"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, December 20, 2020

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 41 - ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடி சரணம்!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் நாம் நெக்குருகி போகின்றோம். நேற்றைய உழவாரப்பணி குருவருளால் சிறப்பாக நடைபெற்றது.கலந்து கொண்ட அனைவருக்கும் நம் தளம் சார்பில் நன்றி. சற்று யோசித்துப் பார்த்தால் இந்த ஆண்டின் முதல் உழவாரப்பணியும், இந்த ஆண்டில் நிறைவான உழவாரப்பணியும் குன்றத்தூர் திருஊரகப்பெருமாள் கோயிலில் நடைபெற்றுள்ளது. இது சாதாரண செய்தியாக எடுத்துக்கொள்ள இயலாது. இதனை தான் நாம் குருவருள் என்று கூறுகின்றோம். 2017 ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு குன்றத்தூர் திருஊரகப்பெருமாள் கோயிலில் உழவாரப்பணி செய்து வருகின்றோம் என்பது சிறப்பு செய்தி. இவையனைத்தும் குருவருளாலே என்பது நிதர்சனமான உண்மை.



சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடிலில் நவராத்திரி வழிபாடு, திருநின்றவூர் பாக்கம் ஊரில் அருள்பாலித்து வரும் படி அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர்  ஆலயம் கும்பாபிஷேகம் தரிசனம், கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி தரிசனம், கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆராதனை, கார்த்திகை மாத மோட்ச தீப வழிபாடு என நம் வழிபாடுகள் தொடர்ந்து வருகின்றது. இவை அனைத்தும் ஜீவ நாடி அற்புதங்கள் என்று நாம் கூறலாம். ஏற்கனவே நாம் சொன்ன குன்றத்தூர் திருஊரகப்பெருமாள் கோயில் உழவாரப்பணியும் இதில் அடங்கும். இதற்கு முந்தைய தொகுப்பில் கூறியது போல் சென்ற ஆண்டு கோடகநல்லூர் தரிசன பதிவு விரைவில் தருகின்றோம். இன்றைய பதிவில் மீண்டும் ஜீவ நாடி அற்புதங்கள் தொடர்வோம்.

ஞான ஸ்கந்த மூர்த்தியை குருவிடம் முறைப்படி தீட்சை பெற்று உபாசனை செய்து வந்த ஆரம்ப காலம். எனது 16 வயதில் பாதி புரிந்தும், பாதி புரியாமலும் மந்திர ஜபத்தை மட்டும் விடாது குருவுடன் அடிக்கடி சத்-சங்கத்தில் ஈடுபட்ட காலம். ஒரு முறை எனது பேனா தொலைந்து விட்டது. அப்போது நான் 8 ஆம் வகுப்பு படிக்கிறேன். பேனாவின் விலை ரூ.5/- மட்டுமே அது அப்போது என்னைப் பொறுத்தவரையில் அது பெரிய தொகை. எப்படி வீட்டில் பொய் சொல்வது யார் எடுத்தார்களோ முருகா அவர்களை மன்னித்து விடு. அந்த வயதிலும் ஒரு பக்குவம் தந்தது முருகப் பெருமானும் எனது குருவின் அமுத மொழிகளும் தான். 

முருகன் உன் கையில் இருக்கிறார் என நினைத்துக் கொண்டு யாருக்கும் துன்பம் நினைக்காதே! அது முருகனுக்குப் பிடிக்காத ஒன்று இப்படி உபதேசித்த குரு எப்படி இருப்பார். அவரது திருவடியை நான் என்றுமே மறந்தது இல்லை. எனது குருவிடமும் நான் எதையும் மறைத்ததும் இல்லை.
ஆனால் இந்த பேனா காணாமல் போன விஷயத்தை மட்டும் மறைத்து விட்டேன். காரணம் பயம். 

எனது குருநாதர் 48 ஆண்டுகள் வெள்ளிக்கிழமை விரதம் இருந்து ஒரு வெள்ளி கூட கண் மூடி தூங்காதவர். வெள்ளியில் ஒரு பொழுது உண்டு கண் மூடாமல் கந்தனையே சிந்தனை செய்வது அவரது தவம். அவரது தவத்தின் பலன் முக்காலத்தையும் முருகன் உள் நின்று உரைத்திடும் பாக்கியம் அவருக்கு இளமை முதலே கிட்டியது. முருகன் உரைப்பதை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் வருகின்ற
பக்தர்களுக்கு விடிய விடிய அருள்வாக்கு உரைப்பார். அப்படியே 100% துல்லியமாக இருக்கும். தீர்ந்த பிரச்சினைகள் ஏராளம். ஓய்ந்த அவலங்கள் ஏராளம். நீங்கிய ஆவிகள், சாந்தியான தேவதைகள் ஏராளம். இப்படி தாராளமாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

 அன்று ஒரு நாள் வெள்ளிக்கிழமை இரவு பூஜை முடிந்து குருநாதர் அருள்வாக்கு பீடத்தில் அமர்ந்தார். சாதாரண மனிதன் போல் அன்பாகப் பேசுவார். அருள்வாக்கு சொல்லும்போது காவியுடை அணிந்து காவியில் முண்டாசு கட்டி ருத்திராட்சம் போட்டு அந்த ஆசனத்தின் மீது அமர்ந்து
கையில் பிரம்புகளை வைத்து அமர்ந்தால் சாட்சாத் மிகப் பெரிய சித்தர் அமர்ந்திருப்பது போன்றே கம்பீரமாக இருக்கும். ஆட மாட்டார். பாடுவார் மடை திறந்த வெள்ளம் போல் பாடல் வகை வகையாய் வந்து கொட்டும்.

வந்திருக்கும் மக்கள் அனைவரும் கை கட்டி வாய் பொத்தி கேட்டு விட்டு ஆச்சரியத்துடன் வெளியேறுவார்கள். சொன்னது சொன்னபடி நடந்து விடும். பின்பு அருள்வாக்கு முடிந்த உடன் சாதாரண மனிதன் போல் மாறி விடுவார். காவி கட்டுவதில்லை. அருகில் நான் அமர்ந்துக் கொண்டு
இருப்பேன். குருவை மிஞ்சிய சிஷ்யனாக இவன் வருவான் என்று அடிக்கடி சொல்வார். அன்று கேட்ட அந்த கேள்வி என்னை மீண்டும் முருகனிடம் நெருங்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது.

 ஏம்பா? உன் பேனா தொலைந்து விட்டதே? கிடைத்ததா?

எனக்கு தூக்கி வாரி போட்டது. பேசுவது அந்த முருகப் பெருமான் அன்றோ. எனக்கும் அந்த முருகனுக்கும் மட்டுமே தெரிந்த அந்த இரகசியம் இப்போது வெளிச்சமிடப்பட்டது. ஆம் சுவாமி என சொன்னேன். சரி கிடைக்கும் போ என்றார். சரி என்றேன் அந்த வயதில் எனக்கு இது பெரிய
புதிராக இருந்தது. ஆச்சரியமாக இருந்தது. சொன்னது சொன்னபடி ஒரே வாரத்தில் ரூ.5/- எனக்கு பரிசாக வந்தது. பேனா கிடைக்கவில்லை. 

அந்த பேனாவிற்குரிய பணம் கிடைத்தது.குருநாதரிடம் இருந்து சிறுகச் சிறுக அனுபவம் பெறப் பெற அவரது அனைத்து சக்திகளும் எனக்கு கிடைக்க ஆரம்பித்தது. அதை அவர் பலமுறை உறுதி செய்தார். அன்று ஒரு நாள் அமாவாஸை பூஜை முடிந்து நமது ஞானஸ்கந்தர் நாடியில் முருகன் என்ன உரைப்பார் என மக்கள் கூடி குழுமியிருந்தார்கள். 

நாடியைப் பிரிக்காமலேயே ஒரு பெண்மணியைப் பார்த்து அருள்வாக்கு மேடையில் இருந்து என் மூலம் முருகப் பெருமான் கேட்டார்.

 என்னம்மா, பாயாசம் வைத்து அனைவரும் பங்கிட்டுக் குடித்தீர்களே

அங்கேயே எனது படமும் இருந்தது அதன் முன்பு சிறிது பாயாசம்

வைத்திருக்கலாமே? ஏன் நீ குடிக்கும் அந்தப் பாயாசத்தை நான்

குடிக்கக் கூடாதா? 

என்ற கேள்வியை கேட்டவுடன் குழுமி இருந்த மக்கள் குதூகலித்து குமரனின் கருணையையும் சக்தியையும் எண்ணி வியந்தார்கள். இது முற்றும் உண்மை. சுவாமி படத்திற்கு எப்போதுமே நைவேத்யம் செய்து அதன் பின்பே சாப்பிடும் அந்த பெண்மணி அன்று ஒரு நாள் மட்டும் வைக்காமல் விட்டு விட்டதை முருகப் பெருமான் சொல்லி
விட்டார் என்றால் முருகப் பெருமானின் பார்வை எப்போதுமே அவர்கள் மீது பட்டு வருவது தானே அர்த்தம். அந்தப் பெண்மணி மெய் சிலிர்த்தார்.

முருகன் மீது அவருக்கு எப்போதுமே மாறாத பக்தி. இது எப்படி என்னால் சொல்ல முடிகிறது? என்று பலர் கேட்கிறார்கள். எல்லாம் முருகனின் செயல். என் மனதில் அவர் சொல்வதை நான் அப்படியே சொல்கிறேன். மாய வித்தியோ, மந்திர வித்தையோ அல்லது மை வித்தையோ கிடையாது.
முருகனது தூய அருள் வாக்கை எட்சினி சொல்லும் குறி போல ஒப்பிட்டுப் பேசுவதே மாபாதகமான செயல், அனுபவத்தில் தண்டனைகளையும் பார்த்திருக்கிறேன்.

 எட்சினிகள் என்பது சிறு தேவதை. முறைப்படி பூஜை செய்து சிலர் எட்சினைகளை வசியம் செய்து வைத்துக் கொண்டு வருவோர் வியக்கும் வண்ணம் சில சூட்சுமங்களைச் சொல்லி அசத்துவார்கள். எட்சினியை வைத்து குறி சொல்வார்கள். இது ஒரு சாதாரண பிரச்சினைகளைத் தீர்க்க
உதவும் ஜீவநாடி படிப்பவர்கள் கூட இந்த எட்சினி மூலமே சொல்கிறார்கள் என்று இணையத்தில் படித்ததாக எனது வாசகர் ஒருவர் கேட்டிருந்தார்.

இருக்கலாம். எட்சினிகள் சொல்வதை ஜீவநாடி என்று கூட சொல்லலாம். ஆனால் எதிர்காலத்தில் நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் துல்லியமாக எட்சினிகளால் சொல்ல முடியாது.

இந்த அற்புதத்தோடு மேலும் சில தகவல்களை இங்கே கூறுகின்றோம். நம்மை வழிநடத்தும் சித்தனருள் தளத்தில் இருந்து கீழ்க்கண்ட பகுதியை தருகின்றோம்.




திரு.ஜானகிராமன் அவர்கள், அகத்தியரின் நாடி வாசிக்கிற தகவலையும், ஒவ்வொருவருக்கும் நாடி வாசிக்க முன் பதிவு செய்கிற முறையையும் சமீபத்தில் சித்தன் அருளில் தொகுப்பு 961 & 962 வழி தெரிவிக்கப்பட்டது.

முன் பதிவு செய்தவர்களில் பல அடியவர்களுக்கும் இன்று வரை நாடி வாசிக்கப்படாமல் போகவே, அடியேனுக்கு ஈமெயில் வழி தெரிவித்த கருத்தை, அவருக்கு அனுப்பி, ஏன் இத்தனை தாமதம் என கேட்ட பொழுது, தெரிய வந்த தகவலை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
நிறைய அடியவர்கள் முன் பதிவுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், யாருக்கு நாடி வாசிக்க வேண்டும் என்பதை அகத்தியர், நாடியில் வந்து தெரிவு செய்பவருக்கு மட்டும்தான், தற்போது நாடி வாசிக்க முடிகிறது. பலரின் பெயரை கூறி உத்தரவு கேட்டாலும், அகத்தியப் பெருமான் மௌனம் காக்கிறார்.  இதற்கான காரணத்தை நாடியில் கேட்ட பொழுது, அவர் விவரித்ததை கீழே தருகிறேன்.

"அப்பனே! எமது ஆசியை, அருள் வாக்கை கேட்க முன் வந்திருக்கிற சேய்களின் கர்மா, அவர்களின் மனஎண்ணம், இவைகளில் இத்தனை வருடங்களாகியும், முன்னேற்றமே இல்லை. எத்தனையோ அறிவுரைகள் கூறிய பின்னும் தவறாய் வாழ்க்கையில் வாழ்வது, அதன் வழி கெட்ட கர்மாவை சேர்த்துக் கொள்வதில் திறமையானவர்கள் ஆகிவிட்டார்கள். பிற உயிர்களும் நம்மைப்போல் கர்மாவை கழிப்பதற்காக இந்த பூமியில் வந்தவர்கள்/வந்தவைகள்தான்  என, எந்த கெடுதலும் செய்யாமல் வாழ்வது மிக முக்கியம். ஆகவே, அருள்வாக்கு கேட்க விழைபவர், வாழ்க்கையை தவமாக நேர் முறையில் வாழட்டும். அதன் பின்னர் அவர்கள் விதி விலகி வழிவிட, அப்படிப்பட்டவர்களுக்கு யாம் வாக்குரைப்போம். அதுவரை எம்மை நாடும் சேய்களின் கர்மாவை அவர்களே சரி செய்துகொள்ளட்டும்" என்றார்.

மேலும் கூறுகையில் "எமது நாமத்தை கூறிக்கொண்டே தவறு செய்கிறவர்கள், எமது நாமத்தை கூறி, வியாபார பொருள் போல் உபயோகிப்பதையும் யாம் அறிவோம். அவர்களுக்கான பலனை, யாமே முன் நின்று கொடுப்போம்" எனவும் கூறினார்.

"நிழல் ஒளியுள்ளவரை
உயிர் மூச்சுள்ளவரை
ஆசை அறுந்து போகும்வரை
குரு கடைசிவரை
இறை உள்ளொளி வரை
இதை உணர்ந்திடு மானிடா!"

மேற்கூறிய வார்த்தைகளின் அர்த்தம் உங்கள் அனைவருக்கும் புரியும் என்று நினைக்கிறேன்.

இனி இங்கு தனிப்பட்ட ஒவ்வொருவரின் கர்மாதான், நாடியில் அகத்தியரின் அருள்வாக்கை தீர்மானிக்கும். ஒவ்வொருவரும், தங்கள் செயல்களை, எண்ணங்களை பரிசீலனை செய்து சீர்படுத்தி, நேர்மையாக வாழ்ந்து, அகத்தியரை நினைத்து விளக்கேற்றி, தவமிருந்து, அவரே உங்களை அழைத்து அருள் செய்யும்படி வேண்டிக் கொள்ளுங்கள்.

எப்படி வாழ்ந்தால் இறைவனுக்கு பிடிக்குமோ அப்படி வாழ்ந்து வாருங்கள். புண்ணியம் சேர்ந்து, விதி விலகி வழி விட, அகத்தியப்பெருமானே உங்களை தேடி வருவார். அதுவரை, பொறுமையாக இருப்பதை தவிர வேறு வழி இல்லை.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 40 - குருவே சரணம்... திருவே சரணம்.... - https://tut-temples.blogspot.com/2020/11/40.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 39 - https://tut-temples.blogspot.com/2020/09/39.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 38 - மூன்றாம் நாள் அர்த்தஜாம பூசை - அனைவரின் தரிசனம்!  - https://tut-temples.blogspot.com/2020/09/38.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 37 - இரண்டாம் நாள் சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை ! - https://tut-temples.blogspot.com/2020/09/37.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 36 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! (3) - https://tut-temples.blogspot.com/2020/09/36-3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 35 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/35.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 34 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/08/34.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 33 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/33.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 32 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/08/32.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 31 - குருவே சரணம்...திருவே சரணம் ... - https://tut-temples.blogspot.com/2020/07/31.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 30 - ஜீவநாடி இறைவனுக்குச் சமம் - https://tut-temples.blogspot.com/2020/06/30.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 29 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2020/05/29.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - திருவோணம் நட்சத்திரம்!  - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_12.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 28 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/04/28.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 27 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/27.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 26 - அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்...- https://tut-temples.blogspot.com/2020/03/26.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 25 - அந்தநாள் >> இந்த வருடம் - [2020-21] - https://tut-temples.blogspot.com/2020/03/25-2020-21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 24 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/24.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23-08032020.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

No comments:

Post a Comment