நம் தளத்தின் பதிவுகளில் சற்று மூன்று நாட்கள் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. இனி இது போல் நடக்காத வண்ணம் கூடுமானவரை பார்த்துக் கொள்கின்றோம். ஏற்கனவே பல முறை ஆரோக்கியம், ஆன்மிகம் பற்றி பேசி உள்ளோம். ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களை எப்படி பிரிக்க முடியாதோ அதே போன்று தான் ஆரோக்கியம், ஆன்மிகம் இரண்டும் உள்ளது. இயற்கை மருத்துவம் என்ற இதழ் பற்றி ஏற்கனவே நம் தலத்தில் பேசி உள்ளோம். ஆமாம் உறவுகளே. இந்த
நூலைப் படித்து நாம் பின்பற்றினால் , ஐந்தே ரூபாயில் நாம் ஆரோக்கியம்
பெற்று விடலாம் என்பது உறுதி. உண்மையான ஆன்மிகம் என்று இங்கே நாம் சொல்ல
வேண்டிய நிலையில் நாம் தள்ளப்பட்டுள்ளோம். உண்மையான ஆன்மிகம் என்பது
ஆரோக்கியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. இதனைத் தான் யோகம் என்று கூறி
இயமம், நியமம், ஆசனம்,பிராணாயாமம்,பிராத்தியாகாரம்
என்று அட்டாங்க யோகமாக நம் தாத்தாக்கள், சடை வளர்த்தவர்கள், கொண்டை
போட்டவர்கள், காட்டில் உட்கார்ந்து தவம் செய்தவர்கள் வகுத்துள்ளனர். இவை
நம் ஆரோக்கியம் சார்ந்தவையே அன்றி வேறொன்றும் அல்ல.
ஆன்மிகம் என்று எடுத்துக் கொண்டால் கோயில்கள் வெறும் இறை சக்தி பெற உருவானவை அல்ல. கோவில்கள் வெறும் பக்திக்கான இடம் மட்டும் அல்ல.
கலை,பக்தி,ஆரோக்கியம்,தானம் என அனைத்தும் ஒருங்கே பெற்ற சமுதாய நல்லிணக்க
கூடங்கள் என்று சொல்லும் அளவிற்கு இருந்து வந்தது.ஆனால் இன்றைய நிலை வேறு?
ஆம். முதல் பாடமே துவைத்தல் தான். நமக்கு முன்தைய தலைமுறையில் உள்ளவர்கள் இந்தப் பழக்கத்தை தான் கைக் கொள்கின்றார்கள். அவர்கள் துணியை அவர்கள் தான் துவைக்கின்றார்கள். நாம் நம் வீட்டில் உள்ள மனைவிக்கு தான் துணி துவைக்கும் பொறுப்பு உள்ளது என நினைக்கின்றோம். இது அப்படியே அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்றது. இதனை இன்று முதலாவது மாற்றலாமே
இந்தப் பதிவு போகிற போக்கில் படித்தால் எந்த பயனும் இல்லை.உங்கள் பொழுதைப் போக்க இந்த பதிவு அல்ல. உங்கள் பொழுதை ஆக்கவே இந்தப் பதிவு. சற்று நிதானமகாக ஒரு முறைக்கு பலமுறை படித்துப் பாருங்கள. ஒரே நாளில் மாற்றமும், அதிசயமும் நிகழ்ந்து விடாது. ஒரு அழகிய சிலை ஒரே நாளில் செய்து விட முடியாது. அனுதினமும் கொஞ்சம் கொஞ்சமாக செதுக்க, செதுக்க அழகிய சிலை கிடைக்கும்.
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html
சரி. இனி விசயத்திற்கு வருவோம். கோடி கொடுத்தாலும் கிடைக்காத தகவல்கள் என்றொரு புத்தகம் கிடைத்தது. அதன் கருத்துக்கள் அருமையாக இருந்தது. இவை அனைத்தும் நம் இயல்பிலே இருக்க வேண்டியவை. ஆனால் இடையில் எங்கோ ஏற்பட்ட இடைவெளி நம்மை நம் இயல்பிலிருந்து வேறொரு கலாச்சாரம் நோக்கி பயணிக்க வைத்து, அச்சத்தை நமக்குள் கொடுத்து பிழைக்க வைத்துக் கொண்டிருக்கின்றது.
பிழைத்தது போதும். ஒவ்வொரு நாளையும் வாழப் பழகுங்கள். இதோ அந்த நூலின் பகுதியை அப்படியே தருகின்றோம்.
இவற்றை நீங்கள் படித்தால் நம் வாழ்க்கை என்பது என்ன? நமது வாழ்க்கைக்கு தேவையான வசதிகள் என்ன? நம் ஆரோக்கியத்தை பேணுவது எப்படி என உணர்ந்து கொள்ளலாம்.
அடுத்து காலையில் எழுந்து குளித்து வழிபாடு செய்வது. இது நாம் நம் மனைவிக்கு சொல்லும் இரண்டாம் பாடம் ஆகும். ஆம். காலையில் எழுந்து வாசல் கூட்டி ,கோலமிட்டு, வீட்டு வாசலில் கோலமிட வேண்டும். இது நம் முன்னோர்கள் கடைபிடித்த பழக்கம் ஆகும். இதனை அனுதினமும் செய்து பாருங்கள். வீட்டில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி, நீங்கள் விரும்பு வாழ்க்கை பெறுவது உறுதி.
இதோ, நம் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவினரின் வெள்ளிக்கிழமை வழிபாடு பற்றிய காட்சிகள் இங்கே பகிர்கின்றோம்.
சரி. இனி வரும் தகவல்களை நீங்களே படித்து இன்னும் சிந்தியுங்கள்.
இது என்னப்பா.? ராபின் ஷர்மா எழுதிய புத்தகம் மேற்கோள் என்று யோசிக்கின்றீர்களா? கிடைத்த தகவலை அப்படியே பகிர்ந்துள்ளோம். நல்ல செய்திகளை யார் சொன்னால் என்ன? கடைபிடித்து பார்த்து கவலையின்றி வாழ்வோம்.
இதோ..உங்களிடம் கல்லையும், உளியையும் கொடுத்துள்ளோம். அப்படியே வைத்துக் கொள்வதும், கொஞ்சம் கொஞ்சமாக தினமும் உளி கொண்டு செதுக்குவதும் உங்கள் கைகளில்தான் உள்ளது.
பதிவை படித்து மீண்டும் உள்வாங்கி கொண்டு, நடைமுறை வாழ்க்கையில் சிறிது சிறிதாக மாற்றத்தை ஏற்படுத்துங்கள். கண்டிப்பாக நீங்கள் வாழ்வில் வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கையை வாழத் தொடங்குவீர்கள்.
இந்த நூலை தொகுத்து வழங்கிய திருச்சியை சேர்ந்த திரு. நா. பிரசன்னம் அவர்களுக்கு நம் தளம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மீண்டும் சிந்திப்போம்
மீள்பதிவாக:-
யார் உண்மையான பக்தன் ? - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_30.html
ஆறுவது சினமா? ஆறாதது சினமா? - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_10.html
பிரார்த்தனை...பிரார்த்தனை... பிராத்தனை..! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_80.html
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (5) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-5.html
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html
கண்களுக்கு விருந்தாக! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_39.html
நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html
வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (3) - https://tut-temples.blogspot.com/2020/05/3.html
வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (2) - https://tut-temples.blogspot.com/2020/04/2.html
வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (1) - https://tut-temples.blogspot.com/2020/03/1.html
வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_11.html
No comments:
Post a Comment