"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, March 11, 2021

மாசி அமாவாசை லோக ஷேம தீப வழிபாடு அழைப்பிதழ் - 12.3.2021

அனைவருக்கும் அன்பு  வணக்கங்கள்.

அனைவரும் சிவராத்திரி வழிபாடு நிறைவு செய்து இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். நமக்கு ஆன்மிகம் நோக்கிய பாதையை சிவராத்திரி வழிபாடு தான் உருவாக்கியது. நேற்றைய சிவராத்திரி தரிசனத்தில் 9 திருக்கோயில்கள் தரிசனம் செய்து நம் தளம் சார்பில் தூய இலுப்பெண்ணை, குங்கிலிய பத்தி, தூய சூடம் என கொடுத்தோம். இது போன்ற சேவைகளுக்கு தோள் கொடுத்து வரும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி கூறி மகிழ்கின்றோம்.

நம் தளத்தின் மூலம் நம்மால் முடிந்த அளவில்  அறப்பணிகள், சேவைகள்,பூசைகள் என செய்து வருவது அனைவரும் அறிந்ததே. மாதம் தோறும் அகத்தியர் பெருமானுக்கு ஆயில்ய ஆராதனை செய்து வருகின்றோம். இது அகத்தியர் பெருமானுக்கு மட்டும் நடைபெறுகின்றது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நேரில் வந்து பார்த்தால் தான் தெரியும். இது அனைத்து சித்தர்கள், மகான்களுக்கான பூசை. ஆயில்ய ஆராதனையில் சித்தர்கள் போற்றித் தொகுப்பை நாம் ஓதி வருகின்றோம். இதுவே நம்மை வழி நடத்தி வருகின்றது.

இந்த பயணத்தில் நாம் அடுத்து அடி எடுத்து வைத்தது மோட்ச தீப வழிபாடு. 2018 ம் ஆண்டு  ஆடி மாதம் கோலாகலமாக சிறப்பாக கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் நமக்கு நேரிடையாக வந்து , முதல் வழிபாட்டை துவக்கி வைத்த அகத்தியர் அடியார்கள் பாதம் தொட்டு வணங்குகின்றோம். குருநாதரின் அருளின்படி இந்த மாசி மாத முதல் மோட்ச தீப வழிபாட்டை லோக ஷேம தீப வழிபாடாக மேற்கொள்ள இருக்கின்றோம். நாம் ஏற்கனவே பலமுறை தீப வழிபாடு பற்றி பேசி இருக்கின்றோம். தீப வழிபாடு மிக மிக சக்தி வாய்ந்த வழிபாடு ஆகும்.

நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீர பரிகாரத்திற்கு சொல்லக்கூடிய தீப வழிபாடுகளுக்கு அதீத சக்தி உண்டு என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதை வெறும் தீபம் என்று நினைத்து மட்டும் ஏற்றாமல் உங்கள் கஷ்டத்தை நெருப்பில் போட்டு பொசுக்குவது போல நினைத்து மனதில் உறுதியோடு தீபத்தை ஒளிர விட வேண்டும். இப்படி ஒரு மன உறுதியோடு தீப வழிபாட்டை செய்தால் மட்டுமே பரிகார தீபம் கைமேல் பலனை கொடுக்கும்.

நம்மில் பெரும்பான்மையினருக்கு பெரிய கஷ்டம் என்றால், அது இன்றைய சூழ்நிலையில் கடன் கஷ்டமாகத்தான் இருக்கின்றது அல்லவா? இந்த கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு நிறைய பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. எந்த பரிகாரத்தை செய்தும் பலனில்லை என்று சிந்திப்பவர்கள் கூட, தொடர்ந்து தீபத்தை ஏற்றி பாருங்கள். நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும்.ஜெயம் உங்கள் பக்கம், அதற்கான நல்ல நேரமும் காலமும் உங்களுக்கு கை கொடுப்பதற்காகத் தான் இந்த தீப வழிபாடு. இனி மாசி அமாவாசை லோக ஷேம தீப வழிபாடு அழைப்பிதழ் - 12.3.2021 இங்கே பகிர விரும்புகின்றோம்.

நம் குழுவிற்கும் தீபத்திற்கு ஏகப் பொருத்தம். சென்ற ஆண்டும், இந்த ஆண்டும்  அகத்தியர் குரு பூசையில் 108 தீப வழிபாடு, ஆடி மாதம் முதல் மோட்ச தீப வழிபாடு, இன்று முதல் லோக ஷேம தீப வழிபாடு என அடுத்தபடி நிலை நோக்கி செல்ல இருக்கின்றோம்.

விளக்கேற்றி வழிபாடு செய்தால்

நினைத்த காரியம் நடக்கும்
குடும்ப ஒற்றுமை ஓங்கும்
புத்திரதோஷம் நீங்கும்
சகல நன்மைகளும்,ஐஸ்வர்யமும் பெருகும்.

அதே போல், விளக்கேற்றும் திசை, எண்ணையின் பலன்கள் என்று பல செய்திகள் உண்டு, சாதாரண தீபம் தானே என்று எண்ணாதீர்கள். தீபங்கள் ஏற்றும் போது, அந்த இடத்தில உள்ள இருள் நீங்கி, ஒளி பரவுகின்றது. அதே போல் தீபம் ஏற்ற ஏற்ற நம் அக இருள் நீங்கி , அக ஒளி பெருகும். நம்மைப் பொறுத்த வரையில் முதலில் அகத்தியர் ஆயில்ய வழிபாட்டில் அபிஷேகத்தில் மட்டும் கவனம் செலுத்தினோம். பின்னர் குருவின் வழிகாட்டல் படி, தற்போது ஆயில்ய பூசை ஆரம்பிக்கும் முன்னர், அஷ்ட திக்கு விளக்குகள் ஏற்றி தான் வழிபாட்டை ஆரம்பிக்கின்றோம்.மேலும் தீப வழிபாடு என்பது "பஞ்ச பூத" வழிபாட்டின் தத்துவமாகும். தீப வழிபாட்டில் நாம் நமக்காக வேண்டுவதை விட, மற்றவர்களுக்காக வேண்டுவது சால சிறந்தது. அதுவும் மோட்ச தீப வழிபாடு இன்னும் பிரசித்தம் பெற்றது.

தீபமேற்றிய உடன் நமக்கு என்ன தோன்றுகின்றது. மகிழ்ச்சி தானே..
தீபமேற்றுவதன் தாத்பரியமே நாம் மகிழ்வோடு வாழ்தல் என்பதற்காகத் தான். தீபமேற்றியவுடன் அந்த இடத்தில் உள்ள இருள் விலகி, ஒளி பெறுகின்றது. இது புறத்தில் நடைபெறும் நிகழ்வு. நீங்கள் இது போன்று தீபமேற்றி பிரார்த்தனை செய்ய செய்ய, அந்த புற நிகழ்வு, உங்கள் அகத்தில் நிகழ்வும். மாசற்ற ஜோதி மனதில் ஒளிர்ந்து, மலர்ந்த மலரை நாம் நம்முள் உணரலாம். நாம் ஒவ்வொருவரும் எத்துணையோ விதமான துன்பங்களை அனுபவித்து வருகின்றோம். சொல்லொணா துயரில் இருப்பவர்கள் தினமும் அகல் விளக்கில் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி சிறிய அளவில் பிரார்த்தனை செய்து வாருங்கள். சுமார் மூன்று மாதங்களுக்கு உள்ளாக நீங்கள் மாற்றம் பெறுவது உறுதி.

இந்த உலகம் எதனால் இயங்குகின்றது? சூரியனால் தான். சூரியன் இல்லையென்றால் நம் கதி அதோகதி தான். ஆதியில் நம் வழிபாடாக இருந்ததும் சூரிய வழிபாடு தான். ஞாயிற்றுக் கிழமை வாரத்தின் முதல் நாள், சூரியனை வழிபட்டு நம் நாட்களை தொடங்க வேண்டிய நாள். ஆனால் மாறாக அன்று தான் நாம் கேளிக்கை, கூத்து என்று திண்டாடி வருகின்றோம். ஆதி வழிபாட்டை மறந்து விட்டோம். தற்போது ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினமாக நம் கையில் சீரழிந்து வருகின்றது. இதற்கு மாற்றாக நாம் என்ன செய்ய முடியும்? ஞாயிற்றுக் கிழமை அன்றாவது விடியல் கண்டு சூரியன் தரிசனம் பெறுங்கள், சூரியக் குளியல் போடுங்கள். சரி வாருங்கள்..விளக்கின் மூலம்  விளக்கம் பெறுவோம்.

விளக்கு என்றால் என்ன? தெளிவு பெறு ..தெளிவு எப்போது பெற முடியும்? அகமோ, புறமோ இருள் அகற்றினால் தெளிவு பெறலாம். விளக்கு இருள் அகற்றும் வேலையைத் தான் செய்கின்றது. ஆரம்ப காலத்தில் களிமண்ணால் விளக்குகள் பயன்பாட்டில் இருந்தது.இன்று பல உலோகங்களில் பல விதங்களில் , வடிவங்களில் கிடைக்கின்றது. கோயிலில் விளக்கேற்ற செல்லும் போது கண்டிப்பாக களிமண்ணால் செய்யப்பட்ட விளக்குகளை பயன்படுத்துங்கள். பொதுவாக திருவிளக்கின் தத்துவத்தின்படி,

நெய் - நாதம் என்ற ஒலி தத்துவம்
திரி - பிந்து என்ற ஒளி தத்துவம்
சுடர்  -திருமகள்
பிழம்பு - கலைமகள்
தீ- சக்தி

என ஐந்து இறைமகாசக்திகள் உள்ளடங்கி உள்ளது. அகல் விளக்கேற்றி வழிபடுவது பஞ்ச பூத வழிபாடாகும். நாம் மோட்ச தீபத்தில் களிமண்ணால் ஆன பெரிய அகல் விளக்கில்  விளக்கேற்றி வழிபாடு செய்கின்றோம். பஞ்ச பூத வழிபாடும், முன்னோர்களின் வழிபாடும் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கிடைப்பதைப் போன்றதாகி விடும். அதே போல் விளக்கேற்ற உகந்த நேரம் நாம் ஏற்கனவே சொல்லியது போன்று பிரம்ம முஹூர்த்தம் என சொல்லப்படும் அதிகாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை தான். அதற்குப் பின்னரும் விளக்கேற்றலாம். தவறில்லை. பலன்கள் சற்று குறைவாக இருக்கும். அவ்வளவே. பயன்படுத்தப்படும் உலோக விளக்குகளுக்கென தனித்தனி பலன்கள் உண்டு.

வெண்கல விளக்கு - பட்சி தோஷங்கள் நீக்கும்
பித்தளை விளக்கு - சண்டை சச்சரவு நீங்கும்
செப்பு விளக்கு - அமைதி தரும்
வெள்ளி விளக்கு - பூரணத்துவம் தரும்
தங்க விளக்கு - ஆயுள் விருத்தி
நவரத்தின ஆபரண விளக்கு - நவரத்தின தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

உலோக விளக்குகளுக்கு என்று சளைக்காது இருப்பது மண் அகல் விளக்குகள். வலம்புரி சங்கு விளக்கு, பச்சை மண் அகல் விளக்கு, சுட்ட அகல் விளக்கு, பனம்பழ குறுக்கு வெட்டு அகல்விளக்கு, விசிறித்தட்டு அகல் விளக்கு, பாதாளக்குழி அகல்,தூங்கா(தூண்ட) விளக்கு, பலரூப அகல் விளக்கு என பலவகையான அகல் விளக்குகள் உண்டு. இதே போல் விளக்கேற்றும் எண்ணெயிலும் பல செய்திகள் உண்டு.

பார்ப்பதற்கு மிக எளிதாக தோன்றுகின்றது அல்லவா? தீப வழிபாட்டினுள் ஏகப்பட்ட செய்திகள் உள்ளது. இதனால் தான் வள்ளலார் பெருமானும்,

பார்ப்பதற்க்கு மிக எளிதாக தோன்றுகின்றது அல்லவா? ஆனால் பல்வேறு செய்திகளை தீப வழிபாடு நமக்கு உணர்த்துகின்றது. இதனால் வள்ளல் பெருமானும் 

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 

என்று கூறியுள்ளார்.மீண்டும் ஒரு முறை அனைவரையும் இன்று மாலை நடைபெற உள்ள வழிபாட்டிற்கு அழைக்கின்றோம்.

மாசி அமாவாசை லோக ஷேம தீப வழிபாடு அழைப்பிதழ் - 12.3.2021

மெய் அன்பர்களே.

நிகழும் மங்களகரமான சார்வரி  வருடம் மாசி மாதம் 29 ஆம் நாள் (13.3.2021) வெள்ளிக்கிழமை  இரவு  7 மணி முதல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷி முன்னிலையில் உலக நன்மை வேண்டி தீபம் ஏற்றி வழிபாடு செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து  குருவருளும் திருவருளும்   பெறும்படி வேண்டுகின்றோம்.

மேலும் விபரங்களுக்கு : 7904612352 / 97890 59522

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் 108 தீப வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/11/108.html

No comments:

Post a Comment