"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, December 28, 2020

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 9 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

திருஅண்ணாமலை மூன்று நாட்கள் யாத்திரை குருவருளால் மிக சிறப்பாக நடைபெற்றது. TUT திருஅண்ணாமலை யாத்திரை சிறப்பாக குருவருளால் இனிதே நடைபெற்றது. ஒவ்வொரு வழிபாடு,கிரிவலம் என அனைத்திலும் குருவருளால் இறையருள் பெற்றோம் என்பதே சிறப்பு.

வெள்ளிக்கிழமை வைகுண்ட ஏகாதசி நன்னாளில் நமக்கு மகேஸ்வர பூசை செய்ய வாய்ப்பு கிடைத்தது. இது சாதாரணமாக கிடைக்கும் என்று தோன்றவில்லை. தேதியை மட்டுமே நமக்கு சரவணபவா சாமிகள் கூறினார்கள். தேதியை மேலும் பார்க்கும் போது நமக்கு இது தெரிந்தது. மகேஸ்வர பூசை செய்வதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதுவும் அக்னி தலமான திருஅண்ணாமலையில் செய்வதற்கு வைகுண்ட ஏகாதசி அன்று செய்ய குருவருள் வேண்டும். அன்றைய தினம் சுமார் 90க்கும் மேற்பட்ட சாதுக்கள் கலந்து கொண்டு நம் அனைவருக்கும் ஆசி வழங்கினார்கள். பட்டாம்பூச்சியாக சித்தர்கள் ஆசி பெற்றோம். 

மகேஸ்வர பூசை முடித்து அன்று மாலை 4 மணி அளவில் இரண்டு ஆட்டோக்களில் கிரிவலம் சென்றோம். இந்திர லிங்கத்தில் சரியாக வழிபட இயலவில்லை. அடுத்து அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம் என தரிசனம் பெற்றோம். ஒவ்வொரு லிங்கத்திலும் 1/4 லி நெய், சிவ புராண பிரதிகள் கொடுத்தோம். 10 பேர் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டார்கள். மேலும் ஒவ்வொரு வழிபாட்டிலும் தூய நல்லெண்ணெய் கொண்டு லோக ஷேமத்திற்காக விளக்கேற்றி வழிபட்டோம். மகளிர் அணி இந்த சேவையை சிறப்பாக செய்தார்கள். சித்தர் பூமியாம் அருணையில் வாழும் சித்தர் தரிசனம் கிடைக்குமா? என்ற கேள்வியில் நிருதி லிங்கம் தாண்டி சென்ற போது, குருவருள் நம்மை வழிநடத்தி சென்றதை நாம் உணர்ந்தோம்.

நிருதி லிங்கம் தாண்டி சென்ற போது அங்கே மௌன சாமி இருப்பதாக கேள்விப்பட்டோம். இதற்கு முன்பும் நாம் தரிசிக்கவில்லை. ஆனால் அன்று மனதில் தரிசிக்க வேண்டும் என்ற ஆவலில் அங்கு அனைவரும் சென்றோம். நம்மை விட பெரியவர்களிடம் ஆசி பெறுவது நம் மரபு. அதுவும் வாழும் சாமிகளிடம் திருஅண்ணாமலையில் ஆசியும், தரிசனமும் கிடைக்க வேண்டும் என்றால் சும்மாவா? ஆசிரமத்துள் சென்றோம். அனைவரும் மௌன சாமிக்காக காத்திருந்தோம். எவ்வளவு நேரம் காத்திருப்பது என்று தெரியவில்லை. மனதுள் நம் குருநாதரிடம் விண்ணப்பித்தோம். சுமார் 5 நிமிடத்தில் விபூதி பூசி மௌன சாமிகள் வந்தார். மெய் சிலிர்த்து தரிசனம் பெற்று அடி அண்ணாமலை நோக்கி சென்றோம். மீண்டும் ஆட்டோவில் கிரிவலம் சென்றோம்.

மௌனசித்தர் ஆசி பெற்று அடி அண்ணாமலை தரிசனம் பெற்றோம். அருணாச்சல சிவ..அருணாச்சல சிவ..அருணாச்சல சிவ..அருணாச்சலா ..என்று பாடி பரவசம் அடி அண்ணாமலையில் பெற்றோம். அடுத்து வாயுலிங்கம், குபேர லிங்கம் தரிசித்து, ஈசான்ய லிங்கம் சென்று தரிசித்தோம். இந்த கிரிவலம் தொடங்கும் முன்னர் அம்மணி அம்மாள் தரிசனம் எங்கே பெறுவது என்று விசாரித்த போது, ஈசான்ய லிங்கம் அருகில் பெறலாம் என்று கூறினார்கள். அட..இவ்வளவு நாட்களாக இது தெரியாமல் போயிற்றே என்று மனதுள் ஒரு ஏக்கம் இருந்தது. நாம் என்ன விருப்பம் வைத்தாலும் இறையை விரும்பினால் தான் நாம் இது போன்ற தரிசனம் பெற முடியும் என்று ஏங்கி, குருவிடம் வேண்டினோம். ஈசான்ய லிங்கம் எதிரே இருக்கும் சித்தர் கோயில் சென்றோம். அட...நம் விருப்பம் நிறைவேறியது..ஆம். அந்த கோயில் அம்மணி அம்மாள் கோயில் ஆகும். கருவறை அருகில் சென்று அம்மாவிடம் லோக க்ஷேமம் வேண்டி தரிசித்தோம். நம்மிடம் இருந்த அஷ்டலிங்க நெய் தீர்ந்து விட்டது. அட..விளக்கேற்ற வைத்திருந்த நல்லெண்ணெய் அங்கே கொடுத்து, நம் தளம் சார்பில் சிறு தொகையை ரூ.501/- கொடுத்துட்டு விட்டு அடுத்து ராஜ கோபுரம் நோக்கி சென்று வழிபட்டு.ஆட்டோவில் கிரிவலம் நிறைவு செய்தோம்.

இது முதல் நாள் அனுபவம் மட்டுமே..இன்னும் இன்னும் திருஅண்ணாமலை யாத்திரை தரிசனம் பற்றி மீண்டும் பேசுவோம். அடுத்து மார்கழி மாத கொண்டாட்டத்தில் ஆயில்ய நட்சத்திர வழிபாடாக அகத்தியர் அவதார பெருவிழா அனைவரும் கொண்டாடி வருகின்றார்கள். அதனையொட்டி மீண்டும் அகத்தியம் காண இருக்கின்றோம்.

இன்றைய பதிவிலும் அகத்தியம் தான்..அன்பு தான்..ஆனந்தம் தான். ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயத்தில் அகத்தியர் அவதார பெருவிழா  என்று நமக்கு அழைப்பிதழ் கிடைத்தது. அழைப்பிதழ் பார்த்ததும் என்னே அகத்தியரின் அருள் என்று தான் உணர்ந்தோம். நாம் அளித்துள்ள அனைத்து அகத்தியர் சார்ந்த பதிவிலும் அகக்தியர் தனியாக இருப்பார், இல்லையென்றால் வேறு சிலரோடு  இருப்பார். ஆனால் கூடுவாஞ்சேரி அகத்தியரும், அரும்பாக்கம் அகத்தியரும் நமக்கு ஒரே அருள்நிலையில் இருப்பதாக உணர்கின்றோம். இருவரும் இருப்பது விநாயகர் கோயிலில். அதாவது கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் உள்ள அகத்தியர் நமக்கு அருள் செய்து வருகின்றார். அதே போன்று இந்த அழைப்பிதழில் ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயத்தில் அகத்தியர் பூசை நடைபெற உள்ளது. என்ன ஒரு ஒற்றுமை... 

இந்த அழைப்பிதழ் கண்டதும் நமக்கு கூடுவாஞ்சேரி அகத்தியர் தான் நினைவுக்கு வருகின்றார். இப்போது தான் நமக்கு அழைப்பிதழ் கிடைத்துள்ளது. அதுவும் திருஅண்ணாமலை கிரிவலத்தில் நமக்கு இந்த அழைப்பிதழ் கிடைத்தது. வாய்ப்பு கிடைக்கும் போது நேரில் சென்று வழிபட்டு வந்து மீண்டும் இங்கே பேசுவோம். 9 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா அழைப்பிதழை கீழே இணைத்துள்ளோம். வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு அருள் பெறவும்.



 மேலும் இதற்கு முன்னர் இங்கே நடைபெற்ற விழாக்களின் காட்சிகளை இங்கே பதிவிடுகின்றோம். பார்க்கும் போதே ஏக்கம் பிறக்கின்றது. தவமாய் தவமிருந்து குருவினைக் காண வேண்டி நிற்கின்றோம்.







நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவனை
      நிங்காதார்  குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
     சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
     வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர்  என்று யுகயுகத்தும் தோன்றும்
     அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!





இது போதுமா? என்றால் போதாது என்றே சொல்ல தோன்றுகின்றது அல்லவா? மீண்டும் குருவின் தரிசனம் இங்கே அனைவரும் பெறலாமா? ஆம்..8 ஆம் ஆண்டு ஸ்ரீ அகத்தியர் அவதார பெருவிழா காட்சிகளை அனைவருக்கும் சமர்ப்பிக்கின்றோம்.



























கும்பமுனி குருவே சரணம் சரணம் என்று வேண்டி விரைவில் ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் தரிசனம் செய்ய வேண்டுகின்றோம்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 02.01.2021 - https://tut-temples.blogspot.com/2020/12/02012021.html

 பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_22.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/13012020_10.html

 தூசி கிராமத்தில் அகத்திய முனிவ தம்பதிக்கு தெய்வீக விவாஹ விழா - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_57.html

பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா ! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_31.html

தென்பொதிகை கைலாயம் - ஸ்ரீ லோக குரு அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_87.html

பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/01/9.html

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020_6.html

அகத்தியரே...உன்னையே சரணடைந்தேன்! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_6.html

அன்பும் அருளும் ஓங்குக - 2 ஆம் ஆண்டு அகத்தியர் குரு பூசை விழா - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/2-13012020.html

பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html


அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html

ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html

கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு (1) -https://tut-temples.blogspot.com/2019/07/1_24.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html

குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_14.html

ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html

ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html

 வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html

 நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5.html

நல்லவே எண்ணல் வேண்டும் : கூடுவாஞ்சேரி நூலக உழவாரப் பணி அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_24.html

  வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - https://tut-temples.blogspot.com/2019/07/1_23.html

 TUT தளத்தின் 100 ஆவது சிறப்புப் பதிவு - தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே! - https://tut-temples.blogspot.com/2019/07/tut-100.html


No comments:

Post a Comment