அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
நமக்கு அகத்தியம் காட்டி, அகத்தியம் ஊட்டி வருவது சித்தனருள். நம்மை வழிநடத்தும் சித்தனருள் இணையத்தளம் மூலம் நாம் பெரும் அருள் வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒன்று. அந்த நாள் இந்த வருடம் என்ற தொகுப்பின் மூலம் அகத்தியர், சித்தர்கள், தாமிரபரணி என்று நம் பயணமும் நீண்டு வருகின்றது. 2019 ஆம் ஆண்டு கோடகநல்லூர் தரிசனமும், நம்பிமலை தரிசனமும் சிறப்பாக கிடைத்தது. இந்த ஆண்டில் தொற்றுக்கிருமி கட்டுப்பட்டால் நம்மால் தரிசனம் பெற இயலவில்லை. 2021 ஆண்டில் ஓதிமலை தரிசனம் பெற பிரார்த்தனை செய்கின்றோம். மார்கழி மாதம் என்றாலே நமக்கு கொண்டாட்டம் தான். ஆம். நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானின் நட்சத்திர விழாவும் வரும். சென்ற ஆண்டில் வழக்கம் போல் 108 தீபமேற்றி, ஸ்ரீ அகத்தியர் ஆராதனை செய்து அன்றைய தினம் வழிபாடு சிறப்பாக அமைந்தது. தனிப்பதிவில் விரைவில் கொண்டாடுவோம்.இனி..சித்தன் அருள் இதயத் தளத்திலிருந்து....
02/01/2021, சனிக்கிழமை அன்று நம் குருநாதரின் திருநட்சத்திரம், (மார்கழி மாதம், ஆயில்யம்) வருகிறது. உலகெங்கும் உள்ள அகத்தியர் கோவில்களில்/சன்னதிகளில் அன்றைய தினம் மிகச்சிறப்பாக அபிஷேக பூஜைகள்/ஆராதனைகள் நடைபெறும். வரும் புது வருடத்தில் முதல் விழாவாக அவரது திரு நட்சத்திரம் வருகிறது.
அடியேன் எல்லா வருடமும் அந்த தினத்தில், பாலராமபுரத்தில் அமைந்துள்ள "ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் கோவிலில்" நடக்கும் பூசையில் கலந்து கொள்வேன். அனைத்துமே அவர் அருளால் மிக சிறப்பாக அமையும்.
"சித்தன் அருள்" வலைப்பூவின் அகத்தியர் அடியவர்கள்/வாசகர்கள் அகத்தியர் திரு நட்சத்திர விழா/கோவில் பூசையில் பங்குபெறுகிற கோவில் தொடர்பை கேட்டிருந்தனர். உரிய தகவல்களை கீழே தருகிறேன்.
பாலராமபுரம் அகத்தியர் கோவிலை பொறுத்தவரை, அகத்தியப்பெருமானின் திருவிளையாடல்களை நிறையவே அடியேன் உணர்ந்துள்ளேன். அதற்காக மற்ற கோவில்களில் அவர் திருவிளையாடல்களை நடத்துவதில்லை என்று அர்த்தம் அல்ல. சித்தன் அருளை வாசித்து இன்பமுற்றவர்கள் வாழ்க்கையில் "பாலராமபுரத்தில் உறையும் குருநாத/குருபத்னியே, சற்று ஆசீர்வதியுங்கள்" என வேண்டிக்கொண்ட பொழுது, அவர்களின் சூழ்நிலை நல்லபடியாக மாறியதாக கூறினர்.
சமீப காலமாக, நம் குருநாதர் சேய்களை நினைத்து சற்றே சோர்ந்துள்ளது, ஒரு சில நிகழ்ச்சிகளால் உணர முடிந்தது. ஆகவே அனைத்து அகத்தியர் அடியவர்களும், ஏதோ ஒரு அகத்தியர் சன்னதியில் அன்றைய தினம், குறைந்தது, பச்சை கற்பூரமாவது பூஜைக்கு/அபிஷேகத்துக்கு வாங்கிக்கொடுத்து, உலகை, நம்மை சூழ்ந்து இருக்கும், விஷ/திருஷ்டி தோஷங்களை அகற்ற அகத்தியப்பெருமானின் கோவிலுக்கு உழவாரப்பணி/பூஜையில் கலந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
நாம் அனைவரும் பெற்ற இன்பம் அனைவரும் பெறுவதற்காக பாலராமபுரம் அகத்தியர் கோவில் பற்றிய இந்த தகவலை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். விருப்பமுள்ளவர், இந்த தகவலை உபயோகித்து பாலராமபுரம் கோவிலில் தொடர்பு கொண்டு, அகத்தியர் திருநட்சத்திர விழாவில் பங்கேற்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
ஸ்ரீ அகஸ்தியர் ஸ்வாமி திருக்கோவில்,
பாலராமபுரம், திருவனந்தபுரம், கேரளா.
தொடர்புக்கு : திரு. ரதீஷ், பாலராமபுரம் 9020202121
திரு. சுமேஷ், பூஜாரி, அகத்தியர் கோவில் 9497866079
அன்றைய தின அபிஷேக பூஜைகள் தொடர்பான விவரங்கள்.
காலை 5 மணிக்கு கோவில் திறக்கப்படும்.
காலை 5.30 மணிக்கு நிர்மாலய தரிசனம் பின்னர் அபிஷேக பூஜைகள்.
காலை 6.30 மணிக்கு பூஜை, தீபாராதனைகாலை 7.00 - 8.00 மணிக்குள் அகத்தியர், லோபாமுத்திரை தாய் வழங்கும் அன்னதானம்.
காலை 8.45க்கு நிவேதனம், ஆரத்தி.
காலை 9 மணிக்கு கோவில் நடை சார்த்தப்படும்.
மாலை 5 மணி முதல் 7.30 வரை கோவில் திறந்திருக்கும்.
02/01/2021 அன்று ஏதேனும் ஒரு அகத்தியப்பெருமான் கோவிலில், பூஜையில் அகத்தியர் அடியவர்கள் பங்குபெற்று, உழவாரப்பணி செய்து, அவரின் திருவருளை பெறுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
சும்மா..அழைப்பிதழ் மட்டும் தந்தால் போதுமா? என்று நீங்கள் கேட்பது நம் காதில் விழுகின்றது. இதோ..
பாலராமபுரத்தில் உள்ள அகத்தியர் கோவிலில் நம் குருநாதர், லோபா முத்திரா தாய்க்கான சென்ற வருட திருவிழா, மிகச்சிறப்பாக நடந்தது. இந்த நாட்களில், புஷ்பாபிஷேகம், பூஜைகள் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை, உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்
பாலராமபுரத்தில் உள்ள அகத்தியர் கோவிலில் நம் குருநாதர், லோபா முத்திரா தாய்க்கான சென்ற வருட திருவிழா, மிகச்சிறப்பாக நடந்தது. இந்த நாட்களில், புஷ்பாபிஷேகம், பூஜைகள் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை, உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்
நம் குருநாதரின் தரிசனத்திற்காக எப்போதும் போல் காத்திருக்கின்றோம்.
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா ! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_31.html
தென்பொதிகை கைலாயம் - ஸ்ரீ லோக குரு அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_87.html
பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/01/9.html
பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020_6.html
அகத்தியரே...உன்னையே சரணடைந்தேன்! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_6.html
அன்பும் அருளும் ஓங்குக - 2 ஆம் ஆண்டு அகத்தியர் குரு பூசை விழா - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/2-13012020.html
பஞ்சேஷ்டி ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி விழா - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/13012020.html
பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html
ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html
No comments:
Post a Comment