"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, October 6, 2026

சித்தன் அருள் - 2331 - அன்புடன் அகத்தியர் - கோலாலம்பூர் கூட்டு பிரார்த்தனை வாக்கு - 1 !

 இறைவா நீயே அனைத்தும்! இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்!


இறைவா, எங்களை நன்றாகப் படைத்தாய்! அனைத்தையும் நன்றாகக் கொடுத்திருக்கின்றாயே!


இறைவா உந்தனுக்கு நன்றி! நன்றி!! நன்றி!! சர்வம் சிவார்ப்பணம்






அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால்  23/09/2026  அன்று மலேசியா கோலாலம்பூரில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நடந்த   கூட்டுப்பிரார்த்தனை வாக்கு - பகுதி 1


தேதி: 23 செப்டம்பர் 2026

நாள்: புதன்கிழமை 

நேரம்: மாலை 7:30pm


வாக்குரைத்த ஸ்தலம் : Sri Sakthi Karpaga Vinayagar Temple, Brick fields, Kuala Lumpur, Malaysia


Google map link :- https://maps.app.goo.gl/5tLfwDpfCFeSt2WM8 


கூட்டுப்பிரார்த்தனை ஒருங்கிணைப்பாளர்கள்:- AGATHIYAR UNIVERSAL MISSION, Kuala Lumpur, Malaysia


===========================

# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 

===========================


ஆதி சிவசங்கரியின்  பொற்  கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 


அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் லோபா முத்திரையோடு. 


சுவடி ஓதும் மைந்தன் :- இங்கு உள்ள எல்லோருக்கும் எம்முடைய ஆசிகள். 


குருநாதர்:-  ஆனாலும் பல வினைகள், பல மனிதர்களுக்கு இவ்லோகத்தில். ஆனாலும் எப்படி அகற்றுவது என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த உலகத்தில் பிறந்தவர்கள் எல்லாம்?

 

அடியவர் :- பல பிரச்சனைகள். அதிலிருந்து எப்படி விடுபடுவது என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்.


===========================

# இறைவன் கொடுத்தாலும், ஏன் அதனாலும் கஷ்டங்கள் வரும்?

===========================


குருநாதர்:- நிச்சயம் இப்பிரச்சனைகள், அதாவது பாவத்தை எப்படி விலக்குவது என்றே  தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பொழுது, இன்னும் இறைவன் கொடுத்தால், பின் எதை எதை வேண்டுமென்று அனைத்தும் கொடுத்தாலும், அதனாலும் கஷ்டங்கள் தான் வரும்.

 

அடியவர் :- அதாவது நம்மளுக்கு என்ன பாவம் பண்ணி இருக்கோம் என்று    தெரியாது. ஆனாலும் அதை எப்படி விலக்குவது என்றும்  தெரியாது. அதை தெரியாம தவிச்சிட்டு இருக்கோம். இதுல மேற்கொண்டு இறைவன் நமக்கு  கொடுத்தாலும், நமக்கு அது கஷ்டமாகத்தான் தெரியும்.

 

சுவடி ஓதும் மைந்தன் :-  கஷ்டமாகத்தான் தெரியும். ஏற்கனவே பாவப்பட்டவன் மனிதன். பாவத்தை நம்ம மேல வச்சுக்கும்போது, முதல்ல பாவத்தை எப்படி தொலைக்கிறேன்னு சொல்றாரு. அதையே வந்து அந்த பாவத்தையே தொலைக்க தெரியல. திருப்பி அது வேணும், இது வேணும்னு கேட்டாலும், அதை கொடுத்தாலும், அது மூலம் என்ன ஆகும்?

 

அடியவர் :-  அவனுக்கு கஷ்டம் தான் வரும்.

 

சுவடி ஓதும் மைந்தன் :- கஷ்டம் தான் வரும்ன்றாரு. இறைவன் வந்து இன்னும் கஷ்டம் தான் வரும்பான்றாரு. 


===========================

# முருகப்பெருமானின் கட்டுப்பாட்டில் இவ் தேசம். 

===========================


குருநாதர்:- இதனால் கவலைகள் இல்லை. ஒவ்வொருவரையும் ஒவ்வொரு இடத்தில்  யான் பார்த்திருக்கின்றேன். நிச்சயம் தன்னில் கூட கவலை வேண்டாம். இவதேசமே எதை என்று புரிய பின் நிச்சயம் தன்னில் கூட  பின் அதாவது முருகன் கட்டுப்பாட்டிலே இருக்கின்றது.

 

அடியவர்:- அகத்திய பெருமான், இங்கே அமர்ந்திருக்கும் அனைவரையும், ஒவ்வொருவரையும், ஒவ்வொரு இடத்திலும்,  அந்த ஆன்மாக்களை பார்த்திருக்கிறார். மற்றும் இந்த தேசமான இந்த மலேசியா நாடானது முருகனின் கட்டுப்பாட்டில் உள்ளது. நேற்று நன்றாக ஒரு வாக்குரைத்தார்கள் தண்ணீர் மலையில். 


===========================

# முன் ஜென்ம பந்தம் உள்ள அடியவர்கள்…..

===========================

 

குருநாதர்:- இதனாலே இப்படி நிச்சயம் ஏன் இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள்? எதை என்று புரிய  பின் ஏன் இப்பொழுது இங்கு வந்து சொல்லிக் கொண்டிருக்கின்றேன் என்றால், நிச்சயம் தன்னில் கூட இப்பிறவி பந்தம் அல்ல. முற்பிறவிலே எனை நீங்கள் பின் சந்தித்தவர்கள் தான் அனைவருமே.

 

அடியவர் :- இங்கே அமர்ந்திருக்கும் அனைவரும் முன் ஜென்மத்திலிருந்தே அகத்தியரிடம் தொடர்புடையவர்கள். சித்தருடைய தொடர்பு என்பது ஒரு ஜென்மத்தில் ஏற்படுவதல்ல. பல ஜென்ம தொடர்பு தான் இன்றைக்கு நாம் அனைவரும் சந்திக்கின்றோம். அனைவரும் அகத்தியரின் பிள்ளைகள், பல பிறவிகளாக.


===========================

# நீங்கள் செய்யும் புண்ணியங்களே  உங்களை பார்த்துக் கொள்ளும். 

===========================

# அன்பு குருநாதர் பல உரைகளில் உரைத்த வாக்கு.

===========================


குருநாதர்:- இதனால்தான் ஒவ்வொருவருக்கும் உணர்ந்து உணர்ந்து செய்கின்றேன் யான் நிச்சயம் தன்னில் கூட. 


குருநாதர்:- ஏதாவது நீங்கள் பின் கேட்டாலும், அதை யான் கொடுத்துவிடலாம். ஆனாலும் அதன் மூலம் கர்மா வராமல், அதாவது பாவம் வராமல், யான் பார்த்துக்கொண்டு, புண்ணியத்தை முதலில் தந்துவிட்டால்… அதாவது புண்ணியத்தை செப்பிவிட்டால், உங்களுக்கு அப்புண்ணிய பாதையில் நீங்கள் சென்று, அப்புண்ணியமே உங்களை பார்த்துக்கொள்ளும். ஏற்கனவே பல உரைகளில் இதை தெரிவித்து விட்டேன்.

 

அடியவர் :-  இங்கிருக்கும் அனைவருக்கும் தேவையானதை அவர் அகத்திய பெருமான்  பார்த்து பார்த்து செய்து கொடுக்கிறார்.

 

சுவடி ஓதும் மைந்தன் :-  முதல்ல நீங்க அதை கேட்கலாம், இதை கேட்கலாம். முதல்ல புண்ணியத்தை கொடுப்பார் இறைவன். யாரு? அகத்திய பெருமான்  வந்து யான் புண்ணியத்தை கொடுத்துட்டேன்னா, புண்ணிய பாதையில உங்களை வந்து செல்ல விட்டுட்டேன்னா, இந்த வழியில பாதைன்னு சொல்லிட்டு, அந்த புண்ணியமே என்ன ஆகும்? புண்ணியமே உங்களை பார்த்துக்கொள்ளும்ன்றாரு. ஐயா புரியுதுங்களா? யாராவது புரியலன்னா கேட்கலாம். அந்த புண்ணியமே உங்களை பார்த்துக்கொள்ளும். 


குருநாதர்:- இதை எவை என்று என்று புரிய,  ஆனாலும் இப்புண்ணியமே பல வகையிலும்  கூட உங்களுக்கு உயர்வுகள் கிடைக்கும். இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட கலியுகத்தில் மனிதனிடத்தில் பாவங்கள் தான் அதிகம்.

 

சுவடி ஓதும் மைந்தன் :-  கலியுகத்துல மனிதனுக்கு அதிகமாக எது இருக்குது? 


அடியவர் :-   பாவம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  பாவம் தான் இருக்குது. 


அடியவர் :-  மனிதர்களுக்கு புண்ணியத்தை விட பாவங்கள் அதிகமாக இருக்கிறதுனால, தடைகள் அதிகமாக இருக்கு. அதனால்தான் வெற்றிகள் கிடைப்பதில்லை.


குருநாதர்:- அதனால்தான் நிச்சயம் தன்னில் கூட 


***** புண்ணியத்தை எப்படி ஏற்படுத்துவது? ***** 


***** எப்படி பின் செய்தால் புண்ணியம் பின் ஏற்படும்?  ***** 


*****  என்பதை எல்லாம் யாங்கள் சித்தர்கள் விளக்க வந்திருக்கின்றோம் கலியுகத்தில். ***** 


*****  புண்ணியம் அதிகமாகிவிட்டால், பின் நிச்சயம் பின், அதாவது எதை என்று கூற  பாவத்திற்கு இங்கு இடம் ஏது? ***** 

 

அடியவர் :- அதாவது புண்ணியம். நாம் நினைப்போம் ஒரு சிறு உயிருக்கு உணவளிப்பதால் புண்ணியம் அப்படின்னு சில புண்ணியங்களை மட்டுமே நம்மளுக்கு தெரியும். பல வழிகளிலும் புண்ணியத்தை சேர்க்கலாம். அதை உரைக்கவே சித்தர்கள் இங்கு வந்துள்ளார்கள்.

 

சுவடி ஓதும் மைந்தன் :-   அதனால்தான் முதல்ல பாவம் அதிகமா இருக்குது. பாவம் அதிகமா இருந்தா என்ன ஆகும்? கலியுகத்துல மனிதனுக்கு பாவங்கள் அதிகமா இருக்குதாம். அது போக்க முதல்ல சித்தர்கள் என்ன பண்ணுவாங்க? புண்ணியத்தை கொடுப்பாங்க முதல்ல. அந்த புண்ணியத்தை கொடுக்கின்ற பொழுது பாவம் இருந்தா என்ன ஆகும்? தானாகவே?  


சுவடி ஓதும் மைந்தன் :-  புண்ணியம் பெருக, பெருக. அதான் புண்ணியம் இன்க்ரீஸ் ஆக ஆக….  இது  டிக்ரீஸ் ஆகும் எது? 


சுவடி ஓதும் மைந்தன் :-  பாவம்  டிக்ரீஸ் ஆகும். அப்ப என்ன ஆகும் எல்லாருக்கும்?  நல்ல தெளிவு வந்துரும். அறிவு வந்துரும். இறைவனை காண பாக்கியம் வந்துரும். 


===========================

# அகத்திய மாமுனிவரின் உண்மையான பக்தர்கள். 

===========================


குருநாதர்:- எதை என்று புரிய  இதனால் பல சூட்சமங்கள் நிச்சயம் தன்னில் கூட. 


***** இதனால்தான் என் பக்தர்களை தேர்ந்தெடுத்து, நிச்சயம் இவ்வுலகத்திற்கு யான் நன்மை செய்யப் போகின்றேன் வருங்காலத்தில்.  இனிமேல் பின் நிச்சயம் தன்னில் கூட.  *****


சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால்தான் என் பக்தர்கள், உண்மையான பக்தர்கள் யார் யாரோ, அவர்களை எல்லாம் யான் செலக்ட் பண்ணி, இந்த உலகத்திற்கு அவர்கள் மூலம் நான் பல விஷயங்களை சொல்லப் போகின்றேன். அதை யார் சொல்றாரு?

 

அடியவர் :-  அகத்திய பெருமான்.

 

சுவடி ஓதும் மைந்தன் :-  அகத்திய பெருமான்.


குருநாதர்:- எதை என்று புரிய  அப்பனே இப்படியே விட்டுவிட்டால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட,  மனிதனின் அறிவுகள்  அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே  நிச்சயம் அனைத்தும் கெடுத்து விட்டுச் சென்றுவிடும் அப்பா. 


***** ஆனாலும் சித்தர்கள் யாரும் விடப்போவதில்லை.  *****


சுவடி ஓதும் மைந்தன் :- இப்படியே விட்டுட்டோம்னா என்ன ஆகும்? என்ன ஆகும் ஐயா?

 

அடியவர் :-   அனைத்தும் அழிந்துவிடும்.

 

சுவடி ஓதும் மைந்தன் :- அனைத்தும் அழிந்துவிடும். அதனால என் பக்தர்களுக்கு எல்லாரும் நிறைய பேர் தெரிவிச்சு, இப்படி எல்லாம் வாழுங்க, இப்படி எல்லாம் பண்ணுங்கன்னு சொல்லிட்டு வந்து, நிச்சயமா வந்து அங்கங்க ஏற்படுத்தி ஏதோ ஒன்னு பண்ண போறார். 


===========================

# கலியுகத்தின் கட்டாயம், ஆபத்தான விதி  

===========================


குருநாதர்:- எதை, ஏது என்று புரிய,  ஆனால் கலியுகத்தில் நிச்சயம் தன்னில் எதை என்று புரிய,  எவ்வாறு என்பதெல்லாம். 


குருநாதர்:-  ஆனால் கலியுகத்தின் கட்டாயம், கலியுகத்தின் விதி எதை என்று புரிய பின் ஆனாலும் இறைவன் இல்லை என்று பின் சொல்வதுதான். 


சுவடி ஓதும் மைந்தன் :- கலியுகத்தின் விதியே என்ன? அகத்திய பெருமான்  சொல்றாரு, இறைவனே இல்லை என்று சொல்வதுதான் கலியுகத்தின் கட்டாயம். 


===========================

# கடைசி வாய்ப்பாக…

===========================


குருநாதர்:- ஆனாலும் யாங்கள் விடப்போவதில்லை. பின் அதாவது எங்களுக்கு எதை என்று புரிய, நிச்சயம் அன்புதான் தேவை. 


அவ் அன்பு, எவரெவர் இடத்தில் இருக்கின்றதோ, அவ் அன்பானவர்களை நிச்சயம் அங்கங்கு  ஏற்படுத்தி, மக்களுக்கு பரப்பி விடுவோம். 


அவ்வளவுதான். நிச்சயம் தன்னில் கூட கடைசி வாய்ப்பாக. 


சுவடி ஓதும் மைந்தன் :- அதனால அன்புதான் எங்களுக்கு தேவை. யாருக்கு?......  


சுவடி ஓதும் மைந்தன் :- சித்தர்களுக்கு அன்புதான் தேவை. 


சுவடி ஓதும் மைந்தன் :- அந்த அன்பெல்லாம் எங்கெல்லாம் இருக்குதோ, அந்த அன்பானவர்கள் எல்லாம் வரவழைச்சு, நாட்டுக்கு… அதான்… (இது போல கூட்டு பிரார்த்தனை) இதெல்லாம் வந்து…  அவர்கள் மூலம் யான் நன்மை ஏற்படுத்துவேன். 


குருநாதர்:- எதை எது என்று புரிய  அப்பனே பார்த்துக் கொண்டே இருங்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 


===========================

# கோலாலம்பூரில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகப் பெருமான் ஆசிகள் தந்தாலும்..அதை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு மனிதனுக்கு புண்ணிய சக்திகள் இல்லையே ! 

===========================


குருநாதர்:-  அதாவது நிச்சயம் எதை என்று புரிய  அப்பனே அழகாக விநாயகப் பெருமானும் அமர்ந்து கொண்டிருக்கின்றான் என்பேன்  அப்பனே நிச்சயம் தன்னில் கூட, எதை என்று புரிய.  


*****  ஆசிகள் தந்து கொண்டே தான் இருக்கின்றான் என்பேன் அப்பனே. ***** 


*****  ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட, அதை  ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு மனிதனுக்கு சக்திகள் இல்லையே.***** 


*****  அப்பனே அவ் சக்திகள் தான் புண்ணியம். ***** 

 

அடியவர் :-    இங்க என்ன சொல்றாரு அகத்திய பெருமான்னா, இந்த கற்பக விநாயகர் பிரத்யக்ஷமா இங்கே வீற்றிருக்கிறார்… பார்த்துக் கொண்டிருக்கிறார்…. கேட்டுக்கொண்டிருக்கிறார்…. அருள் புரிகிறார். ஆனால் நம்ம கைக்கு அந்த அருள் வருவதில்லை. ஏன்னா அதை ஏற்கும் தகுதி மனிதனிடத்தில் இல்லை. அதனால அவர் அருள் கொடுத்தாலும், நம் கைகள்ல அது தங்குவதில்லை. அப்படின்னு சொல்லி சொல்றாரு.


===========================

# புண்ணியம் என்ற காந்தகம்.

===========================


குருநாதர்:- அப்பனே புண்ணியம் என்பது என்ன? அப்பனே யாருக்காவது தெரியுமா என்றால், நிச்சயம் தெரியாது அப்பனே. 


யானே சொல்லி விடுகின்றேன். 


***** அப்பனே புண்ணியம் என்பது, அப்பனே நிச்சயம் காந்தகம் போல் என்பேன் அப்பனே.  ****

 

***** காந்தகம் என்று வைத்துக்கொள்வோம். ***** 


*****  அப்பனே மனம்தான் காந்தகம் என்பேன் அப்பனே . ***** 


*****  அவ் மனத்தில், அப்ப நிச்சயம் தன்னில் கூட புண்ணியங்கள் இருந்தால் அப்பனே,  இறைவன் ஈர்த்து, ஈர்த்து, அப்பனே பின் எதை என்று கூற பின்  அறிவு. ***** 

 

 

சுவடி ஓதும் மைந்தன் :-  காந்தகம் என்பது என்ன? 

 

அடியவர் :- இழுக்கும் ஒரு பொருளை இழுக்கும் மனம்.

 

சுவடி ஓதும் மைந்தன் :- மனம்தான் காந்தகம். அந்த புண்ணியத்தை உங்களுக்கு நான் கொடுத்துட்டேன்னா, மனம் காந்தகம் ஆயிடும். அப்ப அந்த… அதாவது புண்ணியத்தை அதிக அளவுக்கு சேர்த்துட்டோம்னா, இந்த மனம் என்பது காந்தகம் ஆயிடும். அப்ப காந்தகம் ஆயிடுச்சுன்னா யாரை இழுக்கும்? 


அடியவர் :-  இறைவனை இழுத்துடும். 


சுவடி ஓதும் மைந்தன் :- இறைவனை இழுத்துடும். இறைவனை இழுத்து, அந்த காந்தகம் என்ன பண்ணும்? இறைவனை இங்க மனசுல வச்சுக்கிடும். அப்ப உங்களுக்கு என்ன ஆகும்? 


எல்லாவற்றிலும் இறைவனுக்கு இருக்கின்றார் என்ற நினைப்பு வந்துவிடும். அப்ப உங்களுக்கு….


கெட்டது செய்ய தோணுமா? 


பொறாமை பார்க்க நினைக்குமா? 


திருட நினைக்குமா? 


பிறரை ஏமாற்ற நினைக்குமா? 


பணம்…… 


இதுதான். ஐயா, நிறைய ரகசியங்கள் வந்து இருக்கு. ஒரு வார்த்தை, ஒரு வரி படிச்சோம்னா, அவர் வந்து சித்தர்கள் வந்து, அவர் எல்லாம் ஒரு பெரிய சயின்டிஸ்டான்னு சொல்லுவேன் நான் வந்து.  எல்லாத்தையும், எல்லாத்தையும் போடுவாங்க. ஐயா, சயின்ஸ்ல இயற்பியல், வேதியியல், உயிர் எல்லாத்தையும் எடுத்து விடுவார். சித்தர்கள் வந்து 


===========================

# அகத்திய மாமுனிவர் மக்களுக்கு கொடுக்க உள்ள காந்தகம்.

===========================


குருநாதர்:- இதை தன் புரிந்து  ஆனாலும் அதனால்தான் நிச்சயம் வருங்காலத்தில் மக்களுக்கு எதை என்று புரிய,  பின் புண்ணியம் என்ற காந்தகத்தை யான் அளிப்பேன் நிச்சயமாக. 


சுவடி ஓதும் மைந்தன் :- அதனால வருங்காலத்தில் என்ன பண்ணுவாரு? புண்ணியம் என்ற காந்தகத்தை அளிப்பேன். அந்த புண்ணியம் நீங்க கொடுத்தீங்கன்னா, இது வந்து மனசு வந்து காந்தகம் ஆயிடுமாம். அப்ப யாராலும் கெட்டது நினைக்க முடியுமா? 


அடியவர்:- முடியாது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப இறைவன் அழகாக இங்கு மனதில் இருக்கிறார். 


===========================

# இறைவனிடம் ஒவ்வொரு ஆன்மாவும் கேட்டு வந்தது என்ன ?

===========================


குருநாதர்:- ஒவ்வொரு ஆன்மாவும் இறைவனை காண வந்தது. ஆனால் அதை தெரியாமல் மாயையில்  சிக்கிக்கொண்டு, நிச்சயம் தன்னில் கூட. ஆனால் இறுதியில் இறைவனை காண ஓடோடி வருகின்றான். எவ்வளவு பெரிய அறிவாளி மனிதன்? 

 

அடியவர்:- அதாவது முதல்லயே பிறந்துடுறோம். ஆனா மாயையில சிக்கி விடுகிறோம். கடைசி காலத்துல… ஒரு 60 வயசுக்கு மேலதான் இறைவான்னு ஓடுறோம். ஆனா அந்த இடைப்பட்ட காலத்தில் செய்த கால விரயம். அகத்திய பெருமான், அதை தான் வந்து எவ்வளவு அறிவாளிங்கிறாரு.


குருநாதர்:- நிச்சயம் ஒவ்வொரு ஆன்மாவும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட இறைவனிடம்  சென்று, இறைவா !!!!! நிச்சயம் உனை பார்க்க வேண்டும். அதற்காகவே பிறவி கொடு… பிறவி கொடு என்று நிச்சயம்…. இவ்வுலகத்தில் உள்ள அனைத்து ஆன்மாக்களும் அப்படித்தான் இறைவனிடம் கேட்கும். 


சரி என்று… பின் பாசத்தோடு நிச்சயம் அனுப்பிவிடுவான். ஆனால் இங்கு செய்வதோ….. ஆனாலும் எதை என்று புரிய.  


***** ஆனாலும் சொல்கின்றேன். *****  


*****  எப்பொழுதும் சொல்வேன். *****  


*****  பூலோகம் என்பது நிச்சயம் தன்னில் கூட மனிதன் வாழ முடியாத எது என்று அறிய நிச்சயம் ஒரு இடம் என்பேன் அப்பனே. ***** 


*****  அதனால்தான் இவ் சித்தர்கள் எது என்று அறிய இன்னும் பல இறை ஆசிகள்  பெற்றோர், ஞானிகள், ரிஷிகள் இப்பூவியை காக்க, நிச்சயம் தன்னில் கூட வந்து கொண்டு, வந்து கொண்டு இன்னும் கூட. ***** 

 

அடியவர்:-  அதாவது என்ன சொல்றாருன்னா, இங்க பிறந்த அனைத்து மனிதர்களுமே, எல்லா தேசத்துல உள்ள மனிதர்களும், இறைவனிடம், இறைவா, உன்னை காண வேண்டும்னு தான் பிறவி வாங்கிட்டு வந்தோம். ஆனா வந்த வேலையை மறந்துட்டோம். மாயையில சிக்கிக் கொண்டோம். அதனால்தான் மக்கள் இப்படி இருக்கிறார்கள் என்று ஞானிகள், பல ஞானிகள் தோன்றி உரைக்கிறார்கள். இறைவனிடம் போ, போ என்று. ஆனால் நடப்பது வேறு.

 

சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த பூலோகத்துக்கு வந்து, பூலோகம் என்பது என்னது?

 

அடியவர்:-  தண்டனை இடம்.

 

சுவடி ஓதும் மைந்தன் :-  தண்டனை இடம். பூலோகம் என்பது தண்டனைக்கான இடம்.  அதனால்தான் இத்தனை ஞானிகள், இத்தனை ரிஷிகள், இத்தனை தெய்வங்கள் வந்து உங்களுக்கு வந்து, மனிதா …. நன்றாக வாழ் , நன்றாக வாழ், நன்றாக வாழ்ன்னு சொல்லிட்டு வந்து, எல்லா தூதர்களும் வந்து சொல்லி இருக்காங்க. வந்து இப்படி எல்லாம் பயன்படுத்திக்கோ. இப்படி எல்லாம் பயன்படுத்திக்கிட்டேன்னா, வந்து நல்லது நடக்கும். 


===========================

# முருகப்பெருமான் மனம் இறங்கும் பாடல்கள் …..

===========================


குருநாதர்:- எதை இன்னும் ரகசியங்கள் சொல்வேன். அதனால் அனைவரும் மற்றவருக்காக நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது வேண்டிக்கொள்ளுங்கள். எதை என்று புரிய, அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று முருகனுடைய பாடலை உங்களுக்கு ஏற்றார் போல், நிச்சயம் தன்னில் கூட மனம் இறங்குவான். 


குருநாதர்:- அருணகிரி எவை என்று கூற அருணகிரி பாடினாலே, முருகன் மனம் இறங்கி விடுவான். அதேபோல் நீங்களும் நிச்சயம் தன்னில் கூட பின் பாடுங்கள். பாடிட்டு பின் உரைப்பேன் யான்.

 

அடியவர் :- அதாவது இங்க என்ன சொல்றாருன்னா, முருகனுக்கு பிடித்த பாடல் அருணகிரிநாதரால்  பாடப்பட்டதுனா, “முத்தை தரு பக்தி திருநகை” என்ற பாடல்.  இங்க இருக்கிற அடியார் யாராவது எல்லாரும் சேர்ந்து பாடுங்க ஐயா.

 

சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாரும் ஒன்றாக சேர்ந்து, எல்லாரும் நல்லா இருக்கணும். மக்கள்  நல்லா இருக்கணும். மக்கள் வந்து புண்ணிய வழியில போகணும்னு சொல்லிட்டு, நல்லா மனசுல எண்ணிக்கிட்டு, முருகர் பாடலை பாடுங்க. அப்புறம் பின்னாடி நான் சொல்றேன், வாக்குன்னு சொல்றாரு. எல்லாரும் வந்து நல்லா பாடுங்க. நல்லா கைதட்டி பாடுங்க. எல்லாரும் நல்லா இருக்கணும் என்று  பாடுங்க ஐயா. 



அடியவர்கள் :- திருப்புகழ் பாடுங்க. அனைவரும் போன் எல்லாம் வச்சிருக்கீங்க. லிரிக்ஸ் எடுத்துக்கோங்க. ஐயா பாடுவாரு. சேர்ந்து பாடுங்க. எல்லாம் திருப்புகழ். நன்றி. 


===========================

# அகத்திய மாமுனிவரின் கூட்டுப்பிரார்த்தனை ஆரம்பம்….. 

===========================


சிவா. திருச்சிற்றம்பலம். 


முத்தைத்தரு பத்தித் திருநகை

அத்திக்கிறை சத்திச் சரவண

முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்


முக்கட்பர மற்குச் சுருதியின்

முற்பட்டது கற்பித் திருவரும்

முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்


பத்துத்தலை தத்தக் கணைதொடு

ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு

பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்


பத்தற்கிர தத்தைக் கடவிய

பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்

பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே


தித்தித்தெய ஒத்தப் பரிபுர

நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி

திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்


திக்குப்பரி அட்டப் பயிரவர்

தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு

சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்


கொத்துப்பறை கொட்டக் களமிசை

குக்குக்குகு குக்குக் குகுகுகு

குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை


கொட்புற்றெழ நட்பற் றவுணரை

வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி

குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.


( அடியவர்கள் பாடி முடித்த பின்னர் …..) 



===========================

# ஆதி ஈசனாரை நினைத்து சிவபுராணம் பாடுக….

===========================


குருநாதர்:- அப்பனே ஓர் முறை அப்பனே   ப்பா நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் ஈசனை நினைத்து அப்பனே பின் அதாவது சிவபுராணத்தை ஓதுங்கள்.

 

அடியவர் :- எல்லாரும் சிவபுராணம் எல்லாரும் சேர்ந்து படிக்கணும்னு ஐயா. 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாரும் நல்லா இருக்கணும்.  உங்கள் மனதில் என்னென்ன குறைகள் இருக்குதோ, அதெல்லாம் இறைவன் கையில…. கற்பக விநாயகர் இருக்காங்க…. அகத்திய பெருமான்  இருக்காங்க…. ஈசன் இருக்காங்க…. எல்லாமே இருக்காங்க…. ஜீவ நாடியில்  எல்லாம் இறை,  சித்தர்கள் வந்துட்டாங்கன்னா…. அகத்திய பெருமான்  எல்லாமே வந்துருவாங்க வந்து. அதனால உங்க குறைகள் என்னென்ன இருக்குதோ வந்து, தயவு செய்து வந்து, இறைவன்ட்ட முறையிட்டு, எப்பா நானும் நல்லா இருக்கணும். மற்றவங்களும் நல்லா இருக்கணும்னு சொல்லி வேண்டிக்கிட்டு… சிவபுராணத்தை எல்லாரும் படிங்க ஐயா. 



===========================

# அடியவர்கள் சிவபுராணம் பாட ஆரம்பித்தனர்…..

===========================



நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!

இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!

கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!

ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க!


வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க!

பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க!

புறத்தார்க்குச் சேயோன் தன் பூம் கழல்கள் வெல்க!

கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!

சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க!


ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!

தேசன் அடி போற்றி! சிவன் சேவடி போற்றி!

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!

சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி!



ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!

சிவன், அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்,

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி,

சிந்தை மகிழ, சிவபுராணம் தன்னை,

முந்தை வினை முழுதும் மோய உரைப்பன் யான்:


………

………

………

………

………

அல்லல் பிறவி அறுப்பானே! ஓ!' என்று,

சொல்லற்கு அரியானைச் சொல்லி, திருவடிக் கீழ்ச்

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ்,

பல்லோரும் ஏத்தப் பணிந்து. 


 திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் 



(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால்  23/09/2026  அன்று மலேசியா கோலாலம்பூரில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நடந்த   கூட்டுப்பிரார்த்தனை வாக்குகள் தொடரும் ……. ) 



அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே!


என்று படித்து, மீண்டும் உம்மை சிக்கென பிடிக்க எங்களுக்கு அருள் கொடுங்கள் தாயே! தந்தையே!! என்று வேண்டுவோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி


ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்.  சர்வம் சிவார்ப்பணம்.  

No comments:

Post a Comment