அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
தங்கள் அனைவரையும் இன்றைய பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். ஆவணி மாத இறைப்பணி மிக சிறப்பாக நடைபெற்றது. இன்றைய பதிவில் ஆடி மாதத்தில் நம் தளம் சார்பில் செய்த இறைப்பணி பற்றி பேச விரும்புகின்றோம். மேலும் திருஅண்ணாமலை தயவு சித்தாஸ்ரமத்தில் நடைபெற்று வரும் சேவைகளைப் பற்றியும் தொட்டிக் காட்ட விரும்புகின்றோம்.
முதலில் ஆவணி அமாவாசை அன்னதானம் கூடுவாஞ்சேரி வள்ளலார் சபையில் குருவருளால் சிறப்பாக நடைபெற்றது.
நம் நண்பர் திரு.சத்யராஜ் தம்பதியினர் இந்த அன்னசேவை தொண்டில் ஈடுபட்டனர்.
அடுத்து ஆடி பௌர்ணமி அன்னதானம் வழக்கமாக சுமார் 30 அன்பர்களுக்கு பொங்கல் , இனிப்பு என கொடுத்தோம். நம்மால் இயன்ற வரை அன்னதானத்தில் தரத்தை உயர்த்தி தான் செய்து வருகின்றோம்.
இந்த ஆடி பௌர்ணமி அன்னசேவையைப் பார்த்து அன்பர் ஒருவர் நம்மை வெகுவாக பாராட்டினார்.அவருக்கு நம் தளம் சார்பில் நன்றியை உரித்தாக்கி கொள்கின்றோம்.
அடுத்து கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ முத்து மாரியம்மனுக்கு கூழ் வார்த்தல் வழிபாடு கடைசி ஆடி வெள்ளி அன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் 5 வகையாக அன்னங்கள் வழங்க வேண்டி, நாம் அன்னத்தை வழங்க பிளாஸ்டிக் டப்பா மற்றும் பைகள் நம் தளம் சார்பில் வாங்கி கொடுத்தோம். சுமார் 400 நபர்களுக்கு வழங்க வேண்டி இந்த ஏற்பாடு செய்தோம்.
கொரானா தொற்று ஊரடங்கு காரணமாக தான் இந்த பிளாஸ்டிக் டப்பாவில் அன்னசேவை வழங்க முடிவெடுத்தோம். இல்லையேல் கோயில் வெளியே ஒரு பந்தல் போட்டு கூட இந்த சேவை செய்திருக்கலாம். எப்படியோ..அன்னசேவையில் நம் கைங்கரியம் இணைந்து இருப்பது மகிழ்வாக இருந்தது. அன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வுகள் தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.
ஒவ்வொருவருக்கு கொடுக்க உள்ள பையில் ஒரு எலுமிச்சை பழம், சுவாமி படம், தண்ணீர் பாட்டில் என போட்டு கொடுத்தோம்.
அடுத்து ஒவ்வொரு பையிலும் சாம்பார் சாதம், சக்கரை பொங்கல், புளியோதரை, தயிர் சாதம், கூழ் என வைத்து ஒரு அன்பருக்கு இரண்டு பைகள் என தயார் செய்தோம். இந்த சேவைக்கு ஆவடியில் இருந்து வந்து நம்முடன் கலந்து கொண்ட இளங்குள கிருஷ்ணகாந்த் ஐயா அவர்களுக்கு நம் தளம் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அடுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அன்னையின் தரிசனம் காண இருக்கின்றோம்.
இருப்பின் பசியாற்று; இல்லையெனில் பரிமாறு என்ற கூற்றுக்கு இணங்க, பொருளாதார வசதி படைத்தவர்கள் அன்ன சேவை செய்க; இல்லையெனில் இது போன்ற சேவையில் ஈடுபட்டு தம் உழைப்பை,நேரத்தை செலவு செய்வதும் ஒரு வகையில் தானமே.
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்கிறது தர்மசாஸ்திரம்.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.(226)
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.(225)
திருக்குறளும் அன்னதானத்தின் அருமைகளை அறிவிக்கின்றன.
கீதையில்
கிருஷ்ணபகவான், “ எவன் தனக்காக மட்டும் ஆகாரம் தேடிச்சாப்பிட்டுக்
கொள்கிறானோ அவனுடைய பாபத்தை, முழுக்க அவனேதான் அனுபவித்தாக வேண்டும் வேறு
எவரும் அதில் பங்கு எடுத்துக்கொள்ள மாட்டார் என்கிறார்”.
நம்மிடம்
இருக்கும் பொருளை மற்றவர்க்கு ஈந்து – கொடுப்பவரும், பெறுபவரும் மகிழ்ச்சி
அடைவதால் ஏற்படும் – பெரும் புண்ணியம் பெறுவதற்கான புனிதச் செயல்.
வாழ்க்கைக்கான
அத்தியாவசிய தேவையான உணவை மற்றவர்க்கு தானமாக அளிப்பதே அன்னதானம் ஆகும்.
அன்னதானம் அளவற்ற புண்ணியத்தினை நல்கும். பணம், காசு, வஸ்திரம், நகை, பூமி,
வீடு போன்ற மற்றப் பொருட்களையெல்லாம் தானமாகக் கொடுத்தாலும், பெறுபவர்,
இன்னும் கொஞ்சம் அதிகம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றச்
செய்யும். ஆனால், அன்னதானம் செய்தால் மட்டுமே போதும் என்ற சொல்லை தானமாகப்
பெறுபவரிடமிருந்து கொண்டு வரும். ஆகையாலே பூரணமான தானம் – அன்னதானம்
மட்டுமே ஆகும்.
அன்னத்தை துவேஷிக்கக் கூடாது. அன்னத்தை மிகுதியாக உண்டாக்க வேண்டும். அன்னத்தை வேண்டி வந்த எவருக்கும் இல்லை என சொல்லக் கூடாது.
உதரம்
(வயிறு) நிறைந்து, உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் ஈரேழு ஜன்மங்களையும்
தொடர்ந்து வரும். அன்னதானம் மட்டுமே செய்தவரை மட்டும் சென்றடையாமல்,
செய்தவரின் சந்ததியினரையும் காத்துத் தொடரக் கூடியது.
மற்ற
எந்தத் தானம் செய்யினும் யாரையும் போதுமென்ற அளவுக்குத் திருப்தி்ப்படுத்த
முடியாது. எத்தகைய பசியாக இருப்பினும் ஒரு எல்லையில் போதுமென்று கூறுவர்.
மற்ற எந்தத் தானங்களையும் விட அன்னதானம் என்னும் உயிர்காக்கும் தானம் மிக
உயர்வான அறமாகும்.
அன்னதானம் செய்வோம் இன்புற்று வாழ்வோம். தினசரி சுமார் 75 சாதுக்களுக்கு மேலாக
அன்னதானம் செய்வோம் இன்புற்று வாழ்வோம். தினசரி சுமார் 75 சாதுக்களுக்கு மேலாக
ம(மா)கேஸ்வர பூசை செய்து இங்கே அன்னம் இட்டு வருகின்றார்கள். இதோ அவர்கள் கொடுக்கும் உணவுப் பட்டியல் இட்லி,தோசை,சாம்பார்,சட்டினி,கோதுமை உப்புமா,முள்ளங்கி சட்டினி
மாலை உணவு தயார் செய்த நிலையில் மேலே நீங்கள் காணும் காட்சி. மாலை சுமார் 50 சாதுக்களுக்கு ஆசிரமத்திலும், சுமார் 100 சாதுக்களுக்கு திருஅண்ணாமலை கோயில் வாசலிலும் வழங்கி வருகின்றார்கள்.
மேலே நீங்கள் பார்ப்பது மகேஸ்வர பூசை நிகழ்வின் துளி ஆகும். எந்த வித அவசரமின்றி, ஆத்மார்த்தமாக ஒவ்வொரு சாதுக்களையும் சிவனாக பாவித்து ...இல்லையில்லை...சிவனாக்கி...தட்சணை கொடுத்து, மலர் சூட்டி, தூப தீபம் காட்டுகின்றார்கள்.
அட...மகேஸ்வர பூசையின் போதே...வஸ்திர தானம் செய்யலாம் .
எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதியை வணங்கி, வள்ளலாரின் ஆசியிலும், சித்தர்களின் அன்பும்,கருணையைக்
கொண்டு இங்கே தினசரி மகேஸ்வர பூசை நடைபெற்று வருகின்றது.
நம்மிடம் பொருளாதார வசதி இருந்தால், நம்மால் இது போன்ற அன்ன சேவை, மகேஸ்வர பூசை செய்ய முடியும் என்று எண்ண வேண்டாம் . இங்கே பொருளாதாரத்தை விட, இறைவனின் அருளாதாரமே வேண்டும். இது போன்ற சேவை செய்வதற்கு அருளே நிச்சயம் நமக்கு வேண்டும். நாம் மாதந்தோறும் செய்கின்ற அன்னசேவைக்கு குறைந்தது ஒரு மாதம் முன்னதாக திட்டமிடல் வேண்டும். இது போன்று பல செய்திகளை நாம் கருத்தில் கொண்டு செய்ய வேண்டும். மாதம் ஒருமுறை நிகழ்விற்கு இப்படி என்றால், தினமும் அன்ன சேவை, மகேஸ்வர பூசை என்றால்...அப்பப்பா...நினைத்தாலே மெய் சிலிர்ப்பூட்டும். ஆனால் இதை நித்திய தொண்டாக ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஸ்ரீ சரவணபவா சுவாமிகள் செய்து வருகின்றார். இந்தப் பதிவின் மூலமாக, இங்கே அவருக்கு நம் தளம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் விபரங்களுக்கு:
ஸ்ரீ சரவணபவா சுவாமிகள்,
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம்,
கிரிவல பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் அருகில்,
திருவண்ணாமலை,
செல்: (0)9944800220
(இந்த எண்ணில் தொடர்பு கொண்டு மகேஸ்வர பூஜை செய்ய பதிவு செய்து கொள்ளலாம்)
மீள்பதிவாக :
தேடிப்போய் தர்மம் செய்; நாடி வருவருக்கு உதவி செய் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_21.html
தேடிப்போய் தர்மம் செய்; நாடி வருவருக்கு உதவி செய் - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_11.html
அறம் செய்ய விரும்பு - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_57.html
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html
இன்றைய இறைப்பணியோடு கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_14.html
அனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - மகா பெரியவா - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_5.html
தவமா? கூட்டுப்பிரார்த்தனையா? - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_14.html
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_24.html
TUT அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - https://tut-temples.blogspot.com/2020/03/tut.html
இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html
அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html
கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html
ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html
No comments:
Post a Comment