"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, July 4, 2020

விவேகானந்தர் விஜயம் (1)

 அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்

இன்று  ஜூலை 4. சுவாமி விவேகானந்தரின் நினைவு நாள். தூய்மை,பொறுமை, விடாமுயற்சி இவை மூன்றும் வெற்றிக்கு வழிகளாகும் என்று போதித்த மகானின் நினைவு நாள். இன்றைய நாளில் சுவாமியின் கருத்துக்களை இங்கே பதிக்க விரும்புகின்றோம்.

இன்றைய பதிவில் நாம் விவேகானந்தரின் வருகையைப் பற்றி சில துளிகள் காண இருக்கின்றோம். நினைவு நாளில்  வருகையா? ஆம்..நூறு இளைஞர்கள் இப்போது தயார். ஆனால் விவேகானந்தர் போல் ஒரு தலைவருக்காக நாம் காத்திருக்கின்றோம் .இந்த பதிவு காட்சிப் பதிவாகவும் இருக்கும் என்று நம்புகின்றோம்.யானையின் பலம் யானைக்கே தெரியாது என்பர். நாமும் பல நேரங்களில் அவ்வாறே. இந்த உலகம் உய்ய நம் முன்னோர்கள்/சித்தர்கள்/மகான்கள்  பலர்  நம் கற்பனை கூட செய்யாத பல பொக்கிஷங்களை விட்டுச் சென்றுள்ளனர். அது அறியாமல் வாழ்க்கை என்னும் சக்கரத்துடன் இனைந்து நாமும் சுற்றிக் கொண்டுள்ளோம். அப்படிப் பல பொக்கிஷங்களை விவேகானந்தர் நமக்கு அளித்துள்ளார்.

சுவாமி விவேகானந்தர் - ஒரு மகான், இந்திய திருநாட்டின் பெயரை உலகெங்கும் ஓங்கி ஒலிக்க செய்த வள்ளல், இவரை வெறும் துறவி என்று பார்த்தல் அது நம் ஊனக் கண் செய்யும் தவறே. அவர் வாழ்வியலை போதிக்க வந்த ஆசான்.இன்னும் இன்னும் என சொல்லிக் கொண்டே போகலாம்.அவர் ஆன்மிகத்தை மற்றும் போதிக்கவில்லை என்பது அவரது வரலாற்றைப் படித்தால் புரியும்.






விவேகானந்தர்  விஜயம் என்ற தலைப்பில் நாம் ஏற்கனவே ஒரு பதிவை அளித்து இருக்கின்றோம். விவேகானந்தரைப் படிக்க படிக்க, ஒரு தொடர்பதிவு அளிக்கலாம் என்றும் தோன்றுகின்றது. சூரியன் எப்படி இருக்கின்றது? தினமும் நமக்கு ஆற்றலை, பிரகாசத்தை அளித்துக் கொண்டு வருகின்றது. ஆனால் சூரியன் தோன்றி இத்தனை ஆண்டு காலத்தில், அதனுடைய ஆற்றல்,சக்தி குறைந்து இருக்கின்றதா? இல்லவே இல்லை. அது போல் தான் விவேகானந்தர். இவர் ஞானச் சூரியன். அள்ள அள்ள குறையாத செல்வங்களை /அருள் நிலைகளை/ போதனைகளை/வாழ்வியலை அளித்து வருகின்றார்.


விவேகானந்தர் ஒரு சாதாரண மானிடர் அல்ல என்பது அவரது வாழ்க்கையின் சில சம்பவங்களை ஊடுருவிப் பார்த்தால் புரியும்.

சுவாமியின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இது:(ஆக்கத்தில் உதவி : தினமணி)

கல்கத்தாவின் முக்கிய வீதிகளில் ஒன்று அது. இரவு 8 மணி இருக்கும். கல்கத்தா காளி உற்சவ மூர்த்தியாய் எழுந்தருள, சுவாமி விவேகானந்தரும் கூட்டத்தினருடன் ஊர்வலத்தைப் பார்த்து கொண்டிருந்தார் .

பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒருவன் சுவாமிஜியைப் பார்த்து, ”இந்த மக்களுக்கு வேறு வேலையே கிடையாது. ஏதாவது ஒரு பொம்மைக்கு அலங்காரம் செய்து கொண்டு ஊர்வலம் வருவார்கள். பக்தி எனும் பேரில் பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பார்கள்” என்றான் .

சுவாமிஜி அவனைப் பார்த்து , ”என்ன சொன்னாய் ? ஊர்வலம் வரும் பவதாரணியை வெறும் பொம்மை என்றா சொன்னாய் ? இப்போது அந்த பொம்மையை உற்றுப்பார்” என்று சொல்லி அவனது கையைப் பிடித்தார் .

உடல் முழுவதும் மின்னல் பாயும் உணர்வு பெற்ற அவன் சிலையை உற்றுப்பார்க்க, பவதாரணி இவனைப் பார்த்து சிரிப்பதை பார்த்து அதிர்ந்தான்.

“சுவாமிஜி என்னை விட்டுவிடுங்கள் ! எனக்கு பயமாக இருக்கிறது ! உயிரோட்டமுள்ள பவதாரிணியே ஊர்வலம் வருவதை உணர்ந்து கொண்டேன்” என அலறினான் .

சுவாமிஜி “திருவுருவங்கள் அவரவர் பார்க்கும் பார்வையில் இல்லை; உணர்வில் தான் உள்ளது” என்றார்.

இப்படி சிறு சிறு சம்பவங்கள் மூலம் சுவாமிஜி தன் வாழ்க்கையில் உணர்த்திய பேருண்மைகள் ஏராளம். ஏராளம். இது வெறும் சாம்பிள் தான். இதோ நம் தலைவர்  விவேகானந்தர் அருளிய அருள்முத்துக்களை இங்கே படச்செய்திகளாக தருகின்றோம். ஒவ்வொன்றையும் மீண்டும் மீண்டும் படியுங்கள். ஒரு தெளிவு பிறக்கும்.



































மேலே உள்ள கருத்துக்களை வாசித்தீர்களா? வாசித்த கருத்துக்களை வாழ்க்கையில் வசப்படுத்துங்கள்.பின் என்ன ? வெற்றி மட்டுமல்ல..அந்த வானமும் வசப்படும்.

மீண்டும் சிந்திப்போம் 

முந்தைய பதிவுகளுக்கு :-

 விவேகானந்தர் விஜயம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_39.html

No comments:

Post a Comment