"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.
Showing posts with label செண்பகா தேவி. Show all posts
Showing posts with label செண்பகா தேவி. Show all posts

Wednesday, October 14, 2026

சித்தன் அருள் - 2339 - அன்புடன் அகத்தியர் - ரோம மகரிஷி வாக்கு ( திருக்குற்றாலம் திரிகூடமலை வாக்கு)

                         இறைவா நீயே அனைத்தும்! இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்!


இறைவா, எங்களை நன்றாகப் படைத்தாய்! அனைத்தையும் நன்றாகக் கொடுத்திருக்கின்றாயே!


இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! சர்வம் சிவார்ப்பணம்


குற்றாலம் மலையிலே செண்பகாதேவி பெயரில் மறைமுகமாக உலகை காத்துக்கொண்டிருக்கும் அன்னை லோபாமுத்திரை தேவியின் ரகசியம்.



9/10/2026 அன்று ரோம மகரிஷி.. உரைத்த வாக்கு. 


வாக்குரைத்த ஸ்தலம்: செண்பகா தேவி அருவி, செண்பகா தேவி அம்மன் ஆலயம் திருக்குற்றாலம் திரிகூடமலை தென்காசி மாவட்டம்.



செண்பகா தேவி அருவி

===========================

# அன்புடன் ரோம மகரிஷி வாக்கு 

===========================


அகிலத்தை காத்தருளும் அழகாக மனதில் இருக்கும் ஈசனாரே,!!!! பார்வதி தேவியாரே!!!!!, பணிகின்றேனே!!!!


பணிந்து அகத்தியனை… உலகை காக்கப் போராடிக் கொண்டிருப்பவனை பணிகின்றேனே, உரோமனே!!!!!. 


அன்புடன் ரோம மகரிஷி வாக்கு

இதை தன் எவ்வாறு என்பதைக் கூட!!!!


வருவாய், கருவாய், அகத்தியனே!!!


மனக்குறைகள் நீக்குவாய்!!!


பல வடிவங்களாகவும், பல வடிவங்களை ஏற்படுத்தி, பல வெற்றிகளை கண்ட முதலே!!! அதாவது கண்ட நாள் முதலே!!!


இவை அறிவித்து, இவற்றுக்கெல்லாம் வருவானே அகத்தியனே.!!!


அகத்தியனை பணிந்து, அகத்தியனே பணிந்தேனே!!!


பின் என்றெல்லாம் காப்போனே. 


காத்து அருள் ஈந்து, மனிதனுக்கெல்லாம் துன்பத்தைப் போக்குபவனே!!!


போக்குபவனே, அறிவிழந்தும் மனிதனை அறிவு பலமாகச் செய்பவனே!!!


===========================

# மனிதர்களுக்கு சோதனையாக துன்பங்களையும் கஷ்டங்களையும் கொடுத்து பக்குவப்படுத்தி இறைவன் என்ற லாபத்தை கிடைக்கச் செய்யும் அகத்தியரின் கருணை.

===========================


செய்தும், பின் அப்படி வரவில்லை என்றாலும், இன்னும் பின் சில துன்பங்களை கொடுத்தும், இறைவனை பின் இறைவனை லாபத்தைப் பெறச் செய்பவனே. என்றென்றும், எப்பொழுதும் நிற்பவனே. 


அழகாக தவழ்ந்து ஓடும் அனைத்தும், உயிர் ஜீவ ராசிகள் போல், எங்கும் எதிலும் காணப்படுபவனே.


எங்கும் நிறைந்தவனே! அற்புதனே ! அற்புதமானவனே ! அகத்தியனே !


கலியுகத்தில் மனிதனை காக்க வந்த அற்புத பின் குருவே !!!



===========================

# அன்பினை செலுத்தினால், வெற்றி

===========================


இவை அனைத்தும், மனிதனே உன்னைத் தேடி வரும்போதெல்லாம், சில செய்கைகளை ஏற்படுத்தி, மனநிறைவோடு, பின் அன்பினை செலுத்தினால், வெற்றி என்பது உன் இலக்காக வைத்திருப்பவனே, அகத்தியனே.


அன்பும் எங்கும் நிறைந்து, தவழ்ந்து, ஓடோடி, இம் மலையிலெல்லாம் நிற்பவனே.


===========================

# குற்றாலம் மலையில் அதாவது திரிகூட மலையில் குருநாதர் அமைத்த ஆசிரமம்... உலகமெல்லாம் அகத்தியருக்கு ஆசிரமங்கள் இருந்தாலும் குற்றாலத்தில் இருந்து கொண்டு உலகம் முழுவதும் கிளைகள் போல ஆசிரம தூதரகங்கள் அமைத்து உலகத்திற்கு சேவை.

===========================


எங்கும் எதற்கும் ஆசிரமத்தை அமைத்து, பல வகையிலும் கூட, இங்கிருந்தே சேவை செய்து கொண்டு,!!


பல உன் தூதரகங்கள் பல வழியிலும் ஏற்படுத்தி….


அதில் தன் மனிதர்களை பின் வகுத்து, இட்டு, எவ்வாறெல்லாம் பின் அழியும் என்பதையெல்லாம் முன்கூட்டியே மனிதனுக்குத் தெரிவித்து !!!


அவையெல்லாம் எப்படி என்று கூட, ஆகாயத்தில் பறந்தவனே!!!.


===========================

# குருநாதர் அகத்திய மாமுனிவர் பறக்கும் சக்தியை பெற்றுக் கொண்டு பூமியை தாக்க வரும் எரிகற்களையும் நட்சத்திரங்களையும் தடம் மாறி வரும் கிரகச் சுழற்சிகளையும் தடுத்து நிறுத்தி காக்கும் கருணை.

===========================


ஆகாயத்தில் பறந்தவனே !!!!! 


கோள்களும் அதாவது நட்சத்திரங்களும் இன்னும் பல வழிகளில் கூட, பின் அதை தன் தடுத்து நிறுத்தியவனே !!!!! 


***** அகிலமெங்கும் பரவட்டும் வருங்காலத்தில் உன் புகழ். ***** 


இதை யாங்கள் சித்தர்கள் கூர்ந்து கவனித்தோமே. 


===========================

# கலியுகத்தில் மனிதன் இப்படித்தான் வாழப் போகின்றான் என்று அதர்மம் தான் தலை விரித்து ஆடும் என்று சித்தர்கள் அனைவரும் அமைதியாக ஒதுங்கிக் கொண்டு வேடிக்கை பார்த்த நிலையில், அகத்திய மாமுனிவர்  மட்டும் மனிதர்களை மாற்றுவேன் உலகை காப்பேன் என்று உறுதி பூண்டு வந்த கருணை.

===========================


எதை, ஏன், எதற்கு என்றெல்லாம், பின் மனிதன் இப்படித்தான் வாழப்போகின்றான் என்று, கலியுகத்தில் நின்று, யாங்கள் அமைதி காத்தோமே!!!!


அப்பொழுதெல்லாம், நிச்சயம் இவ்வாறெல்லாம் என்னால் முடியும் என்று, மனிதர்களை திருத்த முடியும் என்றெல்லாம் வந்தவனே!!!


அற்புதமாய் நிற்பவனே… 


அன்பாய் நிற்பவனே… 


கரு உருவாக நிற்பவனே, பாசத்திற்குரிய, அன்பிற்குரிய அகத்தியனே, எப்பொழுதும் துணைநிற்பானே.


===========================

#அகத்திய மாமுனிவர் - மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களின் அதிபதி 

===========================


துணை நின்று, இவ் மலைகளுக்கெல்லாம் அதிபதியாம் அகத்தியனே.


அகத்தியனே, உன் பின்னாலே வந்தோமே. 


இதை என்று அறிவித்து, இங்கிருந்து பல வழிகளில் கூட, பின் நுண் அறிவுகளை, பின் எங்கிருந்தும் வரவழைத்தும், இங்கு உன் அதாவது விஞ்ஞானத்தை தொடர்ந்தவனே, அகத்தியனே, போற்றுகின்றேனே, உமைதனை.


===========================

# ஒவ்வொரு யுகத்திலும், மனிதர்கள் நலமாய் வாழ, வாக்குகளும் நல்வாழ்வு வாழ்வதற்கு தேவையான உபகரணங்களையும் பரிகாரங்களையும் சொல்லி, காப்பாற்றிய கருணை.

===========================

அதாவது பல யுகங்களையும் பார்த்து, பல மனிதர்களையும் யுகத்திற்கு தகுந்தார் போல், மனிதனை மாற்றி அமைத்து, மனிதனுக்குத் தேவையான உபகரணங்களை கொடுத்து, மனிதனுக்கு எச் சொல்லை (வாக்கு) கொடுத்தால், பின் திருந்துவான் என்பதையெல்லாம் சரியாக புரிந்து வைத்திருபவனே. புரிந்து வைத்துக் கொண்டிருப்பவனே, அகத்தியனே. 



எங்கும் உள்ளவனே, எதிலும் உள்ளவனே !!


எப்பொழுதும் உள்ளவனே !!


எங்கும் அலைகடலாய் வருபவனே!!


===========================

# நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம் என பஞ்ச பூதங்களின் ரூபமாக இருக்கும் அகத்தியர்.

===========================

நீராய் வருபவனே !


பின் நெருப்பாய் வருபவனே !


ஆகாயமாய் வருபவனே !


எங்கும் நிறைந்தவனே, பின்—அதாவது பின் குழியில் தங்குவனே, எழுந்து தியானங்கள் செய்பவனே  !


வருவோருக்கெல்லாம் அள்ளித் துன்பங்களைப் பின் எடுத்து, இன்பங்களை கொடுப்பவனே  !


===========================

# மனிதர்கள் நினைக்கும் இன்பம் உண்மையில் துன்பம் 

சித்தர்கள் தரும் துன்பம் உண்மையில் இன்பம் நிரந்தர இன்பம் இந்த உண்மையை சொல்லி வழி நடத்தும் அகத்தியர் கருணை.

===========================

இன்பங்கள் என்றால், மனிதன் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றான் என்று, 


அதையெல்லாம் பின் காட்டி, பின் அவையெல்லாம் துன்பம் என்று, 


துன்பத்தை கொடுத்து, இதுதான் துன்பம் தான் இன்பம் என்று, 


எடுப்பவனே  !

கொடுப்பவனே  !

ஆற்றல் அளிப்பவனே !

அணைத்துக் கொள்பவனே !

அறிந்தும் அறிவினை கொடுப்பவனே !


===========================

# அகத்திய பிரம்ம ரிஷி :- 14 உலகத்திற்கும் அனைத்தும் கொடுத்து அனைத்தையும் ஆராய்ந்து வழிநடத்தும் விஞ்ஞானி.

===========================


ஏழேழு எதை என்று புரிய, அனைத்தும் உலகத்துக்கு பின் கொடுத்தவனே. கொடுத்தவனே, விஞ்ஞானி போல் உண்டா? 


அகத்தியன் போல் ஒரு விஞ்ஞானி போல், விஞ்ஞானி ஒருவன் உண்டா? 


அறிவு படைத்தவன் உண்டா? 


கருணை படைத்தவன் உண்டா?


அற்புதமாய் இருப்பவனே, கருவை பின் அறிந்தும், இவை தன் புரிய உயர்ந்த இடத்திற்கெல்லாம் செல்பவனே.


===========================

# அகத்திய மாமுனிவர் - உலகம் எங்கும் ஆசிரமங்கள் ஆராய்ச்சி கூடங்கள் அமைத்து மனிதர்கள் வாழ்வதற்கு வழி காட்டியவர் .

===========================

அங்கங்கு உலகத்தை பின் காத்து நின்று, 


பின் எங்கும் நிறைந்தவனாய், அற்புதமாய், தன் ரகசியங்களை பின் அதாவது பின் எவை என்று விஞ்ஞானம் வடிவமாகவே அறிந்தும், 


இவை தன் அனைத்தும் பின் பரவலாக ஏற்படுத்தி, 


மனிதனுக்கு அங்கங்கு பின் அதாவது துகள்கள், விஞ்ஞானக் கூடங்கள், பல வகையிலும் கூட ஏற்படுத்தி, 


இங்கேயே பல வகைகளில் கூட ஏற்படுத்தி, பல தெய்வங்களை வரவழைத்து, இவ்வாறெல்லாம் இதனை‌ தன் அறிவில் பூர்வமாகவே நிரூபித்தவனே.


===========================

# அகத்திய மாமுனிவர் - அனைத்து ஆராய்ச்சிகளிலும் வெற்றி பெற்று, இறைவன் கைகளால் வரம் பெற்று, அந்த வரத்தை மனிதர்கள் வாழ்விற்கு வழங்கிய மகத்தான வள்ளல்.

===========================

அப்பொழுது இறைவனே !!!!! 


எவை என்று கூட, 


***** அகத்தியன் ஒரு சிறந்த விஞ்ஞானி *****


என்றெல்லாம், அகத்தியன் எதை 


*****  அகத்தியன் போல் இவ்வுலகத்தில் விஞ்ஞானி யாருமில்லை ***** 


என்றெல்லாம், இறைவன் உனக்குப் பின் வரத்தை கொடுத்தானே, அகத்தியனே.


===========================

# இறைவன் கொடுத்த வரத்தை வைத்துக் கொண்டு குருநாதர் அகத்தியர் ஒவ்வொரு யுகத்திலும் மனிதர்களுக்காக கருணை காட்டும் அன்பு.

===========================

அவ்வரத்தை வைத்துக்கொண்டு, பின் எப்பொழுதும் எக் யுகத்திலும் மாறி மாறி மனிதனை காப்பவனே. 


பின் அதாவது பின் அளித்து, வரங்களை அளித்து, இறைவன் பின் அதாவது கஷ்டங்கள் கொடுத்தாலும், பின் அதை நீக்கி அருள்பவனே, அகத்தியனே.


===========================

# அகத்திய மாமுனிவர் - மோட்சத்தை அளிப்பவர்)

===========================

***** மோட்சத்திற்கு காரகனே ***** 


***** துன்பத்திற்கு பின் வழி வகுத்து, அதில் தன் இன்பம் அடையச் செய்பவனே. *****


 அறிந்தும் இவையென்று அறிய, அனைத்து ஜீவராசிகளிலும் இருப்பவனே.


===========================

# அனைத்து உயிர்களும் எனக்கே சொந்தம் என்று ஈசனிடம் வழக்கு செய்து காப்பாற்றி வரும் கருணை.

===========================

அனைத்தும் பின் உயிரும், பின் என்றும் எனக்கே சொந்தம் என்று, 


ஈசனுடன் பின் வந்து, வாதிட்டு, வாதாடி வாதடிவிட்டு, 


பின் அனைத்தும் எனக்கு சொந்தம். 


யான் காப்பேன் என்று காப்பாற்றுவேன் என்று, பூலோகத்திற்கு வந்தவனே!!!!!


===========================

# கலியுகத்தில் மனிதர்கள் இயற்கையை நம்பாமல் செயற்கை நாடி அதன் பின்னே சென்றால் அந்த செயற்கை வைத்து மனிதர்களை அடித்து திருத்தி நல்வழிப்படுத்தும் ஆசிரியர்.

===========================

அருள் கூர்ந்து, இதை தன் கலியுகத்தில் மனிதன் எப்படியெல்லாம் போகின்றான்???, 


எப்படியெல்லாம் செல்கின்றான்??? 


என்றெல்லாம், இவை அறிவித்து, இவைத்தன் செயற்கை முறையாக, 


பின் மனிதனை பின் எங்கு தாக்கலாம்? என்று உணர்ந்து வந்தவனே.

கலியுகத்திற்கு!!


அறிவு சார்ந்த பல விஷயங்களை கற்றவனே.


எங்கும் நீராய், நெருப்பாய், மழையாய், அகிலமெல்லாம் இருப்பவனே.


அறிந்தும் கடலாய் இருப்பவனே.


===========================

# தன்னுடைய உடலையும் ரூபத்தையும் லட்சம் மடங்கு உருவாக்கி -  அதாவது க்ளோனிங் ஜெராக்ஸ் பிரதி போல உலகமெங்கும் தன்னை பிரதி எடுத்துக் கொண்டு - உலகமெங்கும் அங்கு தியானம் செய்து -பி உலகத்தை அழிவில் இருந்து காப்பாற்றும் கருணை கடல்.

===========================

உலகம் அழிகின்றது என்று தெரிந்தும், 


தன் சுயரூபங்களை பல லட்சம் பின் உடம்புகளாக மாற்றி, ஏற்படுத்தி, அங்கங்கு தியானம் செய்பவனே!!!


அகத்தியனே!!!.


===========================

# பெரும் சக்தி. பெரும் ஞானி. பெரும் சித்தன். பெரும் விஞ்ஞானி. 

===========================

பெரும் ஆற்றலே, அகத்தியனே.


பெரும் ஞானியே, அகத்தியனே. 


பெரும் சித்தனே, அகத்தியனே.


===========================

# அகத்திய மாமுனிவரின் பின்னால்…சித்தர்கள் அனைவரும். 

===========================

பெரும் அறிந்தும் இவை தன் ஞானியே, பின் முனியே. 


அறிந்தும் அனைத்தும் சித்தர்களும் உன் பின்னே வருகின்றோமே.


வருகின்றோமே.


இதை யாரும் எதை என்று கூற, இக்காலத்திலும் தடுக்க முடியாதே, அகத்தியனே.


===========================

# குற்றாலத்தில் குருநாதர் ஏற்படுத்திய ரகசிய பல்கலைக்கழகம். ரோம மகரிஷி அதை நிர்வகிப்பவர்.

===========================

அகத்தியனே, இங்கின்று எங்கும் எவை என்று புரிய, 


பின் அதை தன் பின் இங்கு இருக்கட்டும் என்று, பின் எதை என்று கூற, 


***** ஒரு பல்கலைக்கழகத்தை ஏற்படுத்தி, அதை நீயே உன் உபயோகிக்க வேண்டும் என்றெல்லாம், பின் நிச்சயம் அருள் ஈந்து கொடுத்தவனே, இவ் ரோம ரிஷிக்கு. ***** 


அறிந்தும் இங்கேயே யான் பாதுகாத்து, அதேபோல் உன் சொல்லுக்கு ஏற்றார் போல் யான் நடந்து கொண்டிருக்கின்றேனே, அகத்தியனே.


அகத்தியனே, காப்பாய். 


===========================

# குருநாதர் அகத்தியர் ரோம மகரிஷிக்கு கொடுத்த மனிதர்களுக்கு நன்மை செய்யும் மறைமுக கருவி.

===========================

அறிந்தும் இவை தன் அறிய, இன்னும் அதை தன் பின் விஞ்ஞானி, 


பின் எவை கருவியாக, பின் மறைமுகமாக ஏற்படுத்தி, 


அதை தன் அதற்கு பாதுகாவலாக நீயே இருப்பாய். 


அதனை எப்பொழுதும் இயக்கிக் கொண்டே இருப்பாய். அதை இயக்கும் வரை, எதை என்று அறிய,



===========================

# அகத்திய மாமுனிவர்  கொடுத்த கருவியின் மூலம் - குற்றால நீரின் ஆற்றல் மகிமைகள் - நோய்கள் விலகும் சூட்சுமம்.

===========================

இங்கிருந்து வரும் ஆற்றல்கள், அதாவது நீரின் ஆற்றல்கள், மனிதருக்கு பரவுகின்ற பொழுது, பின் அறிந்தும் அனைத்தும் நோய்கள் விலகும் என்று சொல்பவனே.


அதேபோல் யான் இன்னும் அக் கருவி உபயோகித்துக் கொண்டிருக்கின்றேனே, அகத்தியனே.


அகத்தியன் போல் பின் விஞ்ஞானி யாரும் உண்டு???????


அறிந்தும் இவை என்று அகத்தியன் மனம் படைத்தது போல், மனம் படைத்தவன் போல் யாரும் எதை என்று!!!


என்ன? மனம் எதை என்று அறிய, மனம் என்பது அறிந்தும் இவை உலகிற்கு அறிய,


===========================

# அகத்தியன் என்றால் ஆற்றல். 

# ஆற்றல் என்றால் அகத்தியன்... 

# ஆற்றலை தாக்கவோ அழிக்கவோ முடியாது.

===========================

***** அகத்தியனை எவ் ஆற்றலாலும் தாக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது. ***** 


அறிந்தும் இவை தன் கூற, அறிந்தும் கூட, அவ்வாற்றல் நிறைவாக, அகத்தியன் அறிந்தும் ஆற்றலாக இருப்பவனே.


அகிலத்துக்குள் இருப்பவனே.


அறிந்தும் இருப்பவனே.


அனைத்துமாக இருப்பவனே.


குருவோடு ஒன்றோடு இணைந்து இருப்பவனே.


எங்கும் பின் பறந்தவனே. 


எதிலும் இருப்பவனே.


===========================

# உலகிற்கு படியளக்கும் வள்ளல்…

===========================


***** அகிலத்துக்கெல்லாம் பின் உணவை ஊட்டுபவனே. *****


===========================

# உண்மை பொருளின் தத்துவத்தை உணர்த்துபவர்

===========================

உண்மை உணர்ந்து, பின் தத்துவத்தை பின் உணர்ந்து, அனைத்தும் சொல்பவனே !!!!! 

 

அகத்தியனே !!!!! 


எங்கும் நிறைந்து இருப்பவனே  !!!!! 


பரிபூரணமாய் அருள்பவனே  !!!!! 


அனைத்தும் காப்பாய். அருளோடு பின் உம்மையே, பின் வருவோருக்கு வந்து, வந்து தொழுபவருக்கெல்லாம் அருள் கூர்ந்து, அறிவை வளர்த்து, இதுதான் உண்மை என்று காட்டுபவனே  !!!!! 


===========================

# கல்கி அகத்தியர்…

===========================

கல்கி அகத்தியனே!! 


அறிந்தும் இவை என்று புரிய, எனக்குச் சொந்தமே, அகத்தியனே.


எப்பொழுதும் நல்குவாய், அகத்தியனே!! 


என்னவென்று மனிதனுக்கு எப்பொழுதும் புரியும்படி, பின் அறிவித்துக் கொண்டே வருகின்றாயே!!! அகத்தியனே !! 


எங்கும் நிறைந்த என் மனதில் நிறைந்த என் அன்புக்குரிய, பின் தந்தையே!!, தாயே!! அகத்தியனே!! 


===========================

# பெயரை வைத்துக் கொண்டு ஏமாற்றியவர்களையும்.. மன்னித்து அருள் தந்த கருணைக்கடல்.

===========================

எவ்வாறெல்லாம் எதற்கு அதிபதியாக இருந்து, 


பல சித்தர்களுக்கு இவைத்தன் அறிய, 


அனைத்தும் பின் உன் நாமத்தைச் சொல்லி பல, பலர் கலியுகத்தில் ஏமாற்றினார்கள்......


அவர்களை எல்லாம் பின் மன்னித்து, அருளி, அவர்களுக்கும் புத்தியை கொடுத்து, அருள் ஈந்து, கருணை படைத்தவனே !!  அகத்தியனே  !! 


===========================

# குள்ள முனி :- அவரவர் செய்த பாவமும் புண்ணியமுமே, அவரவர் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் காரணமாகின்றது, என்பதை உலகத்திற்கு சொன்னவர்.

===========================

அவரவர் துன்பம், அவரை தாக்கும். அவரவருடைய இன்பம், அவரை தாக்கும்.


இன்பம் எதை என்று கூற, துன்பத்தை கொடுக்கும்.


துன்பம் பின், அதாவது பின், அதாவது பின் நன்மை,


அதாவது இவைத்தன் அறிய, இதைத்தன் புரிய, இன்பத்தை கொடுக்கும் என்று அகிலத்துக்கு காட்டுபவனே !! 

 

அகத்தியனே  !! 

 

===========================

# அகத்தியன் என்று அழைத்தாலே பாசத்தோடு ஓடி வந்து கருணை செய்யும் தாயுமானவர் தந்தையானவர் அகத்தியர்…

===========================


பரிபூரணமாக, பின் அகத்தியன் என்றாலே, பின் வருபவனே  !! 


பின் அறிந்தும் எவை என்று கர்மத்தை, அதாவது பாவ புண்ணியத்தை, பின் சார்ந்து, பாவத்தை எடுப்பவனே  !! 


புண்ணியத்தை கொடுப்பவனே  !! 


அனைத்தும் அருள்பவனே. 


===========================

# பஞ்ச பூதங்களில் ஒன்றோடு ஒன்றாக கலந்து இருப்பவர்.

===========================

எங்கும் நிறைந்தவனே. காற்றோடு காற்றாக, பின் மண்ணோடு மண்ணாக, அறிந்தும் எவை என்று நெருப்போடு நெருப்பாக, நிலத்தோடு நிலத்தாக, பின் கடல், பின் அலைகளாக, எங்கும் பின் இருப்பவனே.


===========================

# அகத்திய மாமுனிவர்  - பேரழிவுகளை தடுப்பதற்கு, அதற்கு எதிராக பயன்படுத்தும் அணு ஆயுதம் ரகசியம் - அழிவை அழித்து மேலே அனுப்பும் அகத்திய மாமுனிவரின் ஆற்றல்.

===========================


===========================

# அகத்திய மாமுனிவரே - அணு ஆயுதத்தின் , அணு ஆயுதம்

===========================


எங்கும் எதை என்று கூற, அறிவும், அறிவும், அறிவு படைத்த எங்கெல்லாம், பின் எதை என்று அறிய, பின் கலியுகத்தில், பின் அழிவு ஏற்படுகின்றதோ??,.........


அங்கெல்லாம் அணுவைப் போல், எதை என்று ஒரு பெரிய குண்டை பின் வைத்து, வைத்து, அவையும் பின் இப்பொழுது செயல்பட்டுக் கொண்டிருக்கையில், பின் அழிவுகள் பின் வந்தாலும், அவை தன் பின் எரிய, பின் ஆற்றல் மீண்டும்,.....


அதற்கு பின் அழிவை, பின் மீண்டும் மேலே அனுப்புபவனே. 


எங்கும் நிறைந்தவனே  !! 


எதிலும் இருப்பவனே  !! 


பின் அகிலத்தை காப்பவனே   !! 


பரம்பொருளே  !! 


பராபொருளே   !! 


அறிந்தும் இவை என்று என்ன சொல்ல!?, என்ன சொல்ல!?, பின் வணங்குகின்றேனே. தத்துவங்களாக. 


பல கைகளோடு, அறிந்தும் எவை என்று கூறவே, 


***** உன்னை வணங்குவதற்கு, பின் பல கைகள் வேண்டுமே, அகத்தியனே   !!  ***** 



 மனிதனுக்கு உண்மை நிலை தெரியவில்லையே, அகத்தியனே !! 


===========================

# “அகத்தியனுக்கு ஈடு இங்கு யாரும் இல்லையே”

===========================

அகத்தியனுக்கு ஈடு இங்கு யாரும் இல்லையே

அறிந்தும் அப்பொழுதும், பின் குருநாதர் எதை என்று புரிய, புரியும்படி வந்து, பின் அகத்தியனே. 


அறிந்தும் எவ்வளவு உன் ஞானங்கள், 


எவ்வளவு பின் போற்றியும் பாடி, 


அகத்தியனுக்கு, பின் அகத்தியன், 


பின் ஈடு எதை என்று அறிய, 


***** அகத்தியனுக்கு ஈடு இங்கு யாரும் இல்லையே. *****


அறிந்தும் புரிந்தும் கூட,


===========================

# அகத்தியன் பெயரை உச்சரித்தாலே, ஓடோடி வந்து பாவத்தை நீக்கும் கருணை கடல்.

===========================

இதனாலே இதைத்தன் அறிவித்து, அகத்தியன் எதை என்று புரிய, பின் எப்பொழுதும் அறிந்தும் கூட, 


எவ் யுகங்களிலும் கூட, அறிந்தும் எவை என்று என் பெயர் சொன்னால், 


ஓடோடி வந்து, பின் கர்மத்தை எதை என்று புரிய, 


பாவத்தை பின் அழகாக, பின் நீக்கும் என்றும், பின் அறிந்து, இவை தன் செப்பியவனே   !! 


===========================

# உண்மையான லாபம் இறைவன் தான் லாபம் என்ற உண்மையை உணர்த்தும் ஆசான்.

===========================

செப்பி தீர்த்து, அறிந்தும் இவை தன் உயர்ந்த லாபத்தை, எவ் லாபத்தை என்றால், புண்ணிய லாபத்தை, மனிதனுக்கு கொடுப்பவனே.


அனைவரும் எண்ணுகின்றார்கள், மனிதர்கள் லாபம் என்றால் என்ன??? என்றெல்லாம்,


அதற்கெல்லாம் பின் வழிவகுத்து, உயர்ந்த ஆற்றலோடு, உயர்ந்த லாபத்தை, அதாவது அறிந்தும் இறை லாபத்தை கொடுப்பவனே.


உன்னை எங்கு?, எப்பொழுது?, எதை மனிதன் கண்டுகொள்வானோ!?!?!?!?!

, மனிதன் எங்கு கண்டுகொள்வானோ!???????


உன் பெயரை மட்டும் உச்சரிக்கின்றானே!!!........., 


உம்மை எங்கு காண்பது ????.......


என்று அறிந்தும் எவை என்று, இதற்கு அன்புதான் பிரதானமானது என்று சொல்பவனே.


===========================

# அன்பிற்கு யான் அடிமை என்று சொல்லும் அகத்திய மாமுனிவரின் அன்பு.

===========================

அன்பு பின் யாரிடத்தில் இருக்கின்றதோ?, 


அப்பொழுது யான் வந்து இறங்குவேனே, இறங்குவேனே என்றெல்லாம் சொல்பவனே,


அகத்தியனே. அன்பு கூர்ந்து இருப்பவனே,


===========================

குற்றாலம் மலையிலே செண்பகாதேவி பெயரில் மறைமுகமாக உலகை காத்துக்கொண்டிருக்கும் அன்னை லோபாமுத்திரை தேவியின் ரகசியம்.

===========================

குற்றாலம் மலையிலே செண்பகாதேவி பெயரில் மறைமுகமாக உலகை காத்துக்கொண்டிருக்கும் அன்னை லோபாமுத்திரை தேவியின் ரகசியம்.

அகிலத்தை காக்கும், அறிந்தும் எவை என்றும், 


***** உலோபா முத்திரையாக இங்கு அமர்ந்து, ***** 


அறிந்தும் பின்னாலே, பின் அதாவது, 


பின் செண்பக அருவி என்றெல்லாம், எதை என்று புரிய, 


பின் அறிந்தோடு, எவை என்று கூற, 


எப்பொழுதும் இங்கிருந்து ஆற்றல்கள், 


பின் அதாவது, செண்பகா தேவி என்று கூற, லோப முத்திரையாகவே, அறிந்தும் இவை தன் அறிய, தன் மனைவியை எவ்வாறு என்றெல்லாம்,



நிச்சயம் உலகத்தை இங்கிருந்து, எப்பொழுதும் நீர் இயக்கிக் கொண்டே இரு என்று, நிச்சயம் தன் மனைவிக்கு, பின் அறிந்தும் இவை தன் புரிய, நிச்சயம் ஆற்றல் கொடுத்தவனே.


===========================

# அன்னை லோபமுத்ரா தேவியின் கருணை - ரிஷி புருஷரான அகத்திய மாமுனிவர்  வாக்கை கேட்டு, உலகத்தை காக்கும் ரிஷி பத்தினி.

===========================


அதேபோல், மனைவி எதை என்று புரிய, பின் அதாவது, பின் உனக்கு ஏற்றார் போல், பின் நிச்சயம் யான் செய்கின்றேன் என்று….


===========================

# அன்னை லோபமுத்ரா தேவியின் கருணை -  குற்றால மலையில் இருந்து கொண்டு உலகத்திற்கு தூய்மையான காற்றையும் நீரையும் கருணையோடு தரும் தேவி லோப முத்திரை அன்னை.

===========================

லோபமுத்ரா  இங்கே அமர்ந்து, 


பின் அருளும், அதாவது, 


இவ் காற்றினாலும், 


இவ் நீரினாலும், 


பின் உலகத்திற்கு அனுப்புகின்றாளே.


பெரும் புண்ணியவதி லோப முத்ரா அன்னை - திருக்குற்றாலம். குற்றாலம் மலையிலே செண்பகாதேவி பெயரில் மறைமுகமாக உலகை காத்துக்கொண்டிருக்கும் அன்னை லோபாமுத்திரை தேவியின் ரகசியம்.  

===========================

# பெரும் புண்ணியவதி லோப முத்ரா அன்னை

===========================


***** பின் பெரும் புண்ணியமே, லோபமுத்ரா தாயே!!  ***** 


உன்னை பணிகின்றேனே…


அருள் கூர்ந்து அறிகின்றேனே….


இவ்வளவு எவை என்று கூற, பின் அதாவது, 


அகத்தியன் சொன்னான் என்ற ஒரு வார்த்தைக்கு, 


அறிந்தும் புரிந்தும் எதை என்று அறிய, தட்டாமல், பின் செய்பவளே,


அன்னையே!!! காமாட்சியே, உனையன்றி யார்??? எதை என்று புரிய.

===========================

# ஒரு பெண்ணானவள், கணவனுக்கு கட்டுப்பட்டு இருந்துவிட்டால், அனைத்தும் பெறுவாளே என்று நிரூபித்த தாயே !!!!!

===========================

ஒரு பெண்ணானவள், கணவனுக்கு கட்டுப்பட்டு இருந்துவிட்டால், அனைத்தும் பெறுவாளே என்று நிரூபித்த லோபாமுத்திரை தாயே !!!!!
குற்றாலம் மலையிலே செண்பகாதேவி பெயரில் மறைமுகமாக உலகை காத்துக்கொண்டிருக்கும் அன்னை லோபாமுத்திரை தேவியின் ரகசியம்.
 

ஆனாலும், இவை தன் இப்பொழுது இக்கலியுகத்தில், 

இவ்வாறாக அறிந்தும் புரிந்தும், ஒரு பெண்ணானவள் இருந்துவிட்டால், கணவனுக்கு கட்டுப்பட்டு, அறிந்தும் அனைத்தும் பெறுவாளே என்று, எதை என்று நிரூபித்தவளே,


அறிந்தும் உமையம்மையே, அறிந்தும் பணிகின்றேனே, தாயே  !!!!!

===========================

# பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழும் அன்னை லோப முத்திரையின் அனுசரணை.

===========================

குற்றாலம் மலையிலே செண்பகாதேவி பெயரில் மறைமுகமாக உலகை காத்துக்கொண்டிருக்கும் அன்னை லோபாமுத்திரை தேவியின் ரகசியம்.  

இதை தன் அறிவித்து, எவை என்று அறிய, பின் அதாவது, 

உண்மைதனை புகுத்த..., அதாவது, பெண் என்றால், 


இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை எல்லாம், 


பின் அதாவது, வகுத்து, எதை என்று புரிய, பின் இப்படித்தான் வாழ வேண்டும் என்று, உலகத்துக்கு, பின் அதாவது, பின் கொடுத்தவளே  !!!!!


இப்படி வாழ்ந்தால், உலகம் எவை என்று புரிய, அழியும் வரை, 


அனைத்து ஆற்றல்களும் மறைமுகமாக, பின் மனிதர்களை, பின் காக்கலாம் என்று, நிச்சயம் பெண்ணாக, தாயாக இருப்பவளே  !!!!!


===========================

#அன்னை லோப முத்ரா தேவி -  சித்தர்களுக்கு எல்லாம் தாய்.

===========================

குற்றாலம் மலையிலே செண்பகாதேவி பெயரில் மறைமுகமாக உலகை காத்துக்கொண்டிருக்கும் அன்னை லோபாமுத்திரை தேவி

எப்பொழுதும் அனைத்து சித்தர்களுக்கும் தாயாக இருப்பவளே  !!!!!


உலோக (உலகம்), பின் அறிந்தும் எவை என்று புரிய, லோகா, பின் எவை என்று ஒரு முத்திரை படைத்தவளே   !!!!! 


===========================

தன் பெயரை பின் நிறுத்தி அகத்தியரை முன்னிறுத்தி அன்னை காட்டித்தரும் வாழ்க்கை பாடங்கள்.

===========================


பின் லோகத்தில் அனைத்தும், 


பின் அகத்தியனுக்கு சொந்தம் என்று, 


பின் தன் பெயரை எவ்வாறு என்பதை எல்லாம், 


இதை தன் அறிய, எவ்வாறு என்பதை எல்லாம்,


===========================

# குற்றாலமலை, திரிகூட மலை.. என அழைக்கப்படும் மலை ஒரு காலத்தில் “அன்னை லோபமுத்ரா தேவி மலை” என்று அழைக்கப்பட்டது.

===========================


பின் அகிலம் எவை என்று, இவ் மலைக்கு, பின் எதை என்று புரிய, 


பின் உன்னுடைய பெயரே, பின் இருந்தது.


ஆனாலும், பின் காலப்போக்கிலே, அவை தன் மாறி மாறி, பின் எவை என்று கூற, பல யுகங்களில் மாறி மாறி, பின் போற்றப்பட்டது.


இவைதன் அறிய எவ்வாறு??? மனிதனுக்கு இவை புரியும்,???? 


எவ்வாறு இவை தன் அறியும்?????


அறிவில்லாத மனிதன் அறிந்தும் இதை தன் பயனில்லாமலே திரிகின்றானே.


===========================

(அன்னை லோபா முத்ரா தேவி போல் சேவை தொண்டுகள் செய்பவர் யாரும் இல்லை இந்த உலகத்தில்)

===========================


பின் உம்மைப் போல் யார் சிறந்த ஞானம், பின் உலோபா முத்திரை  தாயே !!!


உன்னைப்போல் அறிந்தும் எவை என்று புரிய, 


அகத்தியனுக்கு எவை என்று கூற, தொண்டுகள் செய்பவர் யார் இவ்வுலகத்தில் !?????.


அப்படி தொண்டுகள் செய்பவளே, பின் அதாவது, பெண்ணாக இருந்து, அனைத்தும் காத்து, அனைத்தும் அதாவது, இயக்குகின்றாளே.


===========================

# தாமரை மலரில் அமர்ந்திருக்கும் தேவி அன்னை லோபமுத்திரா தேவி)

===========================


 இதைதன் அறிய, மறைமுகமாக தாமரையில் இருப்பவளே!!!


பின் எதை புரிய, பின் அகத்தியனே, உன் அன்பிற்கு ஈடு இணை இல்லையே!!!


===========================

# உரோம மகரிஷி அம்மை, அப்பனிடம் கேட்கும் வாய்ப்பு …. 

===========================


மீண்டும் எவை என்று கூற, உன்னை பின் எவ்வாறு துதித்திடுவேன்!??!!!!


மக்களுக்கு எவ்வாறு எடுத்துரைப்பேன்!?!???


பின் உன் அன்பினாலே, எதை என்று கூற, வருங்காலத்தில் யான் வாக்குகளும், பின் எவை என்று கூற, 


தாயே உலோபா முத்திரையே !!!!!  தந்தையே அகத்தியனே !!!!!


யானும் வந்து மனிதனுக்கு சில விஷயங்கள் சொல்ல வேண்டும். எனக்கும் இவ் மலையிலிருந்து, பின் ஒரு வாய்ப்பை தா!!


பின் வாய்ப்பை தா!!


அகத்தியனே, தாயே!!


அறிந்தும் இவை தன் அறிய, தந்தையே, பின் அறிந்தும் இவை தன் அனைத்தும் நீயே துணை. 


===========================

(# பராசக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி, இயற்கை சக்தி, அன்னை லோபமுத்ரா தேவியின் சக்தி….

===========================


இவை அறிவித்து, பின் பரா சக்தியே !!!!!


அறிந்தும் இவை தன் அறிய, ஞான சக்தியே !!!!!  கிரியா சக்தியே !!!!!


உலகம் போற்றும் சக்தியே  !!!!! பின் இயற்கை சக்தியே  !!!!! 


அனைத்தும் நீயே  !!!!! லோபா முத்திரை தாயே  !!!!!  


வணங்குகின்றோமே  !!!!!


அகத்தியனே, வணங்குகின்றோமே  !!!!! 


பாடுபட்டு இதை தன் அறிய, அன்பை சேர்த்த, அகத்தியனே, வணங்குகின்றோமே !!!!!


யாங்களும் உனக்கு துணையாக இருந்து, அனைத்தும் செய்கின்றோமே. ஆசிகளே !!!!! பேராசிகளே !!!!!


பின் அனைவருக்கும், பின் கொடுத்து அருள்வாய், அனைத்தும் அவரவர் விருப்பப்படி நடக்கட்டும் என்றெல்லாம் சொல்வாய்.


பின் குறைகளை தீர்ப்பாய், பாவத்தை போக்குவாய்,


அதாவது, புண்ணியத்தை அளிப்பாய். 


அனைத்தும் நீயே !!!!! அனைத்தும் நீயே !!!!!  அனைத்தும் நீயே !!!!! அகத்தியனே, போற்றி !!!!! 


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.