அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
அகத்தியர்
அன்பின் ஆழம் மூலம் நமக்கு கருணை மழை பொழிந்து வரும் சித்தர். அகத்தியரை வழிபட நாம்
எத்தனை பிறவிகள் எடுத்து வந்தோம் என்று நமக்குத் தெரியாது, புல்லாகி பூடாகி புழுவாகி மரமாய்
இதோ
இந்த மனித பிறவியில் நுழைந்திருக்கும் நாம் குரு வழிபாடு, சித்தர்கள் பூஜை
என்று செய்து வருகின்றோம். நாம் மாதந்தோறும் ஆயில்ய ஆராதனை
கூடுவாஞ்சேரியில் உள்ள அகத்தியர் மகரிஷிக்கு செய்து வருகின்றோம்.
வருகின்ற சனிக்கிழமை 02.01.2021 அன்று
வருகின்ற ஆயில்யம் மகா குருபூஜை. இந்த குரு பூஜையை ஒட்டி, உலகெங்கும் உள்ள
அகத்தியர் ஆலயங்களில் வழிபாடு, பூஜை என நடைபெற உள்ளது. நமக்குக் கிடைத்த
தகவல்களை இங்கே தொகுத்து ஒருங்கே தர முயற்சிக்கின்றோம். வாய்ப்புள்ளவர்கள்
அருகே நடைபெறும் அகத்தியர் பூசையில் கலந்து கொண்டு சித்தர் பெருமக்களின்
அருள் பெற வேண்டுகின்றோம்.இந்த ஒரே பதிவில் வருகின்ற மார்கழி ஆயில்ய பூசை
தகவல்களை இங்கே தருகின்றோம். இவற்றை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு வசதியான நேரம் கிடைக்கும் போது அப்படியே தரிசனம் செய்து கொள்ள
ஏதுவாக இந்தப் பதிவு உங்களுக்கு பயன்படும் என்று நாம் நம்புகின்றோம்.
என்னென்னெ கோயில்கள் என்று ஒரு பட்டியல் தருகின்றோம், அடுத்து கோயிலோடு சேர்ந்து ஆயில்ய பூசையின் விபரங்களை தருகின்றோம்.
1. பஞ்சேஷ்டி ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில்
2. பனப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ சௌந்தர்ய நாயகி உடனாய ஸ்ரீ மாயூரநாத ஆலயம்
3. கும்பகோணம் ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் - பாடல் பெற்ற தலமாக
4. திண்டுக்கல் - அகஸ்தியர்புரம் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி விழா - மலைக்கோயில்
5. தோகைமலை அகத்தியர் ஆலயம்.
6. கும்பமலையில் அகத்திய மாமுனிக்கு குருபூஜை
7. மருதமலை ஐ.ஓ.பி காலனி ஸ்ரீ அகத்தியர் குரு பூசை
8. பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம்
9. கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி
10. தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி
11. பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா
இவற்றுள் நாம் இன்னும் பல கோயில்களுக்கு செல்லவில்லை. இந்த பதிவின் மூலம்
நம் குருநாதரிடம் விண்ணப்பம் வைக்கின்றோம். விரைவில் மேற்கண்ட தலங்களில்
நம் குருவின் அருள் பெற இறையருள் இயம்பட்டும்.இது போல் இன்னும் பல
தலங்களில் யாருக்கும் வெளியே தெரியாத வண்ணம் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியருக்கு பூசை
நடைபெற உள்ளது. வருகின்ற மார்கழி ஆயில்யம் குரு பரம்பரையை பின்பற்றும்
அனைவருக்கும் மிக மிக உகந்த நாள். மிக மிக மகிழ்வோடு நாம் நம் குருவை
வரவேற்போம். அது போல் நமக்கு பல வழிகளில் ஜீவ நாடி படித்து நம்மை
வழிநடத்தும் குருநாதர்களின் பாதம் பணிகின்றோம்.
இங்கே நாம் ஏற்கனவே பல பதிவுகளில் தனித்தனியே ஒவ்வொரு கோயிலாக தந்துள்ளோம். முதலில் விடுபட்டுள்ள கோயில்களை இங்கே முதலில் காண்போம்.
1. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில்
இறை நேயர்களே.
கோயில்
நகரம் என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில் எண்ணற்ற மகான்கள், ஞானிகள் தவம்
புரிந்துள்ளனர்.அவர்களில் சைவத்தை பரப்புவதில் சிறந்தவரும் 18
சித்தர்களில் முதன்மையானவருமான ஸ்ரீ அகத்திய பெருமானுக்கு நிகழும்
மங்களகரமான சார்வரி ஆண்டு மார்கழி மாதம் 18ம்நாள் (02.01.2021) சனிக்கிழமை ஆயில்ய நட்சத்திர தினமான அன்று காலை விசேஷ ஹோமம் ,அபிஷேகம், அன்னதானம், மற்றும் மாலை சித்தர் திருவீதி உலாவும் நடை பெற உள்ளது.
அடுத்து தோகைமலை அகத்தியர் ஆலயம் அழைப்பிதழ் பகிர உள்ளோம்.
2. தோகைமலை அகத்தியர் ஆலயம்
இங்கே மூன்று நாட்கள் விழாவாக கொண்டாட உள்ளார்கள். மகா கணபதி ஹோமத்துடன் விழாவினை ஜனவரி 1 ம் நாள் துவக்கி மகா குரு அகத்தியருக்கு அபிஷேகம்,ஆராதனை செய்ய உள்ளார்கள்.
ஜனவரி 3 ஆம் தேதி மகா சுதர்சன வேள்வியுடன் குருபூஜை விழா முழுமை பெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு இணைத்துள்ள அழைப்பிதழை பார்க்கவும்.
அடுத்தது திருக்குற்றாலம் ஸ்ரீ அகத்தியர் வழிபாடு அழைப்பிதழ் தர உள்ளோம்.
3. திருக்குற்றாலம் ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய பெருவிழா
தெற்கே நெல்லை,தென்காசி போன்ற ஊர்களுக்கு சென்றாலே போதும். நம் மனதுள் ஒரு மாற்றம் நிகழ்வும். ஆம். நம் குருநாதர் வாழும் இடத்திற்கு சென்றால் நம் மனம் மத்தாப்பாக ஜொலிக்கும் தானே.. தாமிரபரணி தாய், குற்றாலத் தாய் என இயற்கையின் இன்னமுது இன்னும் நமக்கு கிடைத்து வருகின்றது. இது போன்ற ஊர்களில் நம் குருநாதர் வழிபாடு இன்னும் நம்மை அன்பில் ஆழ்த்தும். திருக்குற்றாலம் ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய பெருவிழா 02.01.2021 சனிக்கிழமை அன்று சிறப்பு வழிபாடு,பூஜைகள், சிறப்பு அன்னதானம் என அனைத்தும் சிறப்பாக நடைபெற உள்ளது. வழக்கம் போல் மேலே அழைப்பிதழ் இணைத்துள்ளோம்.
அடுத்து அப்படியே மதுரையம்பதி செல்வோமா?
4. கூத்தியார்குண்டு ஸ்ரீ அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா
மேலே அழைப்பிதழ் கண்டாலே சிறப்பாக செய்திகள் விளங்கும்.
ஸ்ரீ லோக குரு அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா மற்றும் ஸ்ரீ அகஸ்திய விநாயகர்க்கு ஆத்மநிவேதனம் பூஜை
ஆயிரத்தெட்டிதழ் வீட்டில் அமர்ந்த சித்தன்
அண்டமெல்லாம் நிறைந்திடும் அற்புத சித்தன்... அகத்தியன் !
மூல மந்திரம் :
ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகஸ்திய சித்த சுவாமியே போற்றி!!!
மதுரையாம் பதியில் குன்றத்து கரையில் வட தென் துருவ சமபடுத்த "ஞான நிலையில் தன் அகங்களால் "மண்ணால்" விநாயகர் பிடித்து ஞான ஜீவ நிலை அடைந்து தனது ஆத்மாவை விநாயகர் உருவத்தில் ஒடுக்கி பிரதிஷ்டை செய்த தலத்தில் ஜெயந்தி விழா"
"சிவசீலர் அனைவருக்கும் ஞான ஜீவ நிலை அடைந்து ஞானத்தின் திறவு கோல் திறக்க வாருங்கள்"!!!
நாள் : ஜனவரி மாதம் சனிக்கிழமை கிழமை ( 02.01.2021 ) - மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரம் 18ம் நாள்
பூஜை நேரம் : காலை 7.50 மணி முதல் யாகம் மற்றும் அபிஷேகம் ( குரு ஹோரையில்) அன்னதானம் : காலை 11 மணி முதல்
இடம்: ஸ்ரீ அகஸ்தியர் விநாயகர் ஞான ஜீவ (ஓடுக்கம்) ஆலயம்.
கூத்தியார்குண்டு.
பஸ் ரூட்: ( பெரியார்-- திருமங்கலம் மெயின் ரோடு ) stop கூத்தியார்குண்டு.
" ஸ்ரீ அகத்தியர் ஆசியில் இணைவோம்"!
தகவல் தொடர்புக்கு:
ஸ்ரீ அகஸ்தியர் விநாயகர் ஞான ஜீவ ஆலயம்
9626104771,
9786834050.
மற்றும்
ஸ்ரீ அகஸ்தியர் இறையருள் மன்றம்.
9842170513
9965844336
9842267457.
" ஸ்ரீ அகஸ்தியர் ஈகையில் இணைவோம்" !!!
5. கும்பமலையில் அகத்திய மாமுனிக்கு குருபூஜை
கீழே இணைத்துள்ள அழைப்பிதழை மேலும் விபரங்களுக்கு சரி பார்க்கவும்.
6. சென்னை ஜாபர்ஹான் பேட்டையில் சித்தர்கள் யாகம்
கீழே இணைத்துள்ள அழைப்பிதழை மேலும் விபரங்களுக்கு சரி பார்க்கவும்.
7. வேலூர் அகத்தியர் பெருமான் குருபூஜை விழா அழைப்பிதழ்
கீழே இணைத்துள்ள அழைப்பிதழை மேலும் விபரங்களுக்கு சரி பார்க்கவும்.
8. ஈரோடு மொடச்சூர் ஸ்ரீ சோமேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ அகத்தியர் குருபூஜை அழைப்பிதழ்
அழைப்பிதழை பார்க்கும் போதே மனம் ஏங்குகின்றது. எந்த தலம் செல்ல என்று தான் நமக்கு புரியவில்லை. நமக்கு கிடைத்த தகவல்களை தொகுத்து இங்கே தந்துள்ளோம். ஸ்ரீ அகத்தியர் குரு பூஜை விடுமுறை நாளில் வருகின்றது. எனவே அருகில் உள்ள திருத்தலம் சென்று நெய் விளக்கேற்றி 108 முறை ஓம் அகத்தீஸ்வராய நமஹ என்று கூறி, லோக ஷேமத்திற்காக வேண்டிக் கொள்ளுங்கள்.
இந்தப் பதிவிற்காக பல்வேறு வழிகளில் அலைபேசி, சமூக ஊடகங்கள் வழியாக
(facebook,whatsapp ) தகவல்களை திரட்டித் தந்து உதவிய அனைத்து
நல்லுள்ளங்களுக்கும் இங்கே நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவானை
நீங்காதார் குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர் என்று யுகயுகத்தும் தோன்றும்
அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!
- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்
மீள்பதிவாக:-
பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html
No comments:
Post a Comment