ஆனி மாத இறைப்பணியும், மோட்ச தீப வழிபாடும் என்ற நேற்றைய பதிவில் ஆனி மாத மோட்ச தீப வழிபாடு பற்றி கண்டோம். இன்று அதன் தொடர்ச்சியாக ஆனி மாத அமாவாசை இறைப்பணி பற்றி காண்போம்.பதிவின் தலைப்பை பார்த்து, நாம் இன்று என்ன சிந்திக்க
இருக்கின்றோம் என்று கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.
தெரியவில்லையா? ஆம். நம் தளத்தின் ஆதாரமாக விளங்கும் அன்னதானம் பற்றி இன்று
பேச இருக்கின்றோம்.
ஒவ்வொரு அறப்பணியிலும் நாம் பூஜ்யத்தில் தான் ஆரம்பித்தோம். ஆனால் இன்று
அறப்பணியின் சேவை குருவருளால் அர்ப்பணிப்போடு நடைபெற்று வருகின்றது.
அன்னதான சேவை முதலில் பௌர்ணமி நாட்களில் மட்டுமே செய்து வந்தோம். ஆனால்
இன்று அமாவாசை, ஷஷ்டி,கிருத்திகை என்று சேவை விரிவாக நடைபெற்று வருகின்றது.
ஆயில்ய வழிபாட்டிலும் தற்போது குருநாதரின் வழிகாட்டலின் படி, ஒவ்வொரு மாதமும் நம் குருநாதர் அலங்காரம் சிறப்பாக கண்டு வருகின்றோம்.இதில் நாம் தற்போது அகப்பூசையிலும் கவனம் செலுத்தி வருகின்றோம்.
வாழ்க்கை படகில் ஓடிக் கொண்டிருந்தேன். சுமார் மூன்று ஆண்டுக்கு முன்பு
அகத்தியர் வனம் அறிமுகம் கிடைத்தது. பல்வேறாய் தொண்டு செய்பவர்களுடன்
அறிமுகம் கிடைத்தது. அன்ன தர்மம் செய்வது பற்றி நினைத்தேன். அகத்தியர் வனம்
மலேசியா குழு அன்னதானம் செய்வதை பார்த்தேன்.
நமது முதல் அன்னதானம் 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ம் தேதி (14.02.2016)
நடைபெற்றது. மார்ச் மாதம் மேலும் சில நண்பர்கள் கை கோர்த்தனர். அன்பு
தொண்டு இல்லம், கூடுவாஞ்சேரி வள்ளலார் கோவில், திருப்போரூர் முருகன் கோவில்
என மாதம்தோறும் குருவருளால் தொண்டு செய்தோம்.அப்போது நாம் வேறெதுவும்
நினைக்கவில்லை. பின்னர் நண்பர்களின் துணையுடன் தேடல் உள்ள தேனீக்களாய் -
TUT என்ற பெயரில் நம் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
இந்த பணி கோவில் சுத்தம் செய்தல், ஆசிரமத்திற்கு உதவுதல் என நீண்டது. நம்
குழு சார்பில் மரம் நடு விழா, மோட்ச தீபம், ஆலயங்களுக்கு தீப எண்ணெய்
வழங்குதல், உழவாரப்பணி, அன்னதானம், மாதந்தோறும் சித்தர்கள் வழிபாடாக ஆயில்ய
ஆராதனை, மலை யாத்திரை என தொடர்ந்து வருகின்றோம். தற்போது 100
உறுப்பினர்களுடன் "தேடல் உள்ள தேனீக்களாய்" என்ற பெயருடன் இயங்கி
வருகின்றோம்.
எப்படி ஆரம்பித்தோம் என்று இப்போது நினைத்து பார்த்தாலும் பிரமிப்பாய்
உள்ளது. அனைத்திற்கும் காரணம் தேட நாம் தான் முயலுவோம். ஆனால் அந்த
பரம்பொருள் நம்மை வழிநடத்தி வருவதை பார்க்கும் போது நாம் இன்னும்
ஆன்மிகத்தில் இப்போது தான் காலடி எடுத்து வைத்துள்ளதாக உணர்கின்றோம். நம்
கையில் ஒன்றுமே இல்லை. அனைத்தும் குருமார்களின் ஆசியோடு தான் நடைபெற்று
வருகின்றது.
TUT அன்னசேவை பற்றி இன்னும் பேசுவோம். இந்தப் பதிவுகளை பார்க்கும் போது
நாம் இங்கே அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் பொருட்டும், கடந்து வந்த பாதை
என்ற நிலையிலும் பார்க்க விரும்புகின்றோம். முதன் முதலாக கூடுவாஞ்சேரியில்
சுமார் 10 உணவு பொட்டலங்கள் கொடுத்தோம்.
அடுத்து நம் அலுவலக நண்பர் திரு, சிவகுமார் அவர்களின் துணையுடன் வேளச்சேரி
மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அன்ன சேவை செய்து உள்ளோம். சுமார் 100
நபர்களுக்கு உணவு கொடுக்கும் பொருட்டு இந்த சேவை வேளச்சேரியில் தொடங்கி
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் வரை தொடரும். இது போல் சில மாதங்கள்
அன்னசேவை தொடர்ந்துள்ளோம். இதற்கு நம்முடன் கரம் கோர்த்த அன்பர்களுக்கு
நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் நம்முடன் இணைந்த மலேஷியா
அகத்திய அடியார் பெருமக்களுக்கும் நன்றி கூறுகின்றோம்.
அடுத்து நம்மால் கூடுவாஞ்சேரியில் இருந்து வேளச்சேரி வரை சென்று வர
முடியவில்லை. கூடுவாஞ்சேரி வந்து ஓராண்டு கழித்து நமக்கு வள்ளலார் கோயில்
பற்றி தெரிந்தது. பின்னர் கூடுவாஞ்சேரி வள்ளலார் கோயிலில் வாய்ப்பு
கிடைக்கும் போதெல்லாம் மதியம் அன்னசேவை செய்து வந்தோம். இந்த சேவை மேலும்
தொடர வேண்டும் இனி மாதம் தோறும் அமாவாசை அன்னதானம் என்று செய்து வந்தோம்.
அமாவாசை அன்னதானம் இன்று வரை நம் தளம் சார்பில் நடைபெற்று வருகின்றது.
அடுத்து அமாவாசை அன்னதானம் மற்றொரு வழியில் தன்னை பெருக்கி கொண்டது. ஆம்.
நம் தளத்தின் மூலம் நடைபெற்று வரும் மோட்ச தீப வழிபாடு மூலம் அன்று சுமார்
100 பேருக்கு உணவு வழங்கி வருகின்றோம். நமக்கே இது ஆச்சர்யமாக உள்ளது?
இந்த அமாவாசை மோட்ச தீப அன்னசேவைக்கு சுமார் ரூ.3000 ஆகும். ஆனால் கடந்த
ஓராண்டுக்கும் மேலாக இந்த தொண்டு நடைபெற்று வருகின்றது.
இப்படியே தொடர்ந்த அன்னதானம் மேலும் பல தன்னலமற்ற சேவை அமைப்புகளோடு
இணைந்து நடந்து வருகின்றது. கூடுவாஞ்சேரி வள்ளலார் கோயில், மதுரை ஸ்ரீ
அகத்தியர் இறையருள் மன்றம், திருஅண்ணாமலை தயவு சித்தாஸ்ரமம் என தொடர்ந்து
வருகின்றது. இங்கு சிலவற்றை தான் குறிப்பிட்டு கூறியுள்ளோம். இந்த 2020 ஆம்
ஆண்டு அன்னசேவை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் செய்தோம். நம் தளத்தின்
ஆணிவேராக அன்னசேவை தான் தற்போது வரை நடைபெற்று வருகின்றது. இது தவிர சில
நாட்களில் சிறப்பு அன்னதான சேவையும் நம் தளம் சார்பில் நடைபெறும்.குறிப்பாக
ஆடி, புரட்டாசி மாத அமாவாசை நாட்களில் இது போன்ற சேவை தொடரும்.
ஆங்..சொல்ல மறந்து விட்டோம். சென்ற 2019 ஆண்டில் புரட்டாசி அமாவாசை ஒட்டி
நம் தளம் சார்பில் மகாளயபட்ச நாட்கள் முழுதும் இது போன்ற சேவை செய்தோம்.
எப்பொழுது நாம் இந்த இறைப்பணியான அன்னதானம் செய்ய முடியும்? இதற்கு நாம் நம் ஒளவைப்
பாட்டியை அழைப்போம். ஆம். அறம் செய்ய விரும்பினால் தான் இது போன்ற இறைப்பணி பற்றி பேச, சிந்திக்க, செய்ய முடியும்.
அறம் செய விரும்பு
இதில் உள்ள அறம் என்ற சொல்லிற்கே நாம் நாளெல்லாம் பொருள் கூறலாம். அறம் என்றால் தர்மம். அறம் இருவகைப்படும். இல்லறம், துறவறம். சொன்னது நம் வள்ளுவர். அவர் சொல்லிவிட்டால் நாம் கேட்டுத் தான் ஆக வேண்டும். இல்லறத்தார்க்கு இருபது அதிகாரத்திலும், துறவறத்தார்க்கு பதிமூன்று அதிகாரத்திலும் அவரவற்குரிய ஒழுக்க மற்றும் வாழ்வியல் நடைமுறைகளை, தர்மத்தை, கடமையை (செயல்முறையை) விளக்குகிறார். இது மட்டுமின்றி அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில் அறனை பற்றிய சிறப்பை வலியுறுத்தி பத்து குறட்பாக்கள் உள்ளது. இது நம் தாத்தா சொன்னது. இன்னும் திருமூலர் போன்ற சித்தர் பெருமக்கள் அறம் பற்றி கூறி இருக்கின்றார்கள். அவற்றைப் பற்றி எழுதினால் பதிவின் நீளம் நீளும். இவற்றைத்தான் நம் ஒளவை பாட்டி ஒரே வரியில் அறம் செய விரும்பு என்று கூறி உள்ளார்.
இதில் உள்ள அறம் என்ற சொல்லிற்கே நாம் நாளெல்லாம் பொருள் கூறலாம். அறம் என்றால் தர்மம். அறம் இருவகைப்படும். இல்லறம், துறவறம். சொன்னது நம் வள்ளுவர். அவர் சொல்லிவிட்டால் நாம் கேட்டுத் தான் ஆக வேண்டும். இல்லறத்தார்க்கு இருபது அதிகாரத்திலும், துறவறத்தார்க்கு பதிமூன்று அதிகாரத்திலும் அவரவற்குரிய ஒழுக்க மற்றும் வாழ்வியல் நடைமுறைகளை, தர்மத்தை, கடமையை (செயல்முறையை) விளக்குகிறார். இது மட்டுமின்றி அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில் அறனை பற்றிய சிறப்பை வலியுறுத்தி பத்து குறட்பாக்கள் உள்ளது. இது நம் தாத்தா சொன்னது. இன்னும் திருமூலர் போன்ற சித்தர் பெருமக்கள் அறம் பற்றி கூறி இருக்கின்றார்கள். அவற்றைப் பற்றி எழுதினால் பதிவின் நீளம் நீளும். இவற்றைத்தான் நம் ஒளவை பாட்டி ஒரே வரியில் அறம் செய விரும்பு என்று கூறி உள்ளார்.
அட..இதென்ன என்று ஆச்சர்யம் பட வேண்டாம். இம்மாத இறைப்பணி செய்ய பல அன்பர்கள் நம்மோடு கை கோர்த்தார்கள். குறிப்பாக மலேசியா அகத்தியர் அடியார்கள் ஆவர். நாமும் வழக்கமாக இம்முறை அமாவாசை மோட்ச தீப வழிபாட்டில் அன்னசேவை செய்ய எண்ணினோம். ஆனால் இம்முறை ஆத்ம தீப வழிபாடாக நடைபெற்றதால், ஊரடங்கு காரணமாக வழக்கமான அன்னசேவை இம்முறை செய்ய இயலவில்லை. அடுத்து என்ன செய்வது என்று யோசித்து, சரி...கூடுவாஞ்சேரி வள்ளலார் கோயிலில் செய்யலாம் என்று தீர்மானித்தோம்.
இரண்டு முறை வள்ளலார் கோயில் சென்று முயற்சி செய்து பார்த்தோம். ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த பொழுது ஆதி சிவன் டிரஸ்ட் மூலம் சோழிங்கநல்லூர் பகுதியில் அன்னசேவை செய்யலாம் என்று தீர்மானித்து, திரு.சீனிவாசன் ஐயா அவர்களை தொடர்பு கொண்டு பேசினோம். அவரும் சம்மதம் தெரிவித்தார்.
அடுத்து வழக்கமான வேலைகள் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது சரியாக சென்ற வெள்ளிக்கிழமை அன்று மலேசியாவில் இருந்து அன்பர் திரு. பாலச்சந்திரன் அன்னசேவை பற்றி நம்மிடம் கேட்டார். உடனே நாம் அவருக்கு பதில் சொல்லிவிட்டு, உடனே கூடுவாஞ்சேரி வள்ளலார் கோயிலை தொடர்பு கொண்டோம். உடனே அவர்கள் சம்மதம் தெரிவிக்கவே, அப்படியே வள்ளலார் கோயிலுக்கு சென்று ஆனி மாத அன்னசேவை செய்ய உறுதி செய்து விட்டு வந்தோம். அப்பொழுது தான் நமக்கு மனது திருப்தியாக இருந்தது.
சரி..வாருங்கள் ..அருமையான தரிசனம் கண்டு, அன்னசேவை செய்வோம்.
அன்றைய தினம் காலை 11 மணி அளவில் கோயில் அன்பரிடம் விளக்கேற்ற இலுப்பெண்ணை வாங்கித் தரலாமா? என்று கேட்டோம். அவர்களும் சரி என்று கூறினார்கள். உடனே 1 டின் இலுப்பெண்ணை வாங்கிக் கொண்டு வள்ளலார் கோயிலுக்கு சென்றோம்.
இதோ. நாம் வாங்கிய இலுப்பெண்ணெய் ரசீது உங்கள் பார்வைக்கு.
அடுத்து நேரே வள்ளலார் கோயிலுக்கு சென்று இழுப்பெண்ணை டின் வழங்கிவிட்டு, அப்படியே கோயிலை தரிசனம் செய்தோம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்தோம். அடுத்து நாம் கொஞ்ச நேரம் தீப ஆராதனை தரிசனம் பெற உள்ளோம்.
இதோ..சூடான, சுவையான பிரிஞ்சி சாதம் தயார்.
இம்முறை இனிப்பும் வாங்கி சென்றோம். அடுத்து வழிபாடு ஆரம்பம்.
வழிபாடு முடித்து, அன்னசேவை தொடங்கிவிட்டோம்.
அன்பர்கள் வந்து கொண்டே இருந்தார்கள். நாம் அன்னம் கொடுத்துக்கொண்டே இருந்தோம்.
இதோ..ஆனி மாத திருப்தியாக குருவருளால் நிறைவு பெற்றது. இம்முறை கூடுவாஞ்சேரி வள்ளலார் கோயிலுக்கு விளக்கேற்ற இலுப்பெண்ணையும், அன்னதானத்தில் இனிப்பும் சேர்த்து கொடுத்தது மனது இதமாக இருந்தது.
இதோடு மட்டுமின்றி, நேற்று காலை அன்னதான சேவை குருவருளால் சிறப்பாக நடைபெற்றது.
அம்மையப்பரின் அருளால் அன்னதானம் தொண்டு சிறப்பாக சோழிங்கநல்லூர் பகுதியில் ஆதி சிவன் அமைப்பு மூலம் நடைபெற்றது. ஆதி சிவன் அமைப்பு பல்வேறு வகையான அறப்பணிகள், ஆன்மிக சேவை செய்து வருகின்றார்கள். மற்றொரு பதிவில் விரித்துரைப்போம்.
இந்த அன்னதானம் தொண்டு பணிக்கு உதவிய அன்பர்கள் மற்றும் நன்கொடை வழங்கிய அன்பர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
நமெக்கெல்லாம் இந்த பாக்கியத்தை அருளிய இறைவனின் பொற்பாதங்களை சரணடைவோம்
தென்னாடுடைய சிவனே போற்றி !!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!
அண்ணாமலையார் திருவடிகளே போற்றி !!
ஸ்ரீ குருநாதர் திருவடிகள் போற்றி !!
அன்னதான தொண்டில் நம்மோடு இணைந்த அணைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து, மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
இன்றைய இறைப்பணியோடு கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_14.html
தவமா? கூட்டுப்பிரார்த்தனையா? - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_14.html
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_24.html
TUT அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - https://tut-temples.blogspot.com/2020/03/tut.html
இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html
அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html
கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html
ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html
No comments:
Post a Comment