"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, July 26, 2022

சதுரகிரி மகாலிங்கமே போற்றி! போற்றி - ஆடி அமாவாசை திருவிழா அழைப்பிதழ் - 28.07.2022

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நாம் அனைவரும் ஆடி மாத வழிபாட்டில் இணைந்து வருகின்றோம். ஆடி மாதம் என்றாலே சக்தியை பெறும் மாதம் என்றே சொல்லலாம். ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை என்று இம்மாதம் முழுதும் கொண்டாட்டம் தான். ஆடி அமாவாசை சிறப்பு பதிவாக அருள்மிகு சாப்டூர்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் திருவிழா அழைப்பிதழை இங்கே பகிர விரும்புகின்றோம்.

அழைப்பிதழை பகிரும் முன்னர் சதுரகிரி வரலாறு கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன், திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடு த்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்றபோது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். 

சடைமங்கையும் ஒப்புக் கொண்டாள். வழக்கத்தைவிட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இது பற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார்.பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித் தான். 

தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல்இரக்கம் கொண்ட அவர் அவளுக்கு சடதாரி என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.

சுத்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். 

பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக் கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார்.

சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சை மால் மிகவும் வருந்தி அழுதான். சிவபெருமான் அவனை தேற்றி, நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்ல தேவன். நீ யாழ்மீட்டி என்னைபாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன், என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி மகாலிங்கம் என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். 

இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலை யில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம். அனைவரும் சுந்தரமஹாலிங்கம் தரிசனம் செய்து வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற வேண்டும்.




அருள்மிகு சாப்டூர்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி  அமாவாசை திருவிழாவை முன்னிட்டு 26.07.22 (செவ்வாய் கிழமை) முதல் 29.07.22 (வெள்ளிகிழமை)  வரையிலான நான்கு நாட்கள் மட்டும் காலை 5மணி முதல் மாலை 3மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

• இக்கோவில் விருதுநகர் மாவட்டம்  தாணிப்பாறை அடிவார பகுதியிலிருந்து சுமார் 5.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த நடைபாதை தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து வன உயிரினச்சரணாலய பகுதியில் 4.75 கி.மீ தூரத்திற்கு செல்கிறது. அருள்மிகு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி அம்மாவாசை திருவிழா இந்த வருடம் 28.7.22 அன்று நடைபெறுகிறது. இத்திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

• அருள்மிகு சாப்டூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் ஆடி  அமாவாசை திருவிழாவை முன்னிட்டு 26.07.22 (செவ்வாய் கிழமை) முதல் 29.07.22 (வெள்ளிகிழமை)  வரையிலான நான்கு நாட்கள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

• பக்தர்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாகவும், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர்,விருதுநகர், டி.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி மற்றும் மதுரை ஆகிய இடங்களிலிருந்து வாகனங்களுக்கு  தாணிப்பாறை விலக்கு வரை இரு வழிச் சாலைகளும்,  தாணிப்பாறை விலக்கிலிருந்து தாணிப்பாறை அடிவாரத்தின் அருகில் உள்ள தற்காலிக பேருந்து நிலையம்;  வரை வாகனங்கள் வருவதற்கும், மகாராஜபுரம் விலக்கு வழியாக திரும்பிச் செல்வதற்கும் என ஒரு வழி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

• மேலும், தாணிப்பாறையிலிருந்து  ஐந்து கிலோ மீட்டருக்கு முன்பாகவே ஒரு தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே  ஆட்டோ, வேன், கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு என்று தனித்தனியாக வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அரசுப் பேருந்தை பயன்;படுத்துபவர்களுக்கு என்று தாணிப்பாறையை அடுத்து கோவில் நுழைவு வாயிலுக்கு 800 மீட்டர் முன்பாக மற்றுறொரு தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் வரை அரசு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்,  தனியார் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

• இத்திருக்கோவிலுக்குச் செல்ல கோவில் நுழைவுச் சீட்டு ஏதும் வழங்கப்படாது. பக்தர்கள் யாத்திரை செல்லும் போது ஏதேனும் அசம்பாவிதங்கள் நேரிடும் பட்சத்தில் அருகில் உள்ள அரசு அதிகாரிகள் கொண்ட குழுக்களிடம் தகவல் தெரிவிக்கலாம்.

• மேலும், பக்தர்களுக்கென அமைக்கப்பட்ட அடிப்படை வசதிகள், பேருந்து நிறுத்துமிடங்கள், வாகனங்கள் முறையாக எந்தெந்த வழித்தடங்கள் வழியாக செல்ல வேண்டும்; போன்ற விவரங்கள் அடங்கிய விளம்பர பதாகைகள் அழகாபுரி, மகாராஜபுரம் விலக்கு, தாணிப்பாறை விலக்கு, வத்திராயிருப்பு பேருந்து நிறுத்தம் மற்றும் தற்காலிகமாக அமைக்கபட்டுள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும்; வைக்கப்பட்டுள்ளது.

• பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே மருத்துவ வசதி, கழிப்பிட வசதிகள் மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.  குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

• வனப்பகுதியில் பக்தர்கள் நெகிழிப்பைகள் கொண்டு செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் இரவு நேரங்களில் கோவிலிலும், வனப்பகுதியிலும் தங்குவதற்கு அனுமதி கிடையாது,

• பக்தர்களின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு,  கோவிலிருந்து (தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து) மாவட்டத்தின் முக்கிய பகுதிகளுக்கு 24 மணி நேரமும் இரவு நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படும். ஆனால் மற்ற பகுதிகளில் இருந்து இரவு நேரங்களில் கோவில் செல்வதற்கு பேருந்துகள் இயக்கப்படாது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

• அருள்மிகு சாப்டூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி திருக்கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கு பொதுமக்கள், நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், மேலும் வனப்பகுதிiயை சுத்தமாகவும், சுகாதாரமாகவும்  வைத்திருத்திருக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

இன்றைய பிரதோஷ வழிபாட்டில் சதுரகிரி மகாலிங்கமே போற்றி! போற்றி என்று கூறி, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ பிரார்த்தனை செய்துகொள்வோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

-மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3) - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

 ஆடி அமாவாசை சிறப்பு பதிவு - சேர்மன் அருணாசல சுவாமி கோயில் (19.07.2022 முதல் 30.07.2022 வரை) - https://tut-temples.blogspot.com/2022/07/19072022-30072022.html

ஆடி அமாவாசை - இறை வழிபாடும், இறைப்பணியும் - https://tut-temples.blogspot.com/2021/08/blog-post_9.html

ஆடி அமாவாசை சிறப்பு பதிவு (1) - சேர்மன் அருணாசல சுவாமி கோயில் (22.07.2019 முதல் 02.08.2019 வரை) - https://tut-temples.blogspot.com/2019/07/1-22072019-02082019.html

ஆடி அமாவாசை - ஒருவர் சொல்ல மற்றொருவர் கேட்க வேண்டிய பக்திக் கதை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_90.html

விதியினிதான் நமக்கேது குறுமுனி நம் காப்பாமே! - https://tut-temples.blogspot.com/2021/05/blog-post_22.html

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு அறிவிப்பு - 20.07.2020 - https://tut-temples.blogspot.com/2020/07/20072020.html

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_84.html

 முன்னோர்களின் ஆசி பெற மோட்ச தீப வழிபாடு  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_83.html

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

வளங்களை அள்ளித் தரும் மோட்ச தீப வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_29.html

21 தலைமுறை முன்னோர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றுவோம் - https://tut-temples.blogspot.com/2019/06/21.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

No comments:

Post a Comment