நம் குழுவின் சேவையில் குருநாதர்களின் வழிகாட்டலில் மோட்ச தீப வழிபாடு செய்து வருகின்றோம். தற்போது நிலவி வரும் அசாதாரண சூழலில் நாம் குருவின் வாக்குப்படி ஆத்ம தீபமாகவும் சில மாதங்களில் மோட்ச தீப வழிபாடு செய்து வருகின்றோம். கடந்த நான்கு மாதங்களாக நாம் அனைவரும் கொரோனா என்ற கிருமியால் அனுபவித்து வரும் இன்னல்கள் ஏராளம். இந்த காலகட்டத்தில் எத்தனை மனிதர்கள் எப்படியெல்லாம் தம் உயிரை விட்டிருக்கிறார்கள். அந்த குடும்பங்கள் எவ்வளவு கஷ்டம் அனுபவித்து இருப்பார்கள். மருத்துவனையில் இறந்தவரின் உடலை கூட பார்க்க முடியாது தவித்தவர்கள் ஏராளம். இந்த அசாதாரண சூழலால் யாரும் இந்த இறுதிக்கால காரியங்கள் கூட செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எத்தனை துன்பம் இது? பார்ப்பதற்கு மிக எளிதாக இருக்கலாம். நாம் அந்த நிலையில் இருந்து பார்க்கும் போது தான் அதன் வலியும், வேதனையும் புரியும். இந்த கால கட்டத்தில் தன உயிர் நீத்த ஆத்மாக்களுக்கு மோட்சம் அடைய பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காக இன்றைய பதிவு மகா பெரியவா அருளால் வழங்கப்படுகின்றது.
.
ஆனி மாத மோட்ச தீப வழிபாடானது ஆத்ம தீப வழிபாடாக குருநாதர் ஸ்ரீ அகத்தியர்
ஆசியால் நடைபெற்றது.இதோ உங்கள் பார்வைக்கும் சமர்ப்பிக்கின்றோம். அதற்கு
முன்பாக மோட்ச தீபம் பற்றி சில வார்த்தைகள் உங்களோடு பகிர்ந்து
கொள்கின்றோம்.
10
ம் ஆண்டில் வெற்றி நடை போட்டு வரும் உலக பக்தர்கள் தினம் மலரில் நம்
குழுவால் நடைபெறும் மோட்ச தீப வழிபாடு பற்றி செய்தி வெளியாகி உள்ளது.அதனை
அப்படியே பகிர்கின்றோம்.
இந்த மலரில் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிநடத்தும் மோட்ச தீப வழிபாடு பற்றி 4 பக்க கட்டுரை வெளியாகி உள்ளது. துணுக்குக்கு இடம் தராமல் மிகவும் பரந்து 4 பக்க கட்டுரைக்கு இடம் தருவது இவர்களின் உண்மை உள்ளத்தை பறைசாற்றுகின்றது. இந்தப்பதிவில் நாம் உலக பக்தர்கள் தினம் குழுவிற்கு நன்றியைத் தெரிவித்து கொள்கின்றோம். மேலும் மோட்ச தீப வழிபாட்டிற்கு மாதம் தோறும் பொருளுதவி, நேரிலே வந்து நேரத்தை செலவழித்து உடலுதவி செய்து வரும் அனைவரின் பாதம் பணிகின்றோம்.
மோட்ச தீபம் பற்றி அறிய கீழே உள்ள இணைப்பு படத்தை பார்க்கவும்.
இனி. மஹா பெரியவா காட்டிய வழியில் மோட்ச தீபம் வீட்டிலேயே ஏற்றுவது பற்றி காண உள்ளோம்.
1. நாளை காலை ஜூலை 4 முதல் 34 நாட்கள் தொடர்ந்து இந்த மோட்ச தீப வழிபாடு செய்ய வேண்டும். மோட்ச தீப வழிபாடு தொடங்கும் நாள்: ஜூலை 4' 2020 (04.07.2020)
மோட்ச தீப வழிபாடு நிறைவு நாள்: ஆகஸ்ட் 6' 2020 (06.08.2020)
2. காலையில் எழுந்து நித்ய வழிபாடு செய்து , நெற்றியில் திருநீறு, திருமண் இட்டு, ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, 11 திரி இட்டு விளக்கேற்றவும்.
3, இந்த தீப வழிபாடு காலையில் சுமார் 6 மணிக்கு முன்பு செய்ய வேண்டும்.
4. பின்னர் ஏற்றிய விளக்கை வீட்டிற்கு வெளியில் வைத்து, இந்த வழிபாடு தற்போது கடந்த 4 மாதங்களில் உயிர் நீத்த அனைத்து ஆத்மாக்களும் நற்கதி அடைய பிரார்த்திக்கின்றோம் என்று மனதில் கூறி காற்று தீபம் அணையா வண்ணம் வைக்கவும். கண்டிப்பாக வீட்டினுள் இது போல் 11 திரி தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டாம்.
5. வீட்டிற்கு வெளியில், மொட்டை மாடி, வீட்டின் ஒதுக்குப்புறங்களில் இது போன்று தீப வழிபாடு செய்ய வேண்டும்.
6. சுமார் 30 நிமிடம் வரை தீபம் சுடர் இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
7. தீபத்தை மலையேற்றிவிட்டு, அடுத்த நாள் மீண்டும் இதே போல் அதே அகல் விளக்கில் மீண்டும் 11 திரி பயன்படுத்தி தீபமேற்ற வேண்டும். தீப அகல் மாற்ற வேண்டாம் .திரி மட்டும் மாற்றினால் போதும்.
8. 11 திரி போட்டு விளக்கேற்ற முடியாதவர்கள், இரட்டை திரி இட்டு விளக்கேற்றி இதே போல் வழிபாடு செய்யலாம்.
9. இது போன்று வீட்டின் வெளியில் தீபமேற்ற முடியாதவர்கள் , வழக்கம் போல் நித்ய வழிபாடு செய்து, தற்போது கடந்த 4 மாதங்களில் உயிர் நீத்த அனைத்து ஆத்மாக்களும் நற்கதி அடைய பிரார்த்திக்கின்றோம் என்று கூறி, மகா பெரியவா அவர்களை மனதில் இதே போல் 34 நாட்கள் வரை தினமும் தியானித்து வரவும்.
இந்த வழிபாடு பற்றிய மேலதிக விபரங்களுக்கு:-
10. பொதுவாக பின்வருமாறு கூறி தினமும் பிரார்த்தனை செய்து வர வேண்டுகின்றோம்.
இறைவா! பூலோகத்தை பிரிந்து , சாந்தி அடையாத நிலையிலுள்ள அனைத்து ஆத்மாக்களும் மோட்சம் கிட்டிட அருள்புரிய வேண்டுகின்றோம்.
மஹாபெரியவா பாதம் பணிந்து மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
ஆனி மாத இறைப்பணியும், மோட்ச தீப வழிபாடும் - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_21.html
வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - 22.05.2020 - https://tut-temples.blogspot.com/2020/05/22052020.html
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html
மாசி அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 23.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23022020.html
தை அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 24.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/24012020.html
கார்த்திகை மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 26.11.2019 - https://tut-temples.blogspot.com/2019/11/26112019.html
ஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 27.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/26102019.html
மஹாளய அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 28.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/28092019.html
ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html
ஆன்மிகமலர்.காம் இணைய இதழுக்கு நன்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_95.html
ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html
தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019) - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html
ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.htm
No comments:
Post a Comment