"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, August 22, 2020

வித்தக விநாயக! விரை கழல் சரணே! - உழவாரப்பணி அனுபவம்

அடியார் பெருமக்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

முதலில் அனைவருக்கும் நம் தளம் சார்பில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் திருக்கோயிலில் சென்ற ஆண்டு நாம் உழவாரப் பணி செய்தோம். ஒரு நாள் அல்ல..இரண்டு நாட்கள் செய்தோம். அந்த அனுபவத்தை இன்றைய பதிவில் தருகின்றோம். 

கூடுவாஞ்சேரி மாமரத்து ஸ்ரீ சுயம்பு சித்தி விநாயகர் கோயில் தான் தேடல் உள்ள தேனீக்களாய் குழு தன் வேரை ஊன்றி கிளைகள் மூலம் தொண்டினை பரப்ப பிள்ளையார் சுழி போட்டது. ஆம். அன்னசேவை ஆரம்பித்த நாம், ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய வழிபாடு, அமாவாசை மோட்ச தீபம் என இங்கே தான் செய்து வருகின்றோம். சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக குரு வழிபாடு, குரு காட்டிய மோட்ச தீப வழிபாடும் நம் குழுவின் சார்பில் செய்து வருகின்றோம் என்றால் அது கூடுவாஞ்சேரி விநாயகர் அருளால் தான். அப்படியே நாம் அங்கே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஸ்ரீ முருகப்பெருமான் வழிபாடு மற்றும் இன்னும் பிற சேவைகளில் ஈடுபட்டு வருகின்றோம்.

சரி..சென்ற ஆண்டில் நம் தளம் சார்பில் நடைபெற்ற உழவாரப் பணிக்கு செல்வோமா?

முதலில் குருக்கள் நம்மிடம் விநாயகர் சதுர்த்தி வருகின்றது. நீங்கள் உழவாரப்பணி செய்து விடுங்கள் என்று பணித்தார். கோயிலில் இருக்கும் பனியைப் பார்த்த போது நமக்கு ஒரு நாள் போதாது என்று தோன்றியது.எனவே இரண்டு நாட்கள் உழவாரப்பணி என்று அறிவிப்பு செய்தோம்.

இரண்டு நாட்களிலும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை என்று நேரம் வரையறை செய்தோம். இரண்டு நாட்களும் கட்டாயம் வர வேண்டும் என அவசியம் இல்லை. சனிக்கிழமை வாய்ப்பு கிடைக்கும் அன்பர்கள் சனிக்கிழமை அன்றும், ஞாயிற்றுக்கிழமை வாய்ப்பு கிடைக்கும் அன்பர்கள் அன்றும் வரலாம் என்றும் கூறினோம். அப்ப்பா..சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்களிலும் சிறப்பான சேவை செய்தோம்.அதுவும் ஞாயிற்றுக்கிழமை குரு தரிசனமாக ஸ்ரீ ராகவேந்திரர் தரிசனமும் பெற்றோம்.



அன்றைய தினம் காலை 9 மணி அளவில் கோயிலுக்கு சென்றோம். திரு ஹேமந்த் ஐயா அவர்கள் வந்திருந்தார். அவர் நம் TUT பதாகை கட்டும் காட்சி.



அடுத்து கோயிலினுள் சென்று இருப்பு அறை (அதாங்க ஸ்டோர் ரூம் ) சென்று, அங்குள்ள அனைத்து பொருட்களையும் எடுத்து வெளியே வைத்தோம்.இது தான் மிக அத்தியாவசியமான பணி ஆகும்.





சற்று நேரத்தில் ஆவடியில் இருந்து திரு நாகராஜன் ஐயா தன் மகனோடு வந்தார்.அவரும் பணியில் இணைந்து அங்குள்ள பொருட்களை ஒவ்வொன்றாக வெளியில் எடுத்து வைத்தார்.






அப்பப்பா..எண்ணெய் பிசுக்கை பார்த்தீர்களா? இதனை அங்கே உள்ள பூக்கடை அம்மா சுத்தம் செய்ய தொடங்கினார்.






 அடுத்து நாகராஜன் ஐயா அவர்கள்  சன்னிதி வெளியே உள்ள அழுக்குகளை நீக்கும் பணியை செய்தார்.



அவர் உடனே முக்கிய சன்னிதியான விநாயகர் சந்நிதி வெளியே சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.


கோயிலின் ஸ்டோர் ரூம் சுத்தம் செய்த பின்னர்...



அடுத்து ஹேமந்த் ஐயா அவர்கள் சன்னிதி வெளியே சுத்தம் செய்ய ஆரம்பித்தார்கள்.








பின்னர் நண்பர் சத்யராஜும் நம்முடன் இணைந்து கொண்டார். சுமார் 6 நபர்களோடு அன்றைய தினம் உழவாரப் பணி செய்து கொண்டிருந்தோம்.




அடுத்து பூர்ணிமாவும், ஸ்ரீ வித்யாவும் கோயிலின் வெளியே சுத்தம் செய்த அழுக்குகளை ஒரு சேர கூட்டி, அள்ளும் பணியை தொடர்ந்தார்கள்.








நாகராஜன் ஐயா அவர்கள் முதலில் விநாயகர் சன்னிதி வெளியே சுத்தம் செய்து கொண்டிருந்தார் அல்லவா? அடுத்து சில நிமிடங்களில், சன்னிதி மேலே ஏறிவிட்டார். விடுவேனா பார்..ஒரு கை பார்த்து விடலாம் என்று நினைத்து விட்டார் என்று நாம் நினைக்கின்றோம்.




     எப்படி. நம் நண்பர் சத்யராஜின் நிலை? அன்று மேற்பார்வை தான் பார்த்தார் என்று நினைக்கின்றோம். அடுத்த நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தாரோ? என்னவோ?





அடுத்து துலக்க வேண்டிய பாத்திரங்களை எடுத்து வைத்தோம்.


மீண்டும் பூர்ணிமா அவர்கள் சன்னிதியை சுத்தம் செய்த காட்சி 







ஸ்ரீ முத்து மாரியம்மன் சந்நிதியை பூர்ணிமா அவர்கள் எடுத்துக்கொண்டு வெளியே சுத்தம் செய்தார்கள்.





அட,..நம்ம நாகராஜன் ஐயா அவர்கள்...இன்னும் விநாயகர் சந்நிதி மேலே தான் சுத்தம் செய்து கொண்டிருக்கின்றார்.






அடுத்து மணி 1 மணி ஆகிவிட்டது. கோயிலின் சார்பில் சிறப்பாக மதிய உணவு ஏற்பாடு செய்தார்கள்.


மதிய உணவை ஒரு பிடி பிடித்த காட்சி.






சுமார் 2 மணி அளவில் பணிக்கு வந்தவர்களுக்கு சிறு நினைவு பரிசு கொடுத்து அன்றைய தினம் உழவாரப் பணியை நிறைவு செய்தோம். அட..சும்மா...உழவாரப்பணி தயார் செய்து உள்ளோம் என்றே சொல்ல வேண்டும். பாத்திரங்களை அப்படியே எடுத்து வெளியில் வைத்துள்ளோம். ஸ்டோர் ரூம் பொருட்களை மீண்டும் சுத்தம் செய்து உள்ளே வைக்க வேண்டும். அனைத்து சந்நிதிகளில் உள்ளே சுத்தம் செய்ய வேண்டும்..இவை எல்லாம் நாம் தேக்கி வைத்துள்ள பணிகள். இவை எப்படி செய்தோம். அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை யார் யார் வந்து இந்தப் பணிகளை நிறைவு செய்தார்கள்? பதிவின் ஆரம்பத்தில் சொன்னது போல் , குருராஜர் தரிசனம் எப்படி கிடைத்தது என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடை அடுத்த பதிவில் காண்போம்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html

திருஊரகப் பெருமாளுக்கு செய்த உழவாரப் பணியும் ; அது அள்ளித் தந்த உற்சாகமும் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_3.html

ஒரே கல்லுல மூணு மாங்கா : குன்றத்தூர் கோவிந்தனுக்கு உழவாரப் பணி செய்ய வாங்க! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post.html


தேனியில் ஞானப் பெருந்திருவிழா அழைப்பிதழ் - 05.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/05012020.html

2020 ஆம் ஆண்டு - வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2019/12/2020.html

தேடல் உள்ள தேனீக்களாய் குழு TUT - 2020 வருட வாழ்த்துக்களுடன் .....! - https://tut-temples.blogspot.com/2019/12/tut-2020.html

குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா - கந்த சஷ்டி பதிவு (4)  - https://tut-temples.blogspot.com/2019/10/4.html

No comments:

Post a Comment