அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இப்போதுதான் 2020 ஆம் ஆண்டு பிறந்தது போல் இருந்தது.ஆனால் அதற்குள் ஆண்டின் இறுதியில் இருக்கின்றோம். 2020 ஆண்டு பல சோதனைகளை அனைவருக்கும் தந்துள்ளது. ஆனால் குருவருள் நம்மை இந்த சோதனையான கால கட்டத்தில் இன்னும் செம்மைப்படுத்தி உள்ளது என்பது கண்கூடு.அனைவரும் குருமார்களிடம் சரணாகதி அடையுங்கள்..சரணாகதி என்று சொல்லுவதை விட பரிபூரண சரணாகதி என்றே சொல்ல வேண்டும். இதனைப்பற்றி மீண்டும் பேசுவோம். இன்றைய பதிவில் குன்றத்தூர் திருஊரகப் பெருமாள் உழவாரப்பணி அனுபவ தொடர்ச்சியும், உழவாரப்பணி அழைப்பிதழும் தர விரும்புகின்றோம்.
முதலில் உழவாரப்பணி அழைப்பிதழை பகிர்கின்றோம்.
முகுந்த் ஐயா விடுவதாக தெரியவில்லை. அவர் மீண்டும் செடிகளை அகற்றும் பணியை மேற்கொண்டார்கள். இவ்வாறும் சேவை தொடர்ந்து கொண்டே இருந்தது. நாம் அப்படியே கோயிலை வலம் வந்தோம்.
தீப மேடைகள் பளபளப்பாக இருக்கும் காட்சி..பெண்களுக்கு என்று தான் இப்பணி என்று நினைத்தோம். ஆடவரும் சளைத்தவர்கள் இல்லை என்று இங்கே நிரூபித்து இருக்கின்றார்கள். நம் தள மகளிர் யாரும் இதனை பெரிய செய்தியாக கொள்ள வேண்டாம்.ஹி..ஹி .. பெண்கள்..பெண்கள் தான்..சக்தி இன்றி..சிவம் என்ன செய்வது?
அன்றைய தினம் உழவாரப்பணியில் கலந்து கொண்ட அன்பர்களுக்கு நம் தளம் சார்பில் சிறிய பரிசு கொடுத்தோம். அனைவரின் முகத்திலும் புன்சிரிப்பை பாருங்கள்.
யார் வருவார் என்று நாம் நினைக்கவில்லை. வருபவர்கள் வரட்டும் என்றே இந்த இறை சேவை தொடர்ந்து வருகின்றது. 9 அன்பர்கள் அன்றைய தினம் சேவையில் கலந்து கொண்டு பணியை சிறப்பித்தார்கள். வழக்கம் போல் நாம் ஒன்றும் செய்யவில்லை. வருகின்ற உழவாரப்பணி சேவையில் அடியேனும் ஏதாவது உடல் உழைப்பை நல்க பெருமாளிடம் இப்போதே பிரார்த்திக்கின்றோம்.
சித்த மருத்துவர் ஐயா ஒருவர் அன்று கலந்து கொண்டார். அவர் நம்மிடம் சிறிய உரையாற்றி அனைவரும் அங்கிருந்து பெருமாள் பிரசாதம் பெற்று விடை பெற்றோம்.
பெருமாள் தரிசனம் பெறாது பதிவு எப்படி முழுமை பெறும். அதற்கு முன்பாக மீண்டும் ஒருமுறை உழவாரப்பணி அறிவிப்பு தருகின்றோம்.
உழவாரப் பணி அறிவிப்பு:-
இறை அன்பர்களே.
நமது TUT குழுமத்தின் உழவாரப்பணி குன்றத்தூரில் உள்ள திருவிருந்தவல்லி சமேத திருஊரகப் பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு வருகின்ற 20.12.2020 ஞாயிற்றுக்கிழமை குருவருளால் காலை 8 மணி முதல் நடைபெற உள்ளது. அன்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு தொண்டினை சிறப்பிக்குமாறு வேண்டுகின்றோம்.
குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லம்,
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளொடுபெருநிலமளிக்கும்,
வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற தாயினு மாயினசெய்யும்,
நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணாவென்னும்நாமம்.
- மீண்டும் சந்திப்போம்.
மீள்பதிவாக:-
நாராயணா என்னும் நாமம் - குன்றத்தூர் கோவிந்தனுக்கு உழவாரப் பணி செய்ய வாங்க! - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_16.html
ஒரே கல்லுல மூணு மாங்கா : குன்றத்தூர் கோவிந்தனுக்கு உழவாரப் பணி செய்ய வாங்க! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post.html
வித்தக விநாயக! விரை கழல் சரணே! - உழவாரப்பணி அனுபவம் - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post_22.html
மகான்களின் வி(வ)ழியில்...- ஆதனூரில் இராகவேந்திர சுவாமிகள் ஆராதனை - 25.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/25082019.html
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html
திருஊரகப் பெருமாளுக்கு செய்த உழவாரப் பணியும் ; அது அள்ளித் தந்த உற்சாகமும் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_3.html
தேனியில் ஞானப் பெருந்திருவிழா அழைப்பிதழ் - 05.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/05012020.html
2020 ஆம் ஆண்டு - வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2019/12/2020.html
தேடல் உள்ள தேனீக்களாய் குழு TUT - 2020 வருட வாழ்த்துக்களுடன் .....! - https://tut-temples.blogspot.com/2019/12/tut-2020.html
குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா - கந்த சஷ்டி பதிவு (4) - https://tut-temples.blogspot.com/2019/10/4.html
No comments:
Post a Comment