"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, July 23, 2022

சரணம் சரணம் சண்முகா சரணம் - ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்று ஆடி கிருத்திகை.அனைத்து முருகப் பெருமான் ஆலயங்களும் இன்று திருவிழாக்கோலம் தான். பொதுவாக கிருத்திகை என்றாலே நமக்கு சிறப்பு தான். இருந்தாலும் ஆடிக் கிருத்திகை என்றால் சிறப்பிலும் சிறப்பு. நமக்கு ஆடி கிருத்திகை என்றாலே வேல் மாறல் பாராயணம் தான் நினைவிற்கு வரும். இரண்டு முறை பொங்கி மடாலயத்தில் நடைபெற்று வரும் வேல்மாறல் அகண்ட பாராயணத்தில் நாம் கலந்து கொள்ளும் வாய்ப்பு முருகனருளால் நமக்கு கிடைத்தது. தற்போது சின்னாளபட்டியில் இருப்பதால் நாம் நேரில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை.

இன்றைய நாளில் நம் தளம் சார்பில் காலை அன்னசேவையும். சில அன்பர்களுக்கு கூழ் வாங்கி கொடுத்தோம்.பின்னர் ஏனைய ஜீவ ராசிகளுக்கு பிஸ்கட் வாங்கி கொடுத்தோம். இன்று மாலை சின்னாளப்பட்டி ஸ்ரீ முருகப்பெருமான் கோயிலில் பாமாலை படித்து வழக்கம் போல் லோக ஷேமத்திற்காக பிரார்த்தனை செய்தோம். மேலும் 20 முழம் பூக்கள், பத்தி, சந்தனம் , பன்னீர் , பஞ்ச தீப தட்டு என கொடுத்தோம். மேலும் சிவபுராணம், கணபதி கவசம் பிரதிகள் என கொடுத்தோம்.




அடுத்து சில தரிசன காட்சிகளை இங்கே பெற உள்ளோம். 





கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமரத்து விநாயகர் கோயிலில் இருந்து நாம் பெற்ற இன்றைய அழகனின் தரிசனம் எப்படி உள்ளது? ஒரு முறை அல்ல, பல முறை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகின்றது அல்லவா?



இங்கே நாம் தோரணமலை ஸ்ரீ முருகப் பெருமானின் அருள் தரிசனம் பெறுகின்றோம். தோரணமலையானுக்கு அரோகரா..அரோகரா என்று கூறி கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகின்றது அல்லவா? குருவருளால் இரண்டு வாரங்களுக்கு முன்னர் தோரணமலைசெல்லும் வாய்ப்பு கிடைத்தது. அன்றைய தினம் கிடைத்த அருளும் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தது. இன்னும் ஓரிரு பதிவுகளில் மீண்டும் தோரண மலை செல்வோம்.

முருகப் பெருமானை எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ என்று அருணகிரிநாதர் போற்றுகின்றார். நாமும் அவ்வாறே போற்றி வழிபடுவோம். நமக்கு தந்தையாகவும் தாயாகவும் இருக்கும் முருகப் பெருமானின் பதத்தை பற்றுவோம். இந்தப் பற்று ஒன்றே போதும். இந்த கலியுக துன்பங்களில் இருந்து நாம் விடுபட கந்தன் பாதம் பற்றி, போற்றுவதை தவிர வேறு உபாயம் நமக்கில்லை. 

பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்று சொல்வார்கள். அது போல் பிள்ளை எப்படி இருந்தாலும் தாயன்பு தான் அன்பின் ஊற்று. தாயின் அன்பின் மூலம் தான் தந்தையை பற்றி அறிகின்றோம். மாதா, பிதா, குரு ,தெய்வம் என்ற வரிசையில் நமக்கு முருகப்பெருமான் தாயாக, தந்தையாக, குருவாக, தெய்வமாக இருக்கின்றார். 

    உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
    பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்
    கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும்
    வேலப்பா! செந்தில் வாழ்வே!

    அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
    வெஞ்சமரில் 'அஞ்சல்!' எனவேல் தோன்றும் - நெஞ்சில்
    ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
    'முருகா!' என்று ஓதுவார் முன்.

    முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன்
    மருகனே! ஈசன் மகனே! ஒருகை முகன்
    தம்பியே! நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
    நம்பியே கைதொழுவேன் நான்." 

என்று அனுதினமும்  முருகப் பெருமானை போற்றி வழிபடுவோம். இன்றைய பதிவில் பூ மாலை கொண்டு வழிபாடு செய்ததை உங்களோடு பகிர்ந்தோம். அடுத்த பதிவில் பாமாலை கொண்டு வழிபாடு செய்ததை உங்களோடு பகிர குருவிடம் வேண்டுகின்றோம். பதிவின் தலைப்பை பார்த்தாலே உங்களுக்கு புரிந்து விடும் என்று நம்புகின்றோம். இருப்பினும் அடுத்த பதிவில் இதனை பற்றி மீண்டும் பேசுவோம்.

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.. வெற்றிவேல். முருகனுக்கு அரோகரா....

முருகா! முருகா!! முருகா!!!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


- மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ - ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2021/08/blog-post.html

ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு - தேனி சண்முகநாத மலை தரிசனம் (3) - https://tut-temples.blogspot.com/2019/07/3_23.html

ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html

வேலவனின் திருப்பாதத்தில் - வேல்மாறல் அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_61.html

குரவு விரவு முருகா வருக! - https://tut-temples.blogspot.com/2021/07/blog-post_26.html

திருக்குராவடி நிழல்தனில் உலவிய பெருமாளே! - https://tut-temples.blogspot.com/2021/01/blog-post_17.html

மருத மலையோனே!...மருதமலை மாமணியே...!! - https://tut-temples.blogspot.com/2020/11/blog-post_21.html

பழமுதிர்ச்சோலை பரமகுருவே வருக! வருக!! (6) - https://tut-temples.blogspot.com/2020/11/6.html

குன்றுதோறாடும் குமரா போற்றி (5) - https://tut-temples.blogspot.com/2020/11/5.html

திருவேரகம் வாழ் தேவா போற்றி! போற்றி!! (4) - https://tut-temples.blogspot.com/2020/11/4.html

திருவா வினன்குடி சிறக்கும் முருகா (3) - https://tut-temples.blogspot.com/2020/11/3.html

செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா (2) - https://tut-temples.blogspot.com/2020/11/2.html

திருப்பருங்குன்றுரை தீரனே குகனே (1) - https://tut-temples.blogspot.com/2020/11/1.html

No comments:

Post a Comment