"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, July 5, 2020

வாழ வழி காட்டும் குருவே வருக!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இறை,சித்தர்கள் என்று நாம் பேசும் போது ஸ்ரீ அகத்திய பெருமான் பற்றி நாம் பேசாமல் இருக்க முடியாது. நாம் உரைக்கும் வார்த்தைகள் அனைத்தும் அந்த அகத்தியரின் வார்த்தைகள் தான். நம்முடைய பயணத்தை திரும்பி பார்க்கும் போது, நம்மை எப்படி நம் குருமார்கள் செதுக்கி உள்ளார்கள் என்பது கண்கூடாக தெரிகின்றது. நாம் அது வேண்டும், இது வேண்டும் என்று தினமும் வேண்டுகின்றோம். வேண்டுவனவற்றிற்கு நம்மை நாம் தகுதியாக்கி உள்ளோமா? நம்முள் உள்ள தீமைகளை வேரறுத்து வருகின்றோமா ? ஹ்ம்ம்..ஏதும் இல்லை. பின்னர் எப்படி நாம் வேண்டுவது கிடைக்கும். வேண்டுவது கிடைக்க இறையோடு பேசுங்கள். நித்தம் வழிபாடு செய்யுங்கள். வழிபாட்டில் கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள். நம் தளத்தில் கூட்டுப் பிரார்த்தனை பற்றிய அறிவிப்பு செய்து இருந்தோம். அருப்புக்கோட்டை திரு.சிவபெருமாள் ஐயா அவர்கள் உடல்நலம் பெற்று வீட்டிற்கு வந்து விட்டார்கள்.  அருப்புக்கோட்டை திரு.சிவபெருமாள் ஐயாவிற்கு கூட்டுப்பிரார்தனையோடு நம் தளம் சார்பில் பொருளுதவி செய்தோம். இங்கே அனைவருக்கும் நம் தளம் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இது தான் கூட்டுப் பிரார்த்தனையின் சக்தி. கூட்டுப் பிரார்த்தனை விதியையும் மாற்றக்கூடியது. அடுத்து மீண்டும் ஒரு அன்பருக்காக கூட்டுப்பிரார்த்தனை செய்தோம். 36 வயது அன்பர் திரு.பிரதீப் அவர்களும் பூரண உடல்நலம் பெற்று வீட்டிற்கு வந்துவிட்டார்கள். அவர்களின் நண்பர் திரு.குருசாமி நம்மைத் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்து மகிழ்ந்தார்கள். அனைத்தும் குருவருளால் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நம் தளம் சார்பில் அனைவருக்கும் குரு பூர்ணிமா வாழ்த்துக்களைத் 
(தாமதத்திற்கு வருந்துகின்றோம்) தெரிவித்துக் கொள்கின்றோம்.



கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற வழிபாடு சம்பந்தமாக உங்களிடம் பேச விரும்புகின்றோம். முதலில் சித்தன் அருள் தளத்தின் வழிபாடு பற்றி பேச உள்ளோம்.

1. குரு பூர்ணிமா 16 முக தீப வழிபாடு 

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று நம் குருநாதர் ஒரு உத்தரவை தன் சேய்களுக்காக அளித்ததாக கூறி, அடியேனின் நண்பர் ஒருவர், அகத்தியப் பெருமானின் "சித்தன் அருள்" வாசகர்கள், அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும் தெரிவிக்கும்படி செய்தி கொடுத்தார். நாம் அனைவரும் இதில் பங்கு பெறுவோம்.

நாளை குருபூர்ணிமா தினம். வந்த பாதையை, சற்று பின்நோக்கினால், போன வருட குருபூர்ணிமாவிலிருந்து (அன்று சந்திர கிரஹணம் இருந்தது) அனைத்து கிரகங்களும் ராகு, கேதுவின் பிடிக்குள் மாட்டிக்கொண்டு, இன்று உலகெங்கும் அனைத்து ஜீவன்களும் தவிக்கும் இன்றைய நிலைக்கு கொண்டு வந்து விட்டது. அப்படி தவித்த காலத்தில், தன் சேய்களை, எத்தனை தூரம் சென்று காப்பாற்ற வேண்டுமோ, அத்தனையும், நம் குருநாதர் அரணாக நின்று செய்துள்ளார். நாம் உணராத நிறைய தடைகளை உருவாக்கி வைத்திருந்தார்.

இனி அந்த தடைகளை விலக்கி, நம்மை, கூட இருந்து வழி நடத்த, அகத்தியப் பெருமான் தீர்மானித்திருப்பதாக செய்தி வந்துள்ளது.

நாளைய தினம் குருபூர்ணிமா பூசையை செய்து, முடிவில், அகத்தியர் அருளுடன், 16 முக தீபமேற்றி, மாலை நேரத்தில், சந்திரனுக்குகாக வெளியிடத்தில் வைத்திட வேண்டும். பூஜையில், மதுரை மீனாக்ஷியிடம், குருவிடம் வேண்டிக்கொள்ளச் சொன்னார். நம் பிரச்சினைகள் விலக கோரிக்கை (பொதுநல, தனிப்பட்ட) வைத்து, அவர் அருள் பெற்று நலமாக வாழ, அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில், சமர்ப்பணம்!


அகத்தியப் பெருமானின் உத்தரவின் பேரில், இன்று லோகஷேமத்துக்காகவும், இப்போதய பிரச்சினையிலிருந்து எல்லா ஜீவனும் விடுபடுவதற்காகவும், 16 முக தீபம் ஏற்றச் சொல்லியிருந்தார். இன்று குருபூர்ணிமா தினமாக அமைந்ததால், குருவுக்கு (அகத்தியப் பெருமானுக்குத்தான்), பூசை செய்தபின், அவர் அருளுடன் வீட்டின் முன் 16 முக தீபம் ஏற்றப்பட்டு, வேண்டுகோளும் சமர்பிக்கப்பட்டது. அந்த புகைப்படத்தை உங்கள் பார்வைக்கு தருகிறேன். நீங்களும் எடுத்த படத்தை அனுப்பித்தந்தால் இங்கு பிரசுரிக்கின்றோம்.




[அடியேன் - அக்னிலிங்கம் அருணாச்சலம் ]


ஶ்ரீஅகத்தியர் தீப குழு சார்பில் நேற்று இரவு ஶ்ரீஅகத்தியர் பெருமானிடமும் அன்னை மீனாள் இடமும்  வேண்டுதல் செய்யப்பட்டது.




[திரு.ஆனந்த், எர்ணாகுளம்]


[திரு.முகுந்தன், சென்னை]


[திரு.ஸ்ரீனிவாசன் கோபால்]


[திருமதி.மேனகா, கோபிச்செட்டிபாளையம்]


[திரு.மணிகண்டன், சென்னை]


[திரு.சிவகுமார், திருவனந்தபுரம்]


[திரு.சுவாமிநாதன், பாண்டிச்சேரி}


[திரு & திருமதி.அபிராமி ரமேஷ், கோவை]


[திரு.ரவிக்குமார், கோவை]


[திரு.கோபிநாத் மருதை, நாமக்கல்]


[திருமதி.பாமா ருக்மணி, தேனி]


[திருமதி.ஜெயந்தி ரமேஷ்]




அடியேனின் இல்லத்தில் இருந்து 

அடுத்து நம் தேடல் உள்ள தேனீக்களாய் - TUT குழு அன்பர்கள் இல்ல வழிபாட்டில் இருந்து சில அருள்நிலைகள் கீழே தருகின்றோம்.




                                                                        சௌமியா - சென்னை 


சிவகாசியில் இருந்து திரு.ஐயனார்

இந்த வழிபாட்டில் ஈடுபட்ட அனைவருக்கும் இங்கே நன்றி கூறி ,அடுத்து ஸ்ரீ அருணகிரிநாதர் குருபூசை வழிபாடு காண இருக்கின்றோம்.

2. பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதியில் நடைபெற்ற ஸ்ரீ அருணகிரிநாதர் குருபூசை,திருவான்மியூர், சென்னை










3.  கிண்டி - மஹான் சாங்கு சித்தர் அவர்களின் 121 ஆவது குரு பூஜை  

இந்த பூசை நிகழ்வை காணொளியாக தருகின்றோம்.


மீண்டும் மீண்டும் குருபூசை அருள்நிலை தரிசனம் பெறுங்கள். இந்த கிருமி தொற்று அசாதாரண சூழலிலும் நமக்கு அருளாளர்களின் பூசை காண வாய்ப்பு கிடைத்து இருப்பது குருவருளால் தான் என்று கண்கூடாக தெரிகின்றது. இந்த பதிவுகளை நமக்கு அளித்த நம் அன்பர் திரு. சந்தோஷ் அவர்களுக்கு நம் தளம் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

அருணகிரிநாதர் குரு பூஜை - பௌர்ணமி திதியோடு கூடிய ஆனி மூலம் - 04.07 2020 - https://tut-temples.blogspot.com/2020/07/0407-2020.html

உன்னுள் உத்தமனைக் காணும் வழி - மஹான் சாங்கு சித்தர் அவர்களின் 121 ஆவது குரு பூஜை -  https://tut-temples.blogspot.com/2020/07/121.html

உன்னுள் உத்தமனைக் கண்டோம் - மகான் சாங்கு சித்த சிவலிங்க நாயனார் 119 ஆவது குருபூஜை - https://tut-temples.blogspot.com/2020/07/119.html

உன்னுள் உத்தமனைக் காணும் வழி சாகாக் கல்வி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_70.html

 மகா பெரியவா அருள் வழியில் "மோட்ச தீபம்" வழிபாடு - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post.html

ஆனி மாத இறைப்பணியும், மோட்ச தீப வழிபாடும் - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_21.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - 22.05.2020 - https://tut-temples.blogspot.com/2020/05/22052020.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

மாசி அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 23.02.2020  - https://tut-temples.blogspot.com/2020/02/23022020.html

தை அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 24.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/24012020.html

கார்த்திகை மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 26.11.2019 - https://tut-temples.blogspot.com/2019/11/26112019.html

ஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 27.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/26102019.html

 மஹாளய அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 28.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/28092019.html

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்... - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_4.html

வைகாசி விசாகத்தை வரவேற்போம் - 04.06.2020  - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post.html

இன்றைய ஆனி மாத மக நட்சத்திரம் - மாணிக்கவாசகர் குரு பூசை பகிர்வு  - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_25.html

வான் கலந்த மாணிக்க வாசக! - மாணிக்கவாசகர் குரு பூசை - 06/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/06072019.html

 TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

 எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

No comments:

Post a Comment