"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, September 27, 2020

விவேகானந்தரின் வீர மொழிகள்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

தளத்தின் பதிவுகளில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது.மிக நீண்ட நாட்கள் கழித்து உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.தளத்தின் பதிவுகளில் வேண்டுமானால் தொய்வு இருக்கலாம்.ஆனால் நம் சேவைகளில் என்றுமே தொய்வு ஏற்பட்டதில்லை. மகாளய நித்ய சேவை, ஸ்ரீ அகத்தியர் வழிபாடு,மகாளய பட்ச மோட்ச தீப வழிபாடு என அனைத்தும் குருவருளால் சிறப்பாக நடைபெற்றது. இம்முறை ஆதி சிவன் டிரஸ்ட் நம்மை அவர்களின் சேவையில் மகாளய பட்ச அன்னசேவையில் இணைந்தார்கள்.அடுத்து சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி ஸ்ரீ சத்ரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகள் தரிசனம் பெற்றோம்.நம் தளம் சார்பில் அன்னசேவைக்கு துவரம்பருப்பு,அரிசி சேர்த்துள்ளோம்.அடுத்து சின்னாளப்பட்டி ஸ்ரீ அகத்தியர் ஞானக்குடிலில் அன்னசேவைக்கு நம் தளம் சார்பில் அரிசி வாங்கி கொடுத்துள்ளோம். மேலும் வருகின்ற அக்டோபர் 5 ஆம் தேதி வள்ளலார் வருவிக்குற்ற தினத்தை முன்னிட்டு, அன்றைய தினம் கூடுவாஞ்சேரியில் வள்ளலார் சபையில் அன்னசேவை நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.





சின்னாளப்பட்டி ஸ்ரீ அகத்தியர் ஞானக்குடில் தரிசனம் மேலே 







திருச்சி ஸ்ரீ சத்ரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகள் ஆலயத்தில் அன்னசேவைக்கு நம் தளம் சார்பில் சேர்த்தது.


இன்றைய வாரத்தை புத்துணர்ச்சியோடும், புதுப்பொலிவோடும் தொடங்குவோமாக? புத்துணர்ச்சி மற்றும் புதுப்பொலிவு என்றாலே இவர் தான் நம்மில் வருகின்றார். ஆம்..விவேகானந்தரின் வீர மொழிகளே என்றும் நம்மை வழிநடத்திட வேண்டுகின்றோம்.

 சுவாமி விவேகானந்தர் - ஒரு மகான், இந்திய திருநாட்டின் பெயரை உலகெங்கும் ஓங்கி ஒலிக்க செய்த வள்ளல், இவரை வெறும் துறவி என்று பார்த்தல் அது நம் ஊனக் கண் செய்யும் தவறே. அவர் வாழ்வியலை போதிக்க வந்த ஆசான்.இன்னும் இன்னும் என சொல்லிக் கொண்டே போகலாம்.அவர் ஆன்மிகத்தை மற்றும் போதிக்கவில்லை என்பது அவரது வரலாற்றைப் படித்தால் புரியும்.














அனைவருக்கும் தெரிந்த கதை தான்,இருந்தாலும் மீண்டும் ஒரு முறை இங்கே பகிர்கின்றோம். ஓடிக்கொண்டு இருந்தால் ஓடிக் கொண்டே தான் இருக்க வேண்டும்.எத்தனை நாள் தான் ஓடிக் கொண்டிருப்போம்.எதிர்த்து நிற்க வேண்டாமா? எதிர்த்து நின்றாள்,துணிவு கிடைக்கும்.துணிவு இருந்தால் மலை போன்ற பிரச்சினையும் தூள் தூளாகும் அன்றோ?

சுவாமி விவேகானந்தரின் மன உறுதி…

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.
ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது—

சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்து விட்டார்.

அதைக் கண்டதும் விவேகானந்தரும், அவரது நண்பரும் துணுக்குற்றனர்.
மனைவியைத் தூக்க நண்பர் முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கி விட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை.

இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.
பாய்ந்து வந்த மாடு, கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது.

அதைக் கண்ட நண்பர் பின்னங்கால் பிடறியில் அடிக்க, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினார். மாடும் விடாமல் அவரைத் துரத்தியது.

அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடிவந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப் போட்டனர்.

விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார்.

அங்கு வந்த நண்பருக்கோ ஒரே ஆச்சரியம். அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர்.

அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “”நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒருவித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.
உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.


உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தை விடாதே ! நீ சாதிக்க பிறந்தவன் துணிந்து நில் , எதையும் வெல்.

சிறிய கதை போல் தோன்றுகிறதா? இது உண்மை சம்பவம்.ஓடுவதை நிறுத்தி எதிர்த்து நிற்க வேண்டும்.இதுவே நம் பண்பாடு,கலாச்சாரம் கற்றுக் கொடுத்தது. தங்களின் பார்வைக்கு விவேகானந்தரின் சில மேற்கோள்களை இங்கே பகிர்கின்றோம்.படித்து விட்டு,தங்களின் கருத்துக்களை சொல்லுங்கள்.




























 மெய் அன்பர்களே. படித்து விட்டீர்களா? ஒவ்வொன்றும் பொக்கிஷம் தானே. நமக்கு கிடைத்த மாபெரும் புதையல்கள் இவை தானே? இதையெல்லாம் படித்த பிறகு,விவேகானந்தரைப் படிக்க வேண்டும் என்று மனம் ஏங்குகின்றது.இங்கே நாம் சில துளிகளை மட்டும் எடுத்து பருகி உள்ளோம்.அவரின் கருத்துக்கள் பெருங்கடல் போன்றது.அவரைப் போல் ஒரு மகானை இனி வரும் காலங்களில் காண இயலாது.

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் 

மீள்பதிவாக:-

விவேகானந்தர் விஜயம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_39.html

வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ்  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html

அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5.html

No comments:

Post a Comment