"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, August 11, 2020

ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு - தேனி சண்முகநாத மலை தரிசனம் (3)

அன்பார்ந்த அடியார் பெருமக்களே...

இன்று ஆடி கிருத்திகை. அனைத்து முருகப் பெருமான் ஆலயங்களும் இன்று திருவிழாக்கோலம் நடைபெறும்.ஆனால் தற்போதைய சூழ்நிலையால் வழக்கமாக கொண்டாட்டங்கள் ஊரடங்கால் எங்கும் காண இயலவில்லை. நாமும் இன்றைய ஆடி கிருத்திகை தரிசனம் பதிவு பற்றி யோசித்த போது, சென்ற ஆண்டு பதிவில் தேனி சண்முகநாத மலை பற்றி பேசி இருந்தோம்.ஆனால் முருகப் பெருமான் தரிசனம் பெறவில்லை. இன்றைய பதிவில் மீண்டும் தேனி சண்முகநாத மலை தரிசனம் செல்ல இருக்கின்றோம். அதற்கு முன்பாக ஆடி கிருத்திகை என்றாலே நமக்கு வேல்மாறல் நினைவிற்கு வரும். பதிவின் இறுதியில் வேல்மாறல் பற்றி காண்போம்.



தேனி சண்முகநாத மலை தரிசனம் அடுத்த பதிவை இங்கே தொடர்கின்றோம். அழகென்ற சொல்லுக்கு மட்டும் முருகன் என்றல்ல; அருள் என்ற சொல்லுக்கும் முருகனே; தமிழ் மொத்தமும் முருகன் வசமே; தேனி சண்முகநாத மலை ஒவ்வொரு அடியார் பெருமக்களும் தரிசிக்க வேண்டிய இடம்.

முருகனுடைய திருநாமங்கட்கெல்லாம் சிவபெருமான் உமாதேவியிடம் காரணங்கள் கூறுகின்றார். "இன்ன காரணத்தால் இன்ன பெயர் அமைந்தது" என்று கூறுகின்றார்.

      "ஆறுமுகங்கொண்டதால் சண்முகன்"
      "கங்கையில் தவழ்ந்ததால் காங்கேயன்"
      "கார்த்திகை மாதர் வளர்த்தனால் கார்த்திகேயன்"
      "ஆறு திருவுருவும் ஒன்று கூடியதனால் கந்தன்"
      "மயிலை வாகனமாக உடையவனாதலால் விசாகன்"


எம்மொழிக்கும் முதல்வனான முருகன் செம்மொழியான தமிழுக்குச் சிறப்புடைத் தலைவன் ஆவான். தமிழில் மூன்று இனம் உண்டு.
அவை வல்லினம், மெல்லினம், இடையினம் எனப்படும். இவற்றுள் மெல்லினம் மென்மையும், இனிமையும் உடையது. ஆதலால் -

      மெல்லினத்தில் ஒரு எழுத்து "மு"
      இடையினத்தில் ஒரு எழுத்து "ரு"
      வல்லினத்தில் ஒரு எழுத்து "கு"


என "முருகு" என்று மூவினத்தில் மூவெழுத்தைக்கொண்டு எந்தை கந்த வேளின் திருநாமம் அமைந்துளது.

ஆண்டவன் ஆறு ஆகாரங்கட்கும் ஆறு சமயங்கட்கும் ஆறு அத்துவாக்களுக்கும், ஆறுபடை வீடுகட்கும் அதிபன்.

"முருகா" என்ற பெயரும் ஆறு பொருள்களைக் கொண்டது. தெய்வத்தன்மை, அழகு, இளமை, மகிழ்ச்சி, மணம், இனிமை என்ற ஆறு தன்மைகளையும் உடைய சொல் "முருகு".

      "முருகுகள் இளமை நாற்றம்
      முருகவேள் விழா வனப்பாம்"


என்று பிங்கள நிகண்டு கூறுகின்றது.

இதனைப் புலப்படுத்தவே அருணகிரிநாதர்,

      "மெய்மைகுன்றா மொழிக்குத்துணை முருகா எனும் நாமங்கள்"

என்று கூறுகின்றார். இப்பாடலில் முருகா என்பது ஒருமை. நாமங்கள் என்பது பன்மை.

பல நாமங்களின் பொருள்களையுடையது "முருகா" என்ற நாமம் என்பதை இப்படி உணர்த்துகின்றார்.

இறைவன் பல்லாயிரம் நாமங்கள் கொண்டவன். அவற்றுள் சிறந்த நாமம் மூன்று - முருகன், குமரன், குகன் என்பவை. இம் மூன்றனுள்ளும் மிகச்சிறந்தது முருகன் என்ற நாமம்.

      "முருகன் குமரன் குகன் என்று மொழிந்
      துருகுஞ் செயல் தந்துணர் வென்றருள்வாய்"


என்று கந்தரநுபூதியில் கூறுகின்றார்.


எத்துனை சிறப்பு வாய்ந்தது முருகா! எனும் நாமம். இத்தகைய முருகனை தேனியில் உள்ள சண்முகநாத மலையில் தரிசித்தது நம்மை இன்னும் நம்மை முருக அடியாராக ஆக்கிவிடும் என்பது திண்ணம்.

சுமார் இராண்டாண்டிற்கு முன்னதாகவே தேனியில் சண்முகநாத மலை இருப்பதாகவும் அங்கே குழந்தை முருகன் இருப்பதாகவும் கேள்விப்பட்டோம். எங்கே? எப்படி செல்வது என்று கேட்டால், என்னப்பா? தேனியில் இருக்கின்றாய்? இது தெரியாதா? என்பார்கள். அந்த முருகப் பெருமானை இணையத்தில் கண்ட போது, எப்போ அழைப்பாரோ? என்று தான் நமக்குத் தோன்றியது.


முருகன் அருள் முன்னிற்க அந்த நாளும் வந்தது. நம் சகோதரன்,சகோதரியோடு இம்முறை யாத்திரைக்கு சென்றோம். தேனியில் மாவட்டத்தில்  உள்ள கம்பம்  என்ற ஊருக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து காமய கவுண்டன் பட்டி .விளக்கமாக சொன்னால் கே.கே பட்டி என்ற ஊருக்கு செல்ல வேண்டும். அங்கு சென்று குருக்களை அழைப்பேசியில் அழைத்தோம்.



சிறிது நேரத்தில் அவர் வந்தார். பின்பு சுவாமிக்கு மலர் மாலைகள் வாங்கிவிட்டு, ஆட்டோ ஒன்று பேசி ஷண்முகநாத மலை  நோக்கி சென்றோம். நீங்கள் பார்த்து கொண்டிருப்பது மலை நோக்கிய பயணப் பாதை.






































இங்கு ஒரு நீர்த்தேக்கம் கட்டி உள்ளார்கள். ஒரு அணை முடிவு செய்து அதனை அப்படியே நீர்த்தேக்கமாக மாற்றி விட்டார்கள்.





எப்படியும் சுமார் 5 கி மீ மேலாக சென்று கொண்டிருந்தோம். நாம் எப்போது மலை யாத்திரை சென்றாலும் முதல் முறை செல்வது போல் தான் நமக்கு இருக்கும். இந்த முறை வெள்ளியங்கிரி இரண்டாம் தடவை சென்று வந்தோம், ,மனதளவில் முதல் முறையே. மலை எப்படி இருக்கும்? மலைப்பாதை எப்படி இருக்கும் என்று 1008 கேள்விகள் நம்முள் பாயும். இங்கும் அப்படிதான். ஆட்டோவில் சென்ற போது எடுத்த காட்சிகளே இங்கே இணைத்துள்ளோம்.


































நன்கு வெயில் வேறு. சுமார் 4 கி.மீ கடந்து இருப்போம். நீர்த்தேக்கம் தாண்டிய பின்பு பாதை பசுமையுள் பாய்ந்தது. என்னப்பா? எப்படி நடந்து செல்வது? கோயில் அருகிலேயே சென்று விடுவோமா? என்று சிந்தித்து கொண்டே நாம் சென்றோம்.


இடையில் இருந்த ஒரு வழிகாட்டிப் பதாகை



நமக்கு முன்னதாக ஒரு அடியார் கூட்டம் சென்று கொண்டிருக்கின்றார்கள்







இப்படியே சென்று கொண்டே இருந்தோம். பின்னர் சரியாக அடிவாரம் அடைந்தோம். அங்கே காவல் தெய்வம் கருப்ப சாமி இருந்தார். கொஞ்சம் மேல் நோக்கி ஏறினோம். கந்தனை, கடம்பனை,கதிர்வேலனை, அழகனை நெஞ்சார கண்டோம். வேலும் மயிலும் சேவலும் துணை என்று கன்னத்தில் ஒற்றிக் கொண்டோம்.



வேல் வழிபாடு மிக மிக முக்கியம். முருகன் வேறு, வேல் வேறு அல்ல..இரண்டும் ஒருவரே...குமரனைக் கண்டீர்களா? 

வெற்றி வேல் வீர வேல்
சுற்றி வந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல்
ஞான சக்தி வேல்

வெற்றி வேல் வீர வேல்
சுற்றி வந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல்
ஞான சக்தி வேல்

வெற்றி வேல் வீர வேல்

ஆதி சக்தி அன்னை தந்த ஞான வேல்
அசுரர் தம்மை அஞ்ச வைத்த வீர வேல்
ஆதி சக்தி அன்னை தந்த ஞான வேல்
அசுரர் தம்மை அஞ்ச வைத்த வீர வேல்
மோதி அந்த குன்றழித்த சக்தி வேல்
மோதி அந்த குன்றழித்த சக்தி வேல்
மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றி வேல்
மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றி வேல்

வெற்றி வேல் வீர வேல்
சுற்றி வந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல்
ஞான சக்தி வேல்

வெற்றி வேல் வீர வேல்


தெய்வம் உண்டு தெய்வம் உண்டு
என்று சொல்லும் வெற்றி வேல்
தெய்வ பக்தி உள்ளவர்க்கு
கை கொடுக்கும் வீர வேல்
தெய்வம் உண்டு தெய்வம் உண்டு
என்று சொல்லும் வெற்றி வேல்
தெய்வ பக்தி உள்ளவர்க்கு
கை கொடுக்கும் வீர வேல்
எய்த பின்பு மீண்டும்
கந்தன் கையில் வந்து நின்ற வேல்
எய்த பின்பு மீண்டும்
கந்தன் கையில் வந்து நின்ற வேல்
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
காணும் எங்கள் சக்தி வேல்
எங்கும் வெற்றி எதிலும் வெற்றி
காணும் எங்கள் சக்தி வேல்

வெற்றி வேல் வீர வேல்
சுற்றி வந்த பகைவர் தம்மை
தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல்
ஞான சக்தி வேல்

வெற்றி வேல் வீர வேல்.


மலை ஏறி நாம் பார்த்தது அந்த வெற்றிவேலைத் தான். வெற்றிவேல் தரிசனம் கண்டு, அப்படியே நேரே சென்றால் திருக்கோயிலை அடையலாம்.



கடுகு சிறுத்தாலும் காரம் குறையுமா? என்பதற்கேற்ப. சிறிய கோயிலை இருந்தாலும், அங்கே வெளிப்படும் முருகன் அருள் மூவுலகும் பெறும் என்பதே உண்மை. பார்க்கும் இடமெல்லாம் பசுமை. பசுமை முருகனுக்கு மிகவும் பிடிக்கும் அன்றோ? பசுமை நம் எண்ணத்திலும் நிறைந்தது.





கோயிலை சுற்றிலும் முற்றிலும் பார்த்தோம். அருகிலே ஒரு சிறிய வீட்டில் கோயிலை பராமரிக்கும் அம்மையார் இருந்தார்கள். கோயிலின் பின்புறம் பாதை சென்றது. மெல்லிய பூங்காற்று வீசியது. தனியாக இருந்தால் அங்கே சற்று பயமாக இருக்கும். மீண்டும் கோயிலுக்கு வந்தோம்.


நவகிரக நாயகர்கள் மேற்கூரையின்றி இருந்தார்கள். எப்போது கோயில் செப்பனிடும் பணி தொடக்கம் என்று தெரியவில்லை. அங்கு உத்தரவு கேட்டு, தீப வழிபாடு தொடங்கினோம்.

அட..இந்த மலைக்கு பசுமலை என்றும் பெயரும் உண்டு. 



                                                       தீபமேற்றி வழிபாடு நடந்தது.








பின்னர் கோயில் குருக்கள் நம்மை பின்புறம் உள்ள இடத்திற்கு வாருங்கள் என்று கூட்டி சென்றார்.அங்கு சென்று தீர்த்தம் எடுத்து வர வேண்டும் என்றும் கூறினார். நாமும் அவரை பின்தொடர்ந்து சென்றோம்.








அருமையான இடம். தனிமையின் பிடியில் நம்மை உணர்த்தும் இடம் என்றே சொல்ல வேண்டும்.









கற்கள்,பாறைகள் என தாண்டி தாண்டி சென்றோம். தீர்த்தம் வந்து கொண்டிருந்தது. எப்போதும் இந்த தீர்த்தத்தில் நீர் இருக்கும். கண்ணகித் தாய் மதுரையை எரித்து இங்கே வந்த போது, குழந்தை முருகன் இங்கிருந்து அவளை மகிழ்வித்தாராம். குழந்தையைக் கண்டால் கோபம் தணியும் அல்லவா ? மேலும் கண்ணகித் தாயின் தாகம் தீர்க்க, முருகன் அம்பு விட்டு,இங்கு தீர்த்தம் உருவாக்கினார் என்பதும் தொன் நம்ம்பிக்கையாக உள்ளது.





அங்கிருந்த பாறைகளுக்கு நடுவில் ஒரு சிறிய குகை இருந்தது. இங்கு சித்தர்கள் வாசம் எப்போதும் உண்டு என்று கூறினார்கள்.இவர்களை இங்கு வழிபட்ட பின் தான் நாம் கோயிலில் சென்று முருகனை தரிசிக்க வேண்டும் என்று கூறினார்கள். நம்மால் உள்ளே செல்ல முடியவில்லை. தீபம் இட்டு வழிபாடு செய்த காட்சி மேலே உங்களுக்காக இணைத்துள்ளோம்.









மீண்டும் அங்கிருந்து கோயில் நோக்கி சென்றோம்.









கோயிலுக்கு திரும்பிய பின்னர், மீண்டும் ஒருமுறை தீர்த்தம் சென்ற போது, முருகன் அடியார் ஒருவர் தீர்த்தமாடிக் கொண்டிருந்தார். இதோ. கோயிலையும், அங்கிருந்த தீர்த்தம் பற்றியும் தெரிந்து கொண்டோம். இனி.. சிறப்பு தரிசனமாக அழகின் ...பாலகனின் ..அழகனின் தரிசனம் ..




















அட..தரிசனத்திற்கு பின் இப்போது  அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே...என்று  பாடத் தோன்றுகின்றது அல்லவா? இதோ.பாடலின் வரிகள்..மீண்டும் மீண்டும் பாடி பரவசம் அடையுங்கள்.


அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே

தெளிவெல்லாம் முருகனே ... தெய்வமும் முருகனே
அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே ... தெய்வமும் முருகனே
... தெய்வமும் முருகனே
பழஞானப் பசியாலே ... பழநிக்கு வந்தவன் (2)
பழமுதிர்ச்சோலையிலே ... பசியாறி நின்றவன் (2)
... பசியாறி நின்றவன்
அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே ... தெய்வமும் முருகனே
... தெய்வமும் முருகனே
குன்றெல்லாம் ஆள்பவன் ... குகனாக வாழ்பவன் (2)
குறவள்ளிக் காந்தனவன் ... குறிஞ்சிக்கு வேந்தனவன் (2)
பூவாறு முகங்களிலே ... பேரருள் ஒளிவீசும் (2)
நாவாறப் பாடுகையில் ... நலம்பாடும் வேலனவன் (2)
அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே ... தெய்வமும் முருகனே


... தெய்வமும் முருகனே.

சரி..அடுத்து பதிவின் தொடக்கத்தில் சொன்ன வேல்மாறல் பற்றி காண்போமா? 

ஆண்டுதோறும் நங்கநல்லூர் பொங்கி மடாலயத்தில் ஆடி கிருத்திகை ஆண்டு ஸ்ரீ வேல்மாறல் அகண்ட பாராயணம் நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு இது பற்றிய தகவல் நமக்கு கிடைக்கவில்லை. எந்த சூழ்நிலையாக இருந்தால் என்ன? கந்தனின் பாதத்தை வேல்மாறல் நாமும் பாடி போற்றுவோம்.

வேல்மாறல் பாராயண முறையை அறிவோம்.
அருணகிரியார் அருளிய ‘வேல் வகுப்பு’ பாடல்களின் பதினாறு அடிகளை மேலும் கீழும் ஆகவும், முன்னும் பின்னும் ஆகவும் ஏறி இறங்கி வருவது போல் மாறி மாறி வர அமைத்து, 64 அடிகள் கொண்ட வேல்மாறலாக தொகுத்து அருளியிருக்கிறார் வள்ளிமலை சச்சிதானந்த ஸ்வாமிகள்.
16வது அடியாகிய ‘திருத்தணியில் உதித்து அருளும் ஒருத்தன் மலை விருத்தன் என (து) உள்ளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே’ என்ற வேல் மஹா மந்திர அடி முதலில் 12 முறையும், நிறைவில் 12 முறையும், நடுவில் 64 முறையும் ஆக மொத்தம் 88 முறை ஓதப்பெறுகிறது.
இந்த 16வது அடி எழுவாய் ஆக அமைய, முதல் பதினைந்து அடிகள் யாவும் பயனிலையாக வருமாறு 16ம் அடியை ஒவ்வொரு அடியிலும் சேர்த்துப் படித்தால் அந்த வரி முழுமை பெறுகிறது. இதுதான் இந்த வேல் வகுப்பின் அபூர்வ அமைப்பாகும்.

வேல்மாறல் பாராயணம் பற்றிய கோப்புகள் இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இணைப்பின் மூலம் உபயோகம் செய்யவும்.(பதிவின் நீளம் கருதியே )

வேல்மாறல் பாராயணம் - doc வடிவில்

வேல்மாறல் பாராயணம் - PDF வடிவில்

வேல்மாறல் பாராயணம் செய்வதற்கு உதவியாக youtube வீடியோ இணைத்துளோம். இந்த காணொளியில் பாராயணம் செய்வதற்கு வசதியாக  பாடல் வரிகளும் இணைத்துள்ளார்.



- சண்முகனிடம் சரணாகதி அடைவோம். மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள் பதிவாக :-

தேனி சண்முகநாத மலை தரிசனம் (2) - https://tut-temples.blogspot.com/2019/07/2_25.html

வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - https://tut-temples.blogspot.com/2019/07/1_23.html

கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு (1) - https://tut-temples.blogspot.com/2019/07/1_24.html

TUT தளத்தின் 100 ஆவது சிறப்புப் பதிவு - தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே! - https://tut-temples.blogspot.com/2019/07/tut-100.html

ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html

  கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு (1) -https://tut-temples.blogspot.com/2019/07/1_24.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html

குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_14.html

No comments:

Post a Comment