அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இந்த மாத ஆவணி மாதம் இரண்டு ஆயில்ய நட்சத்திர வழிபாடு உள்ளது. இதற்கு முன்னர் நடைபெற்ற அகத்தியர் ஆயில்ய ஆராதனை மற்றும் ஆவணி அமாவாசை வழிபாட்டை நாம் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்ற தலைப்பில் பதிவு செய்தோம். ஆம். 18.08.2020 அன்று நடைபெற்ற ஆயில்ய ஆராதனையும், மோட்ச தீப வழிபாடும் பல அருள்நிலைகளை அனைவருக்கும் வழங்கியது. அன்றைய தினம் தொற்றுக்கால ஊரடங்கு தாண்டி, அன்பர்கள் திரளாக வழிபாட்டிற்கு வந்திருந்தார்கள்.
முதலில் அனைவருக்கும் ஆவணி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பு தருகின்றோம்.
மெய் அன்பர்களே.
நிகழும் மங்களகரமான சார்வரி வருடம் ஆவணி மாதம் 30 ஆம் நாள் 15.09.2020 செவ்வாய் கிழமை அன்று ஆயில்ய நட்சத்திரமும், சித்த யோகமும்
கூடிய சுப தினத்தில் காலை 9 மணி முதல் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர்
ஆலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷேகம்,
அலங்காரம் செய்து ஆராதனை செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து
சித்தர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.
அன்றைய தின தரிசனப் பதிவை இன்று காண்போமா?
ஏற்கனவே சொன்னது போல் அன்றைய தினம் ஆயில்ய ஆராதனையும், மோட்ச தீப வழிபாடும் செய்வதற்கு நாம் தயாரானோம். முதலில் நம் குருநாதர் தரிசனம் பெற்றோம்.
அடுத்து வழிபாட்டிற்கு தேவையான பூசை பொருட்களை தயார்படுத்தினோம்.
அடுத்து மோட்ச தீபம் ஏற்றுவதற்கு நாம் தயாரானோம்.
கோயில் குருக்கள் முதலில் ஆயில்ய ஆராதனை செய்து, பின்னர் மோட்ச தீபம் ஏற்றலாம் என்று கூறவே, ஆயில்ய ஆராதனைக்கு தயாரானோம்.
அனைவரும் அகத்தியரின் முன்பு அமர்ந்து, தெரிந்த சித்தர்கள் போற்றித் தொகுப்பு, அகத்தியர் பாடல்கள் என்று பாடிக்கொண்டே இருந்தோம்.
ஒருபுறம் அகத்தியர் கீதம் இசைக்க, மறுபுறம் மோட்ச தீபம் ஒளிர ஆயத்தப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அன்று ஆயில்ய ஆராதனை மனதிற்கு இதமாக இருந்தது. மெய் மறந்த தருணத்தில் அலைபேசியில் நாம் அருள்நிலைகளை காட்சிப்படுத்த மறந்து விட்டோம். நீங்களே பாருங்கள். நம் குருநாதர் தீப ஒளியில் அருள் தந்து கொண்டிருக்கும் அருளை உள்வாங்கிக்கொள்ளுங்கள்.
அகத்திய பெருமானை வணங்கினோம். அகத்திய இறையோனை கண்டோம். அகத்திய மறையோனை வருக..வருக என அழைத்தோம். அகத்திய அருளோன் ஆசி பெற்றோம்.
அன்பினில் கலந்தோம். அன்பினில் உயர்ந்தோம். அன்பினில் உறைந்தோம். அன்பினில் கனிந்தோம். அட..எல்லாம் அகத்தியம் என்று உணர்ந்தோம். அகத்தியமே சத்தியம் என்று தெளிந்தோம். சத்தியமே அகத்தியம் என்று உணர்த்தப்பட்ட நிலை அது.
அடுத்து மோட்ச தீபம் ஏற்ற சென்றோம். எப்படி ஏற்றினோம். குருநாதர் நம்மை எப்படி வழிநடத்தினார் போன்ற செய்திகளை அடுத்த பதிவில் காண்போம்.
இன்று பிற்பகல் 2:00 மணி முதல் நாளை பிற்பகல் 1மணி வரை ஆயில்யம் நட்சத்திரம்
வருகின்றது. வழக்கமான பூசை இம்முறை நாளை 15.09.2020 காலை 9 மணி அளவில் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் நடைபெறும். கூடுவாஞ்சேரி அருகில் உள்ள
அன்பர்கள் நேரில் வந்து கலந்து கொள்ளவும்.எனவே அடியார் பெருமக்கள் இன்று நாம் குறிப்பிட்ட ஆயில்ய
நேரத்தில் உங்களுக்கு தெரிந்த சித்தர்களின், குருமார்களின் நாமம் ஓதி,
விளக்கேற்றி இல்லத்திலே வழிபாடு செய்ய வேண்டுகின்றோம்.
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
OHM AGATHISAYA NAMAHA:
ReplyDelete