"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, December 13, 2020

கார்த்திகை அமாவாசை சிறப்பு ! 14.12.20 - ஸ்ரீதர அய்யாவாள்!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்று கார்த்திகை மாத மறைமதி வழிபாடு ஆகும். மறைமதி அப்படி என்றால் என்ன என்று கேட்பது நம் காதில் விழுகின்றது. அமாவாசை என்பதை மறைமதி என்று கூறுவது நன்று ஆகும். வழக்கம் போல் இன்று காலை சுமார் 20 நபர்களுக்கு நம் "தேடல்  உள்ள தேனீக்களாய்" குழு சார்பில் காலை உணவு அளித்தோம். இன்று மாலை கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் மோட்ச தீப வழிபாட்டிற்கு ஆயத்தப் பணிகள் செய்துவிட்டோம். இன்று மாலை மோட்ச தீப வழிபாட்டில் சந்திப்போம். இன்று மேலும் ஒரு சிறப்பு வாய்ந்த நாள் ஆகும். அதனை இங்கே அறிய உள்ளோம்.


சிவத்தலமாகிய திருவிசைநல்லூர் என்னும் திருவிசலூரில் வாழ்ந்தவர் ஸ்ரீதரவெங்கடேச தீட்சிதர். இவரை 'ஸ்ரீதர அய்யாவாள்' என அன்புடன் அழைத்தனர். இவரது தந்தை மைசூர் மகாராஜாவிடம் திவானாக பணிபுரிந்தார். இவரின் ஒரே மகன் தான் ஸ்ரீதரஅய்யாவாள்.




இன்றைக்கும் கார்த்திகை அமாவாசையில் இந்தக் கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம்.
கேரள மன்னன் கணபதி என்பவனின் பெண் பாவத்தை போக்கிய திருத்தலம் திருவிசநல்லூர் ஆகும். பெண்களை வஞ்சித்து, ஏமாற்றி வாழ்ந்த கணபதியின் பெண் பாவம் இங்கு வழிபட அகன்றதாம். நம் வாழ்வில் அறிந்தோ, அறியாமலோ செய்த தவறால் பெண் சாபத்திற்கு ஆளாகியிருந்தால், இத்தலம் வந்து வழிபட சாபம் பாவம் நீங்கும்.

இத்தல ஈசனின் திருநாமம் சிவயோக நாத சுவாமி என்பதாகும். சுயம்பு மூர்த்தியான இவர், கிழக்கு நோக்கி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தல விருட்சங்களாக அரசு, வில்வம் உள்ளன. சம்பந்தரின் பாடல் பெற்ற தலம் இது.

திருவிசநல்லூர் பகுதியில் சிறந்த சிவ பக்தரான மகான் ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர் என்பவர், சவுந்தர நாயகி சமேத சிவயோகிநாத சுவாமி திருக்கோவிலில் தினமும் காலையில் வழிபாடு செய்து வந்தார். ஒருநாள் கூட தவறியதில்லை. ஒருமுறை கார்த்திகை அமாவாசை தினம் அன்று இவர் தமது முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்ய ஏற்பாடு செய்தார். மிகுந்த ஆசாரத்துடன் அனைத்து ஏற்பாடுகளும் நடந்தது.

                     

அன்று காலையில் சிரார்த்த நேரத்திற்கு முன்னால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒருவர், வெங்கடேச தீட்சிதரின் இல்லத்து வாசலுக்கு வந்து, தான் மிகவும் பசியுடன் இருப்பதாகவும், உண்ண ஏதாவது தருமாறு வேண்டினான். அவனது தோற்றத்தைக் கண்டு இரங்கிய மகான், இல்லத்தில் சிரார்த்தத்திற்காகச் செய்யப்பட்ட உணவை அளித்தார்.

அவரது செயலைக் கண்ட அந்தணர்கள், ‘இது சாஸ்திர விரோதம். இதற்கு பரிகாரமாக ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர் காசி சென்று கங்கையில் நீராட வேண்டும். இல்லாவிட்டால் ஊர் விலக்கு செய்து, அவரை குடும்பத்துடன் நீக்கி வைக்க வேண்டும்’ என்று கூறியதுடன், சிரார்த்தம் செய்யவும் மறுத்து விட்டனர்.

‘வடநாட்டில் இருக்கும் கங்கையில் ஒரே நாளில் நீராடித் திரும்ப முடியுமா? கும்பகோணத்தில் இருந்து காசியில் இருக்கும் கங்கைக்கு சென்று வருவதற்குள், அடுத்த ஆண்டு திதி வந்து விடுமே!’ என்று மகான் வருந்தினார். இறைவனை நினைத்து மனமுருகி ‘கங்காஷ்டகம்' என்னும் துதி பாடினார். அவர் பாடி முடித்ததும், அவர் வீட்டுக் கிணற்றில் இருந்து கங்கை பொங்கி வழிந்தது. கிணற்றிலிருந்து நீர் மேலெழுந்து வழிந்து பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்து வெள்ளக்காடானது.

இதைக் கண்டு அதிசயித்த மக்கள், ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதரிடம் மன்னிப்புக் கேட்டு, அந்த கங்கை நீரில் நீராடினர். சிரார்த்தம் செய்ய வந்த அந்தணர்கள் தங்கள் தவறை உணர்ந்து மகானிடம் மன்னிப்புக் கேட்க, மகானும் கங்கையிடம் தணியுமாறு பிரார்த்தித்தார். கங்கையும் அடங்கி அக்கிணற்றிலேயே நிலைத்தது என்பது ஐதீகம். அதைத் தொடர்ந்து திதி கொடுக்கப்பட்டது.

காலையில் நடந்த இந்த நிகழ்வுகளின் காரணமான, மகானால் திருவிசநல்லூர் ஆலயத்திற்குச் சென்று இறைவனை தரிசிக்க முடியவில்லை. அன்று மாலை திருவிசநல்லூர் ஈசன் கருவறையில் மூர்த்தங்களிடம், ஒரு துண்டுச் சீட்டு இருந்தது. அதில், ‘இன்று மதியம் ஸ்ரீதர அய்யாவாள் வீட்டின் திதியில் உண்டதால், இரவு நைவேத்தியம் வேண்டாம்’ என்று அந்தத் துண்டுச் சீட்டில் எழுதியிருந்தது.

ஏழையாக வந்து, அய்யாவாள் வீட்டில் திதி உணவை உண்டது சிவபெருமானே என்றுணர்ந்த அனைவரும், ஸ்ரீதர அய்யாவாளை போற்றிப் புகழ்ந்தனர்.
இந்த அற்புத நிகழ்வே ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று திருவிசநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச மடத்தில் நிகழ்கிறது.

மகான் தன்னுடைய கங்காஷ்டகத்தில், ‘கங்கையே நீ இங்கேயே ஸ்திரமாக இரு’ என்று வேண்டுகிறார். அதனால் இந்தக் கிணற்றிலுள்ள தீர்த்தம் எல்லா நாளிலும் கங்கை தீர்த்தமே!. இன்றைக்கும் கார்த்திகை அமாவாசையில் இந்தக் கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம். மகான் வசித்த இல்லம் மடமாக மாற்றப்பட்டுள்ளது.

இங்கு கங்கை பொங்கும் விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழா நாட்களில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. பத்தாம் நாள் கார்த்திகை அமாவாசை அன்று தான் கங்கை கிணற்றில் பொங்குகிறது. அன்றைய இரவு முழுவதும் திவ்ய நாம சங்கீர்த்தனம் நடக்கும். கார்த்திகை அமாவாசையன்று அதிகாலை காவிரி நதிக்குச் சென்று, சங்கல்ப ஸ்நானம் செய்து விட்டு, அங்கிருந்து தீர்த்தம் கொணர்ந்து கிணற்றில் விடுவார்கள். பிறகு கிணற்றுக்கு கங்கா பூஜை நடத்திவிட்டு காலை ஐந்து மணியிலிருந்து எல்லோரும் நீராடுவார்கள். அப்போது அங்கு நடக்கும் கங்கா பூஜையின்போது அந்த கிணற்றில் கங்கை பொங்கி வருவதன் அடையாளமாக நுரை மிகுந்துகொண்டு நீர் மட்டம் உயர்ந்து வருமாம். அன்று ஆயிரக்கணக்கான மக்கள் நீராடினாலும் சிறிதும் நீர் மட்டம் குறையாது. இந்த ஞானம் வழியும் கிணறான திருவிசநல்லூர் தலத்திற்குச் சென்று கார்த்திகை அமாவாசையன்று நீராடுவது பெறுவதற்கு அரிய பெரும் பாக்கியமாகும்.

சிவயோகி ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர் சிவனும், விஷ்ணுவும் ஒன்றே என்று மக்களுக்கு போதித்தவர். தினமும் திருவிசநல்லூர் ஈசனை காலையில் வழிபட்டு விட்டு, அருகில் உள்ள திருவிடை மருதூருக்குச் சென்று, மாலை வேளையில் மகாலிங்க சுவாமியையும் வணங்கி வருவார். அதன் பின்பே தினமும் இரவு உணவை உண்பார்.

திருவிசநல்லூரில் இருந்து திருவிடைமருதூருக்கு செல்லும் வழியில் வீரசோழன் என்ற ஆறு குறுக்கிடும். ஆற்றைக் கடந்து சென்றுதான் தினமும் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை தரிசித்து வருவார். ஒரு நாள் வீரசோழன் ஆற்றில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதரால், ஆற்றினைக் கடக்க முடியவில்லை. இதனால் வீடு திரும்பிய அவர், மகாலிங்க சுவாமியை தரிசிக்காததால் கவலையுற்றார்.

உணவருந்தாமலேயே படுக்கைக்குச் சென்றார். திடீரென வீட்டு வாசல் கதவு தட்டும் ஓசை கேட்டது. ‘நள்ளிரவு நேரத்தில், இந்த அடை மழையில் யார் கதவைத் தட்டுவது’ என்ற யோசனையுடன் கதவைத் திறந்தவருக்கு இன்ப அதிர்ச்சி. திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலய அர்ச்சகர் பிரசாத தட்டுடன் நின்று கொண்டிருந்தார். ‘அய்யா! இன்று ஆற்றில் கடுமையான வெள்ளம் ஓடுகிறது. அதனால் மகாலிங்க சுவாமியை காண உங்களால் வர முடியவில்லை என்பதை அறிந்து கொண்டேன். சுவாமியை தரிசிக்காமல், இரவு உணவு உண்ண மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆகவே தான் திருக் கோவில் பிரசாதத்துடன் வந்து விட்டேன்’ என்றார் அர்ச்சகர்.

பிரசாதத்தைப் பெற்றுக்கொண்ட மகான், மகாலிங்க சுவாமியின் கருணையை எண்ணி வியந்தார். அர்ச்சகரை இரவு வீட்டிலேயே தங்கி செல்ல வேண்டினார். அர்ச்சகரும் சம்மதித்தார். உறக்கத்தில் கடும் குளிரால் அர்ச்சகர் அவதியுறுவதைக் கண்ட மகான், கம்பளியை எடுத்து வந்து அர்ச்சகருக்கு போர்த்தி விட்டார். பொழுது விடிந்தது. மழையும் நின்றது. உறக்கத்தில் இருந்து எழுந்த மகான், அர்ச்சகரைக் காணாமல் திகைத்தார். தன்னிடம் சொல்லாமலே சென்று விட்டாரே என்று எண்ணி விட்டு, விடிந்ததும் விடியாததுமாக, அந்த அதிகாலையிலேயே திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை தரிசிக்க புறப்பட்டார்.

அங்கு மகாலிங்க சுவாமி சன்னிதியில் முதல் நாள் இரவு தன் வீட்டிற்கு வந்த அர்ச்சகர் நின்று கொண்டிருப்பதை கண்டார். அப்போது தான் அவரும் கோவிலுக்கு வந்திருந்தார். இன்னும் கோவில் நடை திறக்கப்படாமல் இருந்தது. அர்ச்சகரிடம் சென்ற தர வெங்கடேசர் நேற்று நடந்ததை நினைவுபடுத்தி, ‘சுவாமி! என்னிடம் சொல்லாமலேயே வந்து விட்டீர்களே!’ என்று வருத்தப்பட்டார்.
அர்ச்சகர் திகைத்தவாறே, ‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?. நான் எப்போது உங்கள் வீட்டிற்கு வந்தேன்? கடுமையான மழை காரணமாக, நான் நேற்று மாலையிலேயே திருக்கோவிலை சாத்திவிட்டு என் வீட்டிற்குச் சென்று விட்டேனே!’ என்றார்.

பின்னர் கோவிலைத் திறந்து கருவறை கதவை திறந்த போது, ஸ்ரீதர வெங்கடேசர், நேற்று இரவு அர்ச்சகருக்கு போர்த்தி விட்ட கம்பளி, ஈசனின் திருமேனியை தழுவிக்கொண்டிருந்தது. அப்போதுதான் அவர்களுக்கு தெரிந்தது “நேற்று நள்ளிரவில் கொட்டும் மழையில் ஸ்ரீதர வெங்கடேசர் வீட்டுக்கு சென்று பிரசாதம் உண்ணக்கொடுத்து, அவர் வீட்டில் தூங்கி வந்தது திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியே'' என்பது. ஈசனின் கருணையை எண்ணி இருவரும் உள்ளம் நெகிழ்ந்தனர்.

பின்னர் ஈசன் அருளால் அற்புதங்கள் பல புரிந்த ஸ்ரீதர வெங்கடேசர் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க சுவாமியிடம் ஜோதி வடிவில் ஐக்கியமானார். கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று திரு விடைமருதூர் திருக்கோவில் மகாலிங்க சுவாமிக்கு, ஸ்ரீதர வெங்கடேசர் மடத்திலிருந்து வழங்கப் பெறும் வஸ்திரம் சாத்தப்படுகிறது.

அதுபோல அன்று உச்சிகாலப் பூஜையின் நைவேத்தியம், திருநீறு முதலிய பிரசாதங்கள் திருக்கோவில் சிவாச்சாரியார் மூலம் மகானின் மடத்துக்கு தந்தருளும் ஐதீக நிகழ்வும் இன்றளவும் நடக்கிறது.
கும்பகோணம்- மயிலாடுதுறை செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவிடைமருதூர். அங்கிருந்து வடமேற்கில் 3 கிலோமீட்டர் தூரத்தில் திருவிசநல்லூர் திருத்தலம் இருக்கிறது.
இன்று அந்த ஸ்ரீ வேங்கடேச ஸ்ரீதர அய்யாவாள் வீடு மடமாக மாற்றப்பட்டுள்ளது. அந்தக் கிணறு இன்றும் உள்ளது. கார்த்திகை அமாவாசியன்று பலரும் இங்குவந்து நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்துவிட்டுச் செல்கிறார்கள்.

நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் இவரது சமகாலத்தவர் . திருவிசைநல்லூரில் 
அய்யாவாள் வீட்டில் கங்கை பொங்கிய அற்புதம் நிகழ்ந்த போது சதாசிவர் உடனிருந்ததாகவும் “ஜய துங்க தரங்கே கங்கே” என்ற கீர்த்தனை அப்போது தான் இயற்றப் பட்டது என்றும் ஒரு ஐதிகம் உள்ளது.
செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் மிகவும் இளவயதிலேயே, பூப்புக்கு முன்பே விதவையானவர். திருவிசை நல்லூர், ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் அனுக்கிரகமும் மந்திர தீட்சையும், வேதாந்த ஞான உபதேசமும் பெற்றவர் என்று சொல்லப்படுகிறது.ஆவுடையக்காள் வரலாறு பலரால் இன்று மறக்கப்பட்டுவிட்டது.( ஆவுடையக்காளின் வரலாறு சுவாமி சிவானந்தா அவர்களின் "Lives of Saints" (Published by Divine Life Society) ஆவுடைஅக்காள் பல தலங்களுக்கும் யாத்திரை செய்து இறுதியில் ஸ்ரீதர அய்யாவாள் ஆசிரமத்தை அடைந்து சிறிது காலம் அவரது வழிகாட்டுதலை வேண்டி நின்றார். அய்யாவாள் மனம் மகிழ்ந்து அவருக்கு ஆசிரமத்திலேயே தங்கி இருக்க ஏற்பாடு செய்தாலும் பிற ஆசிரமவாசிகளோ அவரைக் கண்டால் அலட்சியப் போக்கைக் கடைபிடித்தனர். விதவைப் பெண்ணுக்கு ஆசிரமத்தில் மரியாதைத் தரப்படாதது மட்டுமல்ல, அவர் நாயை விடக் கீழாக நடத்தப்பெற்றார். யாவரும் சாப்பிட்டு எஞ்சிய உணவே அவருக்கு வேண்டா வெறுப்பாக அளிக்கப்பட்டது. ஒரே பெண்மணி அதுவும் விதவைக் கோலம் என்பதனால் அவரோடு பேசுவதையே யாவரும் தவிர்த்தனர்.

ஆவுடையக்காளை நடத்திய விதம் கண்டு சீடர்களுக்கு பாடம் புகட்ட மனம் கொண்டார் அக்காளின் குரு அய்யாவாள்.ஒருநாள் தம் சீடர்களை அழைத்து காவிரி ஆற்றின் நடுவில் இருந்த மணல் மேட்டில் சென்று தியானம் செய்யுமாறு பணித்தார். அவர்களுடன் ஆவுடையக்காளும் இருந்தார். தியானத்தில் அமர்ந்திருந்த போது சீடர்களுக்கு ஆற்றின் நீரளவு உயர்ந்து வருவது புரிந்தது. அவர்கள் விழுந்தடித்துக் கொண்டு கரைசேர்ந்தனர். ஆனால் அக்காளோ தேக நினைவே இல்லாமல் சமாதியில் இருந்ததால் தன்னைச் சுற்றி நீர் சூழுமளவும் தியானம் கலையாமலே இருந்தார். கண்விழித்து பார்க்கும் போது தான் மட்டுமே சிக்கிக் கொண்டிருப்பது புரிந்தது. கரையில் இருந்த அய்யாவாள் ’அங்கேயே இரு’ என்னும் வகையில் தன் கரத்தை உயர்த்திக் காட்டினார். அவரும் குருவின் ஆணைப்படி அந்த இடத்தைவிட்டு அசையாது நின்றார். ஒன்றல்ல இரண்டல்ல மூன்று நாட்கள் ஒரே இடத்தில் நின்றிருந்தார். என்ன ஆச்சரியம் ! அவருடைய காலடியில் இருந்த மணல் திட்டு மட்டும் வெள்ளத்தில் கரையவே இல்லை.
போதேந்திர சுவாமிகளும், சதாசிவ பிரம்மேந்திரரும் இங்கு அமர்ந்துதான் நிறைய சம்பாஷணைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள் இங்குதான் தன்னுடைய பெரும்பாலான நாட்களை கழித்துள்ளார் இது அவ்ரது அவதாரஸ்தலமும் கூட.





 மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 கார்த்திகை அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 14.12.2020 - https://tut-temples.blogspot.com/2020/12/14122020.html

 கார்த்திகை அமாவாசை ஸ்பெஷல் ! 26.11.19 - ஸ்ரீதர அய்யாவாள்! - https://tut-temples.blogspot.com/2019/11/261119.html

கார்த்திகை மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 26.11.2019 - https://tut-temples.blogspot.com/2019/11/26112019.html

 ஐப்பசி அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 14.11.2020 - https://tut-temples.blogspot.com/2020/11/14112020.html

புரட்டாசி அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 16.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/16102020.html

மஹாளய அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 16.09.2020 - https://tut-temples.blogspot.com/2020/09/16092020.html

பித்ரு தோஷம் நீங்க - நென்மேலி ஸ்ரீ லஷ்மி நாராயண பெருமாள் கோயில் - https://tut-temples.blogspot.com/2020/09/blog-post_7.html

மறந்தவர்களுக்கு மகாளய பட்சம் - 02.09.2020 முதல் 17.09.2020 வரை - https://tut-temples.blogspot.com/2020/09/02092020-17092020.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (5) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-5.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html

 தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

மறந்தவர்களுக்கு மகாளய பட்சம் - 14.09.2019 முதல் 28.09.2019 வரை - https://tut-temples.blogspot.com/2019/09/14092019-28092019.html

மகா பெரியவா அருள் வழியில் "மோட்ச தீபம்" வழிபாடு - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post.html

ஆனி மாத இறைப்பணியும், மோட்ச தீப வழிபாடும் - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_21.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - 22.05.2020 - https://tut-temples.blogspot.com/2020/05/22052020.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

மாசி அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 23.02.2020  - https://tut-temples.blogspot.com/2020/02/23022020.html

தை அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 24.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/24012020.html

கார்த்திகை மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 26.11.2019 - https://tut-temples.blogspot.com/2019/11/26112019.html

ஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 27.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/26102019.html

மஹாளய அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 28.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/28092019.html

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... -  https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html

ஆன்மிகமலர்.காம் இணைய இதழுக்கு நன்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_95.html

ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019  - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.htm

திரும்பிப் பார்க்கின்றோம் - ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22.07.2017 - https://tut-temples.blogspot.com/2019/09/22072017.html

 பெரியபுராணம் கூறும் பூரண தானம் அறிவோமே! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_14.html

 ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html

ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html

 தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

 ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

No comments:

Post a Comment