"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, April 16, 2020

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4)

அனைவருக்கும் அன்பு வணக்கம்.


இன்றைய பதிவில் தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு சார்பில் நடைபெற்று வரும் மற்றொரு சேவை பற்றி அறிய இருக்கின்றோம். இந்த சார்வரி ஆண்டில் 4 ஆம் ஆண்டில் குருவருளால் அடியெடுத்து வைக்கின்றோம். இதனை சிறப்பிக்கும் பொருட்டு  தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழுவின் அன்னதான சேவை, உழவாரப் பணி சேவை ,ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை என பார்த்தோம். இன்றைய பதிவிலும் நம் குழுவின் அடுத்த நிலை நோக்கி நகர்ந்த மோட்ச தீப  வழிபாடு பற்றி தொடர உள்ளோம். அன்னதானம், உழவாரப் பணி , ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய வழிபாடு என தொடர்ந்த நாம்,  மோட்ச தீப வழிபாட்டின் மூலம் குருவருளைப் பற்றிடவும், பெற்றிடவும் முடிகின்றது. ஆரம்பத்தில் நாமும் மோட்ச தீப வழிபாடு பற்றி சாதாரணமாக எண்ணினோம். ஆனால் நாம் நினைப்பது தவறு என்று உணர்த்தப்பட்டு இன்றும்  நம் தளம் சார்பில் மோட்ச தீப வழிபாடு செய்து வருகின்றோம்.

இனி..நாம் எப்போது மோட்ச தீப வழிபாட்டு  பூசை ஆரம்பித்தோம், எப்படி முதல் வழிபாடு  நடந்தது என்பது போன்ற அனுபவத்தை இங்கே காண்போம்.

2016 ஆம் ஆண்டில் நாம் அன்னதானம், உழவாரப்பணி என்று ஆரம்பித்த நாம் 2017 ஆம் ஆண்டில் தேடல் உள்ள தேனீக்களாய் - (TUT) குழுவிற்கென்று வலைத்தளம் ஏப்ரல் 14 ம் தேதி ஆரம்பித்தோம். இதனை அப்படியே நம் ஆண்டு விழா என்று கணக்கில் வைத்து வருகின்றோம். 2017 ஆம் ஆண்டில் தான் ஆயில்ய பூசை நமக்கு குருவருளால் கிடைத்தது. 2016 முதல் நமக்கு ஜீவ நாடி அறிமுகம் கிடைத்தது. ஜீவ நாடி உத்தரவுப்படி சில வழிபாட்டு முறைகளை நாம் தொடங்கினோம். அதுவரையில் கூடுவாஞ்சேரியில்  உள்ள ஸ்ரீ மாமரத்து விநாயகர் கோயில் பற்றி யாம் அறியவில்லை. ஆனால் கூடுவாஞ்சேரி வந்து சுமார் 2 ஆண்டுகள் அப்போது ஆகி விட்டது. பின்னர் ஒரு நாள் நமக்கு ஸ்ரீ மாமரத்து விநாயகர் கோயில் தரிசனம் கிடைத்து. அன்று தான் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் தரிசனமும் கண்டோம். அப்போது தான் ...அடடா..குருநாதரை நம் வீட்டு அருகிலே இருப்பது அறியாது இத்தனை நாட்களை வீணாக்கி விட்டோமோ என்று தோன்றியது. இது தான் கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலையும் கதை என்றும் தோன்றியது. பின்னர் முதல் வழிபாடாக  ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் உள்ள ஸ்ரீ அகத்தியர் பெருமானுக்கு  2017 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 8 ம் நாள் (21.08.2017) திங்கட்கிழமை நடைபெற்றது. அடுத்து வந்த ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தியை அதாவது மார்கழி மாத ஆயில்ய பூசையை 108 தீபமேற்றி வழிபாடு செய்தோம். இங்கிருந்து தான் நமக்கு தீப வழிபாடு பற்றி உணர்த்தப்பட்டது.

ஏற்கனவே நாம் நம் தளத்தில் தீப வழிபாடு பற்றி அவ்வப்போது கூறியுள்ளோம். மீண்டும் தனிப்பதிவுகளில் இது பற்றி பேசுவோம். 

சின்னாளபட்டியில் உள்ள ஸ்ரீ அகத்தியர் ஞானகுடில் மூலம் கோவை பச்சாபாளையத்தில் உள்ள அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் கோயிலில்  நாம் "மோட்ச தீபம்" என்ற ஒரு உயரிய வழிபாட்டில் கலந்து கொள்ள இறையருளும் குருவருளும் நம்மை பணித்தார்கள். மோட்ச தீபம் என்ற வார்த்தை பற்றி மட்டுமே கேள்விப்பட்டு இருந்தோம். பொதுவாகவே தீப வழிபாடு மிக மிக உயர்ந்தது. எந்த கோயிலுக்கு சென்றாலும் பூவும், தீபமேற்ற நெய் அல்லது எண்ணெய் வாங்கி சென்று வழிபடுங்கள். தேங்காய், பழம் வைத்து வழிபாடு செய்வதை விட, பூக்களும், தீபமும் சால சிறந்தது. மோட்சம் என்றால் இறந்தவரின் ஆன்மா நற்கதி அடைய வேண்டி தீபமேற்றி பிரார்த்தனை செய்வது ஆகும். அப்படி என்றால் நாம் ஏற்றும் அகல் விளக்கிலேயே முன்னோர்களின் ஆன்மா நற்கதிக்கு பிரார்த்திக்கலாம் என்றால் ..இது அப்படி இல்லை.இதற்கென சில முன்தயாரிப்புகள் செய்ய வேண்டும்.


 உடலை விட்டுப் பிரிந்த ஆத்மா மறுபிறவி இல்லாமல் மோட்சம் அடைவதற்காக திருக்கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றுவது ஐதீகம்.குறிப்பாக அப்பர் சுவாமிகளுக்கு சிவபெருமான் கயிலைக் காட்சி அருளிய திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பு என்றும் கூறுகின்றார்கள். குறிப்பாக இந்த தீபத்தை மருத்துவ துறையில் இருப்பவர்கள், கோவிலில் ஏற்ற வேண்டும். நம்மைப் பொறுத்த வரையில் பதிவின் ஆரம்பத்திலேயே வழிபாட்டில் மிக மிக உயர்ந்த வழிபாடு என்று இந்த வழிபாட்டை சொல்லி தான் ஆரம்பித்தோம். நாம் யாருக்காக பிரார்த்திக்கின்றோம்/ வழிபாடு செய்கின்றோம்? நமக்கு, நம் குடும்பத்திற்கு, நம் உற்றார் உறவினர்களுக்கு என்று அடுத்த தான் செல்கின்றோம். கண்ணனுக்கு தெரிந்து உடல் பெற்று வாழும் உயிர்களுக்கு வழிபாடு/பிரார்த்தனை/ அன்னசேவை என செய்கின்றோம். ஆனால் கண்ணுக்கு தெரியாமல் உடல் இன்றி வெறும் ஆத்மா மட்டும் வாழுகின்றார்களே..அவர்களுக்கு யார் உணவிடுவது? பிரார்த்திப்பது? என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடையாக இருப்பதே இந்த  மோட்ச தீபம்  வழிபாடு ஆகும். அப்படியானால் இது மிகவும் உயர்ந்த வழிபாடு தானே? ஐயம் ஏதும் இல்லையே....

அடுத்து நாம் நம் TUT தளம் சார்பில் இந்த வழிபாடு மேற்கொள்ள ஜீவநாடி உத்திரவு கேட்டோம். நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானின் அருளாசியால் 2018 ஆம் ஆனதில் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் நாள் அமாவாசை அன்று கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் மோட்ச தீப வழிபாடு நடைபெற்று வருகின்றது. 2020 ஆண்டு பங்குனி மோட்ச தீப வழிபாடும் சுமார் 10 பேர் அளவில் சிறப்பாக நடைபெற்றது. வருகின்ற சித்திரை மாத மோட்ச தீப வழிபாடு தற்போதுள்ள 144 தடை உத்தரவால் நடைபெறவில்லை. ஆனால் குருநாதரின் அருளால் அன்றைய தினம் ஆத்ம தீபம் ஏற்ற உள்ளோம். எனவே அனைவரும் வீட்டிலிருந்த படியே பிரார்த்தைனை செய்து கொள்ள வேண்டுகின்றோம்.




10 ம் ஆண்டில்  வெற்றி நடை போட்டு வரும் உலக பக்தர்கள் தினம் மலரில் நம் குழுவால் நடைபெறும் மோட்ச தீப வழிபாடு பற்றி செய்தி வெளியாகி உள்ளது.அதனை அப்படியே பகிர்கின்றோம்.

இந்த மலரில் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிநடத்தும் மோட்ச தீப வழிபாடு பற்றி 4 பக்க கட்டுரை வெளியாகி உள்ளது.  துணுக்குக்கு இடம் தராமல் மிகவும் பரந்து 4 பக்க கட்டுரைக்கு இடம் தருவது இவர்களின் உண்மை உள்ளத்தை பறைசாற்றுகின்றது. இந்தப்பதிவில் நாம் உலக பக்தர்கள் தினம் குழுவிற்கு நன்றியைத் தெரிவித்து கொள்கின்றோம். மேலும் மோட்ச தீப வழிபாட்டிற்கு மாதம் தோறும் பொருளுதவி, நேரிலே வந்து நேரத்தை செலவழித்து உடலுதவி செய்து வரும் அனைவரின் பாதம் பணிகின்றோம்.




மோட்ச தீபம் பற்றி அறிய கீழே உள்ள இணைப்பு படத்தை பார்க்கவும்.





சரி. இனி முதன் முதலில் நடைபெற்ற மோட்ச தீப வழிபாடு அனுபவ துளிகளை இங்கே காண்போமா?

 ஆடி மாத மோட்ச தீப வழிபாட்டிற்கு வெளியூர்களில் இருந்து நம் அகத்தியர் அன்பர்கள் அன்று மதியமே வந்து விட்டார்கள்.  வீட்டிற்கு அழைத்து சென்று வழிபாட்டிற்கான பொருட்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டோம்.




அனைத்து பொருட்களையும் சரிபார்த்து ,கோயிலுக்கு சரியாக 5 மணி அளவில் அடைந்தோம். பின்னர் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றுவதற்கான பணிகள் நடைபெற்றது.




தீபம் ஏற்றுவதற்கு முன்பாக, விநாயகப் பெருமான், அகத்தியர் இருவரையும் வாங்கினோம். முதல் முறை வழிபாடு என்பதால் மோட்ச தீபம் ஏற்றுவது பற்றி சுருக்கமாக எங்கள் குரு பாலா ஐயா அவர்கள் சில வார்த்தைகள் உபதேசித்தார்.பின்னர் சுமார் 7 மணி அளவில் தீபம் ஏற்றப்பட்டது.





நம் குழு அன்பர்களும் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள். அனைவரும் எள்ளு, நெய் வாங்கி வந்தார்கள். சுமார் 7 பேர் ஒவ்வொருவராக தீபம் ஏற்றினோம். தீபம் ஏற்றியவுடன் அந்த இடம் அப்படியே ஒளி வெள்ளத்தில் மிதந்தது. இதனை நேரில் உணரத்தான் முடியுமே தவிர, சொல்லி புரிய வைக்க முடியாது. பின்னர் 108 முறை இரண்டு மந்திரங்கள் உச்சாடனம் செய்தோம்.

நேரம் ஆக ஆக நெய் ஊற்ற வேண்டி இருந்தது. அப்போது தான் தீபம் நன்கு ஒளிரும்.சுமார் 10 லி நெய் அன்று தேவைப்பட்டது. இதனை நம் அண்ணன் சந்திரசேகரன் எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு தீபமாக நெய் ஊற்றிக் கொண்டு வந்தார். அவருக்கு கடைசியில் வேர்க்க ஆரம்பித்து விட்டது.

பிரார்த்தனை முடிந்ததும், அனைவரையும் ஒவ்வொருவராக அழைத்து, தீபங்களின் முன்னிலையில் பூக்கள் தூவி வழிபட வேண்டினோம். இந்நிகழ்விற்கு பின்னர், கை, கால் அலம்பி விட்டு, பிரசாதம் உண்ண பணித்தோம். வழக்கம் போல் வேளச்சேரி சிவா அவர்களிடம் பிரசாதம் கேட்டிருந்தோம். இனிப்பிற்கு சக்கரை பொங்கல் வழங்கப்பட்டது.பிரசாதம் இனிமையாக இருந்தது.






அன்றைய தினம் வழிபாடு முடித்து, அனைவருக்கும் நன்றி கூறி மோட்ச தீப வழிபாட்டை முழுமை செய்தோம். மோட்ச தீப வழிபாடு பற்றி சொல்வதானால் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.இனிவரும் பதிவுகளில் அவ்வப்போது நமக்கு கிடைக்கின்ற செய்திகளை இங்கே பகிர்கின்றோம்.

இன்று நம் தளத்தின் தொடக்கம், சேவைகள் பற்றி நினைத்துப் பார்க்கும் போது அனைத்தும் நம் குருநாதர்களின் அருளாசியால் சிறப்பாக நடைபெற்று வளர்கின்றது. ஏனென்றால் இந்த மோட்ச தீப வழிபாட்டிற்கு குறைந்தது மாதம் ரூ.10000 அளவில் தேவைப்படுகின்றது. ஆனால் மாதம்தோறும் அன்பர்களின் பொருளுதவியால் இந்த வழிபாடு தொய்வின்றி நடைபெற்று வருகின்றது. அன்னதானம் என்ற சேவையை தொடங்கிய TUT தளம் அப்படியே உழவாரப்பணி, ஆயில்ய ஆராதனை, மோட்ச தீபம் என தன் சேவையை விரித்து செய்து வருகின்றது. 

 இங்கே நாம் சொல்லி இருப்பவை சில துளிகள் மட்டுமே. ஒவ்வொரு மோட்ச தீப  வழிபாட்டின் போது  நம்முடன் வந்து உறுதுணையாக இருக்கும் அன்பர்களுக்கு இங்கே நாம் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். எப்படி ஆரம்பித்தோம் என்று புரியவில்லை. ஆனால் மூன்றாண்டு  நிறைவில் மன மகிழ்வுடன் வாழ்தலுக்கான புரிதல் கிடைத்துள்ளது.
எங்கள் சேவை விரிவடைய பொருளுதவி செய்யலாம். எங்களுடன் நேரிடையாக பங்கேற்றும் உதவலாம்.
"அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்"
நாங்கள் விதைப்பது அன்பு மட்டுமே.
வழி நடத்தும் பேராற்றலுக்கு நன்றி,
அக மகிழ்கின்றோம். அவன்அருளாலேஅவன் தாள் வணங்கி !!!. 
நன்றி 
மீண்டும் ஒரு முறை  வழக்கம் போல் உறுதுணையாகவும் உற்ற துணையாகவும் இருக்கும் அனைத்து நல்லுள்ளங்களை இங்கே வணங்கி, வாழ்த்தி மகிழ்கின்றோம்.

- மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html

சார்வரியே வருக! தென்காளகஸ்தி திருக்காளாத்தீஸ்வரர்-ஞானம்பிகை திருக்கோயில் செல்வோம் வாருங்கள்!! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_76.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

TUT அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - https://tut-temples.blogspot.com/2020/03/tut.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

No comments:

Post a Comment