"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, March 9, 2021

உலக நன்மை வேண்டி மஹாவேள்வி - சிவராத்திரி சிறப்பு வழிபாட்டு அழைப்பிதழ்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

அனைவரும் இன்னும் சில தினங்களில் சிவராத்திரி வழிபாட்டிற்கு தயாராகிக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகின்றோம். அம்மைக்கு  நவராத்திரி என்றால் அப்பனுக்கு சிவராத்திரி என்றே சொல்லலாம். அதே போல் அமாவாசை அன்று சக்தி வழிபாடு என்றால் பௌர்ணமி அன்று சிவ வழிபாடு. ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. சென்ற ஆண்டில் சிவராத்திரி வழிபாடு குருவருளால் சிறப்பாக நடைபெற்றது. சென்ற ஆண்டில் கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமரத்து விநாயகர் கோயிலில் ஆரம்பித்து ஆவடி செல்லும் வழியில் ஸ்ரீ மீனாட்சி உடனுறை ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோயில்,ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம், நத்தம் ஸ்ரீ வாலீஸ்வரர் ஆலயம், பஞ்சேஷ்டி ஸ்ரீ அகத்தியர் கோயில், திருநின்றவூர் பாக்கம் ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில், உலக நன்மை வேண்டி ICF கமல விநாயகர் அரங்கில் நடைபெற்ற யாகம், சித்தாலப்பாக்கம் ஸ்ரீ அங்கம்மாள் உடனுறை ஸ்ரீ அகத்தீஸ்வரர் தரிசனம் என்று கிடைக்கப் பெற்றோம். ஒவ்வொரு தரிசனமும் நம்மை ஒவ்வொரு விதமாக அருள் காட்டியது என்றே சொல்லலாம். இதில் நாம் சென்ற ஆண்டில் கலந்து கொண்ட உலக நன்மை வேண்டி மஹாவேள்வி பற்றியும், இந்த ஆண்டிற்கான அழைப்பித்தலும் இன்றைய பதிவில் பகிர உள்ளோம்.

சிவராத்திரி அன்று நடைபெறும் யாக வழிபாட்டில் கலந்து கொள்வது பெரும் பேறு ஆகும். யாக வழிபாடு என்பதும் நம்முடைய வழிபாட்டில் ஆக சிறந்த வழிபாட்டு முறை ஆகும். அன்றைய காலத்தில் மன்னர்களும்,அரசர்களும் மட்டும் தான் யாகம் வளர்த்து வழிபாடு  செய்துள்ளார்கள்.ஆனால் இன்றைய காலத்தில் பல இடங்களில் பற்பல பெரியோர்கள் இந்த வழிபாட்டை செய்து வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக சித்தர் வழிபாட்டு முறையில் இந்த யாக வழிபாடு மிக மிக முக்கியத்துவம் பெற்று வருகின்றது.

சென்ற ஆண்டில் சிவராத்திரி நாளில் உலக நன்மை வேண்டி ICF கமல விநாயகர் அரங்கில் நடைபெற்ற யாகத்தில் நிறைவாக பங்கு  பெற்றோம். அந்த காட்சிகளை கீழே பகிர்கின்றோம்.




யாக வழிபாடும் பஞ்சபூத வழிபாட்டில் உள்ள சிறப்பான வழிபாடு ஆகும். யாக வழிபாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தால் யாரும் தவறவிட வேண்டாம். இந்த யாக வழிபாடும் ஒவ்வொரு விதங்களில் செய்யப்பட்டு வருகின்றது. பஞ்சபூத வழிபாட்டில் நேரிடையாக நாம் அக்னி தேவனை வணங்குகின்றோம். அடுத்து யாகத்தில் சேர்க்கப்படும் மூலிகைகள் நமக்கு பல வித உடல் நோய்களை தீர்த்து வைக்கின்றது. இதன் மூலம் மூலிகைகளின் ஆற்றலை நாம் நேரிடையாக பெற முடிகின்றது. யாகத்தில் நிறைவாக உள்ள பூரண ஆகுதி மிக மிக உயர்ந்த ஒன்று. இவற்றைப் பற்றி இனிவரும் பதிவுகளில் குருவின் அருளால் காண்போம். இனி மீண்டும் உலக நன்மை வேண்டி மஹாவேள்வி பற்றிய செய்தி பற்றி பேசுவோம்.


உலக நன்மை வேண்டி மஹா வேள்வி

அன்புடையீர்,

வணக்கம். தலையாய சித்தர் அகத்திய பெருமான் தனது வாக்கில் 5 இடங்களில் உலக நன்மைக்காக வேள்வி நடத்தும்படி உத்தரவிட்டிருந்தார். 

அதன்படி கடந்த ஆண்டு சிவராத்திரி ( 21.2.2020 ) அன்று சென்னையிலும் மதுரையிலும் 136 வகையான மூலிகைகளைக் கொண்டு (மொத்தம் 136  மூலிகைகளால்) இரவு முழுவதும் மஹா வேள்வி நடத்தப்பட்டது.

அதேபோல் இந்த ஆண்டும் மஹா சிவராத்திரி (11.3.2021) அன்று 148 வகையான மூலிகைகளைக் கொண்டு சென்னையிலும் மதுரையிலும் உலக நன்மைக்காக மஹா வேள்வி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சென்னை வேள்வி: அருள்மிகு கமல விநாயகர் சத் சங்க மண்டபம், ICF பஸ் ஸ்டாண்ட் அருகில், சென்னை

மதுரை வேள்வி: அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில், திருப்பரங்குன்றம் பிரதான சாலை, அவனியாபுரம், மதுரை – 12.

விவரங்களுக்கும் நன்கொடை அனுப்புவதற்கும்:

சென்னை வேள்வி: திரு முருகானந்தம், GPAY & PAYTM 84891 25459

MURUGANANDAM.R A/C. NO:    075-610-400-019-3016 Saving account

IFSC CODE IBKL 00-00-756 IDBI BANK  THIRUVALLUR MAIN

மதுரை வேள்வி: திரு ஆனந்தன், GPAY 9080721747

T R ANANDHAN SB ACCOUNT NUMBER 004901000039406

IFSC IOBA0000049 INDIAN OVERSEAS BANK  MADURAI MAIN

மதுரை வேள்விக்குத் தேவைப்படும் பூசைப் பொருட்கள் விவரம்:

மஞ்சள் பொடி 500 கிராம்

பூ மாலை 12

உதிரிப்பூ 6 கிலோ (செவ்வந்தி, வெள்ளை அரளி, சிவப்பு அரளி, இட்லி பூ, துளசி, மருவு, பச்சை, மரிக்கொழுந்து, தாமரைப்பூ)

பசு நெய் 6 லிட்

 தேங்காய் 21

வாழைப்பழம் 1 தார்

வெற்றிலை 30 ரூ

பாக்கு 30 ரூ

குங்குமம் 1 கிலோ

சந்தனம் 1 கிலோ

சூடம் 500 கிராம்

வேஷ்டி, புடவை 9 X 5 4 செட்

விறகு 50 கிலோ


நன்கொடை வரவு விவரம்

சென்னை வேள்விக்கு

7.03.2021 வரை வரவு ரூ.21005

08.03.2021

P சக்திவேல் பவானி ரூ.500

சங்கர் மூர்த்தி ரூ.301

A A திலக் ரூ.1500

மொத்தம் ரூ.2301

ஆக மொத்தம் ரூ.23306


மதுரை வேள்விக்கு

06.3.2021  வரை வரவு ரூ. 22900 

E S S சுமதி மதுரை ரூ.500

மலர்கொடி ஹரிராம் ரூ.350

J N உஷா ரூ.250

மொத்தம் ரூ.1100

ஆக மொத்தம் ரூ.24000

உலக நன்மைக்காக செய்யப்படும் இந்த வேள்விகளில் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு சிவபெருமானின் அருளும் ஆசியும் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 148 வகையான மூலிகைகளைக் கொண்டு மிகுந்த பொருட்செலவில் செய்யப்படும் இவ்வேள்விகளுக்கு உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

மீண்டும் சென்ற ஆண்டில் நடைபெற்ற வேள்வியின் நிகழ்வுகளை மீண்டும் பகிர்கின்றோம்.















வாய்ப்புள்ள அன்பர்கள் நேரில் கலந்து கொண்டு குருவருளும் திருவருளும் பெறும்படி வேண்டுகின்றோம்.

 மீண்டும் சந்திப்போம் 

மீள்பதிவாக:-

ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் ஆலய 11ஆம் ஆண்டு மஹாசிவராத்திரி அழைப்பிதழ் - 11.03.2021 - https://tut-temples.blogspot.com/2021/03/11-11032021.html

சிவராத்திரி விரதம் - செய்ய வேண்டியது - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_82.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், அன்பும் ஓங்க ஓர் பரிகார ஸ்தலம் - மகா சிவராத்திரி 10 ஆம் ஆண்டு அழைப்பிதழ் - 21.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/10-21022020.html

TUT சிவராத்திரி உழவாரப் பணி அறிவிப்பு - 19.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/tut-19022020.html

ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் அருள் பெற வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_8.html

TUT சிவராத்திரி உழவாரப் பணி அறிவிப்பு - 19.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/tut-19022020.html

அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் - மகா சிவராத்திரி அழைப்பிதழ் - 21.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/21022020.html

No comments:

Post a Comment