அன்பர்களுக்கு அன்பு வணக்கங்கள்.
இப்போது தான் 2020 ஆண்டு பிறந்தது போல் இருந்தது. அதற்குள் ஆண்டின் பாதியை கடந்து விட்டோம். அதுவும் இந்த ஆண்டு யாரும் எதிர்பார்க்கா வண்ணம் கிருமி தொற்று ஏற்பட்டு நம் அனைவரையும் பாடாய்ப்படுத்தி விட்டது. இப்பொழுது தான் நிலைமை ஓரளவு சீர்பெறுகின்றது. இருப்பினும் தினசரி வழிபாட்டில் அனைவரும் இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவும், அனைவரும் இயல்பு வாழ்க்கையில் ஆனந்தமாக வாழவும் பிரார்த்தனை செய்யும்படி வேண்டுகின்றோம். நம் தளம் சார்பில் மஹாளய பட்ச சேவை குருவருளால் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஏற்கனவே ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... என்ற தலைப்பில் பதிவிட்டோம். அதன் தொடர்ச்சியாகவும் மஹாளய அமாவாசை பற்றியும் அறியத் தருகின்றோம்.முதலில் அனைவருக்கும் அழைப்பிதழை தருகின்றோம்.
ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 16.09.2020
மெய் அன்பர்களே.
நிகழும் மங்களகரமான சார்வரி வருடம் ஆவணி மாதம் 10 ஆம் நாள் (16.09.2020)
புதன் கிழமை மாலை 6 மணி முதல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷி முன்னிலையில் பித்ருக்களின் ஆசி வேண்டி மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து முன்னோர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.இந்த வருடம் நீங்கள் தர்ப்பணம் கொடுத்துப்பாருங்கள். அடுத்த ஆண்டுக்குள்
உங்கள் வாழ்க்கைத்தரத்தை நிச்சயம் பித்ருக்கள் தெய்வீக சக்தி கொடுத்து
உயர்த்தி இருப்பார்கள்.
மறைந்த நம் முன்னோர்களான பித்ருக்களை வழிபட வேண்டிய மிக முக்கியமான
திருநாள். அதாவது அன்று நாம் அவர்கள் தாகத்தை தீர்த்து அமைதிப்படுத்த
வேண்டும்.
அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து எள்ளும் நீரும்
தருவதை தர்ப்பணம் என்பார்கள். தர்ப்பணம் கொடுக்கும் போது காய்கறிகள் 5 வகை
(பூசனி, வாழைத்தண்டு தவிர்க்கவும்)யை தானமாக கொடுக்க வேண்டும்.
பித்ருக்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் கொடுக்க வேண்டும் என்றதும்,
பெரும்பாலானவர்கள் அது என்னவோ, ஏதோ என்று நினைக்கிறார்கள்.
சிலருக்குத்தான் அது சரிபட்டு வரும். நமக்கு இதெல்லாம் செய்வது வழக்கம்
இல்லை என்கிறார்கள். சிலர் பித்ரு வழிபாட்டை எப்படி செய்வது என்ற
குழப்பத்துடனே இன்னும் இருக்கிறார்கள். திதி, தர்ப்பணம், சிரார்த்தம் செய்ய
வேண்டும் என்ற ஆசை இருந்தும், அதை முறைப்படி செய்வதற்கு ஐதீகம் தெரிந்து
இருக்க வேண்டுமே என்று நினைக்கிறார்கள். ஆனால் இதுபற்றியெல்லாம் கவலைப்பட
வேண்டிய அவசியமே இல்லை.
தர்ப்பணம் செய்வது ரொம்ப, ரொம்ப எளிதானது. தர்ப்பணம் கொடுப்பதற்கு வேறு
எதுவும் வேண்டாம். உங்கள் அப்பா, அம்மா பெயர், தாத்தா-பாட்டி பெயர் (தந்தை
வழி) பூட்டன்-பூட்டி பெயர் (தந்தை வழி) அப்புறம் அம்மாவின் அப்பா அம்மாவின்
தாத்தா, அம்மாவின் தாத்தாவுக்கு அப்பா, அம்மாவின் அம்மா, அம்மாவின்
பாட்டி, அம்மாவின் பாட்டிக்கு அம்மா ஆகிய 12 பேர் மட்டும் தெரிந்தால்
போதும்.
சிலருக்கு தாத்தாவின் பெற்றோர் பெயர் தெரியாமல் இருக்கலாம். அதற்கும்
கவலைப்பட வேண்டாம். என் மூதாதையர்களுக்கு இந்த தர்ப்பணம் போய் சேரட்டும்
என்று மனதார நினைத்து கையில் உள்ள எள் மீது தண்ணீர் ஊற்றி, அந்த நீரை
தர்ப்பைகளின் மீது ஊற்றினால் போதும். அவ்வளவுதான். தர்ப்பண வழிபாடு
முடிந்தது.
மஹாளய அமாவாசை தினத்தன்று கோவில் குளங்களிலும், பித்ரு வழிபாட்டுக்குரிய
புனிதநீர் நிலைகளிலும், காவிரி கரையிலும் இந்த எளிய வழிபாட்டை செய்யலாம்.
மூதாதையர்களின் பெயரைச் சொல்லி எள் கலந்த நீரை தர்ப்பை புல்களின் மீது
ஊற்றுவதில் என்ன கஷ்டம்? இதை கூட பெரும்பாலானவர்கள் மனப்பூர்வமாக
செய்வதில்லை.
குறைந்தபட்சம் அது நம் கடமை என்று நினைத்தாவது செய்யக்கூடாதா? இந்த வருடம்
நீங்கள் தர்ப்பணம் கொடுத்துப்பாருங்கள். அடுத்த ஆண்டுக்குள் உங்கள்
வாழ்க்கைத்தரத்தை நிச்சயம் பித்ருக்கள் தெய்வீக சக்தி கொடுத்து உயர்த்தி
இருப்பார்கள். இது பலரும் அனுபவித்து வரும் உண்மை. ஈடு, இணையற்ற அந்த
பலன்களை பெற நீங்களும் நாளை தை அமாவாசையன்று பித்ரு வழிபாட்டை மறக்காமல்
செய்யுங்கள்.
12 ஆண்டுகள் பலன் கிடைக்கும்.
மஹாளய அமாவாசை. இந்த அமாவாசையன்று செய்யப்படும் பிதுர்தர்ப்பணம் பன்னிரெண்டு ஆண்டுகள் பிதுர்திருப்தி ஏற்படுத்தும்.
என்ன செய்ய வேண்டும்?
அமாவாசை தினத்தன்று 4 முக்கிய செயல்களை செய்தல் வேண்டும்.
1. புனித நதிகளில் நீராட வேண்டும்.
2. பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
3. மந்திர ஜெபம் ஜெபிக்க வேண்டும்.
4. தானங்கள் கொடுக்க வேண்டும்.
தர்ப்பணம் என்ற வடமொழி சொல்லுக்கு சந்தோஷமடைதல் என்று பொருள்.
தர்ப்பயாமி என்று சொல்லும்பொழுது சந்தோஷமடையுங்கள் என்று பொருள் கொள்ளலாம்.
ஜப்பான் நாட்டை சேர்ந்த இமொட்டோ என்ற ஆராய்ச்சியாளர் நீர்ல் நேர்மறை
சொற்களை பிரயோகித்தபொழுது நீரில் உள்ள மூலக்கூறுகள் ஒரு முறைமையுடனும்
ஒழுங்குடனும் வரிசைப்படுத்தப்படுவதை கண்டார்.
அதேசமயம், எதிர்மறைசொற்களை அந்த நீரில் பயன்படுத்தியபொழுது அந்த மூலக்கூறுகள் தாறுமாறாக அமைந்ததைகண்டார்.
இந்த ஆராய்ச்சிதான் இந்த கட்டுரையின் அடித்தளம்.
தர்ப்பணம் செய்யும்பொழுது நீரை அதிகமாக விட்டு தர்ப்பணம் செய்யவேண்டும் என்று கூறுவார்கள்.
அவ்வாறு தர்ப்பயாமி என்று நமது முன்னோர்களை முன்னிட்டு கூறும்பொழுது அந்த சொற்கள் நீரின் மூலக்கூறுகளை சென்று அடைகின்றது.
நீர் ஆவியாக மாறி அந்த மூலக்கூறுகள் வளிமண்டலத்தில் கலக்கின்றன.
அதாவது, சந்தோஷமடையுங்கள் என்று நாம் கூறிய எண்ண அலைகள் ஆவியாக மாறிய நீரின் மூலக்கூறுகளுடன் வளி மண்டலத்தில் சஞ்சரிக்கின்றன.
அதீத உளவியல் (Para psychology) என்ற பிரிவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மரணத்தின் பின் மனிதனின் நிலை பற்றி ஆராய்ந்து வருகிறார்கள்.
அந்த ஆராய்ச்சியில் மரணத்திற்கு பின் ஆழ்மன எண்ண அலைகள் அதிர்வுகளாக நிலை பெறுகின்றன என்று நம்புகிறார்கள்.
மேலே கூறிய இந்த நிகழ்வை மகாபாரதத்தில் அம்பை பீஷ்மரை கொல்வேன் என்று சபதம்
செய்து நெருப்பில் வீழ்ந்து மடிந்து மீண்டும் சிகண்டியாக பிறந்து பீஷ்மரை
கொன்றாள் என்று கூறும் நிகழ்விலிருந்து புரிந்து கொள்ளலாம்.
அதாவது மனம் மற்றும் எண்ண அலைகள் மறைவதில்லை என்று புரிந்துகொள்ளலாம்.
ஆத்மா சாவதில்லை என்ற கருத்து இந்த இடத்தில் நினைவு கூறத்தக்கது.
நாம் கொள்ளுகின்ற எண்ண அலைகளை பொறுத்து மறுபிறவி வாய்க்கின்றது என்பது நமது கோட்பாடு.
ஜடாபரதர் என்ற முனிவர் சித்தி அடையும் தருவாயில் ஒரு மான் படும் வேதனையை
நினைத்தார் என்பதினால் அவர் ஒரு மானாக பிறந்தார் என்று யோகவாசிஷ்டம்
கூறுகின்றது.
இதனால்தான் மனமிறக்க வாயேன் பராபரமே என்று பாடினார் தாயுமான சுவாமிகள்.
உடல் உகுத்தவர்கள் ஆழ்மன எண்ணங்கள் மறைவதில்லை என்றும் அவைகள் அதிர்வுகளாக
சஞ்சரிக்கின்றன என்றும் அதீத உளவியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
சில மகான்களின் சமாதி அருகிலோ அல்லது அவர்களின் ஆசிரமத்திற்கோ நாம்
செல்லும்பொழுது நமது மனதில் ஏற்படும் ஒரு அமைதி மற்றும் பரவச உணர்சிசி
அவர்களின் ஆன்மீக எண்ணங்கள் தரும் அதிர்வுகள் காரணமாக இருக்குமென்று
ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
தர்ப்பயாமி என்று கூறி நீரை விட்டு தர்ப்பணம் செய்யும்பொழுது
சந்தோஷமடையுங்கள் என்று நாம் திரும்ப திரும்ப சொல்லும் எண்ண அலைகள் நீரின்
மூலக்கூறுகளில் சென்றடைந்து நமது முன்னோர்களின் எண்ண அதிர்வுகளை
சென்றடைகின்றது என்று நம்புவதற்கு இமொட்டோவின் ஆராய்ச்சி வழிவகுக்கின்றது.
சிரார்த்த காரியங்கள் செவ்வனே செய்தால் வம்ச விருத்தி அதாவது குலம் தழைக்கும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகின்றது.
சந்தோஷமடையுங்கள் என்று கூறி தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்கள்
சந்தோஷமடைந்து நம்மை வாழ்த்துவதோடு மட்டுமல்லாமல் மீண்டும் நமது
குடும்பத்தில் பிறக்கின்றார்கள் என்று நம்புவதற்கு இடமுண்டு.
நீரில் உள்ள மூலக்கூறுகள் நாம் சொல்லுகின்ற வார்த்தையினை
உள்வாங்கிக்கொள்கின்றது என்பதினால்தான் நமது சடங்குகளில் நீர் ஒரு
முக்கியமானதாக உள்ளது.
குறிப்பாக கும்பாபிஷேகம், சஷ்டி அப்த பூர்த்தி போன்றவை உதாரணமாக கொள்ளலாம்.
இந்த ஆராய்ச்சயின் முடிவை அன்றே நமது முனிவர்கள் தமது தவவலிமையினால்கண்டு
தெளிந்து நமக்கு கூறியுள்ளார்கள் என்பதை கண்டு நாம் மெய்சிலிர்த்து
போகின்றோம்.
வாய்ப்புள்ள அன்பர்கள் தர்ப்பணம் கொடுக்கலாம். வாய்ப்பில்லா அன்பர்கள் நம்
குருநாதர் அருளிய மோட்ச தீப வழிபாட்டில் கலந்து கொள்ளலாம். ஆவணி மாத மோட்ச
தீப வழிபாடு தொடர்ச்சி இங்கே பகிர்கின்றோம்.
ஆவணி மாத மோட்ச தீப வழிபாட்டிற்கு நாம் தயாரான போது
ஏற்கனவே சொன்னது போல் அன்றைய தினம் ஆயில்ய வழிபாடும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
எம் அப்பன் அகத்தீசன் தரிசனம் பெற்ற போது
அடுத்து ஆயில்ய வழிபாடு முழுமை பெற்றதும் மோட்ச தீப வழிபாட்டிற்கு அனைவரும் தயாரானோம்.
எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டி, இதோ..மோட்ச தீப வழிபாடு ஆரம்பம்
இந்த
மோட்ச தீப வழிபாடானது மிக மிக உயர்ந்த வழிபாடு.,இத்தகைய வழிபாட்டை நமக்கு
பணித்த அனைத்து குருமார்களின் பாதம் பணிகின்றோம். அதே போல் சென்ற பூசையில்
பங்கு கொண்டு, சிறப்பாக நடக்க ஒத்துழைப்பு நல்கி உதவிய அனைத்து அன்பர்களின்
பாதம் பணிகின்றோம். இந்த மோட்ச தீப வழிபாடு ஒருவரால் நிகழ்த்தப்படுவதன்று.
இது ஒரு கூட்டு வழிபாடு. யாரும் நமக்கு அழைத்து சொல்லவில்லை என்று
நினைக்காது தாமாக முன்வந்து உதவுங்கள் என்று வேண்டுகின்றோம்.
அனைவருக்கும்
இங்கே பணிவான வேண்டுகோள் ஒன்றை சமர்ப்பிக்கிறோம். மோட்ச தீப வழிபாட்டின்
பதிவுகளை, காணொளிகளை பார்த்து யாரும் தாமாக வழிபாட்டினை செய்ய வேண்டாம்.
குருவருள் இன்றி இந்த வழிபாடு முழுமை பெறாது. அப்படி இந்த வழிபாட்டை
மேற்கொள்ள விரும்புபவர்கள் தங்களுக்கு தெரிந்த அருகில் உள்ள ஜீவ நாடியில்
குருவிடம் உத்தரவு பெற்று மேற்கொண்டு வழிபாட்டை செய்யலாம். வேறு ஏதேனும்
இந்த வழிபாடு சம்பந்தமாக நம்மை தொடர்பு கொள்ளலாம்.
மீண்டும் ஒருமுறை பிரார்த்தனை செய்து, வழிபாட்டை நாம் நிறைவு செய்தோம்.
ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 16.09.2020
மெய் அன்பர்களே.
நிகழும் மங்களகரமான சார்வரி வருடம் ஆவணி மாதம் 10 ஆம் நாள் (16.09.2020)
புதன் கிழமை மாலை 6 மணி முதல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில்
அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷி முன்னிலையில் பித்ருக்களின் ஆசி வேண்டி
மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து
முன்னோர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.
தொடர்புக்கு : 7904612352
tut-temples.blogspot.in
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
மீள்பதிவாக:-
பித்ரு தோஷம் நீங்க - நென்மேலி ஸ்ரீ லஷ்மி நாராயண பெருமாள் கோயில் - https://tut-temples.blogspot.com/2020/09/blog-post_7.html
மறந்தவர்களுக்கு மகாளய பட்சம் - 02.09.2020 முதல் 17.09.2020 வரை - https://tut-temples.blogspot.com/2020/09/02092020-17092020.html
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (5) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-5.html
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html
மறந்தவர்களுக்கு மகாளய பட்சம் - 14.09.2019 முதல் 28.09.2019 வரை - https://tut-temples.blogspot.com/2019/09/14092019-28092019.html
மகா பெரியவா அருள் வழியில் "மோட்ச தீபம்" வழிபாடு - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post.html
ஆனி மாத இறைப்பணியும், மோட்ச தீப வழிபாடும் - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_21.html
வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - 22.05.2020 - https://tut-temples.blogspot.com/2020/05/22052020.html
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html
மாசி அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 23.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23022020.html
தை அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 24.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/24012020.html
கார்த்திகை மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 26.11.2019 - https://tut-temples.blogspot.com/2019/11/26112019.html
ஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 27.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/26102019.html
மஹாளய அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 28.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/28092019.html
ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html
ஆன்மிகமலர்.காம் இணைய இதழுக்கு நன்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_95.html
ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html
தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019) - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html
ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.htm
திரும்பிப் பார்க்கின்றோம் - ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22.07.2017 - https://tut-temples.blogspot.com/2019/09/22072017.html
பெரியபுராணம் கூறும் பூரண தானம் அறிவோமே! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_14.html
ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html
ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html
தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019) - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html
ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.html
ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html
அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html
மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை
ReplyDeleteஆழா மேயருள் அரசே போற்றி
திருவாசகம்-போற்றித் திருவகவல்
சுற்றம் - வழித்தோன்றல்கள். மூவேழ் தலை முறையாவன, தன் தந்தைவழி, தாய்வழி, தன் மனைவிக்குத் தந்தைவழி என்பவற்றுள் ஒவ்வொன்றினும் ஏழாய் நிற்கும் தலை முறைகளாம்.
இவைகளைச் சென்றகாலம் பற்றியும், வருங்காலம் பற்றியும் கொள்க. ஒரு குடியுள் ஒருவன் செய்த நன்மை தீமைகள், முன்னும் பின்னும் அவனது இம் மூவேழ் தலைமுறையில் உள்ளாரை யும் சென்று பற்றும் என்பது வைதிக நூற்றுணிபு. அதனால், `தன்னால் ஆட்கொள்ளப்பட்ட அடியவரது மூவேழ் சுற்றங்களையும் நரகின்கண் அழுந்தாது மீட்டருள்வான்` என்று அருளிச் செய்தார்.
இவ்வாறே திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும்,
நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே
ஆளாய அன்புசெய்வோம்; மடநெஞ்சே, அரன்நாமம்
கேளாய்; நம் கிளைகிளைக்கும் கேடுபடாத் திறம்அருளிக்
கேளாய நீக்குமவன் கோளிலிஎம் பெருமானே.
(தி.1. ப.62. பா.1) என அருளிச் செய்தல் காண்க.
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
(குறள் - 62.) என்று அருளியதும்,
இதுபற்றி.
`மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும்`
(குறள் - 456.) என்றமையால் நன்மக்கட்பேற்றிற்கு மனமொழி மெய்களின் தூய்மையும், தவமும் வேண்டும் என்பது விளங்கும்.
விளங்கவே,
`நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்; தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்`.
என்னும் அருமைத் திருக்குறளை(138)ப் பொன்னேபோற் பொதிந்து போற்றுதல் இன்றியமையாததொன்று என்பது போதரும். இவ்வாறு சுற்றத்தையும் காக்கும் வன்மையுடையன் என்பார், `அருள் அரே` என்று அருளினார். முரண் - வலிமை.
திருமுறை வழியில் மூதாதையர் வழிபாடு
ReplyDeleteஅருமையான கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
Deleteஇன்னும் எம்மை தங்கள் கருத்தின் வழியே உற்சாகம் கிடைக்கின்றது.
இந்த சேவை நமக்கு அருளிக் கொண்டிருக்கும் குருமார்களின் பாதம் தொட்டு வணங்குகின்றோம்.
ஓம் அகத்தீஸ்வராய நமஹ
நன்றி