அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்றைய நாள் (13.07.2022) மிக சிறந்த நன்னாள் ஆகும். இன்றைய நாள் ஆனி மாத பௌர்ணமி நாள் ஆகும். இந்த நாள் குரு பூர்ணிமா என்று கொண்டாடப்பட உள்ளது. குரு பூர்ணிமா , ஆடி மாதத்தில் (சூன் - சூலை) வரும் ழுழுநிலவு (பௌர்ணமி)
நாள் அன்று, சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை
(ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள்.
இதனை துறவிகள், வியாசபூசை என்றும் வியாச பூர்ணிமா என்றும் அழைப்பர்.
இன்றைய இந்நன்னாளில் நாம் குருவின் பதம் போற்றுவோம்.
அடுத்து இன்றைய நாளில் உள்ள சிறப்பு வழிபாடு, கும்பாபிஷேக அறிவிப்புகள் பற்றி காண இருக்கின்றோம்.
1. குரு பூர்ணிமா
2. அகரம் ஸ்ரீ உலோபமுத்ரா உடனுறை ஞான அகஸ்தீஷ்வர மூர்த்தி திருக்கோயில் - மஹா கும்பாபிஷேகம் - 11,12,13.07.2022 - இதனை ஏற்கனவே நம் தளத்தில் பதிவாக வெளியிட்டுளோம்
3. ஸ்ரீமத் அருணகிரிநாதர் குருபூஜை விழா - 13.07.2022 - இதற்கு முந்தைய பதிவில் நம் தளத்தில் பதிவாக உள்ளது
4. சாம்பவர்வடகரை ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் - அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் - 13.07.2022
ஆலயம் : அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம்
ஊர் : சாம்பவர் வடகரை
வட்டம் : கடையநல்லூர்
மாவட்டம் : தென்காசி
திருக்குடமுழுக்கு பற்றிய விவரம் :
நாள் : 13/07/2022 (புதன்) - ஆனி 29 ஆம் நாள்
நேரம் : காலை 09:05 மணிக்கு மேல் 10:05 மணிக்குள்
ஆலய சிறப்புகள் :
1. பல நூற்றாண்டுகளுக்கு முன் உருவான தலம்.
ஆலய வழிபாட்டுத் தொடர்புக்கு :
99942 23422, 85318 69898
திருச்சிற்றம்பலம்!
5. எம்பிரான் செருத்துணை நாயனார் ஆலய அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் - 13.07.2022
6. காசி ஸ்ரீ அகஸ்தியர் - மஹா கும்பாபிஷேகம் - 13.07.2022
அகத்தியன் என்னும் பெருவெளி சுடர்
ஒரு பிறவி போதாது உந்தன் அருள்வெளியை பேச .. ஆயிரம் பிறவி வேண்டும் உன் அகண்ட மனம் அறிய . சித்தனாய் ,யுகம் கடந்த யோகியாய் பரம்பொருளின் ஆணையை செய்யும் சீடனாய் யுகம் யுகமாய் அவதரித்து உலகநலம் காக்கும் குருவாய் ..எத்தனை பெருமையப்பா உன் கருணையை பற்றிப்பேச .. ராவணனேஸ்வரவதம் முடித்து ராமேஸ்வரத்தில் ராமபிரானின் பிரம ஹத்தி தோஷம் போக்க உபதேசம் செய்த இடத்தை உன் கருணையால் நான் காணும் வாய்ப்பை பெற்றேன் . அக்னிதீர்த்தம் என்னும் கடற்கரை வெளியின் அருகே உனக்கான அகத்தியர் தீர்த்தம் என்னும் மகிமை வாய்ந்த உந்தன் குளத்தை கண்டேன் . பெரும் மரத்தின் அடியில் உன் சிறிய சிலையையும் சிதிலமான குளத்தையும் கண்டு மகிழ்ந்தேன் .. யோக குருவே உந்தன் அளவற்ற கருணையால் அந்த தீர்த்த கரையில் உனக்கான கருங்கல் கோவில் கட்டுமானப்பணிகளை துவங்கினேன் 3 ஆண்டுகள் தொடர்ந்த திருப்பணியில் கற்கோவிலும் மூல விமானமும் துவார கோபுரமும் பூர்த்தி கண்டு ஒரு ஒளிவீசும் பவுர்ணமி நாளில் உந்தன் கருணையால் குடமுழுக்கு நடத்தினேன் .
நீ ராமபிரானுக்கு உபதேசம் செய்த இடம் கற்கோவிலாக மாற்றிய உன் கருணையை எண்ணி வியந்தேன் . மகா குருவே உன் அளவற்ற கருணையால் ராமேஸ்வரம் அகத்தியர் கோவில் சாத்தியமாயிற்று ... ஆண்டுகள் கடந்த நிலையில் உந்தனுக்கு காசியில் கோவில் கட்டும் எண்ணத்தில் காசியில் நகரத்தார் மடத்திற்கு அருகே உள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தில் உந்தனுக்கு ஒரு மூல விக்ரகம் தனி சன்னதியாக அமைக்கவேண்டும் என உறுதியோடு ஆலயத்தாரின் அனுமதிக்காக 4 ஆண்டுகளாக காத்திருந்தநிலையில் உன் கருணையால் 13.7.2021 குருபூர்ணிமா அன்று உன் சிலை பிரதிஷ்டையும் குடமுழுக்கும் நிகழ்த்தும் பாக்கியத்தை எனக்கு வழங்கி இருக்கின்றாய் .. மகா குருவே இந்த பிறவியில் இந்த பாக்கியத்தை அளித்ததற்கு நன்றிகள் கோடி . உன் கருணை இன்றி இது சாத்தியம் இல்லை என்பதை நான் அறிவேன் . இந்த இரண்டு ஆலயங்களையும் அமைக்க என்னோடு பயணப்பட அகஸ்திய கிருபா ஆத்மாக்கள் அனைவருக்கும் என் நன்றியை சமர்ப்பிக்கின்றேன் ... காசி ராமேஸ்வரம் செல்லும் அகஸ்திய அடியார்கள் அனைவரும் இந்த இரண்டு ஆலயங்களையும் தரிசனம் செய்யுங்கள் .. சொல்லும் செயலும் அனைத்தும் நீ என்பதை நான் அறிவேன் . உன் அருகே இருக்கவேண்டும் என்னும் அன்பைத்தவிர பெரிதாக வேறொன்றும் இல்லை எம் அகத்திய மகாகுருவே...சரணம் . அகஸ்திய ஸ்ரீ . அன்புச்செழியன் . திருக்கழுக்குன்றம் .
இன்றைய நன்னாளின் மகிமையை பார்த்தீர்களா? ஒன்றா? இரண்டா? சொல்லில் அடக்க முடியா நிலை.
குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் கும்பாபிஷேகம், அருளாளர் ஸ்ரீமத் அருணகிரிநாதர் குரு பூஜை, எம்பிரான் செருத்துணை நாயனார் கும்பாபிஷேகம் என பல்வேறு சிறப்பு மிக்க நாளாக அமைந்துள்ளது.
இந்த பௌர்ணமி நாளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளவும். ஒவ்வொருவரும்
தங்களின் குருவை நேரிலோ, மானசீகமாகவோ வணங்கவும். இன்றைய தினம் செய்யும்
எந்த ஒரு மந்திரமும் கோடிக்கணக்கில் வரவு வைக்கப்படும். பூசை,சாதனை ,
பிரார்த்தனை போன்றவற்றை சிறப்பாக செய்து குருவருளும் திருவருளும் பெறும்படி
வேண்டுகின்றோம்.
இன்றைய இந்தப் பதிவை படிக்கும் அன்பர்கள் வாழ்வில் குருவருள் பரிபூரணமாக அமைய நாமும் வேண்டிக் கொள்கின்றோம்.
இன்றைய நன்னாளில் வழக்கம் போல் 4 இடங்களில் அன்னசேவைக்கு நம் தளம் சார்பில் சிறு தொகை கொடுக்க குருவருளால் பணிக்கப்பட்டுளோம். இதற்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து அன்பர்களின் பாதம் பணிகின்றோம்.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
No comments:
Post a Comment