"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, September 7, 2020

பித்ரு தோஷம் நீங்க - நென்மேலி ஸ்ரீ லஷ்மி நாராயண பெருமாள் கோயில்

அனைவருக்கும்  அன்பு வணக்கங்கள்.

நம் தளத்தில் ஏற்கனவே அறிவித்தது போல் மகாளய பட்ச நித்திய அன்னசேவை குருவருளால் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நாளும் அன்னசேவையுடன் சிறப்பு சேவையாக குடை தானம், போர்வை தானம், வஸ்திர தானம், கோமாதாவிற்கு அகத்திகீரை & வாழைப்பழம், தொண்டு நிறுவனங்களுக்கு உதவி என செய்து வருகின்றோம். இது போன்ற சேவைகளுக்கு நமக்கு தோள் கொடுத்து உறுதுணையாகவும், உற்ற துணையாகவும் வரும் அனைவருக்கும் நம் தளம் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு இன்றைய பதிவை தொடர்கின்றோம்.

காரணமின்றி காரியமில்லை என்று சொல்வார்கள். அது மிக மிக பொருந்தும். நென்மேலி ஸ்ரீ லஷ்மி நாராயண பெருமாள் கோயில் பற்றி பல வருடங்களுக்கு முன்பாக கேட்டிருக்கின்றோம். ஆனால் தரிசனம் எப்போது என்று நாம் காத்திருந்தோம். சென்ற வார விடுமுறையில் சனிக்கிழ்மை சேவையாக நென்மேலி ஸ்ரீ லஷ்மி நாராயண பெருமாள் கோயில் செல்லலாம் என்று திட்டம் போட்டோம். குருவருளால் இனிதே தரிசனம் பெற்றோம். சரி பித்ரு தோஷம் பற்றியும், நென்மேலி ஸ்ரீ லஷ்மி நாராயண பெருமாள் கோயில் தரிசனம் பற்றியும் இனி தொடர்வோம்.



தோஷங்களில் மிகக் கடுமையான தோஷம் என்றால் அது பித்ரு தோஷம் தான்.பித்ரு என்பது, ஒரு ஜாதகரின் தந்தை அல்லது அவரின் மூதாதையர்களைக் குறிக்கும். பித்ரு தோஷம் என்பது, தந்தை அல்லது தந்தை வழி மூதாதையர் செய்த கெட்ட / பாவச் செயல்கள் அல்லது அவர்கள் வாழும் காலத்தில் செய்த தவறான செய்கைகளே அவர்களின் சந்ததிகளைத் தாக்கச்செய்யும். எப்படி ஒருவரின் தேடிவைத்த சொத்துக்கள் அவரின் சந்ததியினரை சென்று அடைகிறதோ அதுபோலவே அவரின் கர்ம வினைகளும் அவரின் சந்ததியினரை வந்தடையும். மூதாதையினரின் சொத்துக்கு போட்டிபோட்டு, பூலோக கோர்ட்டுக்கு அலைந்து திரிந்து பெறவிழைகிறோம், அதுபோலவே இந்த கர்ம பலனை இறைவனின் நீதிமன்றம் நாம் கோராமலே அதற்கான பங்கை அது அளித்துவிடுகிறது. 

அதுவே எச்சரிப்பது போல ஒருவரின் ஜாதகத்தில் குறியாக வந்து நிற்கிறது. மூதாதையர்கள் செய்த தீவினைகளின் தண்டனைகளை எளிமையாக, ஜபம், பூஜை, ஹோமம், தேவையானவர்களுக்கு சேவை செய்தல், அன்னதானம் செய்தல், வறுமையில் உள்ளவர்களுக்கு பணமோ / பொருளோ அளித்து உதவுதல் போன்றவற்றை செய்து பித்ரு தோஷத்திலிருந்து தப்பலாம் என்பதை தப்பு கணக்கு போட்டு விடமுடியாது. 

அடுத்து, பித்ரு தோஷத்தால் உண்டாகும் பாதிப்புகள் பற்றி அறியலாம்.

1. திருமண கால தாமதம் அல்லது தடையை உருவாக்கும். 

2. திருமண வாழ்வைக் கவிழ்த்து விடும்.

3. ஒரே குடும்பத்தில் திருமணம் வெற்றி பெறாமலும் தோல்வி கொண்டதுமான நபர்கள் இருப்பர்.

4. ஒரே குடும்பத்தில், திருமணமே ஆகாத ஆண்களும், பெண்களும் இருப்பர். 

5. குழந்தைப் பேறு பாக்கியம் இல்லாமல் போகலாம். 

6. தாய்மைப் பேருக்கு காத்திருக்கும் பெண்களுக்குக் கருச்சிதைவு ஏற்படலாம். 

7. உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ ஊனம் உற்றவர்கள் / சவாலானவர்கள்  இருக்கலாம். 

8. எதிர்பாராத துர்மரணங்கள் ஏற்படலாம். 

9. வீட்டில் கொள்ளை சம்பவமோ / தீப்பிடித்து எறிதல் போன்ற விபத்துக்கள் ஏற்படலாம்.

10. தீராத வாட்டியெடுக்கும் வறுமை, எவ்வளவு பிரயத்தனம் செய்தாலும் தீராத கடன் தொல்லைகள்.

இவையெல்லாம் ஏற்பட என்ன காரணம் என்று ஏற்கனவே நம் முன்னோர் கடன் பற்றி சொல்லி இருந்தாலும், நாமும் இந்த தோஷத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ள நம்மை முதலில் சரி செய்ய வேண்டும். அதற்கு மனு முறை கண்ட வாசகம் போதும் என்று தோன்றுகின்றது.

நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!

வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!

தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!

கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!

மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!

குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!

ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!

தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!

மண்ணோரம் பேசி வாழ் வழித்தேனோ!

உயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ!

களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!

பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!

ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ!

வரவுபோக்கொழிய வழியடைத்தேனோ!

வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!

பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ!

இரப்போர்க்குப் பிச்சை இல்லை யென்றேனோ!

கோள்சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!

நட்டாற்றிற் கையை நழுவ விட்டேனோ!

கலங்கியொளித்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ!

கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!

காவல்கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ!

கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!

கருப்பமழித்துக் களித்திருந்தேனோ!

குருவை வணங்கக் கூசி நின்றேனோ!

குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!

கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ!

பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ!

பக்ஷயைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!

கன்றுக்குப்பாலுட்டாது கட்டி வைத்தேனோ!

ஊன்சுவையுண்டு உடல் வளர்த்தேனோ!

கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!

அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!

குடிக்கின்ற நீருள்ள குளந்துர்த்தேனோ!

வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ!

பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ!

பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ!

ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ!

சிவனடியாரைச் சீறிவைதேனோ!

தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!

சுத்த ஞானிகளைத் துவேஷணம்  செய்தேனோ!

தந்தை தாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!

தெய்வமிகழ்ந்து செருக்கடைந்தேனோ!

என்ன பாவம் செய்தேனோ! இன்ன தென்றறியேனே!

என்ன பாவம் செய்தேனோ! என்ன பாவம் செய்தேனோ!

என்ன பாவம் செய்தேனோ!என்ன பாவம் செய்தேனோ!

ஆம். மேற்சொன்ன வள்ளலாரின் வரிகளை படித்து நித்தமும் நம்மை திருத்தி கொண்டு மேலும் பிதுர் கடன்களை தீர்ப்போம். 

பித்ரு தோஷத்தை, இறை ஏற்றுக்கொண்டு, அவரே திதி சம்ரக்ஷ்ண பெருமாளாக அமர்ந்து நாம் செய்கின்ற திதியை தான் வாங்கிக்கொண்டு, நம் பித்ருக்களை ஆசிர்வதிக்கும் தலம்தான், நென்மேலியில் அமைந்துள்ள, ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில்.

இனி, கோவிலுக்குள் செல்வோம்.

பெருமாளே தர்ப்பணம் செய்யும் தலம் எது தெரியுமா? 

பித்ரு கடன்  செலுத்துவது, ஹிந்துக்களுக்கு முக்கிய கடமையாக கூறப்பட்டுள்ளது. குழந்தைகள் இல்லாமல் இறப்பவர்களுக்கு யார் தர்ப்பணம், திதி கொடுப்பார்கள்? மேலும், பலருக்கு தங்களின் முன்னோரின் இறந்த திதி தெரியாது. இவர்கள், எப்படி திதி  கொடுப்பது? தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு எப்படி திதி  கொடுப்பது? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடையாக இருக்கிறார், லட்சுமி நாராயண பெருமாள். 

செங்கல்பட்டு அருகே, நென்மேலி எனும் கிராமத்தில் அமைந்து உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவில், சக்தியும் சாந்நித்தியமும் கொண்ட தலமாகப் போற்றப்படுகிறது. செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில், சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த திருக்கோவில்.

இந்தக் கோவிலில் உள்ள உற்சவ மூர்த்தி, சிரார்த்த ஸம்ரட்சண நாராயணர் எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.  இந்த கிராமத்திற்கு புண்டரீக நல்லூர், பிண்டம் வைத்த நல்லூர் என்றும் இந்த சன்னதியின் திருக்குளம், அர்க்ய புஷ்கரணி, ஜீயர் குளம் என்றும் அழைக்கப்படுகிறது.  காசி மற்றும் கயாவுக்கு நிகரான தலமாக கருதப்படுகிறது.

ஆற்காடு நவாப் காலத்தில் திவானாகப் பணிபுரிந்த ஸ்ரீயாக்ஞவல்கியரைக் குருவாகக் கொண்ட சுக்ல யஜுர் வேதத்தை சேர்ந்த யக்ஞ நாராயண சர்மா – சரஸ வாணி தம்பதி, இந்தக்  ஆலயத்தின்  பெருமாளின் மீது, அதீத  பக்தி கொண்டிருந்தனர். இவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிப் பணத்தை, இந்த ஆலயத்தின் பணிகளுக்கு  செலவு செய்து விட்டனர்.  இதனால், அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.  அரச தண்டனையை ஏற்க விரும்பாமல், திருவிடந்தை ஆலய  திருக்குளத்தில் குதித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். எனினும், தங்கள் ஈமக் கடன்களை செய்ய வாரிசு இல்லையே என மன வருத்தத்துடன்  இறந்தனர்.  ஆகையினால், அவர்களின் மனவருத்தத்தை தீர்க்கும் வகையில், இந்த  ஆலயத்தின் பெருமாளே, தம்பதிக்கு ஈமகடன்கடன்ளை செய்ததாக, கோவிலின் தலவரலாறு கூறுகிறது. 

பின்னர், திவானின் வேண்டுகோளுக்கு இணங்க, சந்ததிகள் இல்லாதவருக்கும், திதி செய்ய இயலாதவர்களுக்கும், பெருமாளே திதி செய்து வைப்பதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். 

தினமும், பகல், 12 மணி  முதல், 1 மணி வரை உள்ள காலம், பித்ருக்களின் காலமாக கருதப்படுகிறது

இந்த ஒரு காலம் மட்டும், ஆராதனம் ஏற்று விரதமிருக்கிறார் பெருமாள்.

எனவே, இங்கு திதி செய்ய விரும்புபவர்கள், பித்ரு காலத்தில் நடக்கும் பூஜையில், தங்கள் முன்னோர்களுக்காக சங்கல்பம் செய்து கொண்டு, பெருமாளிடம்  சுவாமியிடம் சமர்ப்பிப்பதே, திதி சம்ரட்சணம்.

பெருமாளுக்கு, வெண்பொங்கல், தயிர் சாதம் அதனுடன் பிரண்டையும் எள்ளும் சேர்ந்த துவையலும் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இதை மட்டும் ஏற்றுக் கொண்டு, பித்ருக்களை திருப்தி செய்கிறார் பெருமாள்!

அவரவர் பித்ருக்கள் திதியிலோ, அமாவாசை, ஏகாதசி போன்ற திதிகளிலோ, ஆலயத்தில் பித்ரு கால பூஜையில் கலந்து கொண்டால், கயாவில் சென்று திதி கொடுத்த பலனைக் கொடுக்கும். திதிகொடுக்க விரும்புபவர்கள், காலை, 11 மணிக்குள் ஆலயத்துக்கு வர வேண்டும். மஞ்கள், எள், தர்ப்பைப்புல், விரலில் அணிய பவித்ரம், தாம்பூலம், பழம் ஆகியவற்றை பெருமாளிடம் சமர்பித்து, தங்கள் பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்து  கொள்ள வேண்டும். 

பின், விஷ்ணு பாதம் எனும் பெருமாளின் திருவடிக்கு அருகில், திதி செய்பவர், தங்கள் முன்னோருக்கு மறுபடியும் ஒரு சங்கல்பம் செய்து, பெருமாளிடம் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு சமர்பிப்பதே, திதி சம்ரட்சணமாகும். 

பித்ரு தோஷம் இருந்தால், வாழ்வில் முன்னேற்றம் ஏற்படாது. சாண் ஏறினால், முழம் சறுக்கும் என்பதாகவே இருக்கும். பித்ரு தோஷம் நீங்க, இந்த ஆலயத்துக்கு சென்று, பித்ரு கால பூஜையில் பங்கேற்க வேண்டும். 

மஹாளய பட்ச காலத்தில்,  இந்த ஆலயத்துக்கு சென்று, பித்ரு பூஜையில் பங்கேற்றால், முன்னோர்களுக்கு விஷ்ணுவின் ஆசி கிடைக்கும். அதனால், நமக்கு பித்ருகளின் முழுமையான அருளும் கிடைக்கும்.



நாம் சென்ற வாரம் நென்மேலி ஸ்ரீ லஷ்மி நாராயண பெருமாள் கோயில் தரிசனத்தில் பெற்ற விஷ்ணு பாத தரிசனம் மேலே தந்துள்ளோம். இங்கே பொது சங்கல்பம் ஏற்றுக்கொள்வது இல்லை, தனி தனி சங்கல்பம் தான். வேண்டிய விபரங்களை கேட்டு வந்து, நம் குழு அன்பர்களிடம் இது பற்றி பேசினோம்.இது வரை 11 அன்பர்கள் இந்த சிரார்த்த நாராயணரிடம் சங்கல்பம் வைத்துள்ளோம். மேற்கொண்டு யாரேனும் இந்த வழிபாட்டில் கலந்து கொள்ள விரும்பினால் நம்மைத் தொடர்பு கொள்ளவும். மேலும் விபரங்களுக்கு பதிவின் தொடக்கத்திலே குருக்கள் அலைபேசியுடன் தகவல் தந்துள்ளோம்.

ஒவ்வொருவரின் குடும்பத்தின் நிலையையும் பரிசோதித்து, அவரவர் தீர்மானித்து, இத்திருக்கோவிலில் திதி கொடுத்து, பயனடைய வேண்டுகின்றோம்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

மறந்தவர்களுக்கு மகாளய பட்சம் - 02.09.2020 முதல் 17.09.2020 வரை - https://tut-temples.blogspot.com/2020/09/02092020-17092020.html

மறந்தவர்களுக்கு மகாளய பட்சம் - 14.09.2019 முதல் 28.09.2019 வரை - https://tut-temples.blogspot.com/2019/09/14092019-28092019.html

மகா பெரியவா அருள் வழியில் "மோட்ச தீபம்" வழிபாடு - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post.html
ஆனி மாத இறைப்பணியும், மோட்ச தீப வழிபாடும் - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_21.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - 22.05.2020 - https://tut-temples.blogspot.com/2020/05/22052020.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

மாசி அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 23.02.2020  - https://tut-temples.blogspot.com/2020/02/23022020.html

தை அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 24.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/24012020.html

கார்த்திகை மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 26.11.2019 - https://tut-temples.blogspot.com/2019/11/26112019.html
ஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 27.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/26102019.html
மஹாளய அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 28.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/28092019.html

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... -  https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html

ஆன்மிகமலர்.காம் இணைய இதழுக்கு நன்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_95.html
ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019  - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html
தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html
ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.htm
திரும்பிப் பார்க்கின்றோம் - ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22.07.2017 - https://tut-temples.blogspot.com/2019/09/22072017.html

 பெரியபுராணம் கூறும் பூரண தானம் அறிவோமே! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_14.html

 ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html

 ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

 ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html

 தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

 ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

No comments:

Post a Comment