியானது என்னை பிடித்துக்கொண்டுள்ளது .

சுமார் 10 ஆண்டுகளாகவே குருவின் ஆசியால் எனது பிள்ளைகளுக்கான கல்வி கட்டணத்தை எனது நண்பர்கள் மூலம் ஶ்ரீஅகத்தியர் பெருமான் ஆசியால்   நான் கேட்காமலே எனது மதுரை அன்பர்கள் பாங்க் கணக்கில் கட்டிவிடுகிறார்கள். எனது"கர்மா என்னவோ எனக்கு தெரியவில்லை உன் விதிபடி உனக்கு என்ன வேண்டுமா அது எப்படியாவது கிடைத்து விடும் என ஆசி கூறியது   நடக்கிறது. இதுவரை ஐந்து முறை பொதிகைமலையில் குரு தரிசனம் அமைந்தது .அங்கு சென்றபிறகு உணர்ந்தது குருபிரான் அழைக்காமல் பொதிகை செல்ல முடியாது என்பது.லட்சம் கோடியெல்லாம் அங்கு"செல்ல பயனில்லை குருவினை தரிசிக்க வேண்டுமென்ற லட்சியமே ஜெயிக்கும் என்பது. என் வினை விதி எவ்வாறு  என தெரியவில்லை ஆனால் குருபிரான் என் விதியில்  பலமான  மாற்றங்களை நடத்துவது பலமுறை உணரமுடிகிறது, குருவின் ஆசி என்னை பலமுறை காப்பாற்றி கைபிடித்து செல்வதை உணர்ந்தேன் .

ஒரு முறை சதுரகியில் கோரக்கர் குகை அருகே வழுக்கி விழுந்து சிறு அளவில் எலும்பு முறிவு ஏற்பட்டது.பின் 6 மாதங்களில் சரியானது. அது குறித்து குருபிரானிடம் கேட்டபொழுது கடும்விதியப்பா இறையருளை கொண்டு எளிமையக்கினோம். என்று வாக்குரைத்தார்கள்.மழையில் குடைபோல் வெயிலில் நிழல் போல் குருபிரான் இருப்பதால் விதியை பற்றி பெரிதாக நினைப்பதில்லை என் பிரச்சனை இது என அவரிடம் ஒப்பிவித்தபிறகு"அவர்தான் சரிசெய்யவேண்டும் அவர்தானே சரிசெய்வார்  எனவே இறுதியாக குருவின் திருவடி பற்றிக்கொண்டு குரு காட்டிய தர்மத்தை பிரார்த்தணை வழிபாடு என வரும் பொழுது ,வினையின் தன்மை அழுத்தம் குறைவது நன்றாக தெரிகிறது .இப்பொழுது கடந்த கால சுழ்நிலை தொடர்ந்தால் எவ்வாறு இருக்கும் என்பதும் இப்ப நாம் இருக்கும் நிலை மென்மையாக உள்ளதை   நன்றாக உணரமுடிகிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன் பிரம்ம முகூர்த்த வாக்கினை போது குருபிரான் நமது அன்பர்களுக்கு பலருக்கு சொல்லியது போல் எனக்கும் 1108 சிவாயல தரிசனம் செய்ய அருளானை வழங்கினார்கள்.மீண்டும் சிலமாதங்கள் கழித்து சென்ற"போது முன்னர்"உரைத்த சிவாயல தரிசனத்தை நிறைவு செய்து வர மீண்டும் ஆசி வழங்கி அதன்பிறகு தான் உனக்கு மேல் வாக்கு வழங்கபடும் என"வலியுறுத்தியதால்   குருவின் வாக்குகளை அறிய முடியவில்லை.அதில் பாதியை கடந்துள்ளநிலைதான் இதுவரை குருவின் ஆசி தொடர்கிறது தர்மம் தொடர்கிறது.இறையாசி கிடைக்கிறது..தொடர்ந்த கணேஷன் அய்யாவின் அற்புதங்கள் தொடரட்டும் நன்றி வணக்கம் குருவின் ஆசியை சுவடி மூலம் பெறுவதற்க்கு மீண்டும் மீண்டும் கணேசன் அய்யாவிற்க்கு எனது வணக்கத்தை நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

ஜீவ நாடி அற்புதங்கள் ஏராளம் என்றே நாம் சொல்ல விரும்புகின்றோம். குருவடியைப் பின்பற்றி நடந்தால் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் குருநாதரின் அன்பால் தான் நடக்கின்றது என்பது தெள்ளத் தெளிவாக புரியும்.இதற்கு முந்தைய பதிவில் ஒரு அன்பரின் நாடி அனுபவம் பற்றி பார்த்தோம்.






நம்பிக்கையுடன் இருப்பவர்களுக்கு ஜீவநாடி  வாழ்க்கை வழிகாட்டி. சென்ற பதிவில் இருந்து மீண்டும் தொடர்கின்றோம்.

                       

 ஜீவநாடியில் வருகின்ற செய்திகள் சில நேரங்களில் ஆச்சரியப்படவைக்கின்றன. சித்தர்கள் மனிதர்களுக்கு உதவி புரிய ஆவலாக உள்ளார்கள். கலியுகத்தில் கடவுளை அடைய ஆயிரம் ஆயிரம் வழிகள் இருந்தாலும் சித்தர்கள் வழியில் அடைவதே சிறப்பான மற்றும் மிக எளிமையான முறையாகும். ஆனால் ஜீவநாடியில் வந்து சித்தர்கள் வாக்கு சொல்லும்போது பல நேரங்களில் அறியாமையில் உழலுகின்ற மக்களுக்காக ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கிறார்கள். ஜீவநாடியை அவதூறு பேசுகிறவர்கள் பற்றியும் குறைபட்டுக் கொள்கிறார்கள். இது என்னமோ என்னைக் குறை சொல்வதாக கண்டிப்பாக எண்ண வேண்டாம்.


எமக்கு எந்தவித எதிர்பார்ப்பும் தேவையில்லை. ஆனால் சித்தர்களை அவதூறு பேசுவதை மட்டும் பொறுத்துக் கொள்ள முடியாது. சித்தர்கள் நம்மிடம் எந்தவித மரியாதையையும் எதிர்பார்க்காவிட்டாலும் நாம் நமது கடமையைச் செவ்வனே செய்தே ஆக வேண்டும். ஒரு சிலர் நமக்கு உடனே நாடி கிடைக்க வேண்டும், உடனே பலன் நடக்க வேண்டும் என்று ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். அவ்விதம் இல்லாவிடில் அவதூறு பேசுகிறார்கள். சித்தர்கள் அடிக்கடி வலியுறுத்தும் விஷயம், கலியுக மக்களை நம்பாதே என்பது தான். காரணம் ஒரு சிலர் தெரிந்தோ,
தெரியாமலோ செய்துவிடும் தவறுகள்தான். சித்தர்கள் எப்போதும் குறை சொல்பவர்கள் அல்ல. ஆனால் அதே சமயத்தில் தவறுகளையும் குற்றங்களையும் சுட்டிக் காட்டி நம்மை நல்வழிப்படுத்துவார்கள்.


மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக்கனியும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும் என்பதுபோல் சித்தர்கள் காட்டும் நெறி ஆரம்பத்தில் சற்று கஷ்டமாக இருந்தாலும் பின்பு சிறப்பாக இருக்கும். என்னிடம் அடிக்கடி ஜீவநாடி கேட்டு தற்போது ஸ்ரீ வித்யா உபாசனையைஜீவ நாடியில் சொல்லியபடி கடைபிடித்து வரும் நபர் ஒருவர் தனது நண்பருக்கு நாடி படிக்க வேண்டும் என்று அடிக்கடி கேட்டு வந்தார். ஒரு நாள் ஒதுக்கி வாருங்கள் எனச் சொன்னேன். அவருக்கு படித்து அவருடன் வந்த இன்னும் நான்கு நபர்களுக்குப் படித்து முடித்தும் அவர் குறிப்பிட்டச் சொன்ன அந்த நபர் வரவில்லை. அந்த நபர் பாராளுமன்ற தேர்தலில் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வேட்பாளராக முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும், அதைப் பற்றி கேட்கவே அவர் வருகிறார் என்றும் இவர் சொன்னார். 

மதியம் 12 மணிக்கு மேல் ஆனதால் சுவடியைக் கட்டி வைத்து விட்டு பூஜையில் வைத்த பின் பத்து நிமிடம் கழித்து வந்து சேர்ந்தார். இதற்கு மேல் படிக்க கூடாது என்பதால் பின்பு ஒரு முறை முயற்சி செய்யலாம் என சொல்லிவிட்டேன். வந்தவர் அரை மனதுடன் திரும்பினார். 100 கி.மீ பயணித்து வருகிறேன் நாடி படிக்க முடியாது என்கிறாரே என அங்கலாய்த்துக் கொண்டார். நான் ஒன்றும் அகங்காரம்
கொண்டவன் இல்லை. இறை உத்தரவை, தப்பாமல் கடைபிடிப்பவன், எனவே நான் விமர்சனங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை, கவலைப்படவும் கூடாது. காரணம் நாடி சொல்வது எனது தொழில் கிடையாது. மீண்டும் அவர் பலமுறை முயற்சி செய்தார். கிடைக்கவே இல்லை. கடைசியில் அந்த குறிப்பிட்ட கட்சி வேட்பாளரை அறிவித்தது. இவர் பெயர் அதில் இல்லை.


நாடி படித்து மட்டும் இவருக்கு சீட் கிடைக்கவா போகிறது என முருகப் பெருமான் அவருக்கு நாடி கிடைக்கும் பாக்கியத்தைத் தரவே இல்லை. இந்த சூட்சுமம் தெரியாமல் பலர் குழம்பி விடுகின்றனர். அதே நபர் மீண்டும் ஒரு நபரை அழைத்து வர நினைத்தார். அவரால் வர முடியவில்லை என்பதால் அவர் சார்பாக இவர் கேட்கலாம் என வந்து அமர்ந்தார். எடுத்த எடுப்பிலேயே சம்பந்தப்பட்டவர் வந்தால் உரிய பதில் வரும் என்றார் முருகப் பெருமான். குறிப்பிட்ட அந்த நபர் துணைவேந்தர் பதவிக்கு ஒரு குறிப்பிட்ட ஒரு பல்கலைக் கழகத்திற்காக முயற்சி செய்வதாகச் சொன்னார்,. நாடி படிக்க முடியவில்லை. ஏதேனும் சூட்சுமம் இருக்கும் என அவரே சொன்னார். சில நாட்கள் கழித்து துணைவேந்தரை அரசு அறிவித்தது. இவருடைய பெயர் இல்லை. இது தான் சூட்சுமம்.

எனவே சித்தர்களின் சூட்சுமத்தையும், ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தியின் திருவிளையாடல்களையும் புரிந்து கொள்ள அவர் அருள் வேண்டும். நாடி படிக்க தாமதம் ஆவது கூட கர்ம வினைதான் என்பதை மறந்து விடக் கூடாது.


ஒரு தந்தையும், மகளும் நீண்ட கால முயற்சிக்குப் பிறகு ஜீவ நாடி கேட்க வந்தனர். முருகப் பெருமான் பின் வருமாறு உரைத்தார்.

“கோள்களின் சாரமது

குணமில்லா நிலைகண்டு

குடும்பத்தில் வருகின்ற

அவமானம் தலைகுனிவு

ஒழுக்கத்தின் வழியே

ஓர் முறை சீர்கேடு

வந்து நீங்கும்

பின் வளமாகுமே!”

என வந்தது. வந்தமர்ந்திருக்கும் இருவருக்கும் பாடல் வடிவில் சொல்வதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. விளக்கிச் சொல்லவும் எனக்கு மனமில்லை. படித்தால் உங்களுக்கே விளக்கம் புரியும் என நினைக்கிறேன். நாசூக்காக ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். இல்லாவிடில் அவமானம் வரும் என வருகிறது என்று மட்டும் சொல்லி அனுப்பிவிட்டேன்.

அதன் பின்னர் மூன்று மாதம் கழித்து முன் அனுமதி பெறாமல் வந்தார்கள்.உத்தரவு இல்லை என்பதால் திரும்பி விட்டார்கள். ஆறு மாதம் கழித்து அலறியடித்துக் கொண்டு அந்த பெண்ணின் தந்தை வந்தார். ஐயா, எனது மகளைக் காண வில்லை. நீங்கள் தான் ஏதேனும் வழி காட்ட வேண்டும் என்றார். சரி ஏற்கனவே முருகப் பெருமான் என்ன உரைத்தாரோ அதுதான் நடந்திருக்கும் என நினைத்து சுவடியைப் பூஜித்து பிரித்தேன்.

“காதலில்லை காமமில்லை

கோட்சார நிலை நலமில்லை

படிதாண்டினாள் ஆனாலும்

பத்தினிதான் பயமில்லை

சென்றழைத்தால் வரமாட்டாள்

அரவு திசை என்பதால்

புற்று மண் கொண்டு போ

புதுமையாய் வசமாவாள்

சேரவனம் சென்று

சேராமல் ஒரு மண்டலம்

தங்கவை தரமாகும்.

இந்தப் பெண் வீட்டை விட்டுச் சென்றது உண்மைதான். ஆனால் அது காதலினால் அல்ல. காமத்தினாலும் அல்ல. கோட்சார கிரகநிலை சரியில்லை நேரம் சரியில்லாததால் தான் இவ்விதம் நடந்திருக்கிறது. வீட்டை விட்டு வெளியே சென்று விட்டாலும் அவள் கற்பிக்கு ஏதும்
பங்கமில்லை. பத்தினிதான் பயப்பட வேண்டாம். இராகு திசை நடப்பதால் பாம்பு குடியிருக்கும் புற்று மண்ணைக் கொண்டு போய் கூப்பிடு வந்திடுவாள். சாதரணமாக சென்றழைத்தால் வர மாட்டாள். புற்று மண்ணிற்கு வசீகர சக்தி உண்டு. வந்திடுவாள். வந்தாலும் சேரவனம் என்றழைக்கப்படும் மலையாள தேசம் கேரளாவில் தனியாக ஒரு மண்டலம் தங்க வைத்துவிட்டால் எல்லாமே சரியாகும் என நீண்ட விளக்க உரையை உரைத்தார் முருகப்பெருமான்.

இப்படி பலரது வாழ்வில் ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவநாடி ஒரு மாபெரும் வழிகாட்டியாகத் திகழ்ந்து வருகிறது. இன்று பல அதிசயங்கள், அற்புதங்கள் கண்கூடாக நாம் ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி அருளால் கண்டும், கேட்டும் வருகின்றோம்.

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாம் முருகப்பெருமான் ஜீவநாடியில் உரைத்த செய்திகளை இங்கே நாம் குருவருளால் தந்துள்ளோம். மீண்டும் மீண்டும் படித்து முருகப்பெருமானின் ஆசியும், சித்தர்களுக்கெல்லாம் தலையாய சித்தராய் விளங்கும் ஸ்ரீ அகத்தியர்  பெருமானின் ஆசி பெறுங்கள். 

ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 31 - குருவே சரணம்...திருவே சரணம் ... - https://tut-temples.blogspot.com/2020/07/31.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 30 - ஜீவநாடி இறைவனுக்குச் சமம் - https://tut-temples.blogspot.com/2020/06/30.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 29 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2020/05/29.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - திருவோணம் நட்சத்திரம்!  - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_12.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 28 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/04/28.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 27 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/27.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 26 - அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்...- https://tut-temples.blogspot.com/2020/03/26.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 25 - அந்தநாள் >> இந்த வருடம் - [2020-21] - https://tut-temples.blogspot.com/2020/03/25-2020-21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 24 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/24.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23-08032020.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html


No comments:

Post a Comment