"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, November 3, 2020

பல கோடி நன்மைகள் வழங்கும் அன்னதானம் & மகேஸ்வர பூசை - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம்

அனைவருக்கும் வணக்கம்.

மிக மிக நீண்ட நாள்களுக்கு பின்னர் தங்களை இந்தப் பதிவின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி. இறையருள்,குருவருள், ஆலய தரிசனம், உழவாரம், மலையேற்றம் என நாம் எடுக்கும் ஒவ்வொரு செய்தியிலும் நாம் பேசிக்கொண்டே இருக்கலாம். அது போன்றது தான் அன்னதானம் & மகேஸ்வர பூசை. தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். ஆம். உண்மை தான். பசியோடு இருப்பவரிடம் சென்று நாம் என்ன சித்தாந்தம்,வேதாந்தம் பேசினாலும் எடுபடாது. நாம் உயிர் வாழ எது அவசியம், நீர், காற்று, உணவு என்ற பட்டியலில் உணவு ஒன்றை மட்டும் தான் நாம் அதிகமாக எடுத்துக் கொள்கின்றோம். காற்றும், நீரும் இயல்பாகவே நமக்கு கிடைக்கின்றது. ஆனால் உணவு அப்படி இல்லை. பசியின் நேரம் பார்த்து, வீட்டில் சமைத்து உண்ண வேண்டும். அப்படி என்றால் அன்னமே பிரதானமாக இருக்கின்றது.

நாம் ஒவ்வொருவரும் கொண்டுஉள்ள உடல் உருவம் அன்னத்தினால் தான். நாம் எப்படிப்பட்ட உணவு உண்கின்றோமோ, அதனைப் பொறுத்து நம் குணங்கள் அமைகின்றது. உலகை மாற்ற விரும்பினால் உணவை மாற்றுங்கள் என்றும் நாம் கேட்டிருப்போம். அன்னம் இன்றி இவ்வுலக உயிர்கள் வாழ்வது கடினம். அன்னமின்றி வாழ மகான்கள்,சித்தர்கள்,ரிஷிகள் போன்றோரால் முடியும். நாம் மனித நிலை பற்றி மட்டுமே இங்கு பேசுகின்றோம்.

இத்துணை அமிர்தமான அன்னத்தை தானமாக கொடுப்பது என்றால் ஒன்றும் சிறிய விஷயம் இல்லை. மிகப் பெரும் விஷயம். கொடுக்கும் உள்ளம் வேண்டும். என்ன தான் கோடி ஆயிரம் ஆயிரமாக பணம் இருந்தாலும் கொடுக்கும் உள்ளம் இருந்தால் தான் அன்ன தானம் செய்ய இயலும். அன்ன தானம் செய்வது அனைத்தையும் தானமாக தருவது என்ற சூட்சும கருத்தை குறிக்கும்.

இந்த பதிவில் தயவு சித்தாஸ்ரமத்தில் நடைபெற்ற அன்னதானம் & மகேஸ்வர பூசை நிகழ்வின் துளிகளை இங்கே இணைகின்றோம். கண்டு இன்புறுக!



ஒரு சமயம் குந்தி தேவி ஸ்ரீகிருஷ்ணனை காண சென்றார்கள் அப்போது ஸ்ரீகிருஷ்ணன் பூஜை அறையில் பூஜை செய்துவிட்டு தியானத்தில் இருப்பதாக  ஸ்ரீருக்மிணி கூறினார்கள் சிலநேரம் கழித்து ஸ்ரீகிருஷ்ணர் வெளியே வந்தார் அவரிடம் குந்திதேவி அண்டசராசரமும் உன்னை பூஜிக்கையில் நீ யாரை பூஜிக்கிறாய் தியானிக்கிறாய் என்று கேட்டார்கள் அதற்கு ஸ்ரீகிருஷ்ணர் கூறியது

ஸ்ரீகிருஷ்ணர் வணங்கும் ஆறு பேர்.. 
நித்யான்ன தாதா தருணாக்னிஹோத்ரி
வேதாந்தவித் சந்திர சஹஸ்ர தர்சீ
மாஸோபாவாசீச பதிவ்ரதா ச
ஷட் வந்தனீயா மம ஜீவ லோகே.:

பொருள்:
இந்த மனிதர்கள் வாழும் பூமியில் நான் ஆறு வகையான மக்களை வணங்குகிறேன்: அவர்கள்

தினமும் அன்னதானம் செய்வோர்,
தினமும் அக்னிஹோத்ரம் செய்வோர்,
வேதம் அறிந்தவர்கள், 
சஹஸ்ர சந்திர தரிசனம் செய்து சதாபிஷேகம் செய்துகொண்டோர்
 மாதா மாதம் உபவாசம் இருப்போர்,
 பதிவ்ரதையான பெண்கள்
என்று கூறி உள்ளார். இதில் முதலிடம் நித்ய அன்னதானம் செய்வோர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.












 இனிப்பு கேசரியுடன் இட்லி,பொங்கல்,சாம்பார்,சட்னி என 86 சாதுக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.








அடுத்ததாக மகேஸ்வர பூசை

மதியம் மஹேஸ்வர பூஜையானது புத்தூர் நாரயண வணம் திரு.சிவராமகிருஷ்ணன் என்பவரால் நடத்திட இறையருள் ஆசி வழங்கியது. அவருக்கு நம் தளம் சார்பாகவும், ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் சார்பாகவும் நன்றியை இங்கே தெரிவித்துக் கொள்கின்றோம்.இதில் 96 சாதுக்கள் பங்கேற்றனர்.






மதியம் 83 சாதுக்கள் பங்கேற்ற மஹேஷ்வர பூஜை   கோயம்புத்தூர்  சவுரிபாளையம் வேணுகோபால் என்பவரின் உபயத்தால் நடைபெற்றது.











வாழ்வில் எப்போதும் நம்மை விட உயர்ந்தோரிடம் ஆசி பெறுங்கள். ஆசி ஆசி பெற பெற நாம் உயர்வது உறுதி. அதுவும் இது போன்ற சாதுக்களின் ஆசி நம் வாழ்வில் என்றும் துணை நிற்கும், நாம் சாபம்,பாவம் என அனைத்தும் போக்கும்.

அன்று மாலை அன்னதானம் இட்லி தோசை சாம்பார். தக்காளி சட்னி என 90 சாதுக்களுக்கு வழங்கப்பட்டது.

மீண்டும் ஒருமுறை தானத்தில் சிறந்தது அன்னதானம் என்கிறது தர்மசாஸ்திரம். அதனால்தான் கிருஷ்ணபகவானும் கீதையில், “எவன் தனக்காக மட்டும் ஆகாரம் தேடிச்சாப்பிட்டுக் கொள்கிறானோ அவனுடைய பாபத்தையும், முழுக்க அவனேதான் அனுபவித்தாக வேண்டும் வேறு எவரும் அதில் பங்கு எடுத்துக்கொள்ள மாட்டார் என்கிறார்".

அன்னதானத்தில்தான் ஒருவரை பூரணமாக திருப்திபடுத்த முடியும். பணம், காசு, வஸ்திரம், நகை, பூமி, வீடு இதுபோன்றவற்றை எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்கொள்கிறவர்கள், அதற்கு மேல் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். அன்னம் போடுகிற போதுதான் போதும் என்ற திருப்தி ஏற்படும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரத ரிஷிகளின் சமூக சிந்தனைதான் பசியற்ற பாரதத்தைக் காண விழையும் சிந்தனை. வயிற்றுக்கு சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற சிந்தனையால் விளைந்ததே அன்னதானம் என்கிற உயரிய தானம்.

அன்னதானத்தால் ப்ராணனையும், ப்ராணனால் பலத்தையும், பலத்தால் தவத்தையும், தவத்தால் ச்ரத்தையையும், ச்ரத்தையால் புத்தியையும், புத்தியால் மனத்தையும், மனத்தால் சாந்தியையும், சாந்தியால் சித்தத்தையும், சித்தத்தால் நினைவையும், நினைவால் ஸ்திதப்ரக்ஞையையும், ஸ்திதப்ரக்ஞையால் விஞ்ஞானத்தையும், விஞ்ஞானத்தால் ஆத்மாவையும் பெறுவதால் அன்னதானம் செய்வது இவையனைத்தையும் தருவதற்கு சமமாகும்.    

மஹேஷ்வர பூஜையில்  90 சாதுக்கள் பங்கேற்றனர்.

உபயதாரர் திருவண்ணாமலை WJA. ஷபி அவர்களும், அவர் தம் குடும்பத்தாரும் குருவருளும் இறையருளும் பெற வாழ்த்துகின்றோம்.







ஏப்ரல் 1 & 2 ஆகிய தினங்களில் இட்லி,கோதுமைஉப்புமா,சாம்பார் மற்றும்      இட்லி
சாம்பார்,பொங்கல்,சட்னி என சுமார் 90 சாதுக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

அன்னபூர்ணே ஸதாபூர்ணே ஸங்கர ப்ராணவல்லபே

ஞானவைராக்ய ஸித்யர்த்தம் பு௬ம் தேஹி ச பார்வதீ 

மேலும் விபரங்களுக்கு:

ஸ்ரீ சரவணபவா சுவாமிகள்,
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம், கிரிவல பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் அருகில், திருவண்ணாமலை, செல்: (0)9944800220 (இந்த எண்ணில் தொடர்பு கொண்டு மகேஸ்வர பூஜை செய்ய பதிவு செய்து கொள்ளலாம்)

- மீண்டும் மற்றொரு பதிவில் தொடருவோம்.

மீள் பதிவாக :-

அன்னதானம் கொடுப்பது அனைத்தையுமே கொடுப்பதாம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_70.html

 தேடிப்போய் தர்மம் செய்; நாடி வருவருக்கு உதவி செய் (1)  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_21.html

தேடிப்போய் தர்மம் செய்; நாடி வருவருக்கு உதவி செய் - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_11.html

அறம் செய்ய விரும்பு - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_57.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

 இன்றைய இறைப்பணியோடு கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_14.html

அனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - மகா பெரியவா - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_5.html

 தவமா? கூட்டுப்பிரார்த்தனையா? - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_14.html

  நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!  - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_24.html

 TUT அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - https://tut-temples.blogspot.com/2020/03/tut.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html
அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html
கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

No comments:

Post a Comment