"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, September 29, 2020

TUT நவராத்திரி தரிசனம் தொகுப்பு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

தேடல் உள்ள தேனீக்களாய் வலைப்பதிவு தொடங்கியது முதல் நாம் விநாயகர் சதுர்த்தி தரிசனம் என்று பதிவு ஆரம்பித்தோம்.அடுத்து நம்மை நவராத்திரி விழாக்கால தரிசனம் வெகுவாக ஈர்த்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நவராத்திரி தொடர் பதிவாக குருவருளால் பெற்று வருகின்றோம்.  அடுத்து நாம்  நவராத்திரி வழிபாட்டிற்காக காத்துக்கொண்டிருக்கின்றோம். 

சார்வரி ஆண்டு நம்மை வெகுவாக சோதித்துள்ளது. சார்வரி ஆண்டு முதல் நாம் தொற்றுக்கிருமியால் அவதிப்பட்டு வருகின்றோம்.  இது ஒருபுறமிருக்க, தமிழ் நாட்காட்டியில் இந்த ஆண்டில் நாம் குழப்பத்தில் இருக்கின்றோம். ஆடி மாதத்தில் ஆவணி அவிட்டம் கொண்டாடினோம். அதே போன்று  கிருஷ்ண ஜெயந்தியும் அமைந்தது. மகாளய பட்சமும் பொதுவாக புரட்டாசியில் தான் வரும். இந்த ஆண்டில் ஆவணியில் மகாளய பட்சம் வந்துள்ளது. இதில் நவராத்திரியும் ஐப்பசி 1 ஆம் தேதியில் வருகின்றது. ஏன் இத்தனை குழப்பங்கள்? இதனை எப்படி கணக்கீடு செய்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்? என்றெல்லாம் நமக்கு தோன்றுகின்றது. நவகோள்கள், பன்னிரண்டு ராசிகள், இருபத்தியேழு நட்சத்திரங்கள் என்று நாம் பொதுவாக பேசி கணக்கில் கொண்டு வருகின்றோம். ஆனால் இந்த தமிழ் மாத நாட்காட்டி இவற்றை தாண்டி, இன்னும் துல்லியமாக நம் முன்னோர்களால் கணக்கீடு செய்யப்பட்டு பஞ்சாங்கமாக தந்துள்ளார்கள். 

நாம் ஏற்கனவே சொன்னது போல் பஞ்சாங்கம் என்பது கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய புத்தகம் என்றும் வானியல் நூல் என்றும் குறிப்பிடப்படுகின்றது. நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகள் தங்கள் ஞானத்தால் சூர்ய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்களைத் துல்லியமாக கணித்து அளித்ததே பஞ்சாங்கம் என்றும் குறிப்பிடப்படுகின்றது.பஞ்சாங்கம் என்ற பெயர் அது ஐந்து உறுப்புக்களைக் கொண்டிருப்பதைத் தெளிவுபடுத்துகிறது. இந்த ஐந்து உறுப்புக்களும் மரபு வழிக் கால அளவீடுகளுடன் தொடர்பான அம்சங்களாகும். இவை:  வாரம்,திதி,கரணம், நட்சத்திரம்,யோகம் ஆகும். அப்பப்பா..கேட்பதற்கே தலை சுற்றுகிறது அல்லவா? நம் ரிஷிகள் அளித்த இந்த பஞ்சாங்கத்தை நாம் கடைபிடிக்க வேண்டும் அல்லவா? இப்படியொரு நாட்காட்டி நம் தமிழ் நாட்காட்டி ஆகும்.

இந்த வருடம் விரதங்களையும் பண்டிகைகளையும் எப்போது கொண்டாடுவது என ஒரே  குழப்பம் தான்.

மஹாளயபட்சம் முடிந்தவுடன் நவராத்ரி ஆரம்பிக்க வேண்டுமே? 

அது ஏன் ஒரு மாதம் தள்ளிப்போறது? 

அடுத்து கந்தசஷ்டி ஐப்பசியில் வராமல் கார்த்திகையில் ஏன் வருகிறது?

இப்படி அடுக்கடுக்கான பல கேள்விகள்.

இவை அனைத்திற்கும் ஒரே பதில், புரட்டாசியில் வந்த அதிமாதம் தான்.

அது என்ன அதிமாதம்?

இதற்கு சௌரமானம் சாந்திரமானம் பற்றி தெரிந்திருக்க வேண்டும். 

அதை இங்கே சுருக்கமாக குறிப்பிடுகின்றேன். 

சூரியன் ஒவ்வொரு ராசியிலும் சஞ்சரிக்கும் காலம் சௌரமான மாதமாகும். ஒவ்வொரு வளர்பிறை பிரதமையில் தொடங்கி அடுத்த அமாவாசை வரை உள்ள காலம் சாந்திரமான மாதமாகும்.ஒரு வருடத்தில் சௌரமான மாதங்களின் மொத்த நாட்களை விட சாந்திரமான மாதங்களின் மொத்த நாட்கள் சுமார் 11 நாள் குறைவாக இருக்கும். 

இதனால் இரண்டேமுக்கால் வருடத்திற்கு ஒருமுறை ஒரு மாதம் அதிகமாக வரும். 

இதற்கு அதிமாதம் என்று பெயர். ஒரு சௌரமான மாதத்தில் இரண்டு அமாவாசைகள் ஏற்பட்டால் அந்த மாதத்தை சாந்திரமான அதிமாதமாக கொள்வது வழக்கம். இந்த அதிமாதத்தில் விரதங்களோ பண்டிகைகளோ வராது.   

மஹாளய பட்சமானது சாந்திரமான பாத்திரபத மாதத்தில் தேய்பிறை (பாத்திரபத பகுள) பிரதமையில் தொடங்கி 16 நாட்கள் இருக்கும். 

இங்கு சௌரமான மாதம் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. சாந்திரமான  பாத்திரபத பகுள பிரதமை அன்று (02-09-2020) ஏற்படுகிறது. அதனால் மஹாளயபட்சம் அன்றே தொடங்குகிறது. 

அதனால் புரட்டாசி 1ஆம் தேதி வரும் அமாவாசையானது மஹாளய அமாவாசை ஆகிறது. 

புரட்டாசி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருவதால் இது அதிமாதம் ஆகும். 

சாந்திரமான பாத்திரபத மாதம் முடிந்து ஆஸ்வின மாதம் துவங்குவதால், இதனை அதிக ஆஸ்வின மாதம் என்பர். 

பஞ்சாங்கத்தில் பார்த்தீர்களானால், புரட்டாசி 2ஆம் தேதி அதிக ஆஸ்வின சுத்தம் என்றும், புரட்டாசி 16ஆம் தேதி அதிக ஆஸ்வின பகுளம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும். 

ஆஸ்வின சுத்த பிரதமையில் நவராத்திரி ஆரம்பம் என்றாலும் அதிமாதத்தில் விரதங்களோ பண்டிகைகளோ கொண்டாடப்படுவதில்லை என்பதால் இம்மாதம் நவராத்திரி கிடையாது. 

அடுத்து, ஐப்பசி 1ஆம் தேதி வரும் பிரதமை நிஜ ஆஸ்வின சுத்தம் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். 

அன்று தான் நவராத்திரி ஆரம்பிக்கும். 

எனவே, இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை ஐப்பசி 9ஆம் தேதியன்று கொண்டாடப்படும். 

முன் எப்போதும் இல்லாமல் இப்போது தான் இந்த குழப்பம் ஏற்பட்டதா என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். 

இதற்கு முன் 1917 மற்றும் 2001 ஆகிய வருடங்களில் இதுபோல் ஆவணியில் மஹாளய பக்ஷமும், புரட்டாசி 1ஆம் தேதி மஹாளய அமாவாசையும், ஐப்பசியில் சரஸ்வதி பூஜையும் நடைபெற்றது.


நவராத்திரி வழிபாட்டிற்கான காத்திருப்பில் மீண்டும் நவராத்திரி  தரிசனக் காட்சிகளை தொடர்வோம்.

ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே

எல்லா மங்களங்களும் அருளும் மாங்கல்ய தேவியே! க்ஷேமத்தைக் கொடுப்பவளே, எல்லாவற்றையும் சாதிக்கக் கூடியவளே, த்ரயம்பகே, நாராயணியே, உன்னைச் சரணடைந்தவர்களை ரக்ஷிப்பவளே உனக்கு நமஸ்காரம்.

நவராத்திரிக் கொண்டாட்டங்களில் இன்று நாம் காண இருப்பது நான்காம் நாள் தரிசனம்.

விதவிதமான நைவேத்தியங்கள், கோலங்கள், வழிபாடுகள், தானங்கள், பாடல்கள் என இந்த விழாவே களிப்பூட்டக்கூடியது. இந்த நாள்களில் ஆட்டம், பாட்டத்துக்கு குறைவே இருக்காது. சர்வம் சக்தி மயம் என்பதை உணர்த்தவே இந்த நாள்களில் கொலு பொம்மைகளை அடுக்கி வைக்கும் வைபவம். அனைத்து உயிர்களிலும், சக்தியைக் காண வேண்டும் என்பதை சொல்லவே படிகளில் தெய்வங்களின் பொம்மைகள் மட்டுமின்றி எல்லாவித பொம்மைகளும் வைக்கப்படுகின்றன. மாலைவேளைகளில் கொலு வைத்தவர்கள் வீடே,  திருவிழாக்கோலம் பூண்டு இருக்கும். ஒவ்வொரு நாளும் சிறுமிகளை அம்பிகையின் வடிவமாக கொண்டாடுவது வழக்கம். முருகன், கிருஷ்ணன், ராதா, ராமன்,  அம்பிகை போன்ற வேடங்களை அணிந்து குழந்தைகளை கொலுவுக்கு அழைத்துச் செல்வார்கள். மேலும், இந்த விழாவின் ஒன்பதாம் நாள் கல்விக்காக சரஸ்வதி பூஜையும்,  உழைப்புக்குத் துணை நிற்கும் கருவிகளைக் கொண்டாடுவதற்காக ஆயுத பூஜையும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள்களில் செய்யும் பூஜையால் அறம், பொருள், இன்பம், மோட்சம்  ஆகியவை கிடைக்கச் செய்யும். பெயரன், பெயர்த்தி என ஏழேழ் பரம்பரைக்கு நீண்ட ஆயுளும் கிடைக்கும் எனச் சொல்லப்படுகிறது.

நான்காம் நாளில் நாம் வழிபடவேண்டிய தெய்வம் வைஷ்ணவி தேவி.வைஷ்ணவி என்பவள் விஷ்ணுவின் சக்தி ஆவாள். திருமாலைப் போலவே நீல நிறத் திருமேனியையும், கரிய கூந்தலையும் உடையவள், தன்னுடைய இரண்டு கரங்களில் சங்கும் சக்கரமும் ஏந்தியவள். கருடனை வாகனமாகக் கொண்டவள். தேவி அசுரர்களை சம்ஹாரம் செய்யப் புறப்பட்டபோது மும்மூர்த்தியரும், மற்ற தேவர்களும் தங்களுடைய சக்தியை அம்பிகைக்கு அளித்தனர். அப்படி விஷ்ணுவின் சக்தியைப் பெற்ற தேவியே வைஷ்ணவி. வைஷ்ணவி தேவியை வழிபட்டால், நமக்கு வேண்டிய செல்வங்கள் அனைத்தையும் அவளே நமக்கு அருள்வாள்.
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையின் வடிவமாக பாவித்து பெண்குழந்தைகளை ஒவ்வொரு தேவியாக பாவித்து வழிபடவேண்டும். அந்த வகையில் ஐந்து வயது பெண் குழந்தைகளை நம் வசதிக்கு ஏற்றபடி ஒரு குழந்தையோ அல்லது ஒன்றுக்கு மேல் ஒற்றைப்படை எண்ணிக்கையில் நம் வீட்டுக்கு வரவழைத்து, ரோஹிணி என்ற திருப்பெயருடன் வழிபட வேண்டும். ரோஹிணி என்ற பெயருக்கு ரோகங்களை அகற்றுபவள் என்று பொருள். நான்காவது நாளில் பெண்குழந்தைகளை ரோஹிணியாக பூஜித்தால், நோய் நொடிகளில் இருந்து விடுபடுவதுடன், ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறலாம்.

நான்காம் நாள் தரிசனம் பெறலாமா? 




ஸ்ரீ கஜலட்சுமி அலங்காரம் பெற இருக்கின்றோம்.
















அருமையான சத்சங்கமும் அன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அடுத்து வேலி அம்மன் ஆலயம் சென்றோம். அங்கு ஒரு திருவிழா நடைபெறுவது போன்று இருந்தது.










 அடுத்து தரிசனம் தான்.





மேலும் நவராத்திரி கொண்டாட்டம் இங்கே தொடர்கின்றது.









அடுத்து அம்மனின் அலங்காரம் தொடர்கின்றது.




















செல்லாத்தா என்ற பாடல் கேட்டபோது நமக்கே ஆட்டம் போட வேண்டியது போல் இருந்தது.


மலேசியாவில் உள்ள அகத்தியர் வனம் குழுவை சேர்ந்த  திரு பாலச்சந்தர் ஐயா வீட்டில் இருந்து கொலு காட்சி 


அடுத்து ஐந்தாம் நாள் தரிசனம் பெற சென்ற போது அங்கு மின்சாரம் இல்லாது இருந்தது, ஆனாலும் அன்றைய தரிசனம் கோடி பிரகாசம் தருவதாக இருந்தது. நம் அப்பன் அகத்தீசன் அருள் தந்த காட்சி மேலே.




















பதிவின் நீளம் கருதி, மீண்டும் அடுத்த பதிவில் நவராத்திரி தரிசனம் தொடரும்.

மீள்பதிவாக:-

 நவராத்திரி 75 - https://tut-temples.blogspot.com/2019/10/75.html

 TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (3) - https://tut-temples.blogspot.com/2019/10/tut-3.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2)  - https://tut-temples.blogspot.com/2019/09/tut-2.html

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temples.blogspot.com/2019/09/tut.html

கொலுவும் திருவும் - நம் வாசகர் வீட்டு கொலு அனுபவமும், நவராத்திரி அழைப்பிதழும் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_33.html

 நவராத்திரி அழைப்பிதழுடன் வல்வினை நீக்கும் வல்லக்கோட்டை முருகா சரணம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_28.html

நவராத்திரி விழா கொண்டாட வாருங்கள் - அருள்மிகு சுந்தர மகாலிங்கசுவாமி நவராத்திரி திருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_5.html

No comments:

Post a Comment