அனைவருக்கும் அன்பு வணக்கம்...
நம்
தளத்தின் மூலம் நம்மால் முடிந்த அளவில் அறப்பணிகள், சேவைகள்,பூசைகள் என
செய்து வருவது அனைவரும் அறிந்ததே. மாதம் தோறும் அகத்தியர் பெருமானுக்கு
ஆயில்ய ஆராதனை செய்து வருகின்றோம். இது அகத்தியர் பெருமானுக்கு மட்டும்
நடைபெறுகின்றது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நேரில் வந்து பார்த்தால்
தான் தெரியும். இது அனைத்து சித்தர்கள், மகான்களுக்கான பூசை. ஆயில்ய
ஆராதனையில் சித்தர்கள் போற்றித் தொகுப்பை நாம் ஓதி வருகின்றோம். இதுவே
நம்மை வழி நடத்தி வருகின்றது.
இந்த
பயணத்தில் நாம் அடுத்து அடி எடுத்து வைத்தது மோட்ச தீப வழிபாடு. 2018 ம்
ஆண்டு ஆடி மாதம் கோலாகலமாக சிறப்பாக கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர்
ஆலயத்தில் வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் நமக்கு நேரிடையாக வந்து ,
முதல் வழிபாட்டை துவக்கி வைத்த அகத்தியர் அடியார்கள் பாதம் தொட்டு
வணங்குகின்றோம். இதோ இந்த புரட்டாசி மாதம் மோட்ச
தீப வழிபாட்டிற்கு அனைவரையும் இந்த பதிவின் மூலம் அழைக்கின்றோம்.
புரட்டாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 16.10.2020
மெய் அன்பர்களே.
நிகழும் மங்களகரமான சார்வரி வருடம் புரட்டாசி மாதம் 30 ஆம் நாள் (16.10.2020) வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷி முன்னிலையில் பித்ருக்களின் ஆசி வேண்டி மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து முன்னோர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.
சின்னாளபட்டியில் உள்ள ஸ்ரீ அகத்தியர் ஞானக்குடில் மூலம் கோவை
பச்சபாளையத்தில் உள்ள அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் கோயிலில் நாம் "மோட்ச
தீபம்" என்ற ஒரு உயரிய வழிபாட்டில் கலந்து கொள்ள
இறையருளும் குருவருளும் நம்மை பணித்தார்கள். மோட்ச தீபம் என்ற வார்த்தை
பற்றி மட்டுமே கேள்விப்பட்டு இருந்தோம். பொதுவாகவே தீப வழிபாடு மிக மிக
உயர்ந்தது. எந்த கோயிலுக்கு சென்றாலும் பூவும், தீபமேற்ற நெய் அல்லது
எண்ணெய் வாங்கி சென்று வழிபடுங்கள். தேங்காய், பழம் வைத்து வழிபாடு செய்வதை
விட, பூக்களும், தீபமும் சால சிறந்தது. மோட்சம் என்றால் இறந்தவரின் ஆன்மா
நற்கதி அடைய வேண்டி தீபமேற்றி பிரார்த்தனை செய்வது ஆகும். அப்படி என்றால்
நாம் ஏற்றும் அகல் விளக்கிலேயே முன்னோர்களின் ஆன்மா நற்கதிக்கு
பிரார்த்திக்கலாம் என்றால் ..இது அப்படி இல்லை.இதற்கென சில
முன்தயாரிப்புகள் செய்ய வேண்டும்.
உடலை விட்டுப் பிரிந்த ஆத்மா மறுபிறவி இல்லாமல் மோட்சம் அடைவதற்காக
திருக்கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றுவது ஐதீகம்.குறிப்பாக அப்பர்
சுவாமிகளுக்கு சிவபெருமான் கயிலைக் காட்சி அருளிய
திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பு
என்றும் கூறுகின்றார்கள். குறிப்பாக இந்த தீபத்தை மருத்துவ துறையில்
இருப்பவர்கள், கோவிலில் ஏற்ற வேண்டும். நம்மைப் பொறுத்த வரையில் பதிவின்
ஆரம்பத்திலேயே வழிபாட்டில் மிக மிக உயர்ந்த வழிபாடு என்று இந்த வழிபாட்டை
சொல்லி தான் ஆரம்பித்தோம். நாம் யாருக்காக பிரார்த்திக்கின்றோம்/ வழிபாடு
செய்கின்றோம்? நமக்கு, நம் குடும்பத்திற்கு, நம் உற்றார் உறவினர்களுக்கு
என்று அடுத்த தான் செல்கின்றோம். கண்ணனுக்கு தெரிந்து உடல் பெற்று வாழும்
உயிர்களுக்கு வழிபாடு/பிரார்த்தனை/ அன்னசேவை என செய்கின்றோம். ஆனால்
கண்ணுக்கு தெரியாமல் உடல் இன்றி வெறும் ஆத்மா மட்டும்
வாழுகின்றார்களே..அவர்களுக்கு யார் உணவிடுவது? பிரார்த்திப்பது? என்பது
போன்ற பல கேள்விகளுக்கு விடையாக இருப்பதே இந்த மோட்ச தீபம் வழிபாடு
ஆகும். அப்படியானால் இது மிகவும் உயர்ந்த வழிபாடு தானே? ஐயம் ஏதும்
இல்லையே....
அடுத்து நாம் நம் TUT தளம் சார்பில் இந்த வழிபாடு மேற்கொள்ள ஜீவநாடி
உத்திரவு கேட்டோம். நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானின் அருளாசியால்
2018 ஆம் ஆனதில் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் நாள் அமாவாசை அன்று கூடுவாஞ்சேரி
மாமரத்து விநாயகர் கோயிலில் மோட்ச தீப வழிபாடு நடைபெற்று வருகின்றது. 2020
ஆண்டு பங்குனி மோட்ச தீப வழிபாடும் சுமார் 10 பேர் அளவில் சிறப்பாக
நடைபெற்றது. வருகின்ற வைகாசி அமாவாசை வழிபாடு வழக்கம் போல் நடைபெற உள்ளது.
அடியார் பெருமக்கள் வீட்டிலேயே பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகின்றோம்.
சின்னாளபட்டியில் உள்ள ஸ்ரீ அகத்தியர் ஞானக்குடில் மூலம் கோவை
பச்சப்பாளையத்தில் உள்ள அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் கோயிலில் நாம் "மோட்ச
தீபம்" என்ற ஒரு உயரிய வழிபாட்டில் கலந்து கொள்ள
இறையருளும் குருவருளும் நம்மை பணித்தார்கள். மோட்ச தீபம் என்ற வார்த்தை
பற்றி மட்டுமே கேள்விப்பட்டு இருந்தோம். பொதுவாகவே தீப வழிபாடு மிக மிக
உயர்ந்தது. எந்த கோயிலுக்கு சென்றாலும் பூவும், தீபமேற்ற நெய் அல்லது
எண்ணெய் வாங்கி சென்று வழிபடுங்கள். தேங்காய், பழம் வைத்து வழிபாடு செய்வதை
விட, பூக்களும், தீபமும் சால சிறந்தது. மோட்சம் என்றால் இறந்தவரின் ஆன்மா
நற்கதி அடைய வேண்டி தீபமேற்றி பிரார்த்தனை செய்வது ஆகும். அப்படி என்றால்
நாம் ஏற்றும் அகல் விளக்கிலேயே முன்னோர்களின் ஆன்மா நற்கதிக்கு
பிரார்த்திக்கலாம் என்றால் ..இது அப்படி இல்லை.இதற்கென சில
முன்தயாரிப்புகள் செய்ய வேண்டும்.
உடலை விட்டுப் பிரிந்த ஆத்மா மறுபிறவி இல்லாமல் மோட்சம் அடைவதற்காக
திருக்கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றுவது ஐதீகம்.குறிப்பாக அப்பர்
சுவாமிகளுக்கு சிவபெருமான் கயிலைக் காட்சி அருளிய
திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பு
என்றும் கூறுகின்றார்கள். குறிப்பாக இந்த தீபத்தை மருத்துவ துறையில்
இருப்பவர்கள், கோவிலில் ஏற்ற வேண்டும். நம்மைப் பொறுத்த வரையில் பதிவின்
ஆரம்பத்திலேயே வழிபாட்டில் மிக மிக உயர்ந்த வழிபாடு என்று இந்த வழிபாட்டை
சொல்லி தான் ஆரம்பித்தோம். நாம் யாருக்காக பிரார்த்திக்கின்றோம்/ வழிபாடு
செய்கின்றோம்? நமக்கு, நம் குடும்பத்திற்கு, நம் உற்றார் உறவினர்களுக்கு
என்று அடுத்த தான் செல்கின்றோம். கண்ணனுக்கு தெரிந்து உடல் பெற்று வாழும்
உயிர்களுக்கு வழிபாடு/பிரார்த்தனை/ அன்னசேவை என செய்கின்றோம். ஆனால்
கண்ணுக்கு தெரியாமல் உடல் இன்றி வெறும் ஆத்மா மட்டும்
வாழுகின்றார்களே..அவர்களுக்கு யார் உணவிடுவது? பிரார்த்திப்பது? என்பது
போன்ற பல கேள்விகளுக்கு விடையாக இருப்பதே இந்த மோட்ச தீபம் வழிபாடு
ஆகும். அப்படியானால் இது மிகவும் உயர்ந்த வழிபாடு தானே? ஐயம் ஏதும்
இல்லையே....
அடுத்து நாம் நம் TUT தளம் சார்பில் இந்த வழிபாடு மேற்கொள்ள ஜீவநாடி
உத்திரவு கேட்டோம். நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானின் அருளாசியால்
2018 ஆம் ஆனதில் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் நாள் அமாவாசை அன்று கூடுவாஞ்சேரி
மாமரத்து விநாயகர் கோயிலில் மோட்ச தீப வழிபாடு நடைபெற்று வருகின்றது. இனி சென்ற ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு பற்றி காண இருக்கின்றோம். மேலும் அன்றைய தினம் நடைபெற்ற இறைப்பணி பற்றியும் இங்கே தொட்டுக்காட்ட விரும்புகின்றோம்.
எப்பொழுதும் நாம் மாலை வேளையிலே இந்த முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்து விடுவோம். இம்முறை அமாவாசை இரவு 8 மணிக்கு மேல் என்பதால் இரவில் இந்த ஏற்பாடுகள் செய்யலாயிற்று.
இதோ. வழிபாடு தொடங்கியாகி விட்டது.
21 தீபங்களும் ஏற்றப்பட்டது.
திருமதி.ராதா அம்மா அவர்கள் விநாயகர் பாடல் பாடி வழிபாட்டை துவக்கி வைத்தார்கள்.
குருமார்களின் பாடல் பாடிய போது
அடுத்து மோட்ச தீப மந்திரம் 108 முறை சொல்ல ஆரம்பித்தோம்.
மற்றுமொரு மந்திரம் 108 முறை ஆரம்பித்தோம். திரு. அனந்தகிருஷ்ணன் ஐயா அவர்கள் இரண்டு மந்திரங்களையும் 108 முறை சொல்லிக்கொண்டு இருந்தார்.
திரு.விஜய் ஆதித்தன் ஐயா அவர்கள் நெய் ஊற்றி விளக்கை கவனிக்கும் பொறுப்பை சிரமேற்கொண்டு செய்து கொண்டிருந்தார்.
இம்முறை பைரவர் தரிசனம் பெற்றுக்கொண்டோம். எங்கிருந்து வந்தார் என்று தெரியவில்லை. ஆனால் பூஜை முடியும் வரை கண்டு நாம் திகைத்தோம். இதுநாள் வரை ஏற்றிய மோட்ச தீப வழிபாட்டில் முதல் முறையாக பைரவர் தரிசனம் கண்டோம்.
அடுத்து மலர் தூவி அனைத்து உடலற்ற உயிர்களுக்கும் பிரார்த்தனை செய்தோம்.
அன்றைய தினம் புதிதாக சில அன்பர்கள் சேர்ந்து நம்முடன் வழிபாட்டில் கலந்து கொண்டார்கள்.
அடுத்து பிரசாதம் விநியோகம் செய்ய்யப்பட்டது.
இந்த
மோட்ச தீப வழிபாடானது மிக மிக உயர்ந்த வழிபாடு.,இத்தகைய வழிபாட்டை நமக்கு
பணித்த அனைத்து குருமார்களின் பாதம் பணிகின்றோம். அதே போல் சென்ற பூசையில்
பங்கு கொண்டு, சிறப்பாக நடக்க ஒத்துழைப்பு நல்கி உதவிய அனைத்து அன்பர்களின்
பாதம் பணிகின்றோம். இந்த மோட்ச தீப வழிபாடு ஒருவரால் நிகழ்த்தப்படுவதன்று.
இது ஒரு கூட்டு வழிபாடு. யாரும் நமக்கு அழைத்து சொல்லவில்லை என்று
நினைக்காது தாமாக முன்வந்து உதவுங்கள் என்று வேண்டுகின்றோம்.
பதிவின் ஆரம்பத்தில் சொன்னது போல் ஐப்பசி மாத இறைப்பணி பற்றி அடுத்த பதிவில் பேசுவோம்.
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
மஹாளய அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 16.09.2020 -
https://tut-temples.blogspot.com/2020/09/16092020.html
Thanks..we will get back to you in future
ReplyDelete