அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இந்த 2020 ஆம் ஆண்டில் நாம் நமது மகா குரு ஸ்ரீ அகஸ்திய மஹரிஷியின் இரண்டாவது முறையாக மார்கழி ஆயில்ய வழிபாடு குருபூஜையாக கொண்டாட இருக்கின்றோம். மதியேது விதியேது கதி உந்தன் பொற்பாதமே என்று குருநாதரின் தாளைப் பற்றி வருகின்றோம். மேலும் மதியேது விதியேது கதி உந்தன் பொற்பதமே என்று குருநாதரின் வாக்கினையும் பற்றி வருகின்றோம். 2.01.2021 அன்று பாண்டிச்சேரியில் நடைபெற்ற ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு செல்ல இருக்கின்றோம்.
வழக்கம் போல் நம் குழு அன்பர்களுடன் இணைந்து காலை சுமார் 7 மணி அளவில் பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் சென்றோம். அங்கே அருள்பாலிக்கும் அனைத்து இறை மூர்த்தங்களுக்கும் அபிஷேகம் நடந்து முடிந்து விட்டது. அப்படியே நாங்கள் காலை உணவை அங்கே உண்டோம். அடுத்து பிரசாத பை தயார் செய்யும் பணியில் இறங்கினோம்.
அடுத்து மேலே மாடியில் ஹோமம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
நாம் நம் நண்பர்களோடு சேர்ந்து சித்தர் தரிசனம் பெற சென்றோம். எப்போது பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் சென்றாலும் இதனை வழக்கமாக்கி வருகின்றோம்.
முதலில் ஸ்ரீ ராமபரதேசி சுவாமிகள் தரிசனம் பெற்றோம்.
இத்தனை முறை சென்றாலும் இம்முறை எம் குருநாதர் தரிசனம் கிடைக்கும் என்று நாம் நினைக்கவில்லை. ஆம்.அங்கே இருந்த தியான மைய அறையை திறந்தோம்.
அறையைத் திறந்ததும் எம் ஆதி குருவாம் வேதாத்திரி மகரிஷி தரிசனம் பெற்றோம். குருவருள் நம்மை எப்படியெல்லாம் பயணிக்க வைக்கின்றது என்று மனதில் நினைத்தோம்.
அடுத்து அப்படியே ஸ்ரீ தேங்காய் சுவாமிகள் சித்தர் தரிசனம் பெற்றோம்.
அடுத்து மகான் ஸ்ரீ வண்ணார பரதேசி சுவாமிகள் தரிசனம் பெற்றோம்.
அடுத்து நேரம் ஆகிக்கொண்டிருந்தமையால் மீண்டும் திருக்கல்யாணம் பார்க்க ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் வந்து சேர்ந்தோம். ஓரளவில் யாகம் ஆரம்பம் ஆகும் நேரமாக இருந்தது.
மீண்டும் பஞ்சாமிர்தம் தயார் செய்யும் சேவையில் ஈடுபட்டோம்.
இதோ யாகம் ஆரம்பம்....
நம் குருநாதர் ஸ்ரீ லோபாமுத்திரா அவர்களோடு தரிசனம் தரும் காட்சி
யகத்திற்காக சங்கல்பம் வாங்கிய போது
இறை மூர்த்தங்கள் அபிஷேகம் ஏற்கனவே நிறைவு பெற்று, அலங்காரம் செய்யும் காட்சி இங்கே
யாகம் முழுமை பெற்ற காட்சிகளை நீங்கள் காண முடிகின்றது. அடுத்து திருக்கல்யாண தரிசனம் தான்.அடுத்த பதிவில் மீண்டும் தொடர்வோம்.
மீண்டும் அகத்தியம் பேசுவோம்.
மீள்பதிவாக:-
பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html
No comments:
Post a Comment