"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, November 2, 2020

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 40 - குருவே சரணம்... திருவே சரணம்....

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் நாம் நெக்குருகி போகின்றோம். நவராத்திரி வழிபாடு பொதுவாக நாம் கூடுவாஞ்சேரி தரிசனம் பெறுவோம். இம்முறை நாம் சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடில் சென்று நவராத்திரி வழிபாடு கண்டோம். அடுத்து திருநின்றவூர் பாக்கம் ஊரில் அருள்பாலித்து வரும் படி அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர்  ஆலயம் கும்பாபிஷேகம் பற்றி நம் தளத்தில் பேசி இருந்தோம். ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தியின் வாக்கின்படி ஸ்ரீ அகத்தீஸ்வரர்  ஆலய கும்பாபிஷேகம் தரிசனம் கண்டோம். அடுத்து அந்த நாள் இந்த வருடம் தரிசனத்தில் கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி தரிசனம் அகத்தியர் அடியார்கள் பெற்றுள்ளார்கள். சென்ற ஆண்டில் நாம் நம் தளம் சார்பில் சென்று வந்த கோடகநல்லூர் யாத்திரை பதிவை விரைவில் தர விரும்பி நம் குருநாதரிடம் விண்ணப்பம் வைக்கின்றோம்.இவை அனைத்துமே நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானின் அருளாலே கிடைத்து வருகின்றது.

கோடகநல்லூர் ப்ரஹன்மாதாவப் பெருமாள் கோவிலில் நடை பெற்ற நம் குருநாதர் அகத்தியப்பெருமான் நடத்திய அபிஷேக பூசைகளின் சில காட்சிகள்.















அடுத்து அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர்  ஆலயம் கும்பாபிஷேக காட்சிகள் 



























இதற்கு முந்தைய பதிவுகளில் தந்தை, மகளுக்குமான ஜீவ நாடி பற்றி பேசி இருந்தோம். மீண்டும் அங்கிருந்து தொடர்வோம்.

சுவாமி தாங்கள் உரைத்தது உண்மையாக இருக்க வேண்டும் என தனது மகளைத் தேட ஆரம்பித்தார். 2 நாட்கள் கழித்து அவரின் தூரத்து உறவினர் வீட்டில் இருந்து தகவல் வந்தது. அவரது தாய் திட்டினாள் என கோபித்துக் கொண்டு வந்து விட்டாள். உங்கள் பெண் எங்கள் வீட்டில் பத்திரமாக
இருக்கிறாள் வந்து அழைத்துச் செல்லுங்கள் என்றனர். தந்தைக்கு ஒரே மகிழ்ச்சி. இருந்தாலும் வயதுப் பெண் காணாமல் போய்விட்டாள் என ஊருக்குள் செய்தி பரவி வாய்க்கு வந்தபடி வசைபாட ஆரம்பித்து விட்டனர் பலர்.

வேகமாக அவரது உறவினர் வீடு நோக்கி சென்று மகளை அழைத்தால்,அவள் சமாதானம் அடையவே இல்லை. நீண்ட நேரம் கழித்துதான் நாடியில் சொன்ன விஷயம் நினைவுக்கு வந்திருக்கிறது. புற்று மண்ணை எடுத்து வந்து கூப்பிட்டவுடன் வருகிறேன் என்று அந்தப் பெண் ஒப்புக் கொண்டாள்.

சரி ஊருக்கு வர வேண்டாம் என்று அவளது மற்றுமொரு நெருங்கிய உறவினர் கேரளாவில் உள்ளனர். அங்கு சென்று ஒரு மண்டலம் தங்க வைத்தனர். புத்தி மாறியது. புதிய வாழ்வு மலர்ந்தது. இதற்கிடையில் என்னை மீண்டும் வந்து சந்தித்தார். அந்த பெண்ணின் தந்தை முருகனிடம் நாடி கேட்டு திருமணம் நடத்தலாம் என இருக்கிறேன் என்றார்.

“தற்காலம் வேண்டாம்

பொற்காலம் வரும்

பொறுமையாய் இரு

பிரியமாகும்”

என முருகன் உரைத்தார். சரி என விட்டு விட்டார். 

முருகன் முன்பே நாடியில் சொன்னது சூட்சுமமாக இருந்ததை சம்பவம் நடந்த பின்பே உணர முடிந்தது.

இன்னுமொரு நபர் சுயதொழில் தொடங்கலாமா என நாடியில் கேட்டார்.

அதற்கு பின்வருமாறு வந்தது.

“தொட்டெடுக்கும் தொழிலது

தொல்லை தரும் அல்லல்தரும்

அற்புத மாற்றம் வர

ஆண்டு ஒன்று போக வரும்

வருமான வழி கிட்டும்

வளம் கிட்டும்

சும்மா இரு”

என்ன இது இப்படி பலன் வருகிறது. சும்மா இருந்தால் என்னாவது என சூளுரைத்து அந்த நபர் தொழிலைத் தொடங்கினார். இறுதியாண்டு மாணவர்களுக்கு பிராஜக்ட் (project) செய்து கொடுக்கும் தொழில். கூட்டாக ஆரம்பித்து சில இலட்சங்களைக் முதலீடு செய்தார். நல்ல கூட்டம்
வந்தது. வருமானமும் பலமடங்கு உயர்ந்தது. அவருக்கு மகிழ்ச்சி நாடியில் வேண்டாம் என்றாலும் முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது என பெருமிதம் கொண்டார். 

கடைசியில் இவரால் அனைவருக்கும் குறித்த தேதியில் பிராஜக்ட்டுகளை முடித்து தர இயலவில்லை. சிலருக்கு பணத்தை திருப்பித் தர நேர்ந்தது. இன்னும் சிலர் கோபத்தால் இயந்திரங்களை அடித்துநொறுக்கி பெரும் சேதம் விளைவித்தனர். வழக்கு ஏற்பட்டது. 

இறுதியில் தொழிலை மூடிவிட்டார். சில இலட்சம் கடன் ஏற்பட்டது. நாடி படித்துபயன் இல்லை என்றாலும் தனது தவறுக்கு வருந்துகிறார். எனவே மன்னித்து நாடி படித்தேன்.

“அடிமை பணிகொள்

அற்புதம் கிட்டும்”

என வந்தது. தற்போது சிறப்பாக பணிக்குச் சென்று வருகிறார். நாடியில் வருகின்ற பரிகாரங்கள் சிறிதும் யோசித்துக் கூட பார்க்க முடியாத மிக எளிமையாக வருகிறது. செய்த உடனேயே வெற்றி கிட்டுவதால் உண்மையை உணர்ந்துக் கொள்ள முடிகிறது. சித்தர்களை
பலர் நாடுவதற்குக் காரணம் சாதாரண உப்பில் கூட உயர்வான பல பரிகாரங்களை அவர்கள் உரைப்பதால் தான். சித்தர்கள் நம்மிடம் பிரதிபலனாக எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான் அது உண்மையான பக்தி.


ஒரு வயதான முதியவர் என்னை வந்து சந்தித்தார். அவருக்கு கைலை மலை செல்ல வேண்டும் என்ற தீராத ஆசை இருந்தது. வயது 80 ஆகிவிட்டது. பணத்திற்கும், உடல் நலத்திற்கும் எந்தவித குறையுமில்லை.ஆனாலும் கைலை மலை செல்ல முடியவில்லையே என்பது வருத்தம்.
எனது வருத்தம் தீர முருகப் பெருமான் என்ன உரைக்கிறார் என கேட்டு அமர்ந்தார். முருகன் ஜீவநாடியில் பின்வருமாறு உரைத்தார்.

“நாட்டத்தை நடுவில் வைத்து

 நம் நம் நம் எனச் சொல்லி

ஓட்டத்தை ஒடுக்கி வைத்து

 ஓம் ஓம் ஓம் எனச் சொல்லி

ஆட்டத்தை அடுக்கி வைத்து

 அம் அம் அம் என்று சொல்லி

கூட்டத்தை ஒதுக்கி வைத்து

 கூடாத கூட்டு கூடிடாமல்

கூடினால் முடியாத கூட்டை

 ஊட்டமுடன் உழைக்க வைத்து

தேகத்தை மறைக்க வைத்து

 தேடுதல் ஓங்கி நிற்க

அம் உம் மம் என ஆகி

 ஒடுக்கமானால் அடக்கமாகும்

கைலை தெரியுமே”

எனக்கே ஒரே அதிர்ச்சி. இவ்வளவு வேகமாக இந்த பாடல் வந்தது. விளக்கம் சொல்ல முடியுமா என யோசித்துக் கொண்டே அந்தப் பெரியவரை நோக்கினேன். அவர் முருகா! முருகா! என உரக்கக் கதறிக் கொண்டு கண்ணீர் மங்க கதறிக் கொண்டிருந்தார். ஐயா இது சத்தியமான ஜீவநாடி
சொல்வது அந்த முருகனே, ஞானஸ்கந்தர் தெய்வம். அவர் இதை நாம் சாதாரணமாக எண்ணக் கூடாது. நான் எந்த மந்திரங்களை ஜபம் செய்து வருகின்றேனோ அதை அப்படியே ஒரு எழுத்துக் கூட பிசகாமல் நாடியில் வந்துவிட்டது. 

இது எப்படி சாத்தியம் என்று கூடப் புரியவில்லை. மிகவும் உயர் நிலையில் உள்ள ஆன்மிகவாதிகளுக்கு மட்டுமே புரிந்த இந்த இரகசியத்தை முருகப் பெருமான் ஜீவநாடி மூலம் ஒரே ஒரு நொடியில் சொல்லி விட்டார் என்று இந்த பாடலுக்கு சுமார் ஒரு மணி நேரம் எனக்கு விளக்கம் கொடுத்தார். என் கைகள் இரண்டையும் இறுகப் பிடித்து முருகன் அருள்! எல்லாம் முருகன் அருள்! என்று என்னையும் வாழ்த்தி விபூதியை என் நெற்றியில் பூசிவிட்டு, சிறிது என் வாயிலும் போட்டு வாழ்த்தினார்.


அவர் சொன்ன விளக்கங்களை என்னால் ஐம்பது சதவீதம் மட்டுமே புரிந்து கொள்ள முடிந்தாலும் முருகனது திருவிளையாடலை எண்ணி வியந்தேன். 80 வயதுப் பெரியவரை ஆன்மிகத்தில் பழுத்த பழத்தையே அசத்திவிட்ட ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தியின் புகழ் ஓங்கட்டும்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 39 - https://tut-temples.blogspot.com/2020/09/39.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 38 - மூன்றாம் நாள் அர்த்தஜாம பூசை - அனைவரின் தரிசனம்!  - https://tut-temples.blogspot.com/2020/09/38.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 37 - இரண்டாம் நாள் சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை ! - https://tut-temples.blogspot.com/2020/09/37.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 36 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! (3) - https://tut-temples.blogspot.com/2020/09/36-3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 35 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/35.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 34 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/08/34.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 33 - சித்தர்களின் அர்த்தஜாம சிவ பூஜை! - https://tut-temples.blogspot.com/2020/08/33.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 32 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/08/32.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 31 - குருவே சரணம்...திருவே சரணம் ... - https://tut-temples.blogspot.com/2020/07/31.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 30 - ஜீவநாடி இறைவனுக்குச் சமம் - https://tut-temples.blogspot.com/2020/06/30.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 29 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2020/05/29.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - திருவோணம் நட்சத்திரம்!  - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_12.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 28 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/04/28.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 27 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/27.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 26 - அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்...- https://tut-temples.blogspot.com/2020/03/26.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 25 - அந்தநாள் >> இந்த வருடம் - [2020-21] - https://tut-temples.blogspot.com/2020/03/25-2020-21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 24 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/24.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23-08032020.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

No comments:

Post a Comment