"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, October 9, 2020

அம்மம்மா வெகுதெளிவு அவர்வாக்குத்தான் - புரட்டாசி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 12.10.2020

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

புரட்டாசி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதலை இன்றைய பதிவில் பகிர விரும்புகின்றோம். சென்ற ஆவணி மாத ஆயில்ய ஆராதனை அருள்நிலைகளை கண்டு, அகத்தியம் சிறிது உணர உள்ளோம்.

காகபுசண்டர் பல கோடியுகம் வாழும் சித்தர் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். அவரின் பெருநூல் காவியம் 1000 -ல் நான் கண்ட பாடல்(142 ) .

அகஸ்தியரே பெரும்பேற்றை யடைந்தோராவர்
அம்மம்மா வெகுதெளிவு அவர்வாக்குத்தான்
அகத்திலுரை பொருளெல்லாம் வெளியாய்ச்சொல்வர்
அவர் வாக்குச் செவிகேட்க அருமையாகும்
அகஸ்தியரின் பொதிகையே மேருவாகும்
அம்மலையும் அகஸ்தியரின் மலையுமாகும்
அகத்தியரினடையாளம் பொதிகை மேரு
அவர்மனது அவரைபோல் பெரியோருண்டோ...

அகத்தியமே சத்தியமாய் ..சத்தியமே அகத்தியமாய் உணர்த்தும் வரிகள், பொதுவாக படித்தாலே பொருள் உணரலாம். நம்முடைய அருள் நிலைக்கேற்ப, பொருள் இலங்கும் என்பது திண்ணம். பொதுவாக சித்தர் பாடல்களை நாம் இங்கே பதிவேற்ற முடியுமே தவிர, பொருள் உணர்த்துவது பரம்பொருளின் கையிலே தான். இதனை சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் என்ற மகத்துவம் பொருந்திய மாணிக்க வாசகரின் கருத்தின் மூலம் அறியலாம்.



மேலும் மற்றொரு பாடலை சிந்திப்போம்.

கூறுமே யாம்நினைத்த சங்கற்பத்தை
  குருவானாற் சொல்லிடுமே அடியாராவோம்
யாருமே எட்டிரண்டும் பத்தென்றார்கள்
  யார் சொன்னார் அகத்தியரே விரித்துச் சொன்னார்
தாருமே மாந்தர்களும் மயங்கினார்கள்
  தமர்சித்த ரானாக்காற் சொல்லுவார்கள்
கோருமே நீர் கேட்கச் சொல்லி வாரேன்
  குரு  வாகு மந்திரங்க ளீதுதானே

இன்னும் சற்று ஆழமாக யோகக் கலையின் சூட்சுமத்தை இங்கே பகிர்கின்றார். அகத்தியரை அருட்குருவை மனதுள் வைத்து, போற்றுவோம். போற்றினால் தானே குருவின் மூலம் திருவின் அருள் பெற முடியும். குருவின் கால் பட்ட இடமெல்லாம் கைலாயம் என்ற உண்மையை உள்வாங்குவோம். அகத்தியரின் புனிதம் பெற்ற  பூமி நம் தமிழ்நாடு.சரி பூஜைக்கு செல்வோமா?



என்னப்பா? ஆயில்ய பூசை என்று சொல்லிவிட்டு, கோமாதா தரிசனம் என்று நீங்கள் சொல்வது நம் காதில் விழுகின்றது. ஆம். மகாளய பட்ச நித்திய அன்னசேவை நடந்து கொண்டிருந்தது. நம் தளம் சார்பில் தினமும் 02.09.2020 முதல் 17.09.2020 வரை குறைந்தது 10 பேருக்கு அன்னசேவை வீட்டில் தயார் செய்து கொடுத்தோம். இதனுடன் மேலும் வஸ்திரம் தானம், குடை தானம், போர்வை தானம், கோமாதாக்களுக்கு வாழைப்பழம், அகத்திக்கீரை என கொடுத்தோம், அதனைத் தான் உங்களுக்கு கீழே காட்டியுள்ளோம்.






அடுத்து நீங்கள் காண்பது மகாளய பட்ச அன்னசேவைக்கான ஏற்பாடுகள். அன்றைய தினம் வெகு நேரமாகிவிட்டது. நம் குழு அன்பர் திரு.குமார் நம்மை அழைத்து ஆயில்ய பூசை எப்போது என்று வினவ? நாம் சுமார் 9 மணி அளவில் ஆரம்பம் என்று கூறிவிட்டு, பின்னர் உணவு பொட்டலங்கள் தயார் செய்து நேரே கோயிலுக்கு சென்றோம்.









கோயிலுக்கு சென்று நம் குருநாதர் தரிசனம் பெற்றுவிட்டு, குருக்களிடம் நீங்கள் ஆயில்ய பூசையை தொடங்குங்கள். யாருக்காகவும் காத்திருக்க வேண்டாம் என்று கூறி விட்டு அன்னசேவை செய்ய புறப்பட்டோம்.



சுமார் 10 அன்பர்களுக்கு உணவு பொட்டலங்கள் கொடுத்துவிட்டு மீண்டும் கோயிலுக்கு சென்றோம். கோயிலுக்கு செல்லும் வழியில் அப்படியே கிளார் சென்று நம் குருநாதர் தரிசனம் பெறுவோமா?அறம் வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் தரிசனம் கிளார் கோயிலில் பெற்றோம்.




நம் குருநாதருக்கும், அன்னைக்கும் அபிஷேக காட்சிகள் கண்ணார கண்டோம்.










அபிஷேகம் முடிந்து, அலங்கார தரிசனம் பெற்றோம். சரி..இனி கூடுவாஞ்சேரி சென்று ஆயில்ய ஆராதனை காண இருக்கின்றோம்.

 இதோ அருள் வெளிப்பாட்டின் அற்புதங்கள் உங்களுக்காக



















 அலங்காரத்திற்கு நம் ஐயன் தயாராக. எத்தனை முறை தரிசித்தாலும்  ஏக்கம் தரும்  உணர்வினில் நம்மை ஆட்கொள்ளும் அகத்தியரின் பதத்தினையும், பாதத்தினையும் பற்றுக்கோடாக்கிட பெற்றோம் இப்பிறவி. லோக ஷேமத்திற்காக சங்கல்பம் செய்தோம்.




பெரம்பலூர் ஸ்ரீ அகத்தியர் தரிசனம் பெற்றுக்கொள்ளுங்கள். இவரின் தரிசனம் பெரம்பலூர் அகத்திய அடியார் திரு.சதீஷ்குமார் அவர்களின் இல்லத்தில் இருந்து கிடைக்கும்.

 அப்பனே போற்றி, அருள் பெற்ற தேவே போற்றி !! என்று எத்தனை போற்றிகளை நாம் உம்மை துதித்தாலும் ,  உம் அன்பிற்கும், அருளிற்கும் ஈடு இணை உண்டா? அகத்தீசா ! இதோ..நம் அகங்காரம் நீக்கும் அலங்கார தரிசனம் பெற அனைவரும் தயாரா?









அடுத்து பிரசாதம் விநியோகம் செய்தோம்.நேரில் பூஜையில் வந்து கலந்து அருள் பெற்ற திரு. குமார் ஐயா அவர்களுக்கு நன்றி. அருமையாக ஆராதனையை நடத்திக் கொடுத்த குருக்கள் அனைவருக்கும் TUT தளத்தின் வாயிலாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

புரட்டாசி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 12.10.2020 

மெய் அன்பர்களே.

நிகழும் மங்களகரமான சார்வரி  வருடம் புரட்டாசி  மாதம் 26 ஆம் நாள் 12.10.2020  திங்கட் கிழமை   அன்று ஆயில்ய நட்சத்திரமும், சித்த  யோகமும் கூடிய சுப தினத்தில் காலை  8 மணி முதல் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில்  அருள்பாலிக்கும்  ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு  அபிஷேகம், அலங்காரம் செய்து  ஆராதனை செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து சித்தர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 எமையே ஆள்கின்ற அகத்தீசனே போற்றி! - ஆவணி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 15.09.2020 - https://tut-temples.blogspot.com/2020/09/15092020.html

 ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 18.08.2020 - https://tut-temples.blogspot.com/2020/08/18082020.html

அகத்தீசனே சரண் சரணம் - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆடி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_21.html

ஓம் அகத்தீஸ்வராய நமஹ - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆனி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_24.html

அகத்தியரை அருட் குருவை அகத்துள் வைப்போம் - கூடுவாஞ்சேரி அகத்தியர் வைகாசி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_26.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு  - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

2 comments:

  1. சிறப்பான பதிவு

    ReplyDelete
    Replies
    1. ஓம் அகத்தீஸ்வராய நமஹ
      நன்றி ஐயா

      Delete