அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானின் அருளாசியால் ஆவணி மாத இறைப்பணி, ஆயில்ய ஆராதனை, மோட்ச தீப வழிபாடு அனைத்தும் சிறப்பாக நடைபெற்றது. ஆவணி மாத திருவோண நட்சத்திர வழிபாடு உள்ளது. அன்றைய தினம் மற்றுமொரு சிறப்பு வழிபாடும் உள்ளது. விரைவில் நம் தலத்தில் தனிப்பதிவில் காண்போம். இன்று என்ன பதிவு தரலாம் என்று சிந்தித்த போது, பச்சை மயில் வாகனன் வந்தார். கடந்த சில பதிவுகளில் அண்ணன் விநாயகப் பெருமான் அருளில் திளைத்தோம். இன்று அவரது தம்பி ஸ்ரீ முருகப் பெருமான் பற்றி காண உள்ளோம்.
பதிவின் தலைப்பை படித்தீர்களா? இது ஒரு பாடல் தான். முதலில் அந்தப் பாடலை தருகின்றோம்.
பச்சை மயில் வாகனனே சிவ
பால சுப்ரமண்யனே வா இங்கு
இச்சையெல்லாம் உன் மேல் வைத்தேன் அதில்
எள்ளளவும் ஐயமில்லையே
கொச்சை மொழியானாலும் உன்னைக்
கொஞ்சிக் கொஞ்சிப் பாடிடுவேன் – எந்தன்
சர்ச்சை எல்லாம் மறைந்ததப்பா - எங்கும்
சாந்தம் நீறைந்தப்பா
நெஞ்சமெனும் கோவிலமைத்தே – அதில்
நேர்மையெனும் தீபம் வைத்தே - நீ
செஞ்சிலம்பு கொஞ்சிடவே வா – முருகா
சேவல் கொடி மயில் வீரா
வெள்ளமது பள்ளம் தனிலே – பாயும்
தன்மைபோல் உள்ளம் தனிலே – நீ
மெல்ல மெல்லப் புகுந்து வீட்டாய் – எந்தன்
கள்ள மெல்லாம் கரைந்ததப்பா
ஆறுபடை வீடுடையவா எனக்கு
ஆறுதலைத் தருந் தேவா – நீ
ஏறுமயில் ஏறிவருவாய் - முருகா
எங்கும் நீறைந்தவனே
அலைகடல் ஓரத்திலே எங்கள்
அன்பான சண்முகனே – நீ
அலையா மனந் தந்தாய் - உனக்கு
ஆனந்த கோடி நமஸ்காரம்
சரி..இனி பச்சை மயில் வாகனன் தரிசனம் காண உள்ளோம். அவ்வப்போது நாம் பெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள் தரிசனம் செய்து வருகின்றோம். அப்போது நண்பர் சத்யராஜ் பச்சைமலை முருகன் தரிசனம் பெற்று உள்ளீர்களா? என்று கேட்டார். நாம் பச்சைமலை என்றதும் அது வேறெங்கோ இருப்பதாக எண்ணி இல்லை என்றோம். அப்போது தான் அவர், பெருங்களத்தூரில் இருந்து சதானந்தபுரம் செல்லும் வழியில் இருப்பதாக கூறினார். சரி..ஒரு நாள் செல்லலாம் என்று தீர்மானித்தோம்.
பெருங்களத்தூரில் இருந்து சதானந்தபுரம் செல்லும் வழியில் கீழே உள்ள படத்தை கவனத்தில் கொண்டு அங்கிருந்து செல்ல வேண்டும்.
வழக்கம் போல் மனதில் ஏகப்பட்ட கேள்விகள். பச்சை மலை செல்ல இருக்கின்றோம். மலை யாத்திரை எப்படி இருக்கும்? மலைப் பாதை எப்படி இருக்கும்? கிரிவலம் செல வழி இருக்குமா? என்ற பல கேள்விகளோடு சென்றோம். நண்பரும் நீங்களே அந்த அனுபவத்தை பாருங்கள் என்று கூறி நம்மை இன்னும் ஆச்சர்யப்படுத்தினார். ஆனால் இந்த தரிசனம் நமக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை தான் தந்தது. அது என்ன? என்று பதிவின் இறுதியில் பாருங்களேன்.
வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html
வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html
No comments:
Post a Comment