"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, October 19, 2020

நவராத்திரி இரண்டாம் நாள் தரிசனம்

அனைவருக்கும் வணக்கம்,

நவராத்திரி பண்டிகையின் முக்கிய நோக்கமே, நாம் எல்லோரும் ஒன்றே, அனைத்தும் இறைசக்தியின் வடிவமே என்று உணர்த்துவதுதான். துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று இறைசக்திகளும் ஒன்று சேர்ந்து மகிஷாசுர மர்த்தினியாக அவதாரம் எடுத்து, மகிஷன் எனும் அரக்கனை அழிப்பதையே நவராத்திரி வரலாறு என்கிறார்கள்.

துர்க்கையான பார்வதியை முதல் 3 நாட்களும், அடுத்து லட்சுமியை 3 நாட்களும், இறுதி 3 நாட்கள் சரஸ்வதியையும் 10-வது நாள் விஜய சாமுண்டீஸ்வரியாக வணங்க வேண்டும்.

துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து மன உறுதி கிடைக்கும். லட்சுமியை வணங்கினால் பொன், பொருள், நல்ல ஒழுக்கம், உயர்ந்த பண்பாடுகள், கருணை, மனிதநேயம், நல்ல சிந்தனைகள் கிடைக்கும். சரசுவதியை வழிபட்டால் ஞானம், உயர்ந்த கல்வி, கலைகளில் தேர்ச்சி கிடைக்கும்.



இரண்டாம் நாள் தரிசனம் நமக்கு பெரம்பலூரில் உள்ள சதீஷ்குமார் அய்யாவிடம் இருந்து நமக்கு கிடைத்தது.மல்லிகை சரம் கொண்டு பல வண்ண மலர்களில் அன்னையின் தரிசனம். இந்த அருள்நிலை பெற  காண கண் கோடி வேண்டும். இதோ மேலும் சில குறிப்புகள் இங்கே பகிர்கின்றோம்.

நால்வரின் பாதையில் சுரேஷ் பிரியன் அவர்களின் இல்ல நவராத்திரி விழாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். சைதை சார்ந்த அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம். சென்ற ஆண்டு நாம் பகலிலே சென்று கண்ணுக்கினிய கொலுவை கண்டு வந்தோம்.இம்முறையும் செல்ல இறை சித்தம் வேண்டுகின்றோம்.


சைதாப்பேட்டை கணபதி பள்ளியில் உள்ள கொலு காட்சிகள் இங்கே..







திருமண விருந்து, மாலை மாற்றுதல் ,கூட்டுக் குடும்பம்,சிறுவர் சிறுமி விளையாட்டு என எவற்றையெல்லாம் நாம் இழந்து இருக்கின்றோமோ, அவை எல்லாம் கொலு காட்சிகளில் வைக்கப்பட்டுள்ளன.மீண்டும் இவை அனைத்தும் வாழ்வின் நடைமுறையில் கொண்டு வர ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும். கொலு காட்சிப் பொருள் அல்ல, கொலு கண்டு உணர்த்தும் பாடம்.











கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் நவராத்திரி இரண்டாம் நாள் தரிசனம். மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் அன்னையைக் கண்டோம். இங்கு நவராத்திரி முழுதும் தினசரி காலை கோ பூசை, தேவி மகாட்மியம் அபிசேகம் நடைபெற்று வருகின்றது. மூன்றாம் நாள் தரிசனம் ஸ்ரீ காமாட்சி அம்மன்..நாளைய பதிவில் தருகின்றோம்.





இன்று காலை கோயிலுக்கு சென்று வழிபட்டோம்.இதோ அபிஷேக காட்சிகள் உங்களுக்காக..








இங்கு வைக்கப்பட்டுள்ள கொலு காட்சிகள்












அடுத்து அம்மனின் தரிசனம் தான்...




வளங்களை அருளும் மஹாலட்சுமி தாயாரையும் மஹா சரஸ்வதி தாயாரை இன்று தரிசித்து வந்தோம். நீங்களும் அருள் பெற்று இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். மீண்டும் நாளைய பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

 TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2020/10/tut_18.html

 நவராத்திரி 75 - முதல் நாள் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2020/10/75.html

 TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2)  - https://tut-temples.blogspot.com/2019/09/tut-2.html

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temples.blogspot.com/2019/09/tut.html

கொலுவும் திருவும் - நம் வாசகர் வீட்டு கொலு அனுபவமும், நவராத்திரி அழைப்பிதழும் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_33.html

 நவராத்திரி அழைப்பிதழுடன் வல்வினை நீக்கும் வல்லக்கோட்டை முருகா சரணம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_28.html

 நவராத்திரி விழா கொண்டாட வாருங்கள் - அருள்மிகு சுந்தர மகாலிங்கசுவாமி நவராத்திரி திருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_5.html


No comments:

Post a Comment