அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
ஐப்பசி மாத வழிபாட்டில் நவராத்திரி தரிசனம் தினமும் கண்டு வருகின்றோம். சில பதிவுகளுக்கு முன்னர் மகாளய பட்ச சேவையாக ஆவணி மாத இறைப்பணி பற்றி பேசி இருந்தோம். இந்த ஆண்டு மகாளய பட்ச அன்னசேவை பற்றியே தனிப்பதிவில் பேசலாம். இந்த சேவையில் மகாளய பட்ச சேவையில் அமாவாசை அன்னசேவை சிறப்பாக அமைந்தது. சென்னை சோழிங்கநல்லூரில் இயங்கி வரும் ஆதி சிவன் அறக்கட்டளையினர் நமக்கு அன்னசேவை செய்ய வாய்ப்பு கொடுத்தது குருவருளால் அமைந்தது. அமாவாசை இரவில் மோட்ச தீப வழிபாடும், அடுத்த நாள் காலை மகாளயபட்ச அன்னசேவை சிறப்பாக நடைபெற்றது. நாமும் மகாளய பட்ச அன்னசேவையாக கூடுவாஞ்சேரி வள்ளலார் சபையிலும் ஏற்பாடு செய்து இருந்தோம். அதனை இங்கே தொடர விரும்புகின்றோம்.
அன்று மதியம் வழக்கம் போல் கூடுவாஞ்சேரி வள்ளலார் சபை சென்றோம்.அங்கே அறிவிப்பு பதாகையை நம் அன்னசேவை பற்றி கூறி இருந்தார்கள்.
அங்கே உள்ள பிரார்த்தனை கூடத்தில் சென்று உலக மக்கள் அனைவரும் இன்பமாக வாழ வேண்டி பிரார்த்தனை செய்தோம்.
அருட்பெருஞ்சோதி தெய்வம் ...நம்மை ஆண்டு கொண்ட தெய்வம். வள்ளலார் தரிசனம்..ஜோதி வழிபாடு என செய்தோம். அடுத்து நம் இறைப்பணி ஆரம்பம்.
இதோ..அடுத்து நம் நண்பர் திரு.சத்யராஜ் அவர்கள் அன்னமிடுகின்றார். இங்கே நாம் அன்பைத் தான் கொடுக்கின்றோம். ஏனெனில் அன்பு இருந்தால் தான் இது போன்ற அறச்செயல்களை நாம் செய்ய முடியும். அதே போன்று இங்கே நாம் கொடுக்கின்றோம் என்று எள்ளளவும் நினைக்கவில்லை. இவை அனைத்தும் குருநாதரின் அருளால் தான் நடைபெற்று வருகின்றது. நாம் வெறும் கருவியே.
மொத்தத்தில் இந்த ஆண்டில் ஆவணி மாத இறைப்பணியில் மகாளய பட்ச சேவையும் இணைத்தால் நம் தள அன்பர்களின் பொருளுதவி மற்றும் அருளுதவியினால் சென்ற ஆண்டை விட தொண்டும் ,சேவையும் அளவிலும் தரத்திலும் குருவருளால் உயர்ந்துள்ளதை கண்டு மெய் சிலிர்க்கின்றோம். பதிவின் இடையில் காரணமின்றி காரியமில்லை என்று சொன்னது பற்றி கேட்கின்றீர்களா? ஆம். இந்த அண்ணா சேவை கூடுவாஞ்சேரி வள்ளலார் கோயிலில் முழுமை செய்து பேசிய போது ,சபை பெரியோர்கள் அக்டோபர் 5 ஆம் தேதி, வள்ளலார் வருவிக்கவுற்ற தினம் என்று கூறி, நம்மை அன்னசேவை செய்யப் பணித்தார்கள். ஆஹா. ..பழம் நழுவி பாலில் அல்லவா விழுகின்றது என்று கூறி, அன்றைய தினமே முன்தொகையாக ரூ.500 கொடுத்து விட்டு வந்தோம். இது தான் குருவருள் வழி நடத்தும் செயல் ஆகும்.
ஆவணி மாத இறைப்பணி மிக அருமையாக நடைபெற்றது. நம்மை வழிநடத்தும் குருமார்களின் பதம் பற்றி எப்போதும் நடப்போம்.
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக :-
நல்வினையாற்ற 19 வழிகள் - எதிர்பார்ப்பினைத் தவிர் - https://tut-temples.blogspot.com/2020/03/19_31.html
நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html
நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html
No comments:
Post a Comment