"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, June 4, 2020

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய வைகாசி விசாக திருநாளை  அனைவரும் கொண்டாடி இருப்பீர்கள் என்று நாம் நம்புகின்றோம்.  அப்படி கொண்டாட இயலாத அன்பர்கள், இந்தப் பதிவை படித்து, பார்த்து கொண்டாடி மகிழுங்கள். இந்த பதிவை படிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் முருகன் அருள் முன்னின்று வழிநடத்த வேண்டுகோள் வைக்கின்றோம். நாமும் இந்த ஊரடங்கு உத்தரவால் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்த போது பழம் நழுவி பாலில் விழுவது போல், இன்று நம் தளம் சார்பில் கூடுவாஞ்சேரி வேலி அம்மன்  ஆலயத்தில் அருள்பாலிக்கும் ஶ்ரீ முருகப் பெருமானுக்கு அபிடேகம்,ஆராதனை செய்தோம். தித்திக்கும் இன்பம் கண்டோம். இதோ..பதிவின் உள்ளே செல்லும் முன்பு இன்றைய தரிசன அருள் நிலைகளை பெற்றுக் கொள்ளுங்கள் 






அருணகிரிநாதர் அருளிய பழநி திருப்புகழ் பாடி, ஆறுமுகம் பற்றி உணர்வோம்.

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
     ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி

ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
     யார்கள்பத மேதுணைய ...... தென்றுநாளும்

ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
     ஈசஎன மானமுன ...... தென்றுமோதும்

ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை
     யேவர்புகழ் வார்மறையு ...... மென்சொலாதோ

நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
     நீலமயில் வாகவுமை ...... தந்தவேளே

நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
     நீடுதனி வேல்விடும ...... டங்கல்வேலா

சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
     தேவர்துணை வாசிகரி ...... அண்டகூடஞ்

சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
     தேவர்வர தாமுருக ...... தம்பிரானே.

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி - ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்று ஆறுமுகனின் திருப்பெயரை ஆறுமுறை பக்தியுடன் சொல்லி விபூதியாகிய திருநீறை

ஆகம் அணி மாதவர்கள் - தன் உடலில் (ஆகம் - உடல்) அணியும் பெருந்தவம் செய்தவர்கள் (மாதவர் - மாபெரும் தவத்தைச் செய்தவர்கள்)

பாதமலர் சூடும் அடியார்கள் பதமே துணைய(து) என்றுநாளும் - மாதவர்களின் பாதமலர்களை தன் தலையில் சூடும் அடியார்களின் பாதமே துணையது என்று நாள்தோறும் (அடியார்க்கு அடியார்க்கு அடியேன் என்கிறார்)

ஏறுமயில்வாகன குகா சரவணா எனது ஈச - மயிலை வாகனமாக உடையவனே; குகனே (இதயக்குகையில் வாழ்பவனே), சரவணா, எனது ஈசனே

என மான முன(து) என்று ஓதும் - என்னுடைய மானம் (பெருமை, சிறுமை எல்லாமே) உனது என்று எப்போதும் ஓதுகின்ற

ஏழைகள் வியாகுலமி(து) ஏதென வினாவில் - உன் அடியவர்கள் குறைகள் நீ கண்டுகொள்ளாமல் இருந்தால்

உனை ஏவர் புகழ்வார் மறையும் என்சொலாதோ - உன்னை யார் புகழ்வார்கள்? வேதங்களும் 'என்ன இது? உனக்குத் தகுமா?' என்று கேட்காதா?

நீறுபடு மாழைபொரு மேனியவ வேல - திருநீற்றினை அணிந்து பொன் போன்ற மேனியுடையவனே வேலவா

அணி நீலமயில் வாக உமை தந்தவேளே - அழகான நீலமயிலை வாகனமாக உடையவனே; உமையவள் தந்த தலைவனே

நீசர்கள் தமோ(டு) எனது தீவினையெலாம் மடிய - கீழானவர்களுடன் சேர்ந்து நான் செய்த என் தீவினைகள் எல்லாம் அழிய (அ) கீழானவர்களான அசுரர்களுடன் நான் செய்த தீவினைகளும் அழிய (அசுரர்கள், தீவினைகள் இரண்டும் அழிய)

நீடுதனி வேல்விடும் மடங்கல்வேலா - நீண்ட பெருமைவாய்ந்த வேலினை விடும் சிங்கம் போன்ற வேலவா

சீறி வரும் மாறவுணன் ஆவி உணும் - சீறி வரும் யானைமுகம் கொண்ட மாற்றானான கஜமுகாசுரனின் உயிரை எடுத்த

ஆனைமுக தேவர்துணைவா - ஆனைமுகத் தேவரான பிள்ளையாரின் தம்பியே (துணைவனே; நண்பனே)

சிகரி அண்டகூடஞ் சேரும் அழகார் பழநிவாழ் குமரனே - அழகிய சிகரத்துடன் கூடி அண்டங்களை எல்லாம் மூடி நிற்கும் அண்ட கூடத்தினைத் தட்டும்படி உயரமான அழகு மிகுந்த பழனியின் வாழ் குமரனே

பிரம தேவர் வரதா முருக தம்பிரானே - பிரம்மதேவருக்கு அருளியவா; முருகனே; என் பிரானே!

முருகனின் ஆறு திருமுகங் களைப் பற்றி திருமுருகாற்றுப்படையில் நக்கீரர்.

உலகை பிரகாசிக்கச் செய்வது ஒரு முகம்
பக்தர்களுக்கு அருள்வது ஒரு முகம்
உபதேசம் புரிவது ஒரு முகம்
வேள்விகளைக் காக்க ஒரு முகம்
தீயோரை அழிக்க ஒரு முகம்
வள்ளியுடன் குலவ ஒரு முகம்”என்கிறார்.



குமரகுருபர சுவாமிகள் ஆறு திருமுகங்களைப் பற்றி 

சத்ரு ஸம்ஹாரத்திற்கு ஒரு முகம்
அஞ்ஞானம் அழிக்க ஒரு முகம்
சக்தியுடன் இணைந்து அருள ஒரு முகம்
பக்தர்களுக்கு அருள ஒரு முகம்
ஞானம் அளிக்க ஒரு முகம்
முக்தி அளிக்க ஒரு முகம்



திருப்புகழில் ஆறுமுகங்கள் பற்றி 

ஏறுமயிலேறி வினையாடு முகம் ஒன்று
ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவவேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீயருளவேண்டும்
ஆதியருணாசலம் அமர்ந்த பெருமாளே

அட..நம் அருளாளர்கள் தாங்கள் உணர்ந்த மெய்ப்பொருளை எப்படி நமக்கு தந்துள்ளார்கள். ஆறுமுகம் பற்றி நம் வினைகளை நீக்குவோம். அதற்கு முன்பாக மீண்டும் அழகனின் தரிசனம் பெற உள்ளோம். அகாலங்களை தவிர்க்கும் , அகரம் ஸ்ரீ சுப்பிரமண்ய சுவாமி தரிசனம் பெற உள்ளோம்.








இன்னும் இன்னும் ம்,மனம் ஏங்குகின்றதா? ஆம். அதுதான் முருகப் பெருமானின் தரிசனம். எப்படியோ இன்றைய வைகாசி விசாக திருநாளில் இரன்டு கோயில்களில் இருந்து நாம் முருகன் அருள் பெற்றிருக்கின்றோம் என்றால் குருவாய் முருகப் பெருமான் நம்மை வழிநடத்துகிறார் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகின்றது. 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 வைகாசி விசாகத்தை வரவேற்போம் - 04.06.2020 - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post.html

வைகாசி விசாகத்தை வரவேற்போம்  - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_51.html

 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே... குரு பெயர்ச்சி சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_24.html

 அகரம் ஸ்ரீ சுப்பிரமண்ய சுவாமி திருவடி சரணம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_4.html


வைகாசி விசாக பெருந்திருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_15.html

2 comments:

  1. murugan perumaigalai alugudan apathivitamai ku nandri ayya

    ReplyDelete
    Replies
    1. முருகா சரணம்.
      தங்களின் கருத்திற்கு நன்றி ஐயா

      Delete